தோல்வி நெருங்குவதை உனர்ந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, தனது விசுவாச அடிமைகளான மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தேர்தல் ஆணையம் ஆகியவற்றைக் கொண்டு சதுரங்கம் ஆட முயற்சிக்கிறது…. மோடி ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசினாலும் பயம்; முன்னாள் தளபதி வி.கே.சிங் புத்தகம் எழுதினால் பயம்; ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினால் பயம்; கருணாநிதி அறிக்கை விட்டால் பயம்; ஆ.ராசா சாட்சி சொல்ல வருவதாக அறிவித்தால் பயம்: காமவெல்த் என்ற சொல்லைக் கேட்டாலே பயம்; சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரிக்கும் பயம்; அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நினைத்தாலே பயம்…அந்தப் பட்டியலில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ளது கருத்துக் கணிப்பு பயம்…. ருத்துக் கணிப்புகளையே எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது?….
View More கணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்!Tag: கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2
பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?
View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1
கட்சிகளின் கொள்கைகள் மீதான அபிமானம், அரசுகளின் செயல்முறை மீதான நாட்டம், நன்றியுணர்வுடன் கூடிய ஆசை போன்றவற்றால் கருத்துக் கணிப்புகள் மக்களை குறிப்பிட்ட அளவில் முட்டாளாக்கி, தவறாக வழிநடத்துகின்றன [..] தேர்தல் சமயத்தில் இந்த கணிப்புகள் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சிந்தித்தால், ஊடகங்களின் அதர்மம் புரியும்!
View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1