அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

வரலாற்று சம்பவங்கள் என்பவை என்றுமே முடிந்து போன ஒன்று கிடையாது, அது மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் அவர்கள் நோக்கம் என்ன என்பது ஒரு அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட யூகிக்கமுடியும். இதே பிரச்சனைகள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டது. அணுசக்தியில் ஈரான் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் இருந்தது. இது போன்ற மரணங்கள் / படுகொலைகள் அப்பொழுது இந்தியாவிலும் நடை பெற்றன.

20th century giants: File picture of Homi Bhabha (extreme right) with Einstein (extreme left) at Princeton University.

இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஹொமி பாபா என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் எவ்வாறு மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது நம்மில் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. 1966 ஆம் ஆண்டு ஹோமி பாபா சென்ற விமானம் மர்மமான முறையில் ஆல்ப்ஸ் மலை பகுதியில் வெடித்து சிதறியது. விமானம் மலையில் மோதி வெடித்ததாக ஜரோப்பிய நாடுகள் தெரிவித்தன. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் விமானம் கடைசி நிமிடம் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் 6000 அடி உயரத்தில் சென்றதாக விமான கருப்பு பெட்டி தகவல் சொன்னது.

அணு விஞ்ஞானி விக்ரம் சாராபாய்

ஒரு மலை மீது மோதும் நேரத்தில் கண்டிப்பாக அது பற்றிய தகவலை விமானி பதிவு செய்து இருப்பார். ஆனால் அது சம்மந்தபட்ட எந்த ஒரு தகவலும் இல்லை என்று வெளிநாட்டு அதிகாரிகள் கூறினர். ஆனால் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றும், இந்த விமானம் இத்தாலிய போர் விமானமோ அல்லது இத்தாலிய ஏவுகணையோ தாக்கி தான் வெடித்து சிதறிக்கும் என்று பல செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் இந்தியா இது குறித்து தீவிரமாக விசாரணை செய்யவில்லை. காரணம்… இவர் மரணம் நிகழ்வதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் மர்மமான முறையில் இறந்தார்!

பாபாவின் மரணமும் சாஸ்திரியின் மரணமும் ஒரு சாதாரண விசயம் அல்ல. இதை சற்று ஆழமாக ஆராய்ந்தால் இதன் பின்னயில் இருந்த பயங்கர உண்மைகளும் வெளி நாட்டு கைக் கூலிகளின் செயல்களும் தெரியவரும். நேருவின் பஞ்ச சீல கொள்கையும், அவர் சீனாவின் மீது வைத்து இருந்த நம்பிக்கையும் நாம் அறிந்ததே. ஆனால் சைனாவை நம்புவது தவறு என்றும் ரஷ்யா நம்மை ஏமாற்றும் என்றும் இவர்களை சமாளிக்க நமக்கு அணு ஆயுதம் தேவை என்று சீனா போருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பே RSS அமைப்பின் தலைவர் குருஜி கோல்வல்கர் என்று எச்சரித்தார் வழக்கம் போல அவரின் பேச்சுகளுக்கு நாசிஸம் மற்றும் பாசிச நிறத்தை பூசினர் நமது மாண்புமிகு கம்யூனிஸ்டுகள். நேரு, குருஜியின் பேச்சை நிராகரித்து, வெளிநாட்டுக் கைக்கூலிகளின் மாயை நம்பினார். 1962 ஆம் ஆண்டு குருஜி கோல்வல்கர் சொன்னது போல் சீனாவும் நம்பிக்கை துரோகம் செய்தது. ரஷ்யாவும் நமது முதுகில் குத்தியது!

மேலை நாட்டு அறிவு ஜீவிகளையும் கம்யூனிஸ சித்தாந்ததையும் நம்பி “By education I am an Englishman, by views an internationalist, by HEART a Muslim, and I am a Hindu only by accident of birth” என்று தற்பொழுது செக்யூலரிசம் பேசுவோரை போல் பேசிய நேருவுக்கு காலம் நல்ல பாடத்தை கற்று தந்தது. ஆனால் இதற்காக இந்தியா மிக பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது.

சீன அதிபர் மாவோவுடன் இந்திய பிரதமர் நேரு
சீன அதிபர் மாவோவுடன் இந்திய பிரதமர் நேரு

இந்த சம்பவத்திற்கு பின்பு இந்தியாவின் அணுசக்தி அவசியத்தையும் அணு ஆயுதத்தின் முக்கிய துவத்தையும் நேரு உணர்ந்தார். (இதை அவர் முன்பே உணர்ந்து இருந்தால் நாம் பல பகுதிகளை சைனாவுக்கு தாரை வார்த்து கொடுக்க நேர்ந்து இருக்காது). இந்த நிலையில் தான் நேரு உயிர் இழந்தார். 1964 ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமராக பதவி ஏற்றார்.

1965 ஆம் ஆண்டு அணு ஆயுதத்தை தயாரிக்கும் அளவுக்கு இந்தியா விஞ்ஞானத்தில் முன்னேறியது. அந்த திட்டத்தை முன்னிருத்தி வழி நடத்தி தந்தவர் தான் ஹோமி பாபா. இதற்கு இடையே தான் இந்தியா பாக்கிஸ்தான் போர் நடந்தது. இந்தியாவை சிதறடித்து விடலாம் என்று நினைத்த பாக்கிஸ்தான் மற்றும் சில நாடுகளின் எண்ணத்தை உடைத்து எரிந்தனர் நமது வீரம் மிக்க இராணுவ வீரர்கள். காஷ்மீரை முழுமையாக கைபற்றியதோடு மட்டும் அல்லாமல் பாதுகாப்பான இராணுவ முக்கியதும் மிக்க எல்லைகளை உருவாக்கும் வாய்ப்பை பெற்றது. இது தவிர கைவசம் அணுஆயுதத்தை தயாரிக்கும் சக்தியையும் பெற்று இருந்தது.

TASHKENT TREATY: Indian Prime Minister Lal Bahadur Shastri (centre) signs the joint communique at the end of his talks

இதனால் அதிர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக ரஷ்யா இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சமாதானம் பேசுகிறேன் என்று கூறி இரு நாட்டு பிரதமர்களை டாஸ்கண்ட்டிக்கு அழைத்தார். (எனக்கு இதில் புரியாத விசயம் என்னவென்றால் போர் நடைபெற்று பாக்கிஸ்தான் இராணுவம் இந்தியாவிடம் சரணடைந்து அனைத்து விசயங்களும் முடிந்துவிட்ட நிலையில் எதற்கு சமமாதானம் பேச வேண்டும் என்று எனக்கு புரியவில்லை). RSS தலைவர் குருஜி கோவல்கர் திரு சாஸ்திரி அவர்களை இந்த மாநாட்டிற்கு போக வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் இந்த முறையும் காங்கிரஸ் அவர் பேச்சை கேட்கவில்லை. வழக்கம் போல எல்லா மேற்கத்திய நாடுகளும் இணைந்து நம் முதுகில் குத்தி இங்கிலாந்து உருவாக்கிய பழைய எல்லைக்கே இந்திய இராணுவமும் செல்ல வேண்டும் என்றது. இந்த இக்கட்டான சூழலில் தான் லால் பகதூர் சாஸ்திரிகள் மர்மமான முறையில் டாஸ்கண்ட்டிலேயே உயிர் இழந்தார். இவர் இறந்த 15 நாட்களில் இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஹொமி பாபாவும் மர்மமான முறையில் மரணமடைந்தார் / கொல்லப்பட்டார். இவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் இந்தியாவாலும் அணு ஆயுத பரிசோதனை செய்ய முடியும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் இத்தாலியரான சோனியா மற்றும் ராஜிவ் காந்திக்கும் காதல் திருமணம் நடந்தது. இது எதனால் ஏற்பட்டது. இதற்கும் மேற்கத்திய நாடுகளின் செயல்களுக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா என்பது கடவுளுக்கும் சோனியாவுக்கு மட்டுமே தெரிந்த விசயம். லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைவிற்கு பின்பு 1967 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் பதவிக்கு வந்தார். அணு ஆய்வு அமைப்பின் தலைவராக விக்கிரம் சாராபாய் பதவியேற்றார். 1971 ஆம் ஆண்டு நம்மை துண்டா நினைத்த பாக்கிஸ்தான் இரண்டு துண்டாக உடைக்கபட்டது. இது மேற்கத்திய நாடுகளின் கனவை உடைத்து எரிந்தது. அணு ஆயுத திட்டமும் வெகு வேகமாக நடந்தேரியது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சோகம் அரங்கேறியது.1972 ஆம் ஆண்டு கேரளாவில் ரஷ்யா நாட்டின் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட பின்பு வீடு திரும்பிய விக்ரம் சாராபாய் தனது அறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இவர் உயிர் இழப்பதற்கு முன்பு தான் அமெரிக்க மற்றும் ரஷ்யாவினரால் தான் உளவு பார்க்கப்படுவதாக தனது நெங்கிய சக ஊழியரான கமலா சௌதிரியிடம் தெரிவித்து இருந்தார். நாட்டின் மிக முக்கிய ஒரு விஞ்ஞானியின் மர்மமான இறப்பு எந்த ஒரு விசாரணையும் இன்றி முடிக்கப்பட்டது. மனம் தளராத இந்திய அணு ஆராய்ச்சி நிறுவனம் அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளின் உதவியுடம் 1974 ஆம் ஆண்டு அணு பிளவை அடிப்படையாக கொண்ட பொக்ரான் அணு குண்டு சோதனை இந்தியா நடத்தியது.

அணுஆயுத சோதனை நடத்தப்பட்ட இடத்தில் இந்திராவும் வாஜ்பாயும்

அதற்கு பின்பு பதவிக்கு வந்த மொராஜ் தேசாய் அணு ஆயுத ஆராய்ச்சியை கிடப்பில் போட்டார். அதற்கு பின்பு வந்த எந்த ஒரு பிரதமரும் அணுசக்தி வளர்ச்சியை ஊக்குவிக்கவில்லை. இதன் பின்பு 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் அணு ஆயுத பரிசோதனைக்கு உத்தரவிட்டது. அப்துல் கலாம் தலைமையிலான குழு அணு பிளவு மட்டும் இன்றி இந்த முறை அணு இணைப்பை அடிப்படையாக கொண்ட ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து சோதனை செய்தார். அமெரிக்காவுக்கு இது பெருத்த அடியை வழங்கியது. அந்த அடியை தாங்கி கொள்ள முடியாததால் தான் அப்துல் கலாம் அவர்களை அடிக்கடி அவமானம் செய்து தான் ஒரு காட்டுமிராண்டி என்பதை அமெரிக்கா மீண்டும் நிருபணம் செய்தது.

இதில் குறிப்பிட தக்க விசயம் என்னவென்றால் முற்போக்கு கம்யூஸ்டுகள் வாஜ்பாயின் இந்த நடவடிக்கையை கண்டித்தது. கம்யூனிஸ்டு தலைவர் ராஜா சொன்ன கருத்து தான் நகைசுவையின் உச்சம். அவர் கூறியதாவது “ எங்களை கேட்காமல் அரசு தன்னிச்சையாக இந்த சோதனையை நடத்தியது தவறு என்பது தான்”. பின்வாசல் வழியாக வந்த ப.சிதம்பரமோ ஒரு படி மேலே போய் நமக்கு வெளிநாடுகள் பிச்சை போடாது. நமக்கு சோறு கிடைக்காது என்று தனது பிச்சைக்கார புத்தியோடு நாடாளுமன்றத்தில் கதறினார். பல கோடி செலவில் அணு ஆயுத சோதனை நடத்தி தெற்காசியாவில் ஆயுத போர்க்கு வழிவகுத்துவிட்டது என்று சொன்னார்கள். சொன்னது பாக்கிஸ்தான் அல்ல இந்திய கம்யூனிஸ்டு. மேலும் அவர்கள் கூறியதாவது அணுசக்தியை ஆக்க பூர்வமாக மக்களுக்கு பயன்படும் வகையில் மின்சாரம் தயாரிக்க தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால் சீனா அணு ஆயுத சோதனை நடத்தும் பொழுது எல்லாம் வராத பதட்டம், நாம் சோதனை செய்தால் மட்டும் எப்படி வரும் என்பது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ராஜா மற்றும் கரத்

இது வரை நமது அணு ஆயுத விஞ்ஞானத்தில் தடை கற்களாக இருந்த உள்நாட்டு தேச துரோகிகள், வெளி நாட்டு குள்ள நரிகளும் பற்றியும் அதன் அடிப்படையாக நிகழ்ந்த சில சர்வதேச அரசியலை பற்றியும் கண்டோம். கிட்டதட்ட இதே நிலை தான் தற்பொழுது ஈரான் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உற்பத்தியில் ஜந்தாம் இடத்தில் உள்ள ஈரானை ஜீரணிக்க மேற்கத்திய நாடுகள் காத்து கொண்டு இருப்பது நாம் அறிந்த விசயம். வெளி நாட்டு சக்திகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள ஒரே வழி அணு ஆயுதம் தான் என்பதை உணர்ந்த ஈரான் அணு உலைகளை கட்ட ஆரம்பித்தது. ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்க ஆரம்பித்தால் ஈரானை ஆக்கிரமிப்பது நடக்காத காரியம் ஆகிவிடும் என்ற காரணத்தால், அணுஉலை மற்றும் ஆயுத திட்டத்தை முடக்கும் வகையில் அரசியல் ரீதியாக மேற்கத்திய நாடுகள் பிரச்சனை ஏற்படுத்தியது. அதாவது நமது ஊரில் நடத்தும் மத மற்றும் சாதி கலவரங்களை போன்று அங்கு நடத்த முயற்சி செய்தது. ஈரான் நாட்டில் அமெரிக்காவின் குள்ள நரி புத்தி பலிக்கவில்லை. காரணம் அங்கு சன்னி பிரிவு முஸ்லீகள் இல்லை. அங்கு 98% மக்கள் அரேபிய வாஹாபி இன வெறி இல்லாத ஷியா பிரிவு முஸ்லீம்கள். அரசியல் வழியாக எதுவும் சாதிக்க முடியாத மேற்கத்திய நாடுகள் முதுகில் குத்த ஆரம்பித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகளை கொலை செய்ய தொடங்கின. அது மட்டும் இன்றி மென்பொருள் வைரஸ்கள் மூலமும் ஈரான் அணு உலைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் கூட ஒரு ஈரான் அணு விஞ்ஞானி மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டார். இவர் இவ்வாறு கொல்லப்பட்ட நான்காவது அணு விஞ்ஞானி ஆவார். (குறிப்பு: இந்த கட்டுரையை நான் எழுதி முடிக்கும் பொழுது மற்றொரு ஈரான் அணு விஞ்ஞானியும் கொல்லப்பட்டுளார் என்ற செய்தி தொலைக்காட்கியில் ஒளிபரப்பட்டது)இது மட்டும் இன்றி ஒரு விஞ்ஞானியை கடத்தி பார்சல் செய்து அமெரிக்காவுக்கு அனுப்பியதும் பின்னர் அவர் அமெரிக்காவில் உள்ள ஈரான் தூதரகத்திற்குள் நுழைந்து உயிர் தப்பினார். ஐநா மூலம் ஈரானுக்கு நெருக்கடி தந்தது மேற்கத்திய நாடுகள். இதற்கு இந்தியாவும் அதாவது சோனியா அரசாங்கமும் ஆதரவு தந்தது. இதில் நாம் காண வேண்டிய விசயம் என்னவென்றால் இதற்கு கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு தான். ஈரானின் அமைதியான அணு உலை திட்டத்திற்கு எதிராக செயல்படும் அமெரிக்காவுக்கு இந்தியா துணை போனது தவறு என்று கண்டணம் செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்.

இந்தியா அணு ஆயுத சோதனை தெற்காசிய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று ஆருடம் சொன்ன இந்திய கம்யூனிஸ்டுகள், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க தான் அந்த அணு உலைகளை கட்டுகிறது என்பதும் அவ்வாறு அது தயாரித்தால் தெற்காசிய பகுதியின் அமைதிக்கு பிரச்சனை ஏற்படும் என்பதோ கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாமல் போனது வியப்பிற்கு உரிய விசயம். உலகத்திற்கே எரிசக்தியை கொடுக்கும் ஈரானுக்கு எதற்கு ஆபத்து மிக்க அணு ஊலைகள் தேவைபடுகின்றன என்ற ஒரு சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் உலகையே கரைத்து குடித்து அறிவு ஜீவிகளான கம்யூனிஸ்டுகளுக்கு இந்த லாஜிக் தோன்றவில்லை.

ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல நூறு பேர் வேலை செய்தாலும் அதில் ‘key person’ என்று அழைக்கப்படும் ஒரு சிலரை நம்பியே அந்த ஒட்டு மொத்த ஆராய்ச்சியும் இருக்கும். இது போன்ற மனிதர்களின் கொல்வதன் மூலம் அறிவியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக ஒரு நாட்டை எப்படி முடமாக்க முயற்சி செய்கின்றன என்பது இந்திய மற்றும் ஈரான் அணு விஞ்ஞானிகளின் மரணத்தில் இருந்து உலகம் கற்று கொள்ள வேண்டிய பாடம்.

ஈரானுக்கும் நமக்கும் ஒரு சிறு வித்தியாசம் உண்டு. ஈரானில் தேச துரோகிகள் இல்லை. ஆனால் நம் நாட்டில்? நாட்டை முடமாக்குவது ஒன்றே தனது உயிர் மூச்சாக கொண்ட போலி கம்யூனிஸ ஆப்பிரகாமிய பயங்கரவாதிகள் ஈரான் விசயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் இந்தியா என்று வரும் பொழுது என்ன பேசினார்கள் என்ற ஒரு விசயமே போதும் இவர்கள் எண்ணம் என்ன என்பதை புரிந்து கொள்ள? மேற்கத்திய நாடுகள் வளரும் நாடுகளின் அணுசக்தி வளர்ச்சியில் என்ன மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் அதற்காக நடக்கும் ஈவு இரக்கமற்ற மர்ம சாவுகளையும் பார்த்தோம். பாதுகாப்பு மற்றும் எரிசக்தி என்ற இந்த இரண்டு விசயங்களும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான விசய்ம். இவை இரண்டையும் ஒரு சேர வழங்க கூடியது இந்த அணு உலைகள். அதனாலேயே மேலை நாடுகள் சமாதான இயக்கம் என்ற பெயரிலும் முற்போக்கு என்ற பெயரிலும் தனது எதிரி நாடுகளில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.

இது வரை நாம் பார்த்தது கடந்தகாலம், இனி நமது அணுசக்தி எதிர்காலத்தையும் கொஞ்சம் பார்ப்போம். கூடங்குள அணு உலைகளை பற்றி பல்வேறு வகையான கட்டுரைகள் பல தளங்களில் வெளிவந்துள்ளன. அதில் சினிமா நடிகர் செந்திலையே மிஞ்சும் அளவுக்கு பல நகைசுவை கேள்விகளை நமது மாண்புமிகு முற்போக்குவாதிகள் எழுப்பியுள்ளனர். உண்மையில் ஜெர்மனி இனி அணு உலைகளை கட்ட போவது இல்லையா? நாட்டின் ஒட்டு மொத்த மின்சக்தியில் வெறும் 4% உள்ள அணு உலைகள் தேவையா? மரபுசாரா எரிசக்தி ஏன் இந்தியா பயன்படுத்தவில்லை? கத்தோலிக்க கிறித்துவ அமைப்புகள் கன்னியாகுமரி மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராடுகின்றனவா? உதயகுமார் என்ற அமெரிக்க பல்கலைகழகத்தில் பட்டை தீட்டபட்டவர் இந்த மக்களின் பாதுகாப்பிற்காக போராடும் அள்வுக்கு என்ன பிரச்சனை? இது போன்ற பல கேள்விகளுக்கான விடையை காணலாம்.

(தொடரும்)

14 Replies to “அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1”

 1. Gomathi,

  Fantastic article ! Please continue.

  Only one differing opinion:

  Even in India, as we read here, scientists and faculty are getting killed. Their deaths are being recorded as accidents in our honest newspapers.

  .

 2. நமது நாடு எந்த வகையிளும்முன்நேரக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் அமெரிக்கா ரஷியா சீனா போன்ற நாடுகளின் சதிகளுக்கு அடிபணியும் கும்பலின் கைகளில் நம் நாடு சிக்கியுள்ளது. நாம் எப்போது மக்களுக்கு இதை உணர்த்தப் போகிறோம். எப்போது இவர்களின் கைகளிலிருந்து நாடு விடுவிக்கப் படுகிறதோ அன்றுதான் விடிமோட்சம்.

 3. திரு.கோமதி செட்டி அவர்களே…….

  நன்றிகள் பல…….நாம் ஊதும் சங்கை ஊதுவோம்…..பிறகு இறைவன் விட்ட வழி……

 4. இன்றைய தினமணியில் தெ சுந்தரமகாலிங்கம் என்பவர் “கதிர்வீச்சுக்கு இல்லை மதவெறி “என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர் கடற்கரை கிராமங்களில் பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது பாதிரியார்கள் குரல் கொடுப்பதில் தவறில்லைஎனவும் கலாம் அவர்கள் இந்திய வல்லரசாகவேண்டும் என்று அறிக்கைவிட்டு வெறியைதூண்டினார் எனவும் பிலாக்கணம் பாடியுள்ளார். போலிஉணவு மருந்துகள் போன்று போலி மதச்சார்பின்மையும் போலி சமாதான கூச்சல்களும் ஆபத்தானவையே .இதே விஷயத்தை ஹிந்து அமைப்புகள் கையில் எடுத்திருந்தால் நமது ஊடகங்கள் என்ன மாதிரி சாமியாடியிருக்கும் என்பதை ஊஹிக்கலாம்

 5. முதன் முதலில் இந்த அணு உலை திட்டம் செய்ல்படுத்தபடும் பொழுது, இதன் தொழில் நுட்பம் குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்தன. மக்களுக்கு சரியான தகவலை தர கோரி…. சங்க அமைப்பான ABVP முதன் முதலில் இந்த அணு உலை விழிப்புணர்வு பேரணி நடத்திய பொழுது (சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி) எங்கள் பகுதி முன்னேற்றத்தை தடுக்கிறார்கள் என்றூ கூறி இதே பாதரியார் கூட்டம் தான் ஹிந்து அமைப்புகளை திட்டி தீர்த்தது… ABVP மாணவர்கள் ஊருக்கு நுழையாத படி தடுத்ததோடு மட்டும் அல்லாமல்… அராஜக செயல்களிலும் ஈடுபட்டனர்.
  அதன் பின்னர் தான் தொழில் நுட்பம் குறித்த அடிப்படை தகவலை அரசு தெளிவுபடுத்தியது….

 6. நல்ல கட்டுரை. இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நமது ஹிந்துத்துவ பா ஜ க அணு உலையை ஆதரித்து பெரிய அளவில் போராட்டம் எதுவும் நடத்தவில்லை. என்னைப் போல் சிலர் சில சிறிய அளவில் கூட்டங்கள் நடத்தினோம். ஆனால் இங்கு ரோமன் கத்தோலிக்கர்களின் ஆதிக்கத்தையும் ஆறி கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய விழிப்ப்ணர்வு ஏற்படுத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது. அனால் அதை ஹிந்துத்வா சக்திகள் பயன் படுத்தாமல் உறங்குகின்றனர் .

  (edited and published)

 7. good article.
  even very recently a nuclear scientist from kaiga atomic plant was killed in bangalore. if i remember correctly his name is mahalingam.

 8. “மக்களுக்கு சரியான தகவலை தர கோரி…. சங்க அமைப்பான ABVP முதன் முதலில் இந்த அணு உலை விழிப்புணர்வு பேரணி நடத்திய பொழுது (சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி) எங்கள் பகுதி முன்னேற்றத்தை தடுக்கிறார்கள் என்றூ கூறி இதே பாதரியார் கூட்டம் தான் ஹிந்து அமைப்புகளை திட்டி தீர்த்தது”

  அட அப்படீன்னா, இந்த பாதிரியார்களோட “போராட்ட”த்துக்கு முன்னாடியே ஹிந்து அமைப்புக்கள் ஒரு உட்டாலக்கடி போராட்டம் நடத்திருந்தா, இவங்க ஆதரிச்சிருப்பாங்க போலருக்கே 🙂

 9. பொன் முத்துகுமார்,

  தாங்கள் முழுமையாக எனது பின்னூட்டத்தை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

  \\அதன் பின்னர் தான் தொழில் நுட்பம் குறித்த அடிப்படை தகவலை அரசு தெளிவுபடுத்தியது\\

  முதற்கட்ட பணியின் பொழுது அணு உலை எந்த தொழில் நுட்பத்தின் கீழ் உருவாக்கபடுகிறது என்ற தகவலை மத்திய அரசு வழங்கவில்லை. ரஷ்யாவின் செர்மோபில் விபத்துக்கு காரணமான அணு உலை தொழில் நுட்பத்தை கூடம்குளத்திலும் உபயோகப்படுத்தபோவதாக ஒரு வதந்தி பரவியது.

  பல முறை விளக்கம் கேட்டும் மத்திய அரசு இதை பற்றி எதுவும் பேசவில்லை. இதன் காரணமாகவே இந்த போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகே மைய அரசு இது குறித்த தகவலை வெளியிட்டது.

 10. அன்புள்ள கோமதி செட்டி,

  படித்தேன். எனது பின்னூட்டம் கிண்டலாக தொனித்துவிட்டது என்று எண்ணுகிறேன். ஆகவே வருந்துகிறேன். கிண்டல் செய்வது எனது நோக்கமுமல்ல. ABVP-யின் பணி பாராட்டக்கூடியதே.

  எனது வருத்தமெல்லாம், அப்போது அணு உலை பற்றி சரியான தகவல் தரக்கோரி போராடியதற்கே, அது எதிர்ப்புப்போராட்டம் என்று அபத்தமாக புரிந்துகொண்டு அணு உலையை வரவேற்ற கும்பல் இப்போது எதிர்க்கிறதே என்பதுதான்.

  ஒருவேளை ABVP போன்ற இந்து அமைப்புக்கள் இப்போது ஒப்புக்காக அணு உலைகளை எதிர்ப்பது போல பாவலா காட்டியிருந்தால் முன்பு போலவே ‘எங்களது முன்னேற்றத்தை தடுக்கிறார்கள் ABVP–யினர்’ என்று அணு உலைகளை வரவேற்றிருப்பார்களோ என்ற ஆதங்கத்தில்தான் அப்படி எழுதினேன்.

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்.

 11. உலகம் முழுதும் கொலைகள் செய்வதும் கீழை நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சதி செய்வதும் மேலை நாடுகளின் அன்றாட நடவடிக்கை.

  கூடன்குளப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் பாதிரியார்கள் வெளிநாட்டு நலன்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்கிறார்கள்.

  உலகு தழுவிய பார்வையோடு கட்டுரை எழுதியிருக்கும் கோமதி செட்டிக்கு என் பாராட்டுக்கள்.

 12. கோமதி செட்டி அவர்களே உங்கள் பதிவுகள் மிக்பபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். துாங்கிகொண்டருக்கும் நம் சமூகத்தை விழித்தெழகச்செய்யும். வாழ்த்துக்கள்.

 13. உதயகுமார் போன்றவர்கள் அணு உலை கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் போது, என்ன செய்து கொண்டிருந்தனர் ? மின்சாரத்தேவைகளை பூர்த்தி செய்ய , சூரிய சக்தி மின்சாரம், நிலக்கரி மின்சாரம் ( அனல் மின்சாரம்), காற்றாலை மின்சாரம், நீர்மின்சாரம், மற்றும் அணு மின்சாரம் ஆகிய ஐந்தும் உலகெங்கும் உள்ளன. எந்த முறையிலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஆபத்துக்கள் வரும்போது , சேதத்தின் அளவை குறைப்பது எப்படி என்பதுதான் நமது நோக்கமாக இருக்கவேண்டும். கடல் பொங்குகிறது என்பதற்காக , இந்த பூமியை விட்டு விட்டு, கடலே இல்லாத வேறு ஏதாவது கிரகத்திற்கு, வைகோ, உதயகுமார் போன்றவர்கள் ஓடப் போகிறார்களா ? வைகோ போன்ற அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுகிறார்கள். மின்தட்டுப்பாடுக்கு எதிராகவும் குரல் கொடுத்துக்கொண்டு , கூடாங்குளத்துக்கு போய் கடலிலும், மணலிலும் புதைந்து போராட்டம் செய்வது , மோசடி இல்லாமல் வேறு என்ன ? குஜராத் அரசு தமிழக அரசுக்கு மின்சாரம் வழங்க தயார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆறு மாதங்கள் ஆகிறது. ஆனால், கலைஞர் மத்திய அரசில் இருந்துகொண்டு, மத்திய மின் பகிர்மானத்தில் , குஜராத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரத்தேவையான லயன்களை ( distribution lines )ஒதுக்க மறுத்து தாமதம் செய்கிறது. எனவே, திமுக மற்றும் மத்திய காங்கிரஸ் அரசின் இந்த மோசடிகளை எதிர்த்து நீதிமன்றங்களை யாராவது அணுகினால் தான், மின்சார பிரச்சினையை ஓரளவுக்காவது தீர்க்கமுடியும். காங்கிரசுக்கு தேரி ( உத்தராகாண்டு) மக்களவை தேர்தலில் , வாக்காளப் பெருமக்கள் கரிபூசியுள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு நாடு முழுவதும் இதே கரிதான் பூசப்படும்.

 14. அன்பிற்குறிய கலாம் ஐயாவின் இறப்பும் திரு லால் பகதூர் அவர்களின் இறப்பு போல மாரடைப்பு மற்றும் உடல் நிற மாற்றம் என ஒத்து இருப்பது போல் உள்ளது.
  உண்மை உலகறிய செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *