பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை… வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण – shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु – shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி… பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச் சைவர்கள் உணர்வார்கள். சைவ சமயக் குரவர்கள் போற்றிய மகத்தான மரபை, வெறும் சல்லிக்காசு அரசியல் லாபத்திற்காக அவதூறு செய்யும் பழ.கருப்பையா போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உணருங்கள்…
View More சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினைஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2
தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன்… திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது… ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும் நாடகத்தோடு வந்த போது. அதைப் பார்த்த போது தான் ராமானுஜம் has arrived என்று எனக்குப் பட்டது.. (வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இந்தக் கட்டுரை தான். இதன் அடுத்தடுத்த பகுதிகள் வெளியாவதற்கு முன்பே 21-அக். அன்று வெ.சா மறைந்து விட்டார். இன்னும் ஆறாத கண்ணீருடன் அவரது நினைவைப் போற்றி இப்பகுதியை வெளியிடுகிறோம்).
View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்
மதிப்பிற்குரிய பெரியவர் வெங்கட் சாமிநாதன் அடுத்தடுத்த இரண்டு மாரடைப்புகளால் நேற்று (21 அக்டோபர் 2015) அதிகாலை பெங்களூரில் காலமானார். கலைமகளின் தவப்புதல்வர் புனிதமான சரஸ்வதி பூஜை நாளன்று மறைந்து விட்டார். கலை இலக்கிய விமர்சன பிதாகமர், மகத்தான சிந்தனையாளர். அரை நூற்றாண்டு காலம் தனது கூர்மையான எழுத்துக்களாலும் இடித்துரைகளாலும் தொடர்ந்து புதிய திறப்புகளை தமிழர்களாகிய நமக்கு அளித்து வந்து வழிகாட்டியவர் மறைந்து விட்டார்…. தமிழ்ஹிந்து இணையதளம் உருவான 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து வெ.சா அவர்களின் படைப்புகள் இதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் என்ற கட்டுரை தான். அதன் முதல் பகுதி தமிழ்ஹிந்துவில் சென்ற வாரம் வெளிவந்தது. அதன் அடுத்தடுத்த பகுதிகளை ஏற்கனவே அவர் அனுப்பி வைத்திருந்தார்…
View More அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1
வங்காளத்திற்கோ, மகாராஷ்டிரத்திற்கோ, அல்காஷி வந்து தான் நாடகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. மற்ற எல்லா ;பிரதேசங்களுக்கும் இருந்தது. ஆனால் அல்காஷி உருவாக்கியது உலகளாவிய நாடக்கலையின் முழு பரிணாமம்.. ராமானுஜத்தைத் தந்தும் தமிழ் நாடு உரு;ப்பட மாட்டேன்னு அடம் பிடித்தால் என்ன செய்வது? ராமானுஜமும் என்ன என்னமோ செய்து பார்க்கிறார்… தான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்து வருவதாகவும் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பார்த்த, அறிமுகமான முதல் தமிழர், நாடகம் கற்க வந்தவர். இன்னும் ஒன்றிரண்டு பேரைச் சொல்ல முடியும் தான். நாடகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தாகம் இருந்தால் ஹிந்தியும் வரும் நாடகமும் வரும் அந்த ஒரு சிலரில் ராமானுஜமும் ஒருவர்….
View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1ஆதிசங்கரர் படக்கதை — 4
உரையாடல்: வையவன் — படங்கள்: செந்தமிழ்
View More ஆதிசங்கரர் படக்கதை — 4விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்
இந்த எழுத்தாளர்கள், தம்மைப் போன்ற இதர கைத்தடி எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பது, அடுத்த தலைமுறையிலும் தம்மைப் போலவே ஒத்த “கொள்கையுடைய” நடுவர்களையும் நியமிப்பது என்றுதான் அறுபது எழுபது ஆண்டுகளாக இந்திய அறிவு ஜீவி உலகம் இயங்கி வருகிறது. அதனாலேயே நேரடியாக அரசு தரும் விருதாக இல்லாவிட்டாலும், அரசு தரும் விருதைப் போலவும் தற்போதைய அரசின் மீது அதிருப்தியால் அதைத் திருப்பி தருவதாகவும் ஒரு நாடகத்தை பீகார் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றுகின்றனர்…மோடி ஆட்சியில் எந்தவொரு எழுத்தாளரும் படைப்பாளியும் அச்சுறுத்தப் படவில்லை. எந்தவொரு வலதுசாரி எழுத்தாளர்களும் இன்று வரை எந்தப் பதவிக்கும் தெரிவு செய்யப்படவில்லை. .நரேந்திர மோதி மௌனமாக இதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, தன் பாட்டுக்கு தன் வேலையை செய்வது இவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது…
View More விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு
தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை….
View More மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்புபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி
‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற…
View More போலி கோஷத்தின் பொல்லாத பின்னணிகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்
தொடர்ந்து கிறிஸ்துவப் பள்ளிகளிலும், ஹாஸ்டல்களிலும் இந்து மாணவிகள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள் என்பதான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாது. அவற்றின் வாய் முழுக்க மாட்டிறைச்சி. நம் குழந்தைகளுக்காக நாம்தான் பேச வேண்டும். இந்திய அரசின் சிறுபான்மை சலுகை என்கிற பெயரில் நடத்தப்படும் கல்விப் பாரபட்சக் கொள்கையின் (educational apartheid) கோர விளைவுதான் இது. அரசு கேள்வி கேட்க முடியாது. நாங்கள் சிறுபான்மையினர் என்று ஓமலூர் சுகன்யா கொலை விவகாரத்தில் பிஷப் பதிலளித்தது நினைவிருக்கிறதா? சென்னை ரஞ்சனி, ஓமலூர் சுகன்யா, புதுவை அனந்த வள்ளி, என்று தொடர்கிற வரிசையில் உசிலம்பட்டியின் சிவசக்தியும் சேர்ந்திருக்கிறார்….
View More கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4
பிற நாடுகள் பல முறை முயன்ற பின்னரே செவ்வாயை சென்றடைந்துள்ளார்கள். என்னைப் போலவே இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது (மோடி மோடி மோடி என்ற பெரும் ஆமோதிப்பு குரலோசை அலையலையாய் எழும்புகின்றது) …. ஆகவே நீங்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால் பழைய எரிபொருள் விலையில் 19000 கோடி ரூபாய்கள் திருடப் பட்டு வந்தது புரிய வரும். இப்பொழுது இந்தப் பணம் அரசின் கஜானாவில் மிச்சப் படுகின்றது. இனிமேல் அந்த உதவித் தொகையைப் பெற இடைத்தரகர்கள் தேவையில்லை, திருடர்கள் கிடையாது. எனது ஜாம் மூலமாக ஊழலை ஒழிக்கத் துவங்கியுள்ளோமா இல்லையா? திருட்டை தவிர்த்திருக்கிறோமா இல்லையா? நிதியை சேமித்துள்ளோமா மிச்சப் படுத்தியுள்ளோமா இல்லையா? அந்த சேமிப்பு நிதி ஏழைகளூக்கு பயன் படுமா இல்லையா? (ஆமாம் ஆமாம் ஆமாம் என்ற கோஷம் விண்ணை முட்டுகின்றது) இப்படித்தான் மாற்றம் உருவாகின்றது….
View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4