அருட்செல்வருக்கு அஞ்சலி

பெரிய தொழிலதிபராக விளங்கியபோதும், சாதாரண மக்கள், கிராமத்து விவசாயிகள், பழைய கால நண்பர்கள் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் எனப் பல வகையானவர்களிடமும் தொடர்பு வைத்திருந்தார். அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்று அங்கேயே அவர்களுடன் உணவருந்துவார். அவரைப் போல மிக அதிக அளவில் மக்களை நேரடியாக அறிந்த ஒரு தொழிலதிபரைப் பார்ப்பது அரிது. தொழில்களில் தனக்கென உறுதியான கொள்கைகளை வைத்திருந்தார். பெரிய சர்க்கரை ஆலை வைத்திருந்த போதும், அது சம்பந்தப்பட்ட எரிசாராயத் தொழிலுக்கு அவர் செல்லவேயில்லை. அதில் பெரிய லாபமிருந்தும், கடைசி வரை தவிர்த்து விட்டார்…கடைசி வரைக்கும் அவர் மற்றவர்களிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினார். அதைப் பல சமயங்களில் நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். பேசிக் கொண்டிருக்கும்போது எங்களின் முக்கியமான ஆய்வுகள் குறித்து ஆர்வமாகக் கேட்பார்….

View More அருட்செல்வருக்கு அஞ்சலி

எழுமின் விழிமின் – 34

முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவுமே அவனை ஒருபோதும் திருப்திப் படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்து கொண்டே செல்வோம்…. உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும்,  நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும்.  நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது…. நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமான, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர் விட்டுக் கதறுகிறோம்.  உதவியானது வெளியிலிருந்து வராது.  நமக்குள்ளிருந்தே தான் வரும்.

View More எழுமின் விழிமின் – 34

ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்

பிரமிடின் அடித்தட்டில் இருப்பவர்கள் மிகவும் ஏமாளிகள், கொஞ்சம் மேல் அடுக்கில் உள்ளவர்கள் சுமாரான ஏமாளிகள்,மேலே உள்ளவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள். அனுபவிக்கத் தெரிந்தவர்கள்… எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த ‘எம்.எல்.எம்’-ல் மட்டும் நஷ்டமே இல்லை!…. நேஷனல் ஜியாகரஃபி சேனலில் மட்டுமே பார்த்திருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள்?… பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்! என்ன செய்வது?…

View More ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்

நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!

ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றிச் சதவிகிதம் 82%; உடனிருந்த பா.ஜ.க.வின் வெற்றி விகிதமோ 89%… இஸ்லாமியர்களும் மதத்தைத் தாண்டி சிந்தித்துச் செயல்படுவார்கள் என்பதை ஏற்கனவே குஜராத்தில் மோடியின் வெற்றி நிரூபித்தது; பீகாரில் நிதிஷின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது… அரசியல் என்பது பிழைக்கும் வழியல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான மார்க்கம்…

View More நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!