காந்தியின் (கி)ராம தரிசனம்

குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை… நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.. சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்… இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம்…

தர்ம யுத்தம் வென்றது!

‘ராம்தேவுக்கு நேர்ந்த கதி ஹசாரேவுக்கும் ஏற்படும்’ என்ற காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஹசாரே. உண்ணாவிரதம் துவங்கும் முன்னரே கைது செய்யப் பட்டார். அரசு வேறு வழியின்றி பணிந்த பின் தனது அறப்போராட்டத்தைத் தொடர்கிறார் [..] ஹசாரேவின் தர்ம யுத்தம் இறுதியில் வெல்வது நிச்சயம். ஜனலோக்பால் சட்டத்துடன் நின்றுவிடாமல், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடான பாரதத்தைக் காப்பாற்ற, ஊழல் மயமான ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தவும் ஹசாரே முன்வர வேண்டும் [..]

ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்

ஊழலுக்கும், கறுப்புப் பணப் பதுக்கலுக்கும் எதிராக வெடித்துக் கிளம்பிய பாபா ராம்தேவின் சத்தியாக்கிரக போராட்டத்தை வன்முறையாக காங்கிரஸ் அரசு கலைக்க முயற்சித்துள்ளது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய சுவாமி ராம்தேவ் மற்றும் 25000 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அரசு உத்தரவின் பேரில் போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி நடத்தி, முப்பதுக்கும் மேற்பட்டோரை காயப் படுத்தி, கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளது [..]

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2

பஞ்சாயத்துத் தீர்ப்பு என்பது- அக்குழுவில் உள்ள ஐந்து சான்றோர் பெருமக்களும் இயைந்து வழங்குவது; நடுநிலைமை, தெய்வ நம்பிக்கை, மனிதாபிமானம் ஆகியவற்றின் சேர்க்கை அது; வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரின் வலிமை, பாதிப்பு, தாங்கும் திறன் ஆகியவற்றை உத்தேசித்து அதிகாரமும் கருணையும் கலந்து வழங்குவது; குடும்ப நலம், கிராம நலம், நாட்டு நலம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மத்தின் அடிப்படையில் வாய்மொழியாக வழங்கப்பட்டது; பாரம்பரிய நீதிநூல்களும், இதிகாசக் கதைகளும் மிகச் சாதாரணமான பழமொழிகளும் கொண்டு எளிதாக பிரச்சினைகளைத் தீர்த்தது… ஸ்ரீராமனின் பிறப்பை நிர்ணயிக்கும் தகுதியும் ஞானமும் எவருக்கும் கிடையாது. அயோத்தியில் தற்போதுள்ள ராம்லாலாவை இடம் மாற்றும் துணிவும் யாருக்கும் கிடையாது…

குறையொன்றும் இல்லை

மோடியின் அயராத உழைப்பும் மக்கள் அவர்மேல் கொண்ட நம்பிக்கையின் அடையாளமும் இந்த வெற்றிகளின் மாபெரும் உந்து சக்திகள். மொத்தம் 589 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 406 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது தோராயமாக 70 சதமானம்… மதசார்பின்மை பிரச்சாரம் எங்கே போச்சு? வரிந்து கட்டிச் சொன்ன குஜராத் கலவரப் பொய்களெல்லாம் என்ன ஆச்சு? மக்கள் அதையெல்லாம் டாய்லெட் பேப்பர் மாதிரி ஆக்கிவிட்டார்கள்!… முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களை சுலபமாக கவர்ந்த கேஜ்ரி தன் வெற்றிக்காக இன்னொரு காரியத்தைச் செய்திருக்கிறார். நாமும் டில்லி மக்களும் நாட்டு மக்களும் கூர்ந்து கவனிக்க வேண்டிய காரியம் அது. தேர்தலுக்கு முன்பாக பாங்ளாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனுக்கு எதிராக பத்வா விதித்த மௌலானா தக்வீரைச் சந்தித்தார். ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்த கேஜ்ரி அத்தோடு நிற்கவில்லை. முஸ்லிம்களை திருப்தி செய்யவும் முனைந்திருக்கிறார்….

தில்லி குண்டு வெடிப்பு

யோசிக்க வேண்டிய தருணம் இது. நடந்து விட்ட தில்லி குண்டு வெடிப்பு குறித்து பச்சாதாபம், அயர்ச்சி, விரக்தி, இயலாமை, கோபம், ஆத்திரம், வெறுப்பு என்ற கலவையான உணர்ச்சிகளை பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்த நேரத்தில் உணருவது இயல்பான ஒன்றுதான். அதோடு தொடரும் இந்த பயங்கரவாத சம்பவங்கள் குறித்து சற்று விலகி நின்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்

முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கான காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்குப் பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும்.[…]ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.[…] இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும்.