பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டில் தான் கோயிலில் திருநீறு பெறவும் அவர்கள் கொடுத்தால் மற்றவர்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமை கேட்டு போராடுகிறார்கள்…. என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது. அந்த கோயில்களுக்கு சென்று பூஜை செய்ய விருப்பமிருந்தால் அதற்கான சைவ வைணவ பூஜை முறைகளில் முறையான பயிற்சியை பெற்று அனைத்து சாதியினரும் பூசை செய்யலாம்….
View More அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடுCategory: ஆன்மிகம்
தேவிக்குகந்த நவராத்திரி — 5
பார்வதிக்கே எல்லா ஆட்டத்திலும் வெற்றிமேல் வெற்றி. சிவனுடைய உடுக்கை, சிவகணங்கள், நந்திதேவர், முதலான அத்தனை பொக்கிஷங்களும் அவளிடம்- சடைமுடியில் அமர்ந்த பிறைச்சந்திரனையும் விட்டுவைக்கவில்லை அவள். முகத்தில் பெருமிதம்பொங்க, “அடுத்து என்ன?” என்கிறாள். சிவன் இனித்தன்னையே பணயம் வைக்கவேண்டியதுதான் என எண்ணுகிறார்!
View More தேவிக்குகந்த நவராத்திரி — 5தேவிக்குகந்த நவராத்திரி — 4
நவரசங்களும் தளும்பும் நடனங்களை தேவியும் சிவனும் இடையறாது ஆடிக்களிக்கின்றனர். உலகின் தாயும் தந்தையுமாகிய இருவரும் உயிர்கள்மீது கொண்ட எல்லையற்ற கருணையால் ஒருவரோடொருவர் இணைந்து இந்த நடனத்தை ஆடியபடியே உலகைப்படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளுகின்றனர். இந்த நடனம் நின்றுவிட்டால், உலகம் அழிந்துவிடுமாதலால், உலகம் இடையறாது செயல்பட, அம்மையும் ஐயனும் தொடர்ந்து ஆனந்தநடமிடுகின்றனராம்.
View More தேவிக்குகந்த நவராத்திரி — 4தேவிக்குகந்த நவராத்திரி – 3
‘ஸ்தனபாரத்தினால் மெல்லிடை சற்றே வளைந்து காண, உதயமாகும் காலைக் கதிரவன்போன்ற லேசான சிவந்த வண்ணத்தில் ஆடையினை அணிந்திருந்த அவள் மலர்க்கொத்துக்களைத் தாங்கிநிற்கும் கொடிபோலக் காணப்பட்டாள். கிழமலர்களாலான ஒரு மேகலை தன் இடையிலிருந்து நழுவும்போதெல்லாம் அதைச் சரிசெய்த வண்ணம் வந்தாள். ஒளிந்திருந்த மன்மதன் அவளைக் கண்ணுற்றதும் தான்கொண்ட நோக்கம் நிறைவேறும் எனத் தைரியமடைந்தான்.
View More தேவிக்குகந்த நவராத்திரி – 3தேவிக்குந்த நவராத்திரி — 1
வழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான்.
தேவாதிதேவன் பல்லக்கில் பவனிவருவதனால் வேதவிற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்னஆயிற்றாம்? யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். ‘எம்பிரான் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்’ என்கிறார் அந்த அடியார்…
ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5
தர்க்கம் கொண்டு, ஒரு குறட்பாவை வைத்தே, ஸ்ரீவிஷ்ணுவின் 1000 நாமங்களுக்கு விளக்கமும், பத்து உபநிஷத் வாக்கியங்களுக்கு சமன்வயமும், பிரம்மசூத்ரங்களுக்கு பொருத்தமும் சொல்லலாம். திருவள்ளுவர் ஒரு வைதீகர் / வேதாந்தி /உத்தர மீமாம்ஸாகாரர் /விஶிஷ்ட அத்வைதி /ஸ்ரீவைணவர் என்று முடிக்கின்றேன்.
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4
அபவாதம் பொறுக்காத பிராட்டி, தான் உடனேயே கங்கையில் விழுந்து உயிர்துறக்க விரும்புகிறாள். ஆயினும் ஶ்ரீராமபிரானின் திருவுள்ளத்திற்கு அனுசரணையாக, வால்மீகி ஆஶ்ரமத்தில் உயிர் வாழ்கிறாள். தானும் பரதனைப்போல, ”ஶ்ரீராமபிரானை நேரில் கண்டு, இதுபற்றி விவாதித்துவிட்டு, பிறகு கங்கையில் விழுவதா, அல்லது உயிர்வாழ்வதா என்று முடிவெடுக்கின்றேன்! ம்ம்! லக்ஷ்மணரே! ரதம் அயோத்திக்குத் திரும்பட்டும்!!” என்றெல்லாம் ஆர்பாட்டம்செய்யவில்லை.
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3
இறைவனைப் பற்றி வெறும் வார்த்தைகளால் அறிவது என்பது சர்க்கரை என்று வாசித்து அறிவது போன்றதாம். சர்க்கரையினை நாக்கில் வைத்து சுவைத்தாலன்றி அதன் முழு அனுபவம் கிட்டாது. “இறைவனை முழுமையாக அறிய முடியாது” என்பவன்தான் அவனை முழுக்க அறிந்தவனாவான். “இறைவனை முழுமையாக ஸ்தோத்கரிக்க முடியாது” என்றறிந்தவன்தான் அவனை முழுக்கப் புகழ்ந்தவனாவான் என்கிறது கேன உபநிஷத்.
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?
தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி/பொருநை நதிதீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான வலிமையைச் சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள்.
View More இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?மதுரைக் கலம்பகம் — 2
உமாதேவியுடன் வீற்றிருக்கும் பொழுது, குழலினும் யாழினும் இனிய மழலைமொழி பேசும் முருகனை மடியிலிருத்தி உள்ளம் பூரிக்க உச்சி முகந்து அணைத்துக் கொஞ்சுகிறீர்கள். உலகையெல்லாம் பெற்ற உங்களுக்கு உலகமக்கள் எல்லோருமே குழந்தைகள்தானே? அப்படியிருக்க முருகனை மட்டும் மடியிலிருத்திக் கொஞ்சுவது பட்சபாதம் அல்லவா?
View More மதுரைக் கலம்பகம் — 2