உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2

வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம், அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை?… அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அப்படி சந்தேகம் ஏற்படும் அளவுக்கு விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், டாக்டர் சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா? அவர்கள் மீது ஏற்படாத ஒரு நம்பிக்கை இந்தியாவை உடைப்பேன் என்று சொல்பவனின் மீது வந்தால் எது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?….

View More உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

வரலாற்று சம்பவங்கள் என்பவை என்றுமே முடிந்து போன ஒன்று கிடையாது, அது மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் அவர்கள் நோக்கம் என்ன என்பது ஒரு அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட யூகிக்கமுடியும். இதே பிரச்சனைகள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டது. அணுசக்தியில் ஈரான் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் இருந்தது. இது போன்ற மரணங்கள் / படுகொலைகள் அப்பொழுது இந்தியாவிலும் நடை பெற்றன

View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1