நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது… இந்தத் தமிழ் தாய்மார்கள் சென்ற ஐநூறு நாட்களாக போரின்போது காணமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்கள். இவர்கள் எல்லோரும் இந்துக்கள். சாத்வீகமாகப் போராடுபவர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள். பதவி ஆசை பிடித்த தமிழ் அரசியல்வாதிகளால் திரும்பியும் பார்க்கப் படாதவர்கள். தமது போராட்டத்தின்போது வைத்துக்கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தஸ்வாமி ஆலயத்திற்கு இவர்கள் வந்தபோது அதனை நிறைவேற்ற விடாமல் ஆலய நிர்வாகிகளால் தடுக்கப் பட்டார்கள். தீச் சட்டி ஏந்தவும் தேங்காய் உடைக்கவும் இவர்கள் மறுக்கப் பட்டார்கள். இதைப்போன்ற மிகவும் கேவலமான வேதனை தரும் செயலை இக்கோவில் நிர்வாகத்தவர்கள் செய்தது மிகவும் கண்டிக்கத் தக்கது….
View More இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்Tag: இலங்கை இந்துக்கள்
இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்
நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படமொன்றை மாட்டச்சொன்னார். இதை விரும்பாவிடினும், பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள். பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. நாங்கள் உடனே குறுக்கிட்டோம்..
விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின….
இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!
2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு முதலியார்குளம் கிராமத்து இந்துமக்கள் அச்சமுற்றார்கள். கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன. இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. இந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது. கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது.
View More இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்
மன்னார் மாவட்டம் முழுவதுமே இந்துக்களைக் குறிவைத்துக் கிறித்தவராக்கும் நிலை இருந்துவருகிறது. நாற்பது விழுக்காடு [%] இந்துக்கள் அங்கிருப்பினும், அவர்களது நெருக்கடியை நீக்க, அவர்களுக்காக வாதாட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்பிரதிநிதிகள் யாரும் இல்லை. அனைவரும் கிறித்தவர்களே! மேலும், மாவட்ட நிர்வாக, நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் அவர்கள்தாம். காவல் துறையோ பௌத்தர்கள் கையில்…
View More இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்