குஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்

தொடர்ந்து 22 ஆண்டு கால ஆட்சி செய்ததின் காரணமாக மக்களிடம் ஏற்படும் இயல்பான எதிர்பார்ப்பு ஏமாற்றங்கள், காங்கிரஸ் கட்சியினால் தூண்டி விடப் பட்ட ஜாதிப் பிர்வினைகள், பாக்கிஸ்தானின் சதித் திட்டங்கள், உள்கட்சி பூசல்கள் திறமையின்மைகள், மூன்று முதல்வர்கள் மாறியது என்று கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான எதிர்மறை காரணங்களையும் வலுவான எதிர்ப்புகளையும் மீறி குஜராத் மாநிலத்தில் பிஜேபி வெற்றியடைந்திருக்கிறது… கணக்கீடுகளை வைத்து பார்க்கும்போது தலித்துகள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதை உணர முடியும். மொத்தம் உள்ள 13 தனித்தொகுதிகளில் 8 இடங்களையும் (61 சதவீதம்), பழங்குடி தொகுதிகளில் 11 இடங்களையும் பாஜக வென்றிருக்கிறது….

View More குஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்

இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின்  படமொன்றை மாட்டச்சொன்னார்.  இதை விரும்பாவிடினும்,  பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள்.  பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.  நாங்கள் உடனே குறுக்கிட்டோம்..
விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின….

View More இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

உங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்

நான் கேட்பது பிஜேபிக்கு வோட்டு போடுங்க போடாதிங்க – அது அல்ல விஷயம்; அரசியலை தாண்டி மோடி கூறும் அறிவுரைகளை கொஞ்சமாது கேளுங்க. தமிழகத்திற்கு இப்போதைக்கு எந்த தொழில்துறையும் வரமாட்டான். காரணம் அரசு அல்ல – போராளிகள்… இங்கு நான் கூறிய நான்கு திட்டமும் பணக்கார வர்க்கத்துக்கோ – நடுத்தர வர்க்கத்துக்கோ அல்ல. அமைப்புசாரா வேலையாட்கள் என்று கூறப்படும்- கட்டட வேலை முதல் காய்கறி வேலை செய்பவர்கள் வரை அனைவரும் என்பதால் உருவாக்கபட்ட நலத்திட்டம். இதை சென்று மக்களிடம் சேர்க்க வேண்டியது படித்தவர்கள் கடமை – ஒத்துழைக்க வேண்டியது மக்கள் கடமை. நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டியது என்ன? ஒழுங்கா நல்ல முதலீட்டு சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்….

View More உங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்

மீனவர் துயரம்: சும்மா இருக்கிறதா மோதி அரசு?

தமிழ் நாட்டில் ஒரு வியாதி போல இது பரவிவிட்டது. எப்போ பாரு என்ன எது என்று சிந்திக்காமல் போராட்டம். கேட்டால் மத்திய அரசு , மாநில அரசு என்று வெறுப்பை பரப்புவது.. சுமார் 662 மீனவர்கள் மீட்பு (259 மீனவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்). கடலோர காவல் படையை சேர்ந்த 9 கப்பல்கள் தேடும் பணி தீவிரம். இவ்வளவும் நடந்து கொண்டு தான் இருக்கு… அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மீனவர்கள் வருமானம் பலமடங்கு அதிகம் கிடைக்க சுமார் 1 கோடி ரூபாய் விலையுள்ள நவீன ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் உண்டு. இவற்றை வாங்க மோடி அரசு கடனுதவி செய்ய தயார் என்றது. வாங்கும் கப்பலையே Suretiesயாக எடுத்து கொள்கிறோம் என்றது. இந்திய வரலாற்றிலேயே எந்த பிரதமர் இந்த அளவு லோன் தர – அவர்கள் வாழ்வை முன்னேற்ற முன்வந்தார்? இந்த அளவு சலுகை வேறு எந்த துறைக்கு நாட்டில் கொடுத்தார்கள்?…

View More மீனவர் துயரம்: சும்மா இருக்கிறதா மோதி அரசு?

மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி

தங்களது இடம், வாழ்வுரிமை, கலாச்சாரம் ஆகியவை பறிக்கப்படும் அபாயம் நேரும் காலத்தில் வேறு வழி இல்லாமல் ராக்கைன் மக்கள் ரொஹிங்கியாக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தவும், மறுத்தவர்களை மிரட்டவும் தாக்கவும் தொடங்கினார்கள். இதில் சிலர் இறந்து போக ரொஹிங்கியாக்கள் திரும்ப தாக்கியதில் ராக்கைன் மக்களும் சிலர் இறந்தார்கள். இதில் தான் பிரச்சனை பெரிதானது. புத்த மதம் அழிந்து இஸ்லாம் அந்த இடத்தில் பரவும் அபாயம் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியாக்கள் அந்த பகுதியில் இருந்தனர். நிலைமை அப்படியே இருக்குமா? வெடித்தது கலவரம்… உலகம் முழுதும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை, ”மதத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அதை இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது” என்று பிரச்சாரம் செய்யும் வெள்ளை முற்போக்கு கும்பல், பர்மாவின் ”பவுத்த தீவிரவாதம்” என்று பச்சையாக எழுதுகிறது. அதன் இந்திய கிளைகள் இங்குள்ள ஊடகங்களில் அதை அப்படியே வழிமொழிந்து வாந்தியெடுக்கின்றன…

View More மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி

பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்

ஏறக்குறைய எல்லா பணமும் திரும்பி வந்து விட்டது என்பது நம்ப முடியாத ஒன்று. அந்த அளவுக்கா அம்புட்டு யோக்கியவானாகவா இந்தியர்கள் அனைவரும் மாறி விட்டார்கள்? இருக்காது. எப்படியோ பணத்தை கை மாற்றி கை மாற்றி வங்கிகளுக்கு வருமாறு செய்து விட்டிருக்கிறார்கள். காப்பானை விட கள்ளன் தான் பெரியவன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்…. இப்போது விசாரணையில் இருக்கும் 18 இலட்சம் பேரின் முந்தைய ஆண்டு வருமானங்களுக்கும் பணமதிப்பிழப்பின்போது அவர்கள் வங்கிகளில் செலுத்திய தொகைக்கும் ஒத்துப் போகவில்லை என்று வருமானவரித்துறை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது. இதில் ஐந்தரை இலட்சம் பேர் அபராதத்தோடு வரி கட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மீதி பேர் மீது வருமானவரித்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்….

View More பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்

கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

” கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்” என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம்”… நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன? குழுமம் முக்கியமல்லவா?….

View More கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரம் மீண்டும் முருங்கை மரம் ஏறி…

View More அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா

ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)

எங்க தலைவரு கொதிக்காரு, ஒமக்கு ஜோக்கா இருக்கு என்னா?… சரி, மேலே… போற வழில சீன தூதரகத்தப் பாத்துட்டாரு. அதென்னா சைனீஸ்ல எழுதீருக்கான்? நிறுத்துன்னுட்டாரு… நானும் போனேனா? உள்ள போனவரு “உங்க செஃப் எங்க?”ன்னு ரிசப்ஷன்ல கேட்டாரு… அவன் சீஃப்னு நினைச்சிகிட்டு தூதரைப் பாக்க வந்திருக்காருன்னு , ஒரு ஃபார்ம் கொடுத்து ’நிரப்பு’ன்னுட்டான். அதுல இங்க்லிஷ்லயும் சைனீஸ்லயுமா எழுதியிருந்திச்சா, அண்ணன் குழம்பிட்டாரு… ஒரு வெண்பா சொல்லுங்க. அப்படியே கட்சி இதழ்ல போட்டுருதேன்… கொடுத்துருவம்…

View More ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)

அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை… அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது இருக்கலாம்…

View More அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்