மோதி 3.0 : தேசிய, தமிழக, தர்மக் கணக்குகள்

வட இந்தியாவில் முஸ்லிம் அடிப்படைவாத ஆதிக்கம், தெற்கில் கிறிஸ்தவ அடிப்படைவாத ஆதிக்கம் என வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான ஆப்ரஹாமிய அடிப்படைவாத சக்திகளின் இலக்கு இது. வரவிருக்கும் தலைமுறையை நம் தெய்வங்களால் காப்பாற்ற முடியாது. இந்து ஆன்மிக, அரசியல், சமூகத் தலைவர்கள் ஏதேனும் செய்தால்தான் உண்டு…

முதல் பத்தாண்டுகளில் இந்து மறுமலர்ச்சி என்பதைவிட தேசத்தின் வளர்ச்சி என்பதையே பாஜக முத்திரை முழக்கமாக வைத்து ஆட்சியை நடத்திவந்திருக்கிறது. தொடர்ந்து இரண்டு மூன்று முறை வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன காரணத்தினாலோ அந்தக் கட்சி மீது அதிருப்தி வந்துவிடுகிறது. பாஜகவும் அந்த சலிப்பினால் ஓரங்கட்டப்படுவதற்கு முன்பாக சுதாரித்துக் கொள்ளவேண்டும். பாஜக தனக்கான பி.டீம்களைக் கண்டடைந்தாகவேண்டும்..

அதிமுகவின் தலைவர்கள்தான் இந்து விரோதிகளாக இருக்கிறார்களே தவிர அதிமுகவின் வாக்காளர்கள் அப்படி அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களுடைய ஆதரவு பாஜகவுக்குக் கிடைக்கவேண்டுமென்றால்..

ஈ.வெ.ராவை விட அம்பேத்கர் பல மடங்கு மேலானவர். அந்தவகையில் பாஜக அவரை தமது வழிகாட்டிகளில் ஒருவராகச் சொல்கிறது. ஆனால், பிராமணிய எதிர்ப்பு என்றவகையில் ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கரை பாஜக நேச சக்தியாகவே கருதுகிறது. அதனால்தான் திமுக மீது காங்கிரஸ் அளவுக்குக்கூட எந்தவொரு நடவடிக்கையையும் பாஜக எடுப்பதே இல்லை. திமுகவின் இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு ஆகியவற்றையாவது பாஜக தீவிரமாக எதிர்க்கலாம். அதையும் செய்வதில்லை…

(முழுக்கட்டுரையையும் இணையதளத்தில் வாசிக்கலாம்)

View More மோதி 3.0 : தேசிய, தமிழக, தர்மக் கணக்குகள்

ஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்

சமூக, அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஹிந்துவே, ஹிந்துத்துவ வாக்காளன். ஒரு ஹிந்துத்துவ வாக்காளனாக, எனக்கு மூன்று எதிர்பார்ப்புகள் / கோரிக்கைகள் உள்ளன. அவை மீது கவனம் செலுத்தும் கட்சிக்கே, என் ஓட்டு… இட ஒதுக்கீட்டில், ‘க்ரீமி லேயர்’ அதாவது, பின்தங்கியவர் களில் வசதிபடைத்தவர் நீக்கம் என்ற வழிமுறை, கேலிக்கு உரியதாகவும், நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும் ஆகி விட்டது… ஹிந்து ஆலயங்கள், மதச்சார்பற்ற அரசின் கையில், பெரும் சுரண்டல் களங்களாக, பாரம்பரியங்களை, கலைச்சொத்துகளை, வழிபாட்டு மரபுகளை ஒழித்து, மதமாற்றிகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் கருவிகளாக மாறி நிற்கின்றன…

View More ஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்