அக்பர் ஹிந்துக்களை தனக்கு அருகே வைத்துக் கொண்டது அவரது பாதுகாப்பிற்கேயன்றி வேறெதற்குமில்லை. அவரது மங்கோலிய உறவினர்களைப் போல அல்லது அரசவை முஸ்லிம்களைப் போல ஹிந்துக்கள் தன்னைக் கொலை செய்ய முயலமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அக்பருக்கு இருந்தது. ஹிந்துக்களுக்குத் தான் எத்தனை துன்பம் விளைவித்தாலும் கடவுளுக்கு அஞ்சி அவர்கள் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்கிற எண்ணமும், அவர்களின் மரியாதையான நடத்தையும், முட்டாள்தனமும் தனக்கு லாபமாக இருப்பதனை உணர்ந்தவர் அக்பர்… ஹிந்துக்களின் இடங்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நேரத்தைத் தவிர அக்பர் ஒருபோதும் அவரது சொந்த முஸ்லிம்களை நம்பியதில்லை. சக முஸ்லிம்களை தன்னுடைய பொக்கிஷ அறைக்கோ அல்லது அவரது அந்தப்புரத்திற்கோ நுழைய அவர் அனுமதித்ததேயில்லை என்பதே உண்மை….
View More அக்பர் என்னும் கயவன் – 9Tag: இலாஹிகள்
அக்பர் என்னும் கயவன் – 8
அக்பரின் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று அடைத்துவைக்கப்பட்ட அத்தனை பெண்களும் வாழ்நாள் முழுவதும் சிறைக்கைதிகளைப்போல நடத்தப்பட்டு மூடிவைக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. ஒருமுறை உள்ளே நுழைந்த எந்தப் பெண்ணும் மீண்டும் உயிருடன் திரும்பவில்லை.
உடன்கட்டை ஏறும் பெண்ணைத் தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து கண்டு மகிழவருமாறு அக்பர் கிறிஸ்தவப் பாதிரிகளை அழைத்த விவரத்தை கிறிஸ்தவ பாதிரியான மான்சராட் பதிவு செய்திருக்கிறார்.