பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்…
View More மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையேTag: அப்பர் சுவாமிகள்
[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு
அடியவர்க்கும் ஆண்டவனுக்கும் என்றென்றும் அறாத உறவு இருந்து வருகிறது.
பாரில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் என்று வீறுகொண்டு முழங்குவோரும் பரிபூரணனுக்கு அடிமை செய்ய முந்துகின்றனர். நாமார்க்கும் குடியல்லோம் என்று இறுமாந்து பேசும் நாவரசர் பெருமானும் இறைவன் முன் மீளா ஆளாகி அடிமைப்பட்டு நிற்கிறார். இவ்வாறு அனைத்துயிர்களையும் பிணிக்கும் பேராற்றல் ஒன்று நின்று நிலவி நம்மை உய்யக் கொள்ளுகிறது. அத்தகைய பேராற்றலுக்கும் நமக்கும் உள்ள உறவே இனிய உறவாக, மெய்யான உறவாக அமைகிறது. பிற உறவனைத்தும் கண்மயக்காய் ஒழியும் பொய்த்தன்மையவே.