ம(மா)ரியம்மா – 4

This entry is part 3 of 14 in the series ம(மா)ரியம்மா

அது சரி… மரியம்மா மதம் மாறி கொற நாளாச்சே. இன்னிக்கு என்ன திடீர்னு…

View More ம(மா)ரியம்மா – 4

ம(மா)ரியம்மா – 3

This entry is part 2 of 14 in the series ம(மா)ரியம்மா

அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டிலும் மதமிருந்ததே மதம் நிறைய ஜாதிகளிருந்ததே ஜாதிகள்…

View More ம(மா)ரியம்மா – 3

ம(மா)ரியம்மா – 2

This entry is part 1 of 14 in the series ம(மா)ரியம்மா

அச்சோ நிச்சயம் இந்துப் பேய்தான். இப்ப என்ன செய்யலாம் என்று ஜான் பயந்தபடியே…

View More ம(மா)ரியம்மா – 2

ம(மா)ரியம்மா – 1

This entry is part 1 of 14 in the series ம(மா)ரியம்மா

மரியம்மா, ஜான் தம்பதியின் உடலில் அவர்களுடைய பாட்டி, தாத்தாவின் ஆவிகள் இறங்குகின்றன. அவர்கள் இருவரை மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்களில் மதம் மாறிய அனைவரையும் தாய் மதம் திரும்பச் சொல்லி வற்புறுத்துகின்றன.இந்து தர்மமா… கிறிஸ்தவமா… இஸ்லாமா எது சிறந்தது என்று ஊரார் முன்னிலையில் பெரும் வழக்காடுமன்றம் நடக்கிறது. எந்தத் தரப்பு ஜெயிக்கிறதோ ஊர் மக்கள் அனைவரும் அந்த மதத்துக்கு மாறுவதென்று முடிவாகிறது.

View More ம(மா)ரியம்மா – 1

கிறிஸ்தவம், பாலியல் குற்றங்கள், புதுமைப்பித்தன்

இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான்… புதுமைப்பித்தன் இப்படி ஒரு விசயத்தை கற்பனையாக எழுதியிருப்பாரா? நிச்சயமாக இருக்காது. அப்படிப்பட்ட அற்பத்தனம் அவரிடம் கிடையாது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் காட்டிலும் அதிகமான நிறுவனரீதியான குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் இந்தியாவில் காலனிய காலகட்டம் தொட்டே நடந்து கொண்டிருக்கலாம்…

View More கிறிஸ்தவம், பாலியல் குற்றங்கள், புதுமைப்பித்தன்

வீடுபெறச் செல்!

“சுயநலமிகளே, நீங்கள் நல்லாயிருக்க மாட்டீர்கள்!” என்று சபித்தார், சிங்காரவேலனர். அவரை யாரும் கவனிக்கவில்லை. ஏனோ, அவரைத் தூக்கிவிட மற்றவருக்கு இரக்கம் வரவில்லை. அந்தக் கூட்டத்தில் அவரைக் குனிந்து தூக்கினால் தம்மை மற்றவர்கள் மிதித்துத் தள்ளிவிட்டால் என்ன ஆகும் என்பதே அவர்கள் மனதில் தோன்றித் தடுத்தது. சிங்காரவேலன் கீழே கிடப்பதைக் கவனிக்காமல் அவரை மிதித்துத் தள்ளியவாறே பலரும் செல்லக் கண்டனர். அதைப் பார்க்கச் சகிக்காமல் மற்றவர் ஸ்ரீநிவாஸைப் பின்தொடர்ந்தனர்.

View More வீடுபெறச் செல்!

திரிவேணி சங்கமம்

ஆனால்
பத்து வருஷம் ஆகியும் ஜமுனாவால் அலஹாபாத் வரமுடியலே.  ஏதேதோ காரணம், மாத்திமாத்தி.  நான்தான் ஒரொரு வாட்டியும் என் பெண்ணைப் பார்க்க
என் வீட்டுக்காரரோட டெல்லி போகும்போதும், அவளைப் பார்ப்பேன். ரொம்ப சந்தோஷப்படுவா.
அவ்வப்போது வாட்ஸ் அப்பில் வீடியோலயும் பேசுவோம்.திடுன்னு
இந்தக் கொரோனா கலவரம். டெல்லி ரொம்ப மோசமாயிட்டுது. என் மாப்பிள்ளையோ டாக்டர். ; என்ன ஆச்சோனு எங்களுக்கெல்லாம் ஒரே மனக்கவலை அரித்துப்
பிடுங்கிச்சு.

View More திரிவேணி சங்கமம்

அப்பாவின் துண்டு

தூக்கம் கண்ணைச் சுற்றியது. கண்ணயர்ந்துவிட்டேன்.
திடுமென்று விழித்துக்கொண்டேன் நான்.  என்னைச்
சுற்றிலும் ஒரே இருட்டு.  பயமாக இருந்தது.  என்னைப் பெற்றவளைத் தேடினேன்.  பிறகுதான் அவள் இல்லை என்ற உணர்வு வந்து உறுத்தியது.  அவளது கணகணப்பான உடம்பில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும்
என்ற ஆவல் எழுந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்தேன். அப்பா’வின்
நினைவு வந்தது. அவர் எங்கே?

View More அப்பாவின் துண்டு

ஒரு காதல் காவியம் [சிறுகதை]

நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற பையனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. விஷயம் தெரிந்ததும் பறையர் குலத்தினர் ஆத்திரம் கொள்கிறார்கள்… பின்னால் திவ்யா பர்தா அணிந்தபடி இறங்குகிறார். காதலியின் தோழி அமீரின் உறவினர். திவ்யாவும், இளவரசனைப் பார்த்து, ‘நீங்களும் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள். நம்மை அங்கு யாரும் பிரிக்க முடியாது’ என்று சொல்கிறாள். இளவரசனோ தடுமாறுகிறான். என்ன விஷயமென்றால் பாளையங்கோட்டையில் இருந்த அவனது நண்பர்கள் ஜெகத் கஸ்பருக்கு உறவினர்கள். அவர் இதே யோசனையைச் சொல்லி அவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார்… அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும் அங்கிகளைக் கழட்டிப் போட்டு தெருவில் புரள ஆரம்பிக்கின்றன, துப்பாக்கிகள், வெடி குண்டுகள் என வீசப்படுகின்றன… திவ்யா கண்களில் நீர் கோர்க்க, அருகில் நிற்கும் செபாஸ்டினைப் பார்த்துக் கேட்பார்: நாம தமிழர்னு தான சொன்னீங்க. மோதிரம் மாத்தறது நம்ம பழக்கம் இல்லையே. அப்போது சர்ச் சுவரில் விழும் அவர்களுடைய உருவங்களின் தலைக்கு மேலே இரண்டு கொம்புகள் முளைக்கும். இளவரசனும் திவ்யாவும் என்ன அதிசயம் என்று அதைப் பார்ப்பார்கள். செபாஸ்டியனும் பாதிரியும் கூட அதை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்…

View More ஒரு காதல் காவியம் [சிறுகதை]

மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்

இக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்… என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும் சிறுவர்களும் அடையவேண்டும் என்பதே என் ஆசை. அந்த ஆசைக்கு நியாயத்தை இக்கதைகளில் செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்…

View More மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்