என் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை காட்டி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய், பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது?… அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும், முடிந்தால் பிறருக்கு உதவவேண்டும் என்பதை கர் சேவையில் கண்ட நேரம் அது….
View More அன்னமும் அடையாளமும்Tag: அன்னதானத் திட்டம்
எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 1
…ஆனால், இப்பொருள்களுக்கு விலையில்லாமல் இல்லை. திமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 1000-க்கு வெளிச்சந்தையில் கிடைத்த்து போலவே, அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் சுமார் ரூ. 5,000-க்கு விற்பனைக்கு உடனுக்குடன் கைமாறுவதையும் காண முடிகிறது. … முந்தைய கருணாநிதி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதன் விளம்பரப்படத்தில் முதல்வர் படம் மட்டும் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டம் ஒருவகையில் ஏழை மக்களும் நவீன மருத்துவ சிகிச்சை பெற உதவினாலும், இதன் பலனை பெருநிறுவன மருத்துவமனைகள் துஷ்பிரயோகம் செய்வதாகவும் தகவல்கள் வருகின்றன.
View More எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 1