இந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? – இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்…
View More இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரைஇந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?
ஆயிரக்கணக்கில் நாம் ஆதாரத்துடன் பிறப்பின் மூலமாக வருகிற நிறவெறியின் மூலம் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதை கூறலாம். தீண்டாமையின் கோரமுகத்தை இங்கும் காணலாம். பல இஸ்லாமிய தீவிரவாத குறுங்குழுக்கள் பிறப்பின் மூலமாக வருகிற ஜாதியை வைத்து தங்கள் ஜாதியைத் தவிர பிறரை படுகொலை செய்யும் செய்தியை நாள்தோறும் நாம் இப்போது கண்முன் (youtube மூலமாக) பார்த்து வருகிறோம். இந்தக் குறுங்குழுத் தீவிரவாதிகள் தாங்கள் அரங்கேற்றும் கோரப் படுகொலையை வீடியோ எடுத்து செய்தி சேனல்களுக்கு அனுப்புகிறார்கள் என்றால் அவர்களின் ஜாதி வெறி எந்த அளவுக்கு தலைக்கேறி இருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடியும்.
View More இந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?தீர்ப்புகள் திருத்தப்படலாம்!
‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே நமது நீதி பரிபாலனத்தின் ஆதார அம்சம். அதற்காகவே நீதித் துறையில் பல அடுக்குகளாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரானதாக மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அமைவது ஒன்றும் புதிதல்ல. அதற்காகத் தான் மேல்முறையீடு என்ற நடைமுறையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையே ஜெயலலிதா தரப்பு தனக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இனி மேல்முறையீடு செய்ய வேண்டியது கர்நாடக அரசுத் தரப்பின் பொறுப்பு.
View More தீர்ப்புகள் திருத்தப்படலாம்!வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்
எங்கள் மாணவர்களிலேயே மிகவும் திறமையான மாணவன் நவீன். வேகமாக வேதங்களைக் கற்றுக் கொண்டான். இந்த வேதபாடசாலையில் குறிக்கோளாக உள்ள எங்களுடைய நோக்கமெல்லாம் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைப் பருவத்தில் பயில விரும்பும் எவருக்கும் மதம், ஜாதி குறுக்கிடக்கூடாது. தற்பொழுது 60 மாணவர்கள் வேத பாடசாலையில் படித்து வருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் மேலும் 30 மாணவர்களை சேர்க்க உள்ளோம். ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும். வேதபாடசாலையில் நான்கு ஆண்டு காலத்துக்கு கற்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.
View More வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்
ஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 1962ல் நடைபெற்ற சீன போரின்போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய அரும்பணியை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். எந்த நேரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வெறுத்தாரோ அதே நேரு 1963ம் ஆண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். காரணம் ஆர்எஸ்எஸ்-ன் தேசத்திற்கான தன்னலமற்றப் பணியை உணர்ந்ததால்தான். எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்காத பெருமை ஆர்எஸ்எஸ்-க்கு கிடைத்தது. அதுவும் காந்திஜி படுகொலை காரணமாக தடைசெய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, அதனால் பெரும் தொல்லைகளுக்கு ஆளான இயக்கம் சுதந்திர தின அணிவகுப்பில் 3500 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பூர்ண கணவேஷுடன் (ஆர்எஸ்எஸ் சீருடையுடன்) கலந்துகொண்டனர்.
View More தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை
தமிழ் இசை மூவரில் ஒருவர் மாரிமுத்தா பிள்ளை. தில்லை ஈசனிடமே பேரன்பு பூண்ட அடியார். அவனைத் தன் ஆண்டானாகவே கொண்டவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தான் அடியானாகிப் பாடுகிறார். ஆயினும், தமது அன்பின் உரிமையினால் தில்லை ஈசனை இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல்களே அனேகம் ஆகும்… “சாதியும் தாயும் தந்தையும் இல்லார் தனியர் என்றேனோ, பெண்ணால் – பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட புலையர் என்றேனோ, சாதி – பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில் பெண்கொண்டீர் என்றேனோ”… இவரது பாடல்களில், ‘காலைத் தூக்கி’, ‘ஏதுக்கித்தனை மோடி,’ எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன…
View More எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளைமறக்கொணா இருவர்
திருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை, “தில்லை மூதூர் ஆடிய திருவடி”, என்றும்,”தில்லையுட் கூத்தனே” என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம். அது, சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல். ‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள். எனவே, சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும். அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு; பிண்டமாகிய உடலிலும் உண்டு. அண்டத்திலுள்ளது, பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது , ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும்…
View More மறக்கொணா இருவர்அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..
நாவல்கள், சிறுகதைகள், அரசியல், சமூக விமர்சனங்கள், மேடைப் பேச்சுக்கள், திரைப்பட இயக்கம் என பல தளங்களில் வியாபித்து நிற்கிறது அவரது ஆளுமை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் அடியொற்றி வெளிப்பட்டது அவரது சத்திய ஆவேசம். ஜெயகாந்தனின் மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற பெங்களூர் வாசக வட்டக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமையையும், படைப்புகளையும் நினைவுகூர்ந்து நான் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே…
View More அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்
இந்த இயற்கைப் பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியையும், துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருவது குறித்து உலகெங்கும் உள்ள ஊடகங்கள் செய்திகளைத் தந்த வண்ணம் உள்ளன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் நிவாரணப் பணிகளுக்ககு நன்கொடை அளித்து பொருளுதவி செய்யுமாறு கோருகிறோம். விவரங்கள் கீழே..
View More நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!
மஞ்சை வசந்தன் ஆதாரமே இல்லாமல் தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சங்கராச்சாரி இப்படி சொன்னார் என்று ஒருதகவல் சொன்னார். உடனே நான் நீங்கள் எப்படி திரிபுவாதம் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என்று சொல்லி அவர் எழுதிய புத்தகம், அவர் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். என்னை முழுவதும் பேசவிடவில்லை என்றாலும் மஞ்சை வசந்தன் கோபமானார். நான் எடுத்துக்காட்டியதற்கு பதில் சொல்லவில்லை.
View More தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!