அண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன. சுதந்திர இந்தியாவில் இருந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல்மயமான அரசு என்று பெயர் பெற்றுவிட்ட மன்மோகன் சிங் அரசு இப்போது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தி வென்றிருக்கிறது. அவர் மீதும் குற்றம் சாட்டி இருக்கின்றனர் ஹசாரே குழுவினர். இதுதான் இப்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
View More ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…