முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்

சொற்பொழிவாளர் சுகி சிவம் அண்மையில் தெரிவித்த சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களுக்கு அ.நீயின் எதிர்வினை; தொடரும் விவாதம்.. ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது… தவத்திரு காஞ்சி சங்கராச்சாரியார் கூறும் வைதிகம் வேறு. சுகி.சிவம் பேசும் பிராம்மணியம் வேறு. பின்னது காலனிய கருத்தாக்கம். அதன் படி பிராம்மணிய கடவுள் குறமகளை மணம் செய்ய முடியாது. ஆனால் தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளின் வைதீக தெய்வம் குறமகளை மணமுடிக்க முடியும்…

View More முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்

தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!

மஞ்சை வசந்தன் ஆதாரமே இல்லாமல் தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சங்கராச்சாரி இப்படி சொன்னார் என்று ஒருதகவல் சொன்னார். உடனே நான் நீங்கள் எப்படி திரிபுவாதம் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என்று சொல்லி அவர் எழுதிய புத்தகம், அவர் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். என்னை முழுவதும் பேசவிடவில்லை என்றாலும் மஞ்சை வசந்தன் கோபமானார். நான் எடுத்துக்காட்டியதற்கு பதில் சொல்லவில்லை.

View More தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!

காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை

ஆஸேது ஹிமாசலம் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தில் இவ்வாறு ஹிந்து தர்மம் தழைக்க வாழ்ந்த பல நூறு துறவியரில் ஒருவர் காஞ்சி மஹாஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பெடும் பூஜ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் சம்பந்தமாக நமது தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான சில கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. பிறப்படிப்படையிலான வர்ணம் என்ற கருத்து “தெய்வத்தின் குரல்” தொகுப்பில் பேசப்படுகிறது. சங்கத்திலும் ஹிந்து இயக்கங்களிலும் ஒன்றாய் உண்டு விளையாடி ஹிந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடும் எவராலும் இக்கருத்தை ஏற்கவியலாது என்பது விஷயம். எது எப்படி இருப்பினும் ஒட்டு மொத்த தொகுப்பையே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என உருவகப்படுத்துவது முற்றிலும் ஏற்கவியலாது.

View More காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை

அஞ்சலி: ரா.கணபதி

ரா.கணபதி அவர்கள் ஒரு சகாப்தம். பெரும் தத்துவஞானி, ஆன்ம சாதகர், பக்தர். அறிவுக்கனலே அருட்புனலே’ ஒரு தலைமுறையை ராமகிருஷ்ண – விவேகானந்த இயக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது. தெய்வத்தின் குரல் – அவரால் தொகுக்கப்பட்ட காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் உபந்நியாசங்கள், விளக்கங்கள் – மாபெரும் ஒரு முயற்சி. பழம்பெரும் பௌராணிக மரபின் இறுதி ஒளிவிளக்காக வாழ்ந்த அவர் வாழ்க்கை மஹா சிவராத்திரி அன்று முடிவடைந்தது ஒரு அற்புத பொருத்தம். அவரது புனித நினைவை தமிழ்ஹிந்து வணங்குகிறது..

View More அஞ்சலி: ரா.கணபதி