அக்பர் எனும் கயவன் – 4

அக்பரின் பாட்டனான பாபர் ஒரு ஆட்கொல்லியைப் போல பொதுமக்களால் அஞ்சப்பட்டவன். தான் கொலை செய்பவர்களின் தலைகளைக் கொய்து அதனை ஒரு கோபுரமாக அடுக்கிப் பார்க்கும் வழக்கம் பாபருக்கு இருந்தது என்கிறார் வரலாற்றாசிரியர் கர்னல் டோட். இந்தியாவின் எல்லா இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் போல ஹுமாயூனும் பாபரின் அரியணைக்காக அவரது சகோதரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். வின்செண்ட் ஸ்மித் எழுதுகிறார்: “கடுமையான போரில் தோல்வியுறும் வேளையில் ஹுமாயுனின் சகோதரர் கம்ரன் பெண்ணைப் போல உடையணிந்து தப்பிக்க முயல்கையில் பிடிபடுகிறார். ஹுமாயூன் அவரைக் குருடாக்குவதுதான் சரியானது என முடிவெடுக்கிறார். கம்ரனை கூடாரத்திலிருந்து வெளியே இழுத்து வந்த ஹுமாயூனின் சிப்பாய்களில் ஒருவன் கம்ரனின் கால்களின் மீது உட்கார்ந்து பிடித்துக் கொள்ள ஒரு கூர்மையான ஈட்டி அவரது கண்களில் பாய்ச்சப்படுகிறது. பின்னர் சிறிது எலுமிச்சை சாரும் உப்பும் அந்தக் கண்களின் மீது பூசப்பட்டு, ஒரு குதிரையின் மீது உட்காரவைத்து விரட்டியடிக்கிறார்கள்”. சொந்தச் சகதோதரனுக்கு ஒரு உபகாரமாக அவனுடைய குடும்பத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பதே பெரியதொரு விஷயமாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் தன் கையில் சிக்கிய அத்தனை அன்னியப் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்வதையே முழு நேரமும் செய்தவர் ஹுமாயுன்…

View More அக்பர் எனும் கயவன் – 4

இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்

1.7.2013ந் தேதி வேலூரில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் திரு வெள்ளையப்பன் பஸ்…

View More இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்

அயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்

டிசம்பர்-6 அன்று கேப்டன் நியூஸ் தொலைக் காட்சியின் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் பால. கௌதமன் மற்றும் பேரா. ஜைனுலாபிதீன். அயோத்தி விவகாரம் சட்டப் பிரசினையா மதப்பிரசினையா? அயோத்தியில் இருந்த பழமையான ஆலயம் இடிக்கப் பட்டதா என்பது குறித்து வரலாறும் அகழ்வாராய்ச்சியும் என்ன கூறுகிறது? இந்தப் பிரசினையில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் குறித்து பேசுகிறார்கள்.. பாவம் அந்த இஸ்லாமிய பெரியவர். அவரைப் பார்க்க பரிதாபமாகவும், பால.கௌதமனை பார்க்க பெருமையாகவும், இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் போலி மதச்சார்பின்மைகளை நினைத்தால் அருவருப்பாகவும் இருக்கிறது. விவாதத்தின் வீடியோ பதிவு கீழே….

View More அயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1

1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், டிச. 6 -ல் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை. [….] 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.

View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பயனுக்காக பயன்பட்ட கட்டடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும் வாயில் நிலைகளும், சிற்பங்களும் அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும் மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன… மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது நிரூபணமாகிறது…

View More அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி