காலை முதலே சான் ஓசே நகரின் நடுவே அமைந்திருக்கும் எஸ் ஏ பி விளையாட்டு உள்ளரங்கு நோக்கி மக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். 18000 பேர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.. நீண்ட வரிசைகளில் மக்கள் கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். வரிசையில் கூடியிருந்தவர்களும் பாரத் மாதா க்கீ ஜெய் வந்தே மாதரம் மோடிக்கு ஸ்வாகதம் என்று தொடர் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்… “வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை இந்தியாவின் அறிவு இழப்பாக நான் கருதவில்லை மாறாக அவர்களை அறிவு சேமிப்பாக லாபமாகக் கருதுகின்றேன். வெளிநாடு சென்ற இந்தியர்களின் அறிவும் அனுபவங்களும் இந்தியாவுக்குத் தேவைப் படும் பொழுது இந்தியாவின் நலன்களுக்காக உபயோகப் படப் போகும் ஒரு சேமிப்பாகக் கருதுகின்றேன். வட்டியுடன் திருப்பி வரப் போகும் முதலீடாக நான் காண்கின்றேன். இது ஒரு விலை மதிக்க முடியாத அறிவுசார் முதலீடு….”
View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2
ஒரு ஃபிஜி தீவுக்காரரான உங்களுக்கு மோடி மீது ஏன் இவ்வளவு ஆர்வம் என்றேன். இந்தியர்களுக்குத்தான் அவரது அருமை பெருமைகள் தெரிவதில்லை. உலக இந்துக்களின் தலைவராக நாங்கள் மோடியைக் காண்கிறோம். இத்தனை நாட்களாக இப்படி ஒரு அரிய தலைவனை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? இவரை பிரதமராக்காமல் என்ன செய்தார்கள் இந்தியர்கள் என்றார் அந்த டாக்ஸி டிரைவர்… டிஜிடல் இண்டியாவுக்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைப் போலவே முக்கியத்துவம் உள்ளது மோடியின் டெஸ்லா விஜயமும் மஸ்க்குடனான அவரது சந்திப்பும். சரியான ஒப்பந்தங்கள் உருவானால் இந்தியாவின் எரிசக்தி தேவை பெரும் அளவு குறையும். இந்தியாவின் வாகனஙக்ள் வெகுவாக பேட்டரி வாகனங்களாக மாறும்….
View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2ஆதிசங்கரர் படக்கதை — 3
இளம் சங்கரனின் வேண்டுகோளுக்கு பூர்ணாநதித்தெய்வம் இணங்கினாள். மறுநாளே, பூர்ணாநதி தன் போக்கை மாற்றிக்கொண்டது.
View More ஆதிசங்கரர் படக்கதை — 3மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1
முன்னேற்பாடு கூட்டத்தின் பொழுது அந்த ஹோட்டல் அரங்கமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு கூட்டத்திற்கே பெரும் அளவில் மக்கள் வந்தது நான் எதிர்பாராதது… எதற்காக இத்தனை நூறு பேர்கள் தங்கள் குடும்பம் வேலை எல்லாம் விட்டு விட்டு இரவு பகல் பாராமல் உழைத்தார்கள்? எதை எதிர்பார்த்து? அவர்களுக்குத் தங்கள் பிறந்த தேசத்தின் மீது இருந்த பற்றும் அதன் தன்னலமற்ற தலைவன் மீதான பாசமும் மட்டுமே அவர்களை அயராமல் இயக்கியது…. மோடியை ஒரு முறை இரவில் மதுரையில் மேலமாசி வீதி தெற்குமாசி வீதி சந்திப்பில் பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவர் ஒரு ஆர் எஸ் எஸ் தொண்டர் ஒருங்கிணைப்பாளர். இத்தனை வருடங்களில் அவரது கம்பீரமும் பொலிவும் பல மடங்கு கூடியிருந்தன…
View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?
இந்தியாவைப் பொறுத்தவரையில் குடும்பஅமைப்பு முறையால் ஆண்களுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்பையும் இதே இந்திய சமூகம் வழங்கியுள்ளது. இன்னமும் “வேலைக்குச் செல்வதே புருஷ லட்சணம்” என்பதைத்தான் இந்தியப் பெண்களும் சமூகமும் எதிர்பார்க்கிறது என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. திருமணத்திற்கு முன்பாகவே ஓர் ஆண் தனக்கான பணியை உறுதிசெய்யவேண்டிய அவசியத்தையும் சமூகம் வைத்துள்ளது. அதையும் ஆண்சமூகமே வைத்துள்ளதுபோலத் தோன்றினாலும், பெண்ணும் எதை எதிர்பார்க்கிறாள் என்பதும் அவசியம் கேட்கப்பட வேண்டியது. குடும்பஅமைப்பில் உடனடியான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும், நீண்டகால நலன், எதிர்கால சந்ததிகளின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் குடும்பத்தோடு கூடிய பெண்ணியம் பேசுதலையே நான் வரவேற்பேன்….
View More இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?தேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..
இந்திய அரசியல் வரலாற்றில் மகதம் பேரிடம் வகித்து வந்திருக்கிறது. நாட்டை ஒருங்கிணைத்த அரசியல்…
View More தேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..சீதையின் சீற்றம்!
ஆண்களைத் தனது பிறப்பிலிருந்தே தனது ஆதிக்கத்தில் வைத்துவிடும் பெண்ணினத்தை ஆண்களால் அடிமை செய்துவிட இயலுமா? நாணல் மாதிரி வளைந்து கொடுத்து வெள்ளத்திலும் நிலைத்துவிடும் பண்புகொண்டவர் பெண்கள் – எதிர்த்து நின்று வீழ்பவர்கள் ஆண்கள்! இது அவரவர் இயல்பு! வளைந்துகொடுப்பதால் பெண்கள் வலிமை அற்றவர்கள் அல்லர். வரட்டுப் பிடிவாதத்துடன் நிமிர்ந்துநிற்பதால் ஆண்கள் வலிமையில் சிறந்தவரும் அல்லர்.
ஐயாயிரம் வீர்களுக்கு இல்லாத வலிமை என்னவருக்கு இருந்தது. அவரைக் காட்டிலும் அதிக வலிமை எனக்கு இருந்தது. இதை அறியாதவரா என்னவர் இராமன்? அவரைவிட வலிமை உள்ள என்னை அடிமைசெய்ய அவரால் இயலாது என்று அவருக்குத் தெரியாதா, என் கண்மணிகளே?
கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4
ஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே! அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா? தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா?… தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்? தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே?…
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி
1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்… 2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை சுவாமிஜி தொடங்கினார். இந்த இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது…
View More அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதிஆதிசங்கரர் படக்கதை — 2
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம் – பகுதி 2.
View More ஆதிசங்கரர் படக்கதை — 2