பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகளின் கண்ணோட்டமே நோபல் பரிசுக் குழுவின் விளக்கத்தில் தெரிகிறது.. இந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் மலாலா என்ற பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில் இருந்துகொண்டு போராடுகிறார். மாலாலாவோ தன் தாய் நாட்டில் தங்கியிருக்க முடியாது, பாதுகாப்பு வேண்டி அடைக்கலம் புகுந்து இங்கிலாந்து போன்ற நாட்டில் தங்கிச் சேவை செய்யும் நிலையில் தான் இருக்கிறாள்….
View More இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?Category: அரசியல்
எல்லையில் மீண்டும் போர்மேகம்
கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி…
View More எல்லையில் மீண்டும் போர்மேகம்உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு
“உலக வணிகத்தை, உலக இசையை, உலக உணவை, உலக பொழுது போக்கு அம்சங்களை, உலக செய்திகளை, உலக சினிமாக்களை, உலக அரசியலை உங்கள் வீட்டிற்கு அல்லது உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவது என்று சொல்லலாம் அல்லது இதே விடயங்களை, அதாவது உள்ளூர் தமிழக அரசியலை, உள்ளூர் கலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் சினிமாவை, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, உள்ளூர் உணவை உலகில் உங்கள் மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதே Globalisation of the Local ஆகும்…. உலகமயமாதலில் ஒவ்வொரு project ஐயும் எடுக்க நடக்கிற போட்டிகளில் இன்றைய நிலையில், எந்த நாடு அந்த project செய்வதற்கான ஒப்பந்தத்தைப் (contract ஐப்) பெறுகிறது என்பதைக் கணிக்க இயலவில்லை…உலகமயமாதல் அதிகாரத்தைக் குவிக்கிறது. அதிகாரத்தைக் கைமாறச் செய்கிறது. கலாச்சாரத்தைப் பரப்புகிறது. உலகமயமாதலின் முக்கியச் சிக்கலே Un Equally Rich ஆக மனிதர்களை மாற்றியுள்ளது என்பதே. நாடுகள், நிறுவனங்களைத் தாண்டி உலகமயமாக்கலில் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தனி நபரின் பங்களிப்பு இந்த நூற்றாண்டில் நடக்கும்…
View More உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்புபாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது போன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள். உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும் தெரிவித்தார்கள்… தமிழகத்தில் குறிப்பாக குமரி மற்றும் ராமநாதபுரத்தில் கள்ள நோட்டு மாற்றியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட தக்கது…
View More பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்மதுவை எதிர்ப்பது நமது உரிமை!
காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?”…
View More மதுவை எதிர்ப்பது நமது உரிமை!தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்திலுள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஒரு” தலைமை அடிமை”யாகவே உள்ளன. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாநில ஆட்சியைக் கைப்பிடிக்க பிஜேபி தகுதியான ஒரேயொரு தலைவரைக் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்காகவாவது வைத்துக் கொள்ளாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது. தலைவரை அடிக்கடி மாற்றுவது என்பது மாநிலத்தில் நான் உன்னை விடப் பெரியவன் என்ற மனோவியாதியை மட்டுமே தலைவர்களுக்குள்ளாக உருவாக்கும்…. கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. மக்களின் உணர்ச்சியைப் பெருக்குகிற, ஹீரோயிச பாணியிலான ஒரு தலைவரை பிஜேபியினர் அடையாளம் காணாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது என்பதே நிதர்சனம்..
View More தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்
மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப் பட்டது என்பது இந்திய மக்களிடம் மட்டும் இன்றி உலக அளவிலும் இந்தியாவை இனி நிமிர்ந்து பார்க்க வைத்துள்ள ஒரு நிகழ்வு. குறைந்த காலத்திற்குள் வெகு குறைவான நிதியில் இந்தியா இதைச் சாதித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல… இந்தியாவில் கக்கூஸ் இல்லை, பள்ளிக் கூடம் இல்லை, குடிநீர் இல்லை, இந்த லட்சணத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு கோள் அனுப்புவது தேவையா என்றெல்லாம் இடது சாரிகளும் ஞாநி சங்கரன் போன்ற அணு சக்தி விஞ்ஞானிகளும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா அறிவியல் ஆராய்ச்சிகளில் செய்யும் சொற்ப முதலீட்டைக் கூட அவதூறு செய்யும் இந்த புரட்சிகளின் பிரச்சினைதான் என்ன? இந்த நிர்மூடர்களின் கேள்விகளுக்கான எனது எளிய பதில்கள்…. என் அப்பா தான் குடியிருக்க வீடு வாங்கிய பின்னர்தான், தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் தான், என் அம்மாவுக்கு நகைகள் வாங்கிய பின்னர் தான், எங்களுக்கு எல்லாம் நல்ல துணிமணிகள் வாங்கிக் கொடுத்த பின்னர்தான், எங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படித் தள்ளிப் போடவும் முடியாது. இதைத்தான் ஒரு அரசாங்கமும் செய்யும்….
View More செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?
குற்றத்தைத் தடுக்கவோ, குற்றம் செய்தவனை தண்டிக்கவோ, இப்படிப்பட்ட ஆவணங்கள் இரகசியமாக, பிரதியெடுத்தோ, அல்லது திருடியோதான் மக்கள் பார்வைக்கு வரமுடியும். குற்றத்தை விசாரிப்பவர்களுக்கு அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மைதான் முக்கியமானதே தவிர, யார் கொடுத்தது, ஏன் கொடுத்தான், எப்படி எடுத்தான் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது நீதி பரிபாலன செயல்பாடுகளுக்கு எதிரானது. பொது நலத்துக்கும் எதிரானது; ஊழலை ஊக்கப்படுத்துவது போன்றது; ஊழல் வாதிகளைப் பாதுகாக்க விரும்புவது போன்றது…. இந்த நிகழ்வில், நிர்வாகம் தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, தவறு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருட்டுத் தனமாக வேலைக்கு ஆர்டர் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தவறுக்கு வெளிச்சம் போட்ட கடைநிலை ஊழியர் ஒருவரை பழிவாங்கத் துடித்தது ஏன்? ஏனென்றால் நிர்வாகத்தின் உயர்ந்த பீடத்தில் இருப்பவர்கள் அறிந்தே இந்த தவறுகள் நடந்தன என்பதுதான்….
View More ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்
ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி…
View More காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?
லோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு…
View More இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?