சைவசித்தாந்தநெறிநின்று விலகாத சபாபதி நாவலர் சித்தாந்த ஆச்சார்யர்களைப் பெரிதும் போற்றிவந்துள்ளதுடன், அவர்கள் வழியிலேயே செயற்படவேண்டும் என்கிற ஆர்வமும் உடையவராக விளங்கியுள்ளார்.
சிதம்பர சபாநாதர் புராணம் எழுதிய நாவலர் புராண காவியங்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து, வைதீக காவிய தூஷண மறுப்பு என்கிற நூலும் எழுதியுள்ளார். ஆக, புராணபடன மரபை வளர்ப்பதிலும் நாவலரவர்கள் ஆறுமுகநாவலருக்குப்பின் கணிசமான பணியாற்றினார் எனக் கருதலாம்.
Category: ஆன்மிகம்
யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1
அவையோர் வியக்கும் உரைவன்மையாலும், அந்த உரையிடையே பிரவாகிக்கும் சைவசித்தாந்தக்கருத்துகளாலும், கிறிஸ்துவர்கள், நாத்தீகர்கள் போன்ற பிறதத்துவ நம்பிக்கையாளர்களும் மதத்தவர்களும் நாவடங்கி ஓடச்செய்யும் சொற்போர் வெற்றியும் மிக்கவராக சபாபதிநாவலர் விளங்கினார்.
அதனாலேயே இவருக்கு “நாவலர்” என்ற பட்டத்தைச் சுப்பிரமணிய யோகீந்திரர் வழங்கிக் கௌரவித்திருக்கிறார். நாவன்மை பொருந்தியவர்களாகவும், சைவசித்தாந்தச் சொற்பொழிவுகளை ஆற்றுவதில் தலைசிறந்தவர்களாகவும் விளங்குபவர்களுக்கே திருவாவடுதுறை ஆதீனம் “நாவலர்” என்ற அதியுயர் விருதினை வழங்கி கௌரவித்தது என்பதை நாம் அறியலாம்.
View More யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1‘சும்மா இரு சொல் அற’
சும்மா இருத்தல் என்பது உலகியல் நோக்கில் புரிந்துகொள்ளப்படுமாயின் சும்மா வேலை செய்யாமல் இருப்பவரின் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுழலுவதைக் காணலாம். அதனால்தான் வேலை செய்யாமலும், பேசாமலும் இருக்கும் உலகியற் சும்மா இருத்தலை குறிப்பிடவில்லை. யோகநிலைச் சும்மா இருத்தலையே குறிப்பிடுகின்றேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அருணகிரியார் ‘சும்மா இரு, சொல் அற,’ என்று குறிப்பிடுகின்றார்… இலங்கையில் யாழ்ப்பாணத்தில்- அறுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவாத்வைத யோக புருஷரான யோகர் சுவாமியின் சீடரான வெள்ளைக்கார சுவாமியார் ஒருவர் தமது கையில் தமிழில் ‘சும்மா இரு’ என்று பச்சை குத்தி வைத்திருந்தாராம்….
View More ‘சும்மா இரு சொல் அற’சுப்பிரமணிய புஜங்கம்
என் சந்நிதிக்கு வந்து யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் தீவினைகள் கடலலைகள் அழிதல்போல் அழிந்துபடும். ஆகவே என்முன் வாருங்கள்,’ என உணர்த்துவது போலத் திருச்செந்தூர்க் கடலலைகள் வந்துவந்தழியும். அந்தச் சீரலைவாய்க் குமரனை என் மனதில் வைத்து தியானிக்கிறேன்…. உயிர்மங்கும்பொழுதில் உனது தாள்களை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன். ஓ செந்திலாய் எனக்கூறவும் இயலாதவனாகி விடுவேன். கைகளைக் குவிக்க இயலாது. அப்போது நீ என்னைக் கைவிடலாகாது. இப்போதே நான் உனக்கு அடைக்கலம் என்று கூறிக்கொள்கிறேன்…
View More சுப்பிரமணிய புஜங்கம்அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு
பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டில் தான் கோயிலில் திருநீறு பெறவும் அவர்கள் கொடுத்தால் மற்றவர்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமை கேட்டு போராடுகிறார்கள்…. என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது. அந்த கோயில்களுக்கு சென்று பூஜை செய்ய விருப்பமிருந்தால் அதற்கான சைவ வைணவ பூஜை முறைகளில் முறையான பயிற்சியை பெற்று அனைத்து சாதியினரும் பூசை செய்யலாம்….
View More அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடுதேவிக்குகந்த நவராத்திரி — 5
பார்வதிக்கே எல்லா ஆட்டத்திலும் வெற்றிமேல் வெற்றி. சிவனுடைய உடுக்கை, சிவகணங்கள், நந்திதேவர், முதலான அத்தனை பொக்கிஷங்களும் அவளிடம்- சடைமுடியில் அமர்ந்த பிறைச்சந்திரனையும் விட்டுவைக்கவில்லை அவள். முகத்தில் பெருமிதம்பொங்க, “அடுத்து என்ன?” என்கிறாள். சிவன் இனித்தன்னையே பணயம் வைக்கவேண்டியதுதான் என எண்ணுகிறார்!
View More தேவிக்குகந்த நவராத்திரி — 5தேவிக்குகந்த நவராத்திரி — 4
நவரசங்களும் தளும்பும் நடனங்களை தேவியும் சிவனும் இடையறாது ஆடிக்களிக்கின்றனர். உலகின் தாயும் தந்தையுமாகிய இருவரும் உயிர்கள்மீது கொண்ட எல்லையற்ற கருணையால் ஒருவரோடொருவர் இணைந்து இந்த நடனத்தை ஆடியபடியே உலகைப்படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளுகின்றனர். இந்த நடனம் நின்றுவிட்டால், உலகம் அழிந்துவிடுமாதலால், உலகம் இடையறாது செயல்பட, அம்மையும் ஐயனும் தொடர்ந்து ஆனந்தநடமிடுகின்றனராம்.
View More தேவிக்குகந்த நவராத்திரி — 4தேவிக்குகந்த நவராத்திரி – 3
‘ஸ்தனபாரத்தினால் மெல்லிடை சற்றே வளைந்து காண, உதயமாகும் காலைக் கதிரவன்போன்ற லேசான சிவந்த வண்ணத்தில் ஆடையினை அணிந்திருந்த அவள் மலர்க்கொத்துக்களைத் தாங்கிநிற்கும் கொடிபோலக் காணப்பட்டாள். கிழமலர்களாலான ஒரு மேகலை தன் இடையிலிருந்து நழுவும்போதெல்லாம் அதைச் சரிசெய்த வண்ணம் வந்தாள். ஒளிந்திருந்த மன்மதன் அவளைக் கண்ணுற்றதும் தான்கொண்ட நோக்கம் நிறைவேறும் எனத் தைரியமடைந்தான்.
View More தேவிக்குகந்த நவராத்திரி – 3தேவிக்குந்த நவராத்திரி — 1
வழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான்.
தேவாதிதேவன் பல்லக்கில் பவனிவருவதனால் வேதவிற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்னஆயிற்றாம்? யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். ‘எம்பிரான் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்’ என்கிறார் அந்த அடியார்…
ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5
தர்க்கம் கொண்டு, ஒரு குறட்பாவை வைத்தே, ஸ்ரீவிஷ்ணுவின் 1000 நாமங்களுக்கு விளக்கமும், பத்து உபநிஷத் வாக்கியங்களுக்கு சமன்வயமும், பிரம்மசூத்ரங்களுக்கு பொருத்தமும் சொல்லலாம். திருவள்ளுவர் ஒரு வைதீகர் / வேதாந்தி /உத்தர மீமாம்ஸாகாரர் /விஶிஷ்ட அத்வைதி /ஸ்ரீவைணவர் என்று முடிக்கின்றேன்.
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5