மரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]

அவிழ்த்து விடப்பட்டு வழி காத்து நிற்கின்றன யமனின் இரு நாய்கள் – கருப்பும் வெள்ளையுமாய் – அவை தொடரவேண்டாம் உன்னை – இங்கு வா நீ – விலகிச் செல்லாதே – தொலைவில் மனதை விட்டு நிற்காதே…. ஊன் பொசுக்கி உண்ணும் அக்னி – துன்புறுத்தாதிருந்திடுக உன்னை – வானமும் பூமியும் காத்திடுக – கதிரோனும் நிலவும் காத்திடுக – எங்கும் நிறைந்த வெளி – தன் தெய்வசக்தியால் காத்திடுக…

View More மரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9

சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை. மன அமைதியினால் மட்டுமே பெறக்கூடியது. இது அடிப்படையிலேயே மற்ற நாகரீகங்களிடமிருந்து வித்தியாசப்படும். சந்தோஷம் என்பதை புலன் வழியான சந்தோஷமாகவே பார்க்க பழகின மேற்கத்திய சமூகங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கூறிய சந்தோஷம், Contentment (சம்ஸ்கிருதத்தில் சமாதானம்) என்பதை சுட்டும். இந்த மன நிலையை அடைய பணம் அவசியமே இல்லை. மேற்கூறியவையெல்லாம் எனக்குப் புரிந்தவரை அற்புதமான உளவியல் சாதனங்கள். பச்சையாக கூறினால், ஏழைகளை கட்டுக்குள் வைத்திருக்க உபயோகப்பட்ட உளவியல் சாதனங்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன். பொதுவுடைமையை முழுமையாக சமூகத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உடைய ஒரு சமூகத்தை நிர்வகிக்க சட்டங்கள் மட்டும் போதாது என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். மேலே கூறப்பட்ட பல உளவியல் சாதனங்களை பயன்படுத்தி ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9