பிரபல உபன்யாசகர் துஷ்யந்த் ஶ்ரீதர் மீது பிரபல ஆலயப் பாதுகாப்பு போராளி ரங்கராஜன் நரசிம்மன் விடுத்துக் கொண்டிருக்கும் சமீபத்திய எதிர்ப்பு வீடியோ ஏவுகணைகள் குறித்து எனது கருத்து என்ன என்று கேட்டார் நண்பர் ஒருவர். “அரைகுறை வரலாற்று ஆராய்ச்சி கோமாளித்தனத்தைக் குறிவைத்து குருட்டு சம்பிரதாயவாத கோமாளித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்”, என்று கூறினேன்… நமக்குத் தேவை முதிர்ச்சியான, ஆழமான, பன்முகப் பார்வை கொண்ட கண்ணோட்டங்கள்…
View More இராமாயண கால ஆராய்ச்சி, உபன்யாசகர்கள், சம்பிரதாயவாதிகள்Category: ராமாயணம்
கம்பன் காட்டும் இலக்கியச்சுவை
உலகக் காப்பிய வரிசையில் முன்நிற்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது இராமகாதையில் இலக்கியச்சுவையை அரியதொரு சுரங்கமாக்கிக் கொடுத்துள்ளான். ஒவ்வொரு வரியுமே கூட மிகுதியான இலக்கியச்சுவையுடன் அமையும். எடுத்துக்காட்டாக, அகத்தியரைக் கூறும் இடத்தில்,
View More கம்பன் காட்டும் இலக்கியச்சுவைகம்பராமாயணத்தில் சிவபெருமான்
உலகக் காப்பிய வானில் கதிரவனாய் ஒளிரும் கம்பன் தனது காப்பியத்தில் உணர்ச்சிச்சுவை, பாத்திரச்சுவை, பத்திச்சுவை, நாடகச்சுவை, அவலச்சுவை என பல சுவைகளைப் படைத்துள்ளான். அவற்றில் இலக்கியச் சுவையில் சிவபிரானைப் பற்றிய சில பகுதிகளைக் கண்டு களிப்பதே இக்கட்டுரையாகும்.
View More கம்பராமாயணத்தில் சிவபெருமான்கம்பர் உருவப்படங்கள்
காலத்தால் முற்பட்ட, வரலாற்று ரீதியான, ஆதாரபூர்வமான கம்பர் உருவம் என்றால் அது தேரெழுந்தூர் கோயில் சிற்பம் தான். ஆனால், கம்பன் கழகங்கள் இந்த உருவத்தை ஏதோ காரணத்தால் வேண்டுமென்றே பயன்படுத்தாமல், தாங்களாக ஒரு உருவத்தைக் கற்பித்து, அந்தப் படங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்..
View More கம்பர் உருவப்படங்கள்கம்பனும் காளிதாசனும்
யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி எழுமானால், கைவிரல்களை மொத்தத்தையும் மடக்கி, முதலில் சுண்டுவிரலைப் பிரித்தவாறு, ‘காளிதாசன்’ என்ற பெயரை உச்சரித்தால், அடுத்து வருவது அநாமிகா! (பெயரிலி, மோதிரவிரல் என்று இரு பொருள் இச்சொல்லுக்கு உண்டு). காளிதாசனுக்குப் பிறகு, கவிஞன் என்று பெயர் சொல்லவே யாருமில்லை என்ற பொருள்பட அமைந்த இந்த ஸ்லோகம், தெரிந்தோ தெரியாமலோ கம்பனால் இந்திரஜித்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. It is a pleasant coincidence.. வால்மீகியை ஒட்டியும் வெட்டியும் மாற்றியும் காளிதாசன் செய்திருக்கும் சித்திர வேலைப்பாடுகளில் பல, கம்பனுடைய காவிய அமைப்புக்கு வித்தாக இருந்திருக்கின்றன என்ற செய்தியையே தமிழகத்தில் இதுவரையில் யாரும் எடுத்து முன்வைத்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒருசில எடுத்துக் காட்டுகளையும் காண்போம்…
View More கம்பனும் காளிதாசனும்ராமாயணத்தில் சரணாகதி
குகன் தனது படகோட்டி ஒருவரை அழைக்க, அவன் வருகிறான். கரையோரமாக நங்கூரமிட்டு நிறுத்தியுள்ள படகில் ராமர் ஏறுவதற்கு எத்தனிக்கையில், “ஐயா ஒரு நிமிஷம்” என்று படகோட்டி கைகூப்பிக் கொண்டு முன்னால் வந்து தடுக்கிறான்… “வானரரே, நல்லவர்களானாலும் பொல்லாதவர்களானாலும் வதைக்குரியவர்களானாலும் கூட, அவர்களிடம் சான்றோர்கள் காட்டும் குணம் கருணையே. குற்றம் செய்யாதவர்கள் இந்த உலகில் யாருண்டு? ” என்கிறாள் சீதை. அனுமன் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று ஆணையிடுகிறாள்..
View More ராமாயணத்தில் சரணாகதிஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்
இறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன? இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா?… இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார் பாராட்டினார் எனலாம்…
View More இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை
வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது.இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது… இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள்….
View More ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வைதிரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்
ஒரு பெண்ணின் மகத்துவம் அவள் உள்ளாற்றலில் இருந்து வருகிறது. கண்ணகிக்கு காவியம் என்ன சிறப்பளிக்கிறதோ அதையே மாதவிக்கும் அளிக்கிறது. சீதைக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு திரௌபதிக்கும் உண்டு. அகலிகைக்கும் உண்டு. ஆனால் இதெல்லாம் உடலினால் பெண்ணை வரையறை செய்யும் மனப்போக்குடன், சாதி வெறி பிடித்து சாதியை விட்டு கலியாணம் செய்பவர்களை சாதியை விட்டு தள்ளவேண்டும் என்று கூவி அலைகிற கட்சிகள் தாவியே வாழும் ஒரு மாமிச மலைக்கு புரியுமா என்ன? அதிசயமான விஷயமென்னவென்றால் திரௌபதி குறித்த இக்கதையின் மற்றொரு வடிவத்தை காலனிய இந்தியவியலாளரான வில்லியம் ஜோன்ஸ் நீள் கவிதையாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு முக்கிய வித்தியாசத்தைக் கண்டு வியக்கிறார்…
View More திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?
தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி/பொருநை நதிதீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான வலிமையைச் சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள்.
View More இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?