தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3

குலசேகர பாண்டியனுக்கு எதிரான வெற்றிகள் அனைத்திற்கும் சிங்கள தளபதிகளே காரணமாக இருந்தார்கள். இருப்பினும் பாண்டிய அரியணை ஏற்றப்பட்ட வீரபாண்டியன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், பாண்டிய பிராந்தியங்களின் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாதவனாக இருந்தான். குலசேகர பாண்டியன் தனது உறவினர்களான இரண்டு கொங்கர்களின் உதவியைப் பெற்றதாக மஹாவம்சமே கூறுகிறது….

View More தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

வெற்றி பெற்ற சிங்களப்படை பின்னர் மதுரையை நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றுகிறது. கொலையுண்ட வீரபாண்டியனின் மகனை பாண்டிய நாட்டுக்கு பொறுப்பாளனாக்குகிறது சிங்களப்படை. அதனைத் தொடர்ந்து, குலசேகர பாண்டியனுக்கு உதவிகள் செய்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் சிங்களப்படைகளுக்கு அடிபணிகிறார்கள்.. லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். இப்படியாக இலைங்கைப் போர் வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறுகிறது இலங்கை மஹாவம்ச வரலாறு. எனினும், இந்த வரலாறு முழுமையான ஒன்றல்ல. இலங்கையரின் நோக்கில் எழுதப்பட்ட ஒருதலைப்பட்சமான இந்த வரலாறு ஒரு பெரும் காதையைப் போல எழுதப்பட்ட ஒன்று. அதனைக் குறித்து தொடர்ந்து காண்போம்….

View More தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1

பொதுயுகம் 1170-71 காலகட்டத்தில் இருவேறு பாண்டியர்கள் மதுரையின் அரியணைக்காக மோதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருந்தார்கள். குலசேகர பாண்டியன் வலிமையுடன் இருந்தததால் எந்தேநேரத்திலும் தான் ஆட்சியை இழக்க நேரிடலாம் என்று அஞ்சிய பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யுமாறு இலங்கையின் அரசனான பராக்கிரமபாகுவுக்கு வேண்டுகோள் விடுத்தான்.. இலங்கையிலிருந்து லங்கபுர தண்டநாத தலைமையில் ராமேஸ்வரத்தில் வந்திறங்கும் சிங்களப்படைகள் அங்கு பாண்டியப்படைகளுடன் போரிட்டு வெற்றிகொண்டு ராமேஸ்வரத்தைக் கைப்பற்றுகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாம்பனுக்கு மிக அருகில், ராமேஸ்வரக் கடலுக்கு நான்கு காத தொலைவிலிருக்கும் குண்டக்கல்லைக் கைப்பற்றுகிறார்கள்.. நெட்டூரில் தனது தலைமையகத்தை அமைத்துக் கொண்ட தளபதி லங்கபுரவிற்கு கொலையுண்ட பராக்கிரம பாண்டியனின் உயிர்தப்பிய மகன் ஒருவன் கேரளத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அவனது பெயரும் வீரபாண்டியன். லங்கபுர உடனடியாக தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி வீரபாண்டியனுக்குத் தகவல் அனுப்பி வைக்கிறார்…

View More தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1

கொலைகாரக் கிறிஸ்தவம் – 30

ஆகஸ்ட் 15, 1534ல் இக்னேஷியர் சேவியரும், இன்னும் ஐந்து பேர்களும் ஃப்ரான்ஸின் செயிண்ட் டெனிஸ் சர்ச்சில் சந்தித்தார்கள். . அந்த நாளே இந்தியாவையும், பிற கிழக்கு நாடுகளின் தலைவிதியை எதிர்காலத்தில் நிர்ணயித்த நாளாகும். அன்றைக்கு அந்த சந்திப்பு நிகழாதிருந்தால், இன்றைய உலகம் வேறுவிதமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 30

கொலைகாரக் கிறிஸ்தவம் – 29

தமிழகத்தில் பள்ளிகளைத் மதமாற்றக் கருவிகளாகத் துவங்கி, படிக்கவரும் இளம் சிறுவர்களை மனதைத் திருப்பியும், மெதுவான அணுகுமுறைகளாலும் தமிழக ஹிந்துக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுப் பலரை புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதில் வெற்றி பெற்றார்கள், டேனிஷ் மிஷனரிகள். புதுச்சேரியில் மதம்மாறிய ஹிந்துக்களுக்குப் பதவிகளும், பட்டங்களும் அளிக்கப்பட்டன. ஹிந்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான பல ஆதாரங்களும் இருக்கின்றன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 29

கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

1621 பிப்ரவரி 2-ல் யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசிய உயரதிகாரியாகப் பதவியேற்ற கவர்னர் ஒலிவேராவின் ஆணையின்படி அன்றே நல்லூரின் புகழ்பெற்ற கந்தசுவாமி ஆலயம் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1622-ஆம் வருடம் இன்னொரு புகழ்பெற்ற பெருங்கோவிலான ஆரியச் சக்கரவர்த்தி ஆலயமும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார். கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு எதையும் கோட்சே செய்யவில்லை என்பதையும் பார்க்கும்போது கோட்சே இதையெல்லாம் முன்பே திட்டமிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்தியிருந்தார் என்று அரசுத் தரப்போ, பத்திரிகைகளோ குற்றம் சாட்டவும்வில்லை; சொல்லவும்வில்லை; எழுதவுமில்லை. அதற்காக எந்த பிரிவிலும் வழக்குப்போடவில்லை…

View More நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8

126 போர்விமானத் தேவைக்காக ராஃபேல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற செய்திவந்த இரண்டே வாரத்திலேயே, அதாவது 2012லேயே, டசோல் நிறுவனம் பாதுகாப்புத்துறையில் பாரதத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. அப்பொழுது காங்கிரஸ் கூட்டணி [யு.பி.ஏ – ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி] பாரதத்தை ஆட்சிசெய்தது என்பதை நினைவு கூறவேண்டும்.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8

கொலைகாரக் கிறிஸ்தவம் — 25

“புனித விசாரணை என்கிற பெயரில் கட்டாயப்படுத்தி ஒரு சமுதாயத்தின் மொழியை அழிப்பதன் மூலம், அந்தச் சமுதாயம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவைக்க இயலாது என்பதினை போர்ச்சுகீசிய பாதிரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் உணர்ந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக போர்ச்சுகீசிய பேரரசு இந்தியாவில் அழிவுண்டு கிடந்தது”

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 25

கொலைகாரக் கிறிஸ்தவம் — 24

இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய டிரிபியூனல்கள் எல்லா இடத்திலும் இருந்தனவென்றாலும், கோவாவில் இருந்த இன்குசிஷன் விசாரணை டிரிபியூனலுக்கு இணையான படுமோசமான, இனவெறி கொண்ட, அயோக்கியர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படதொரு டிரிபியூனல் வேறெங்கும் இல்லை. இங்கிருந்த இன்குசிஷன் அதிகாரிகள் ஹிந்துப் பெண்களையும் கைதுசெய்து சிறையிலடைத்தார்கள். அங்கு தங்களது மிருகவெறியை அவர்களிடம் தீர்த்துக்கொண்ட பின்னர் அந்தப் பெண்களைக் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கூறி கட்டைகளில் கட்டி தீவைத்து எரித்துக் கொன்றார்கள்”

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 24