ஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை… அவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி காத்த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை…
View More அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)Tag: கலைஞர் டிவி
தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்
ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?
View More தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்
ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?… இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது….
View More சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1
1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், டிச. 6 -ல் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை. [….] 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.
View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்
நமது மக்களுக்கு ஒரு குணம் – ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்னிடம் தொலைக் காட்சி ஏற்கனவே உள்ளது – எனக்கு இலவச தொலைக் காட்சி வேண்டாம் என்று எவர் கூறுகிறார்? பல தலைமுறைகளாக சேரிகளில் மக்கள் வசித்துக் கொண்டு, தொலைக் காட்சியில் கண்ணையும் மனதையும் நிலை குத்தவிட்டு, ஏன் இப்படி குடிசையிலேயே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கிறார்கள். மக்களிடம் இலவசப் பொருள்கள் தான் மிகுந்திருக்கிறதே தவிர வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை.
View More இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்