தில்லி குண்டு வெடிப்பு

யோசிக்க வேண்டிய தருணம் இது. நடந்து விட்ட தில்லி குண்டு வெடிப்பு குறித்து பச்சாதாபம், அயர்ச்சி, விரக்தி, இயலாமை, கோபம், ஆத்திரம், வெறுப்பு என்ற கலவையான உணர்ச்சிகளை பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்த நேரத்தில் உணருவது இயல்பான ஒன்றுதான். அதோடு தொடரும் இந்த பயங்கரவாத சம்பவங்கள் குறித்து சற்று விலகி நின்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவங்களில் பெருமளவு சாதாரண மக்கள் தான் பாதிக்கப் படுகிறார்கள். இருபது வருடங்களாகியும் ராஜீவ் காந்திக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் இவர்கள் எம்மாத்திரம்? எப்போது இவர்களுக்கு நீதி கிடைக்கும்? ஏன் இந்த நிலை, இதற்கு என்ன தீர்வு என்று பல சிந்தனைகள் எழுகின்றன.

இக்கட்டுரையைப் படிக்கிற வாசகராகிய உங்களுக்கு சில கேள்விகள். நீங்கள் எத்தனை முறை தீவிரவாதம் குறித்து உங்கள் நண்பர்களிடம் அல்லது உங்கள் வீட்டுக்குள்ளேயே மனைவி பிள்ளைகளுடன் பேசி இருக்கிறீர்கள்? கடந்த இரண்டு வருடங்களில் எத்தனை முறை குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத செயல்கள் நடைபெற்றுள்ளன என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஏதாவது ஒரு சம்பவத்தையாவது தொடர்ந்து அதன் பின் நடைபெறும் விசாரணை, கைது ஆகிய நிகழ்வுகளை கவனித்து வருகிறீர்களா? இது போன்ற சம்பவங்கள் குறித்து பின் அரசியல் தலைவர்கள், துப்பறியும் நிறுவனங்கள், நீதிமன்றங்கள் கூறிய கருத்துக்கள், அவை செயலாக்கம் ஆனதா இல்லையா என்று பின்தொடர்ந்து கவனிக்கிறீர்களா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் சாராம்சம் எவ்வளவு தூரம் விவரம் அறிந்தவராக இருக்கிறீர்கள் நீங்கள் என்பதுதான். நான் பேசி என்ன ஆகப் போகிறது… என்னால் என்ன செய்ய முடியும். இதெல்லாம் தெரிந்து என்ன செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா, தில்லி குண்டு வெடிப்புக்கு பிறகு தீவிரவாதிகள் அனுப்பிய நான்கு ஈமெயில்களில் ஒன்றில் அடுத்து ஒரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப் போவதாக தெரிவித்துள்ளனர். அது எங்கே என்றைக்கு நடக்கப் போகிறது என்று கூட தைரியமாக தெரிவித்துள்ளனர். உங்களுக்கு தெரியுமா இந்த விவரம்? கவனம், செய்திகளை தொடர்ந்து கவனிக்காவிட்டால், எங்கேயோ “வடக்கே” ஒரு ஊரில் குண்டு வெடிக்கிறது என்று நிம்மதியாக தூங்க முடியாது. இங்கே அருகிலேயே உங்கள் உறவினர்கள் குடும்பத்தார் இருக்கும் இடத்திலேயே கூட தீவிரவாத சம்பவங்கள் நடக்கக் கூடும். இப்போது அவ்வளவு நெருக்கமாக எல்லா மாநிலங்களிலும் தீவிரவாத சம்பவங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டன. நாட்டுநடப்பை தெரிந்து கொள்ளாமல் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் இருந்தது போல இப்போது இருக்க முடியாது.

ஊழலுக்கு எதிராக நடந்த – நடக்கின்ற போராட்டங்கள், விவாதங்கள், பிரச்சாரங்கள் எவ்வளவு வலுவாக நாடாளுமன்றத்தையே உலுக்கியது என்று கண்முன்னே பார்த்தோம். மக்களின் கருத்து (public opinion) பெரும் அலையாக எழுந்தால் அரசு நடவடிக்கை எடுத்து தான் ஆகவேண்டும். அண்ணாஹசாரே இயக்கம் வெற்றி அடைந்ததோ இல்லையோ அது இந்திய மக்களின் கண்களை திறந்து விட்டிருக்கிறது. மக்களின் கருத்து ஒற்றுமை மற்றும் எழுச்சி எவ்வளவு முக்கியம் அதனால் என்ன சாதிக்க முடியும் என்று காட்டி இருக்கிறது. சோம்பேறி அரசியல்வாதிகளை உலுக்கி விட்டிருக்கிறது. இது தொடர வேண்டும். தீவிர வாதத்துக்கு எதிராகவும் வலுவான மக்கள் எழுச்சி ஏற்படவேண்டும். அதன் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் நிகழ வேண்டும்.

2008ல் மும்பை தீவிரவாத சம்பவங்களின் போது பாதுகாப்பு மற்றும் துப்பறியும் நிறுவனங்களின் இடையே சரியான முறையில் தகவல் பரிமாற்றங்கள் நிகழாமல் இருந்தது பெரும் குறையாக அப்போது கூறப் பட்டது. அதனை பாராளுமன்றத்தில் வெளியிட்டது

தற்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான். சரி மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது என்ன நிலை? பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் இடையே ஒரு தகவல் பரிமாற்றத்துக்கென்றே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலேயே ஒரு பல்துறை அமைப்பு (Multi Agency Center) உருவாக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்பிலிருந்து தில்லியில் குண்டுவெடிப்பு நிகழலாம் என்று இரண்டு மாதங்கள் முன்பு ஜூலை மாதத்தில் ஒரு அறிக்கை வெளியானது. ஆகையால் தகவல் பரிமாற்றம் பிரச்னை இப்போது இல்லை ஆனால் நடவடிக்கைகள் தான் எதுவும் எடுக்கப் படவில்லை.

இது எவ்வளவு தூரம் மோசமாகப் போயிருக்கிறது என்றால் பல மாதக்கணக்காக தில்லியில் பல முக்கிய இடங்களில் நிறுவப் பட்டுள்ள CCTV கேமராக்கள் வேலை செய்யவே இல்லை. தில்லியில் குண்டு வெடிப்பு நிகழலாம் என்று ஒரு தகவல் அறிக்கை வந்த பின்பும், ஒரு சிறிய குண்டுவெடிப்பு கூட நிகழ்ந்த பின்பும் கூட அது சரி செய்யப் படவில்லை. இதுவே இப்படி என்றால் மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்க வேண்டுமா என்ன? தில்லி தான் இப்படி இருக்கிறது, மும்பை மிக மிக மோசமான தீவிர வாதத்தை அண்மையில் சந்தித்த நகரம், அதுவும் கடல்வழியாக எளிதாக தாக்கிய நகரம், அது எப்படி இருக்கிறது தெரியுமா, போன மாதம் (ஆகஸ்ட்) ஒரு ஆயிரம் டன் எடையுள்ள ஆளில்லா கப்பல் மும்பை கடற்கரையில் தரை தட்டி உள்ளது. கடற்படை, கடலோர காவல் படை, கடலோர மும்பை காவல்துறை என்று மூன்றடுக்கு பாதுகாப்பு இருந்தும் யாருக்கும் அந்த கப்பலைக் குறித்து எதுவும் தெரியவில்லை. யாரும் தடுக்கவும் இல்லை. இதுவே ஒரு அணுகுண்டு கப்பலாக இருந்தால் எவ்வளவு நாசம் விளைந்திருக்கும்?

இந்தியாவில் எங்கேயும் பாதுகாப்பு இல்லை. எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் நிதர்சனம்.

சரி தகவல் பிரச்னை இப்போது இல்லை வேறு என்ன இருக்க முடியும்? தீவிரவாத பயங்கர செயல்களுக்கு எதிராக மற்ற நாடுகள் எப்படி செயல்படுகின்றன என்று பார்த்தால் நாம் எங்கே பின்தங்கி உள்ளோம் என்று புரிந்து கொள்ள முடியும். செப்டெம்பர் 11, 2001க்கு பிறகு அமெரிக்காவிலும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் இல்லாமை – போதாமை பெரிய பிரச்சனையாகக் கூறப் பட்டது. அதற்கு தீர்வாக Director of National Intelligence (DNI) என்ற பதவி உருவாக்கப் பட்டு, அதன் கீழ் எல்லா பாதுகாப்பு நிறுவனங்களும் இணைக்கப் பட்டன. வெறுமனே தகவல் பரிமாற்றத்தொடு நில்லாமல் தீவிரவாத செயல்களை தடுக்கும் பொறுப்பும் இந்த பதவியின் கீழ் வந்தது. அதற்குரிய அதிகாரங்களும் கொடுக்கப் பட்டன. பாதுகாப்பு நிறுவனங்களின் வெற்றி தோல்விக்கு இந்த பதவியில் உள்ளவரே பதில் சொல்லியாக வேண்டும் என்று அமைக்கப் பட்டது. இதற்கு தலைமையாக மிகவும் திறமையும் அனுபவமும் வாய்ந்த மூத்த அதிகாரி ஒருவரே நியமிக்கப் பட்டு வருகிறார்.

ஆனால் நமது நாட்டு விஷயத்தில் பார்த்தால் பல்வேறு துறைகளின் கூட்டமைப்புக்கு, அரசியல்வாதியும் பொருளாதார நிபுணருமான ப.சிதம்பரம் உட்கார்ந்திருக்கிறார். இவருக்கு துப்பறியும் நிறுவனங்கள், பாதுகாப்பு அமைப்புகள், அவற்றின் இடையே உள்ள அதிகார பகிர்தல், உள்ளரசியல் இவை குறித்து எவ்வளவு தூரம் தெரியும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இவருக்கே ஒரு அரசியல் வாதியாக பல நிர்பந்தங்கள் இருக்கக் கூடும். இதில் அவர் பாரபட்சமின்றி ஒவ்வொரு முடிவும் எடுக்க முடியுமா, இவருக்கு தகவல் தருபவர் சரியான தகவல் தருகிறாரா, இவர் எடுக்கிற முடிவுகள் பாதுகாப்பு அமைப்புகள் எப்படி எதிர்க்கொள்ளும் என்று இவருக்கு தெரியுமா என்பன போன்ற பல கேள்விகள் இருக்கின்றன.

இது மட்டும் அல்லாது பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் இடையே என்னென்ன பொறுப்புகள் யார் யாருக்கு என்று குழப்பம் இருப்பதாக தெரிகிறது. இல்லாது போனால் ஜூலை மாத அறிக்கை, அதையொட்டி இதே நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த சிறு குண்டுவெடிப்பு ஆகியவற்றுக்குப் பின்னும் அங்கே CCTV கேமராக்கள் பொருத்துவதில்/சரி செய்வதில் எந்த நிறுவனமும் ஈடுபடவில்லை என்பது அதிசயம் இல்லையா!

இதற்கு முன் நிகழ்ந்த பல தீவிரவாத சம்பவங்களின் போதும் பல யோசனைகளை கூறப் பட்டன. இவற்றில் சில நடைமுறைக்கும் வந்துள்ளன. ஆயினும் பல முக்கிய ஆலோசனைகள் (NATGRID போன்றவை) செயல்வடிவம் பெறாமலேயே உள்ளன. இது போக பாதுகாப்பு நிறுவனங்களுக்குள் உட்பூசல், அரசியல் அதிகரித்து உள்ளது. அதிகார வர்க்கம் முனைப்பு காட்டாமல் இருக்கிறது. உதாரணம் நமது தமிழக மீனவர்கள் பலர் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்ட போது நமது நாடு எப்படி பதில் சொன்னது என்று யோசித்தால் புரியும். இதனால் எல்லாம் தான் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து ஒரே குறிக்கோளுடன் பணியாற்ற முடியாமல் போகிறது. பாதுகாப்பு அமைப்புகள், அவற்றின் கூட்டுத் தலைமை ஆகியவற்றில் உடனடி மாற்றங்கள் தேவை ஆனால் இதனை அதிகார வர்க்கம் எவ்வளவு தூரம் எதிர்க்கும் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

கன்னா பின்னாவென்று மாற்றங்களை அதிரடியாக செய்ய முடியாது; எல்லா பயங்கரவாத செயல்களையும் எப்படி தடுக்க முடியும் என்பன போன்ற சிந்தனைகளை அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு வழங்கி வந்தால் ஏதோ கொஞ்சம் செய்வோம் என்று முயற்சி எடுக்கிற அரசியல்வாதி கூட முயற்சியை விட்டுவிடுவார். இந்த சந்தர்பத்தில் தான் பொதுமக்களின் கருத்துகள் அவசியம் ஆகின்றன. பொதுமக்களிடையே விவாதங்கள், விமர்சனங்கள், கருத்துக்கள் அலை அலையாக எழ வேண்டும். அது முயற்சி எடுக்கிற அதிகாரிக்கோ, அரசியல்வாதிக்கோ உறுதுணையாக அமையும்.

7 Replies to “தில்லி குண்டு வெடிப்பு”

  1. Pingback: Indli.com
  2. நல்ல கட்டுரை …

    அனால் நம் நாட்டில் ஒவ்வொரு தீவிரவாதம் நடந்த பின்னும் மக்களும் சரி அரசியல்வாதிகளும் சரி என்ன சொல்கிறார்கள். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது.. தீவிரவாதத்தை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்ற நம்மை மடையர்கள் ஆகும் விஷயத்தை தானே சொல்கிறார்கள் ..

    எல்லா முஸ்லிம் களும் தீவிரவாதி இல்லை … நிச்சயமாக இல்லை.. அனால் இஸ்லாம் தானே அவர்களில் ஒரு சிலரை தீவிரவாதி ஆக தூண்டுகிறது..

    அப்படி இருக்க இஸ்லாத்தின் மேல் ஒரு விவாதம் நடக்க ஏன் செகுலர் வாதிகளே போராட கூடாது.. RSS போராடினால் நீங்கள் மதவாதம் என்பீர்கள் ..சரி..

    அட்லீஸ்ட் இந்த செகுலர் வாதிகள் ஏன் மதனி , சுபியா போன்றவர்களுக்கு எதிராக போராட கூடாது …

    அதுவும் முன்பாவது தமிழகத்தில் சும்மா குல்லா போடுவதும் பிரியாணி சாப்பிடுவதும், தர்கா போவதும் தான் இஸ்லாம் என்று இருந்தது..அதனால் சட்டம் ஒழுங்குக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தது (பெருமளவில்) …

    அனால் இப்போது , ஜைனுலபுடீன், ஜவஹிருல்லாஹ் போன்ற தலைவர்கள் விஷம் கக்கி கொண்டு இருக்கிறார்கள்.. அவர்குளுடன் கூட்டணி வேறு நம் கட்சிகள் வெய்து கொள்கின்றன.. இதெல்லாம் எங்கு பொய் முடியுமோ ..

    “பஞ்சமும் நோயும் நின் மெய்யடியாற்கோ ?
    பாரினில் மேன்மைகள் வேறினி யார்கோ?”

    என்று பாரதியார் பாடல் படித்ததாக ஞாபகம். அதே கேள்வி யை தான் நாம் இன்னும் கண்ணனிடம் கேட்டு கொண்டிருக்கிறோம் .. பதில் தான் வந்த பாடில்லை.

  3. வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

    என்பது 2008ல் ஒரு குண்டுவெடிப்பின் பின்னணியில் நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு (https://jataayu.blogspot.com/2008/05/blog-post_15.html)

    அதன் பின் நடந்த பல குண்டுவெடிப்பு சம்பவங்களே இந்த்க் கேள்விக்கு தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

    தீவிரவாதத்தைப் பொறுத்த வரையில் இந்தியா முழுவதுமே ஒருவித சலிப்பு மனநிலைக்கு போய்விட்டது என்று தோன்றுகிறது.. மும்பை 26/11 குண்டுவெடிப்புக்குப் பிறகு அதற்கு முந்தைய பயங்கர குண்டுவெடிப்புகளை எல்லாம் நாடு சுத்தமாக மறந்து விட்டது.. பத்திரிகையாளர்கள் அவற்றை சுட்டிக் காட்டுவது கூட இல்லை… பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களில் மட்டும் தான் அந்த சோகம் எஞ்சியிருப்பவர்களின் வாழ்நாள் இறுதிவரை ஆறாத ரணமாக நின்று துன்புறுத்தும்.. அந்த சம்பவங்கள் நடந்த ந்கரங்களில் கூட அவற்றை மக்கள் மறந்து விட்டதாகத் தோன்றுகீறது..

    வாராணசி, ஜெய்பூர், அகமதாபாத், தில்லி சரோஜி மார்க்கெட் (தீபாவளிக்கு முந்தைய நாள்) பயங்கரவாத சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் அப்படி அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. மானங் கெட்ட கிரிமினல் கட்சியான காங்கிரஸ் அரசு, தனது ஓட்டுப் பொறுக்கித் தனத்திற்காக இந்திய உயிர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    பாஜக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களிலும் (பாராளுமன்றம், அக்ஷர் தாம், அயோத்தி…) குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப் பட்டு, POTA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அப்படி விசாரிக்கப் பட்டு மரண தண்டனை வழங்கப் பட்ட அப்சலுக்கு அதை நிறைவேற்றுவதை கூட காங்கிரஸ் அரசு செய்ய மறுக்கிறது.

    எண்ண எண்ண மேலும் மேலும் கசப்பும், ஆற்றாமையும் கோபமுமே மிஞ்சுகிறது.

  4. All those who are criical of Bush on many matters are compelled by circumstances to concede one things, that is his retaliatory action and reorganisation of various srcurity agencies into anumbrella with adequate powers with a draconian enabling act and at the same time ensuring the american muslims arenot unnecessarily targetted brought about a peaceful decade,Above all elsew the public of ajj hues religion and nationality whole heartedly stood by and effectively cooperated in the efforts,POTA which was less stringent than the Patriot act was not only frowned upon but used as a vehicle topromote the political fprtunes,The media. both electronic and print and civil societies championing alleged human rights conveniently forgot the most fundamental right of a human is his life and carried out amisplaced agitation leading to thr death of so many innocent lives.They should bear the blame for the present misfortunes.

    Thiruvengadam

  5. ஒரு காங்க்ரஸ்காரனோ, திராவிடக் கட்சிக் காரனோ செத்தால்தான் வலி தெரியும்.

  6. மது அவர்களே! சிந்தனையை தூண்டும் நல்லதொரு கட்டுரை. பயங்கரவாதம் மற்றும் அதனை கையாளுவது பற்றிய எனது எண்ணங்கள் வருமாறு: 1. எந்த சம்பந்தமும் இல்லாத அப்பாவி பொதுமக்களிடம் விரோதம் கொள்ளும் ஒருவருக்கு, அந்த எண்ணத்தை தீவிரப்படுத்தும் ஒரு குழு அல்லது இயக்கம் பின்னணியில் இருக்கவேண்டும். 2 . இதுபோன்ற பிரிவினைவாத அல்லது சமுதாய விரோத கும்பல்களையும் குழுக்களையும் நமது உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் உளவு அதிகாரிகள் ஏற்கனவே அடையாளம் கண்டிருப்பார்கள். 3 . இதுவரை அடையாளம் காணப்பட்ட தேசவிரோத, சமுதாய விரோத இயக்கங்கள் மற்றும் குழுக்களின் அன்றாட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதே உளவுத்துறையின் முக்கியமான பணியாகும். 4 . அரசியல் தலைவர்களின் தவறான அணுகுமுறையின் காரணமாகவே நமது பாதுகாப்பு இவ்வளவு கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5 . தேசத்துரோக குழுக்களிடம் அன்பும் பரிவும் காட்டுவது, கொலைகாரர்களுக்கு கருணை காட்டுவது, சமுதாய விரோதிகளை தண்டிக்காமல் விடுவது ஆகிய பண்புகளை கொண்டுள்ள நமது அரசியல் தலைவர்களிடமிருந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் ஊக்கம் பெற்ற பயங்கர வாதிகள் எவ்வாறு செயல்படுவார்கள்? 6 . பயங்கரவாத தாக்குதல் எப்போது நடைபெற்றாலும் உடனடியாக கண்டன அறிக்கை விடுவது, உயர்நிலை அதிகாரிகள் கூட்டம் போட்டு அரசின் செயல்பாட்டை முடுக்கி விட்டு சதிகாரர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகளை சொல்லவைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்கள் குடும்பத்திற்கும் பணம் கொடுப்பதாக அறிவிப்பது, இவை மட்டுமே அரசியல் தலைவர்களின் செயல்பாடாக உள்ளது. 7 . தேசத்ரோகிகளையும், சமுதாய விரோதிகளையும் ஒழிக்க முன்னெச்சரிக்கையுடன் முனைப்பாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம். 8 . உளவுத்துறையும் பாதுகாப்பு இயக்கங்களும் அதிரடியாக செயல்பட்டு சமுதாய விரோதிகளின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சிகளை தடுப்பதே நமது அரசியல் தலைவர்கள்தானே! 9 . பயிற்சி, பணபலம், இவற்றின் மூலம் தேச விரோத குழுக்களும் இயக்கங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தழைத்தோங்கி வருவதற்கு கையாலாகாத நமது அரசியல் தலைவர்களின் தவறான அணுகு முறையே காரணம்.

  7. நல்ல கட்டுரை !
    காங்கரஸ் கட்சி என்ன நினை கின்றது என்றால் பயங்கர வாதிகளை தன்னிதால் கூட இஸ்லாமிய ஓட்டு பொய் விடுமோ என்ற பயம் . அவர் களுக்கு தேவை ஓட்டு ….. மக்களாகிய நாம் செத்தா அவகளுக்கு என்ன நஷ்டம் .. மிஞ்சி மிஞ்சி போனா சிதம்பரம் என்ன சொல்லுவாரு ” கடும்ம்ம் கண்டனம் ” அதோட அவர் கடமை மூஞ்சி போச்சி. இப்ப நம்ம நாடு எந்த நிலைமையில் இருக்கு ?
    MLA , MP என்ற பொறுப்புள்ள பதவியில் உள்ள வர்கள் கூட வெளிப்பையாகவே பயங்கர வாதி களுக்கு ஆதரவாக பேசுகின்றனர் அவர்களை கேட்பாரே இல்லை. காரணம் அந்த பயங்கர வாதிகள் முஸ்லிம்கள். இன்னொரு கொடுமை நம்ம நாட்ல நம்ம தேசிய கோடியேற்றுவதுக்கு தடை (காஷ்மீரில்) அதுவும் பிரதமரே தடுக்கின்றார் யந்த நாட்டிலும் நடக்காத கொடுமை . நாட்ட இன்னும் எந்த நிலைமைக்கு கொண்ண்டு போவானுன்களோ தெரியல . நம்ம நாடு பயங்கர வாதிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்துகிட்டு இருந்தா……. எங்கருந்து பயங்கர வாதத்த எப்படி தடுக்க முடியும் ? மத சார்பின்மைனு சொல்லிக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு இவளோ பெரிய ஜால்ரா அடிக்குது இது எங்க போய் முடியுமோ . 1947 முண்ணாடி இஸ்லாமியர்களுக்கு போட்ட ஜால்ராதான் பாகிஸ்தனா போச்சி. இப்போ போடுற ஜால்ரா வால என்ன நடக்க போகுதோ ????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *