சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

suntv-endhiran-0நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘யார் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவெங்கும் இருந்து மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 88% பேர் ரஜினிதான் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருந்தார்கள். 3% பேர் அமிதாப், 3% பேர் ஷாருக், 3% பேர் சல்மான் – ஏறக்குறைய இப்படி இருந்தது மக்களின் தீர்ப்பு. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஏன் இந்த பிரபல்யம் என்று அலசத் தொடங்கினார்கள். அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களிலிருந்து ரஜினி எப்படி மேலேறிச் செல்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 1970களில் அமிதாப் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது கிடையாதாம். தனது படங்கள் வெளியானபோதுகூட அதைப் பற்றிப் பேசமாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம் தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வருவதும், ஏதேனும் தொலைக்காட்சித் தொடரில் (டாக் ஷோ) தோன்றினால் அதற்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இயல்பாகிவிட்டது. தங்களது படங்கள் வெளியாகும்போது ஷாருக்கும் சல்மானும் பெரிய பெரிய பிரமோக்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ரஜினி ஈடுபடுவதில்லை என்று சொன்னது அந்தத் தனியார்த் தொலைக்காட்சி சானல்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருநாள் முழுக்க சன் டிவியில் ரஜினி தோன்றி கிளிமாஞ்சாரோ பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி வாக்கு கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதனை ரஜினியே மேடையில் சொன்னார். எந்திரன் திரைப்படம் சன் பிக்சர்ஸின் கையில் வந்தபோது, இதற்கான பிரமோக்களில் தான் பங்கேற்பதாக ரஜினி வாக்குக் கொடுத்திருந்தாராம். ஆனால் படம் முடிந்ததும், அந்த பிரமோ என்பது தன் குணத்துக்குச் சற்றும் பொருந்துவல்ல என்பது ரஜினிக்கு உறைத்திருக்கிறது போல. அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அதனையும் கலாநிதி மாறன் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டாராம். ரஜினி ஒரு மேடையில் ஏறிவிட்டால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்பது நாம் அறிந்ததே. எந்திரன் வெளியீட்டு மேடைகளில் அவர் கலாநிதிமாறனைப் புகழ்ந்த விதமும் அப்படியே. அதற்கான வணிகக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணிகக் காரணங்கள் மட்டுமே எப்போதுமே ரஜினியை நிர்ணயித்துவிடுவது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்னும் ஒற்றை கம்பெனியின் ராட்சதப் பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் சிக்கிக் கொண்டுவிட்டது. அதிலிருந்து வெளியேறும் வழி என்னவென்று பார்த்தால், அங்கே வரவேற்கக் காத்துக்கொண்டிருப்பவர்கள் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள். வங்குவத்தி வங்குவத்தின்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு வங்குவத்தி திங்கு திங்குன்னு ஆடிச்சாம் கதைதான் இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்கள் கையில் ரஜினி சிக்காமல் சன் பிக்சர்ஸில் அவர் மாட்டிக்கொண்டது ஒரு வகையில் அவருக்கு நல்லதுதான். ஆனால், மணிரத்னத்தின் வீட்டில் குண்டு விழுந்த பின்பு, தமிழ்நாட்டிலேயே குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்பது சட்டென நினைவுக்கு வந்து, ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?

இதில் போதாக் குறைக்கு சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளை தனது கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், அதற்குப் போட்டியாக கருணாநிதியின் பேரன்களே களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. உழைப்பு, தொழில், முன்னேற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், பதவியும் ஊடகமும் தரும் செல்வாக்கில்லாமல் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதை எந்த ஒரு பாமரனும் உணரமுடியும். ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் இப்படி சிக்கிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இதுபோக, சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமம் கொடுப்பதில் நடக்கும் கூத்துகள் தனி. இன்றைய கருணாநிதியின் அரசியல் புலத்துக்கு முன்னால், சன் பிக்சர்ஸின் ஊடகப் புலத்துக்கு முன்னால் எந்த இயக்குநரால், எந்த நடிகரால் எதிர்த்து நின்றுவிட முடியும் என நினைத்துப் பாருங்கள். ரஜினி போன்ற உச்ச நடிகரே இப்படி வீழ்ந்து கிடந்தால், மற்றவர்களின் பரிதாப நிலை நமக்குப் புரியும்.

suntv-endhiran

முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகிறது என்றாலே சில படங்கள் அந்த சமயத்தில் வெளிவராது. இதன் காரணம் ரஜினி என்னும் உச்ச நடிகரின் படத்தோடு போட்டி போடுவது அவசியமற்ற வேலை என்பதுதான். இது தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தாங்களாக எடுக்கும் ஒரு முடிவு. இன்று அப்படியல்ல. நீங்கள் போட்டி போட நினைத்தாலும், உங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதை மீறி வெளியிட்டால் உங்கள் திரைப்படம் சன் டிவியின் திரை விமர்சனம் (இப்போது இந்தப் பகுதி பெரும் நகைச்சுவைப் பகுதியாகிவிட்டது வேறு விஷயம். நேற்று வரை சன் பிக்சர்ஸ் தயாரித்த தில்லாலங்கடி திரைப்படம்தான் திரை விமர்சனம் பகுதியில் முதல் இடம் என்று கேள்விப்பட்டேன். நான் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்பதால், ஒரு நண்பர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியவந்தது) பகுதியில் குதறப்படலாம். தனது ஒரு படம் குதறப்பட்டதை எதிர்த்து பேசிய சத்யராஜ் இன்றெல்லாம் வாய் திறப்பாரா என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அன்று சன் டிவி ஒரு சானல் மட்டுமே. இன்று திரையுலகில் அது ஒரு சக்ரவர்த்தி. டிவி, திரைப்படம் என்பது போதாதென்று, தினமும் 10 லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகை, இது போக வார இதழ்கள், இந்தியாவெங்கும் பண்பலை – இவர்களை எதிர்த்துப் பேச உண்மையான தைரியம் இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும். இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?

இதில் எந்திரன் வெளியீடு என்று சொல்லி சன் டிவி அடிக்கும் கும்மாளம் குமட்டலை வரவழைக்கிறது. முன்பும் எத்தனையோ ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் அங்கங்கே நடந்த ஒரு விஷயமாக அமுங்கிவிடும். ஆனால், இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு நடிகருக்கு இப்படி நடப்பதெல்லாம் பெரிய எரிச்சல் தரும் விஷயங்கள். இது ஒரு ரசிகரின் அல்லது சில ரசிகர்களின் தனிப்பட்ட விஷயமல்ல. சமூகம் எப்படி திரைப்படத்தினால் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. முன்பே இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். இந்த முறை இதனையும் சன் டிவி மார்க்கெட்டிங் உத்தியாக்கிவிட்டது. ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் – என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை சன் பிகசர்ஸ். அதன் இலக்கு தான் போட்ட 150 கோடிக்கு நிகராக எத்தனை மடங்கு லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மட்டுமே.

suntv-endhiran

ரஜினி போன்ற நடிகர்கள் இந்த குமட்டல்களையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இன்னொரு குமட்டல். படம் வெளி வந்த பின்பாவது ரஜினி இது குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தான் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதில்லை என்னும் சாக்கு போக்கெல்லாம் எடுபடாது. ஜெயலலிதா ரஃபி பெர்னாட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படித்தான் சொன்னார். தான் எத்தனை முறை சொல்லியும் தன் காலில் அமைச்சர்களும் தொண்டர்களும் விழுகிறார்கள் என. காலில் விழுந்த இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், அடுத்த எந்த அமைச்சர் காலில் விழுந்திருப்பார்? ரஜினியும் தனக்கு பாலாபிஷேகம் செய்யும், தேர் இழுக்கும் ரசிகர்களை எல்லாம் சரியாகக் கண்டித்திருந்தால் அவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.

தன் மகள் கல்யாணத்துக்கு நிச்சயம் வரக்கூடாது எனச் சொல்லி, அதனைச் செய்துகாட்டவும் தெரிந்த ரஜினிக்கு இது ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ரஜினிக்கு இப்படி நடக்கும்போது, ரஜினியாக வரத் துடித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும் இதனையே நகலெடுக்கவே விரும்புவார்கள். அப்படி ரஜினி செய்யாவிட்டால், இன்றைக்கு ரஜினிக்கு அவர் ரசிகர்கள் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டின் திரை கலாசாரமாக மாறும். எனவே ரஜினியே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். அஜித் தனது பேருக்கு முன்பாக இனிமேல் அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் போடக்கூடாது என்று சொன்னார் சமீபத்தில். கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதேபோன்ற ஒரு சுய பரிசோதனையை ரஜினி செய்யவேண்டும்.

ரசிகர் மன்றங்களால் சில நற்பணிகள் அங்கங்கே நடக்கிறது என்றாலும், பெரிய அளவில் இந்த ரசிகர் மன்றங்கள் என்ன சாதித்தன என்பது தெரியவில்லை. எந்த ஒரு நடிகரும் ரசிகர் மன்றத்தை நம்பி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் வெளியில் எந்த ஒரு நடிகரும் இதனைச் சொன்னதில்லை. ரஜினி தனது எல்லா ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அதில்கூட முன்மாதிரியாக இருக்கலாம் ரஜினி. நடிப்பு என்பது ஒரு தொழில். திரைப்படமும், நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதனைப் பாருங்கள், பாராட்டிவிட்டுச் செல்லுங்கள், அது போதும் என்று ரஜினி அறிவித்தால்தான் என்ன?

எந்திரன் வெளியீட்டை ஒட்டி மேடையில் பேசிய அத்தனை நடிகர்களும் தங்கள் ரசிகர்களையே நகலெடுத்தார்கள். ஒவ்வொரு நடிகரும் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக வந்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்கெல்லாம் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. நடிகர்களின் வழியேதான் ரசிகர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்மானமுள்ள நடிகர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு முன்பு குரல் கொடுத்த நடிகர்கள் எல்லாம் ஓடிப் போன சுவடே தெரியவில்லை.

suntv-endhiran

ரஜினி முன்பெல்லாம் புகை பிடிப்பவராகப் பல படங்களில் தோன்றுவார். ஸ்டைல் என்பதே தன் அடையாளம் என்று ரசிகர்களை அவர் அடைந்த விதமே இந்த புகையின் வழியாகத்தான் எனலாம். திடீரென்று பாமக குரல் கொடுத்தது. ரஜினியால் பல இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று. ஒரு படி மேலே போய் ரஜினியை அக்கட்சி மிரட்டியது என்றே சொல்லவேண்டும். ரஜினி புகை பிடிப்பது போன்ற படங்கள் வந்தால் அதனை வெளியிட விடமாட்டோம் என்றார்கள். உண்மையில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினி புகை பிடிக்கும் படங்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்யலாம். அமைதி வழியில் அதனை எதிர்த்துப் போராடலாம். தொடர்ந்து ரஜினியுடன் பேசலாம். ஆனால் அப்படி வரும் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்பது அராஜகம். ரஜினி இதற்குப் பணிந்து போனார். வணிகக் காரணங்கள். அடுத்த படத்தில் சுயிங்கம் மென்று கொண்டு வந்தார்.

புகை பிடிப்பதால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று போராட்டம் நடத்திய பாமக இன்று ஏன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது? ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன்? எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா? ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன்? நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா? இப்படி ரசிகர்கள் என்னும் போர்வையில் ஒரு சமுதாயத்தின் மக்களைக் கீழ்மைப்படுத்துவது தவறு என்று ரஜினிக்கு எதிராகப் பாமக இன்று எதுவும் பேசாமல் கள்ள மௌனத்துடன் இருப்பது, அது சன் பிக்சர்ஸைப் பாதித்து, அரசியலில் தன்னையும் பாதித்துவிடும் என்பதற்காகவா?

முதலில் ரஜினி ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். படத்துக்கான மார்க்கெடிங் போர்வையில் சன் டிவி நிகழ்த்திக்கொண்டிருப்பது ரஜினியின் சுயமரியாதையின் மீதான தாக்குதலே அன்றி வேறல்ல. தனது ரசிகர்களின் சர்க்கஸ்களைக் காட்டிக்கொண்டிருப்பதன் மூலம் தன்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினி உணரவில்லை என்றால், பொதுமக்களின் மத்தியில் ரஜினியின் இமேஜ் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். அது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதும் ஓரளவு உண்மையே. ரஜினி என்னும் தனிமனிதரின் மனித இருப்புக்கும், இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது பலருக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தெரிந்ததாக ஆக்க ரஜினி முயல்வது அவருக்கு நல்லது. இல்லை என்றால் ஒரு தன்மானமற்ற கும்பலை நாளைய சந்ததியாக உருவாக்கி வைத்துவிட்டுப் போவதில், என்னதான் சன் டிவியின் எரிச்சலூட்டும் அதீத பரப்புரை காரணமாக இருந்தாலும், ரஜினிக்கு பெரும் பங்கு உண்டாகியிருக்கும். பின்பு அதனை நீக்குவது என்பது பெரும்பாடாகிவிடும். சன் டிவியின் கேவலப்படுத்தும் ப்ரமோக்களுக்கு ரஜினி உடனே ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. 60 வயதுக்குப் பிறகு, ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது?

நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.

77 Replies to “சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்”

  1. //நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.//

    ரஜினியின் பலம் அவர் ஒரு ராஜ நாகத்தின் வலிமையைக் கொண்டவர் என்பது. ஆனால் செத்த ராஜநாகம். ரஜினிக்கு அரசியலில் இறங்க வடிவேலு அளவுக்குக்கூட சாமர்த்தியம் இல்லை.

    கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின்போது குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று திரும்பத் திரும்ப சன் டிவியில் சொன்ன முட்டாள்தான் ரஜினி.

    ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னதற்கு எஸ்.வி. சேகர் கூட எதிர்ப்புத் தெரிவித்தபோது, எப்படி ஹிந்துத்துவத்தை பணமாக்கலாம் என்று பாபா படம் பண்ணியவர் இந்த முட்டாள் ரஜினி.

    இங்கே சம்பாதித்த பணத்தை வைத்து கர்நாடகாவில் பல தொழில்களை செய்து, தமிழர்களுக்கு நாமம் போட்டவர். இவருக்கெல்லாம் ஒரு கட்டுரை வேற.

    – ரஜினி ரசிகானாக இருந்த கார்கில் ஜெய்.

  2. திரு.ஹரண் பிரசன்னா அவர்களே!
    தமிழகத்தில் மிச்சமுள்ள மூளை உள்ள அனைவரும் நினைத்து வருந்தும்
    விஷயத்தை தெளிவாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

    திரு. ரஜினிகாந்தின் நடிப்பு எனக்கு பிடிக்காது என்றாலும், பொது இடங்களில் அவர் கடைபிடித்த நெறிகள் பலருக்கு பிடித்திருந்தன.
    (சில விதிவிலக்குகளும் உண்டு).
    ஆனால், இந்த திரைப்படத்திற்கு அவரே முன்வந்து சில விஷயங்களை,
    பிரமோஷன்களை செய்தது அருவருப்பாகவே இருக்கிறது.

    மேலும் திராவிட கழகங்கள் 1940 முதல் 1970 வரை அடுக்கு மொழியில்
    பேசியே தமிழர்களை ஏமாற்றியதன் விளைவை இன்று வரை அனுபவித்து
    வருகிறோம்.

    அதைப்போன்றதொரு முட்டாள் கூட்டத்தை இன்று ரஜினி உருவாக்குவது
    அதிர்ச்சியை தருகிறது.

    திரைப்படம் என்பது சில நேர கேளிக்கைக்காக பார்க்கப்படுவது. கொஞ்சம்
    விவரமுள்ளவர்கள் வாழ்க்கையின் பல பரிமாணங்களை எடுத்துக்காட்டவும்
    உதவும் என்பார்கள். ஆனால் டீனேஜ் குழந்தைகள் தங்கள் ஆதர்ச
    புருஷனாக கதாநாயகனை வைத்துக்கொள்வது புதியதல்ல. வயது ஆக ஆக
    கேளிக்கைகள் குறைந்து முதிர்ச்சி வரும் என்பது உலக இயற்கை.

    ஆனால் தமிழகத்தில் 40, 50 வயதுள்ளவர்கள் ஏன் முதியவர்கள் கூட இந்த குமட்டும் விஷயங்களில் ஈடுபடுவது வாழ்க்கையை பற்றின புரிதலே இல்லாமல் ஒரு பெரிய கூட்டம் தமிழகத்தில் உள்ளது என்பதையே காட்டுகிறது.

    என் அடுத்த தலைமுறை தமிழனை நினைக்க கண்டிப்பாக பயமாக
    இருக்கிறது. என் முன்னோர்கள் திராவிட கழக அடுக்கு மொழியில் மயங்கியதை விட கேவலமாக வாழ்வார்களோ என்று!!!

  3. ஹரன் பிரசன்னா

    அது சரி இந்த குமட்டல்கள் எல்லாம் படத்தை காசு கொடுத்து பார்த்த பொழுதும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதும் பொழுது வரவில்லையா என்ன? எனக்கு ரஜினிகாந்த்தையும், சன் டி வி யையும் பார்க்கும் பொழுது வரும் குமட்டலை விட உங்களது இந்த இரட்டை வேடம்தான் இன்னும் அதிகம் குமட்டல் தருகிறது. இரண்டு முறை வாந்தி எடுத்து விட்டு வந்துதான் எழுதுகிறேன். சன் டி வியும், மாறன்களும் அராஜகம் செய்கிறார்கள் அட்டூழியம் செய்கிறார்கள் என்கிறீர்கள் அப்புறம் எதற்கு ஐயா போய் அந்த சினிமாவைக் காசு கொடுத்துப் பார்த்து அவர்களை மேலும் பணக்காரர்களாக்குகிறீர்கள். நாளைக்கே மதானி ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்து அந்த லாபத்தில் இந்துக்களை குண்டு வைத்துக் கொன்றாலும் முதலில் பார்த்து பாராட்டி அனைவரையும் பார்க்கச் சொல்லி எழுதி விட்டு அப்புறம் மறுநாளே குண்டு வெடித்தவுடன் ஐயோ கொல்றாங்களே என்றும் எழுதுவீர்கள் அப்படித்தானே? இந்த சினிமாவைப் பார்க்காமல் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தால் வரவேற்றிருப்பேன் இப்பொழுது என்னால் வாந்தி மட்டும்தான் எடுக்க முடிகிறது.

    வாந்தியுடன்
    ச.திருமலை

  4. திருமலை

    நீங்கள் வரவேற்றிருந்தால் நீங்கள் எடுத்த வாந்தி எனக்கு வந்திருக்கும்! நல்ல வேளை தப்பித்தேன்.

    மதானி படத்தில் ரஜினி நடிப்பதும் கலாநிதி மாறன் படத்தில் ரஜினி நடிப்பதும் ஒன்றல்ல! ஆனால், ஹிந்த்துத்வ வெறி உங்களைக் கண்களை மறைப்பதால், உங்கள் கருத்துக்கு 1% கூட ஒத்துவரவில்லை என்றால்கூட உடனே அதை மதானியுடன் இப்ராஹிமுடனும் ஒப்பு வைப்பது உங்கள் அரசியல்.

  5. I am a Rajini fan. But I don’t like the way Sun TV using Rajini as for their convenience.
    I agree with Prasanna. The channel is going over elaborate with the milk abhishagem.
    I feel like something too. Rajini is agreeing to Sun TV because he have no choice at the moment.
    He is just doing them a favour for saving the movie when it was stalled due Financial reasons 2 years ago. I am sad, but what to do? I am still rajini fan forever but not agreeable

  6. சபாஷ்!

    எல்லா நடிகனும் கட்அவுட்டுக்கு பால் ஊற்றிக்கொண்டிருக்கிறான் என்பது எல்லா இலங்கைத் தமிழர்களும் புலிகள் ஆதரவாளர் என்று சொல்லிக்கொண்டிருப்பதைப் போல்….

    ரஜினிக்கு எல்லாம் தெரியும்…
    .

  7. மிகவும் யதார்த்தனமான ஒரு கட்டுரை! ரஜினி ஒரு மிக நல்ல மனிதர்! தன் மேல் அளப்பரிய அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் சதா காலமும் பொழிந்துகொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திற்கு அவர் மிக மிக கடன் பட்டுள்ளார். சமுதாயத்திற்கு அவர் ஆற்ற வேண்டிய கடைமைகளில் இதுவும் ஒரு முக்கியமான ஒரு கடமை. எவரும் தன்னால் நஷ்டமோ கஷ்டமோ பட்டுவிடக் கூடாது என்று ரஜினி எப்போதுமே உணர்பவர் மட்டும் அல்ல, அதன்படி செயலாற்றுபவரும் கூட. தன்னை வைத்து படம் எடுப்பவர்கள் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற அவரது உயரிய எண்ணம் பாராட்டப்பட வேண்டியது. அதே போல் தன்னை எப்போதும் நேசித்து வரும் சமுதாயம் சீரழிந்து விடாமல் அவரால் ஆனதை செய்யவேண்டியது அவரது தலையான கடமை ஆகும். சமுதாயத்தை கொள்ளை அடிப்பதையே தன் பிரதான கொள்கையாக கொண்டிருக்கும் எந்த ஒரு குடும்பத்தையும், இயக்கத்தையும் எதிர்க்க வேண்டிய தார்மீக கடமை ரஜினிக்கு இருக்கிறது. இறையுணர்வும், நியாய உணர்வும்,பரோபகார குணங்களும் மிக நிறைந்த ரஜினி இதை நன்கு உணர்ந்திருப்பார். எந்திரனின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, ரஜினி வியாபார நோக்கையே பிரதானமாக எண்ணாமல், தனக்குள்ள சமுதாயக் கடமைகளை மறக்காமல், மக்களின் அபரிதமான அன்பையும் பாசத்தையும் இறைவனருளால் பெற்றிருக்கும் அவர் தம்மை முழு மனதுடன் சமுதாய சேவையில் ஈடுபடுத்திக்கொள்வது அவர் தமக்கும், தம் குடும்பத்திற்கும், நாட்டு மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய தொண்டாக இருக்கும். இத்தொண்டில் இறைவன் என்றென்றும் ரஜினியின் பக்கம் நின்று வழி நடத்துவார். ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்களின் (நானும் ஒருவன்) இந்த ஆத்மார்த்தமான எண்ண அலைகளை ரஜினி விரைவில் புரிந்துகொண்டு, ஆவன செய்வார் என்று நம்புவோமாக! அப்படியே எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிக!
    சர்வே ஜனா சுக்ஹினோ பவந்து!

  8. //ரஜினிக்கு அரசியலில் இறங்க வடிவேலு அளவுக்குக்கூட சாமர்த்தியம் இல்லை

    இதில் என்ன சாமர்த்தியம் வேண்டிக்கிடக்கு?! சாக்கடையில இறங்க யோசிக்காம.. கண்ணை மூடிட்டு குதிப்பாங்களா? குதிச்சா, வேடிக்கை பார்க்குற உங்களை மாதிரி வெள்ளை சட்டை ஆளுங்க மேலேயும் சகதி விழுமே.. பரவாயிலலையா… நாங்கெல்லாம் தெருவுல இறங்கிப் போராடணும்.. நீங்கல்லாம் கமெண்ட் போட்டு நோகாம நோன்பு கும்புடுவீங்க.. அப்படித்தானே?

    //இங்கே சம்பாதித்த பணத்தை வைத்து கர்நாடகாவில் பல தொழில்களை செய்து, தமிழர்களுக்கு நாமம் போட்டவர்.
    //
    ரைட்டு.. உங்க டீமேட் கணக்குல இருககிற ஷேரை எல்லாம் வித்து தள்ளுங்க.. இனிமே தமிழ்நாட்டு கம்பெனி ஷேர் மட்டும் வாங்கிப்போடுங்க… சன்டிவி ஷேர்தான் சக்கைப்போடு போடுதான்… மறந்துடாதீங்க.. நீங்க முதல்ல இந்து.. அப்புறம் தமிழன்…. அதை மனசு வெச்சுக்கோங்க.

  9. ஹ பி

    உங்களுக்கு எதுவும் வரட்டும் எனக்கு ஆட்சேபணையில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் திரிக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை மாஃபியாக்களில் வித்தியாசம் கிடையாது. எதையும் செய்யத் தயங்காத அயோக்யர்கள் இவர்கள். நான் கேட்ட கேள்வி இதே அடிப்படையில் நாளைக்கு மதானி ரஜினியை வைத்து படம் எடுத்தாலும் ஆதரிப்பீர்களா என்பதுதான். அப்படித்தான் ஆதரிப்பேன் என்று சொல்லியியுள்ளீர்கள். நான் மாஃபியாக்களை எதிர்த்தால் அதற்குப் பெயர் இந்துத்துவாவா? தெரியாமல் போச்சே. இதில் இந்துத்துவ வெறி எங்கிருந்து வருகிறது? இன்று தமிழ் நாட்டில் ஒரு குடும்பம் வரலாறு காணாத அளவில் சொத்துக்களை குவித்து அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது. அதுக்கு வெட்க்கம் மானம் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் காசு கொடுத்து ஆதரவு தெரிவித்து விட்டு அதற்கு விளம்பரமும் கொடுத்து விட்டு அதை விமர்சனம் செய்பவனைப் பார்த்து சம்பந்தமே இல்லாமல் இந்த்துத்துவ வெறி என்கிறீர்கள். நான் என் கேள்விகளை மிகத் தெளிவாக வைத்திருக்கிறேன். படம் பார்க்கும் பொழுது வராத குமட்டல் இப்பொழுது ஸ்பெஷலாக வருவது ஏன் என்பதும் இதைப் போலவே மதானியோ தாவூத்தோ எடுத்திருந்தாலும் அதையும் விசிலடித்து விளம்பரம் செய்வீர்களா என்பதுதான். அப்படித்தான் செய்வீர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்க. நாடு வெளங்கிடும்

    அன்புடன்
    ச.திருமலை

  10. கமல் நடித்த படத்துக்கு இந்தளவு விளம்பரம் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . ரஜினி என்பதால் ஒரு வித வயிற்றெரிச்சல் . சுயமரியாதை , சமூகம் என சொல்வதெல்லாம் லாஜிக்கே அல்ல . உண்மையில் இருதரப்பும் வின் வின் என்ற லாபகரமான கூட்டணியில்தான் உள்ளனர் .
    அலகு குத்துதல் ,மொட்டை அடித்தல் எப்போதோ கிடைக்கும் ஜாலி அனுபலம் . நல்ல வேலையில் வசதியாக இருப்பவர்களும் இப்படி செய்வதுண்டு. நான் விசிலடிச்சானகுஞ்சுதான் . விசில் அடித்து படம் ரசித்தேன் . ஆனால் நானெல்லாம் சினிமா பார்ப்பதே அபூர்லம் . ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானோர் நல்ல நிலையில் உள்ளனர் . அவர்கள் நல்வாழ்வை பற்றி கவலை வேண்டாம் . சக மனிதருக்கு மரியாதை தருவது கிண்டலுக்குரியது என நினைக்கும் அறிவு ஜீவிகள்தான் பிச்சை எடுக்கிறார்கள்

  11. அளவுக்கதிமாக ஹைப் செய்யப் பட்டிருக்கும் ரஜினி என்ற போலி பிம்பம் ரொம்ப சாதாரணமானது என்று உணர்த்தியிருக்கிறீர்கள் பிரசன்னா. மிக்க நன்றி!

    ரஜினி கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது, அலகு குத்தி காவடி எடுப்பது போன்ற விஷயங்கள் கடும் கண்டனத்திற்குரியவை.

    இறைவனின் திருமேனி மீது பாலை, தேனை அபிஷேகம் செய்வது என்பது பூஜையில் வரும் ஒரு உன்னதமான குறியீட்டுச் செயல். அது போன்றே அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்பவை முருக வழிபாட்டில் ஆழமான தாத்பரியம் கொண்டவை.

    ஒரு சினிமா நடிகன் மீதுள்ள அபிமானத்தைக் காட்ட இவற்றைத் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. உலகில் வேறெங்கும் மத வழிபாட்டு செயல்பாடுகளை நடிகர்களுக்கு செய்வதில்லை.. இவற்றைச் செய்யும் வெறிபிடித்த ரசிகர்கள் தங்கள் மதத்தின் நம்பிக்கைகளையே கொச்சைப் படுத்துகிறார்கள், வக்கிரப் படுத்துகிறார்கள். They are perverting, vulgarizing, abusing and insulting the acts of divine Hindu worship thru such activities.

    ரஜினிக்கு கொஞ்சமாவது இந்துமதத்தின் மீது அபிமானம் இருந்தால் இச்செயல்களை மிகக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். சும்மா பேச்சுக்கு ரசிகர்க்ளுக்கு அட்வைஸ் செய்வதோடு நிற்கக் கூடாது.

  12. ” ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் – என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ”

    The fools who do this and the fools who support this sort of incredibly dumb behavior are doomed anyway. Who gives a crap? Anyone with a peanut sized brain can easily comprehend that the stuff he sees on screen is ‘entertainment’, which is not to be taken seriously. If some dumb[…] decides to start smoking just because Rajni does it, whose fault is it?

    [Edited amd published]

  13. //அளவுக்கதிமாக ஹைப் செய்யப் பட்டிருக்கும் ரஜினி என்ற போலி பிம்பம் ரொம்ப சாதாரணமானது என்று உணர்த்தியிருக்கிறீர்கள் பிரசன்னா. மிக்க நன்றி!//

    அப்படி எங்கே சொல்லியிருக்கிறார்? அயோத்தியா ஜட்ஜ்மெண்ட்டை திரிப்பதுபோல் இருககிறது.

    வெறிப்பிடித்த ரவுடிகளில் கைகளில் சிக்கியிருக்கும் இந்து மதத்தை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!

  14. Pingback: Indli.com
  15. அதுக்குத்தானே மாறன் பிரதர்ஸ் கைகளில் கொடுத்திருக்கிறீர்கள். ஆண்டவனால் காப்பாற்ற முடியாத தமிழகத்தை மாறன் பிரதர்ஸ் காப்பாற்றி விடுவார்கள். நாங்கள்தான் பீராபிஷேகம் செய்து, கட்டவுட்டுக்கு அலகு குத்தி காவடி எடுத்து நடுரோட்டில் பாலாபிஷேகம் செய்யும் தீவீர்வாதிகள். நீங்கள் எல்லாம் மாறன் பிரதர்ஸுக்கு கப்பம் கட்டி நாட்டைக் காப்பாத்துங்கள் சாமிகளா. குடும்ப மாஃபியாவிடம் காசைக் கொடுத்து நாட்டைக் குட்டிச் சொவரா ஆக்காதீங்கன்னா சொன்னவனை இந்த்துவ வெறியர்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம். ராம்கி போய் பேசாம எந்திரனைப் பத்தாவது தடவை பாருங்கள் பண்பாடு மேலும் வளரட்டும். நாங்கள் தான் பாவம் இப்படி வெறி பிடித்து கையில் காபலத்துடன் திரிகிறோம் உங்களுக்காவது ரஜினி தயவால் மாறன்கள் ஆசீர்வாதத்தினால் பண்பாடு வளரட்டும். நீங்களாவது நல்லா இருங்க நாங்கதான் நாசமாப் போய்ட்டோம்.

    அன்புடன்
    ச.திருமலை

  16. ராம்கி,

    கொலை வெறி பிடித்த,சர்வாதிகார மனப்பான்மையுள்ள முட்டாள்களிடம் கிடைத்திருக்கும் இஸ்லாமை மட்டும் அந்த ஆண்டவன் காபாற்றிவிடுவானா?!

  17. ஹரன் பிரசன்னாவின் சொல்வனக் கவிதை

    கணம்தோறும் நடந்துவிடும்
    செயல்களைத் திருத்திக்கொள்ளும்
    வாய்ப்பு மறுக்கப்படும்
    வழியென்றறிந்து
    கவனமாக அடி வைக்கிறேன்

    :))))))))))))))))))) மீத விபரங்களை கவிதை சொல்லும் :))

  18. //ரஜினிக்கு கொஞ்சமாவது இந்துமதத்தின் மீது அபிமானம் இருந்தால் //

    ஜடாயு இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? இதைவிட நீங்க ”கருணாநிதிக்கு இலங்கை தமிழர்கள் மேல் கொஞ்சமாவது அபிமானம் இருந்தால்” என்று சொல்லியிருக்கலாம். ரஜினிக்கு இருக்கிற ஒரே அபிமானம் சுய அபிமானம் மட்டும்தான். ரஜினி ரசிகர்களுக்கு இருப்பது வெறும் லும்பத்தனம் மட்டும்தான் கருணாநிதிக்கு குடும்ப பாசமும் திமுககாரனுக்கு ரவுடித்தனமும் போல.

  19. //வெறிப்பிடித்த ரவுடிகளில் கைகளில் சிக்கியிருக்கும் இந்து மதத்தை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!//

    ராம்கி ஏன் இவ்வளவு கோபம்? இங்கே உள்ளவர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல. ரஜினி ரசிகர்களிலும் நிறைய பேர் இந்துக்கள் உள்ளனர்.நானும் ரஜினி ரசிகன் தான். இங்கே உள்ளவர்கள் நீங்கள் நான் உட்பட யாரும் எடுக்கும் முடிவு மட்டும் இந்து மதம் என்று ஆகிவிடாது. ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் தான் இங்கே நடப்பது.

    தவறு எங்காவது இருந்தால் நாம் தான் திருத்த வேண்டும் நண்பரே, அந்த கடமை நமக்கு உண்டு.

    யாரும் புகழ்வதாலோ, இகல்வதாலோ ரஜினியின் நிலை மாறிவிடாது.
    விட்டு தள்ளுங்கள்.
    கோபமின்றி உங்களுடைய நியாமான வாதங்களை எடுத்து வையுங்கள்.

    தமிழ் இந்து தளத்திற்கு

    திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்ததே ரஜினி என்ற ஒரு நடிகரால் தான்.

    ராகவேந்திரரின் அடையாளமாக தமிழ் நாட்டில் அறியபடுவது ரஜினி தான்.
    சினிமாவில் நடிப்பது அவர் தொழில். அது வேறு அவரின் ஆன்மிக பாதை வேறு.
    கலைஞ்சரின் குடும்ப கம்பனியில் அவர் நடித்து விட்டால் அது உடனே இந்து மத எதிர்ப்பு என்று சொல்ல முடியாது. இங்கு உள்ள அனைவரையும் போல ஏன் சிலரை விட அதிகமாகவே ஆன்மிக அறிவு உள்ளவர்தான் ரஜினி.

    பின்னர் அமெரிக்காவிலும்,முஸ்லிம் நாடுகளிலும் சென்று அவர்களிடம் வேலை செய்து சம்பாதிக்கும் இந்துக்களை என்ன சொல்வது. ஆன்மிகம் வேறு, தொழில் வேறு என்று தான் நினைக்கிறேன். இந்த தளத்தில் பங்கேற்கும் பலரே பிற மத நாடுகளில் தொழில் செய்பவராக இருக்கலாம்.
    பாபாவில் நடித்தது இந்துத்துவாவை காசாக்குவது என்று சொன்னால் இதற்கு முன் வந்த எண்ணற்ற பக்தி படங்களை என்ன சொல்வது?

    எல்லா நடிகரின் ரசிகர்களும் எல்லா தரப்பிலும் இருப்பார்கள் நாம் ஏன் சினிமா விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம். நம் மதத்தைப்பற்றிய எதாவது பரப்புரை இருந்தாலொழிய சினிமாவிற்கும் நம் தளத்திற்கும் என்ன தொடர்பு? . அதனை செய்ய வேண்டிய தளம் வேறு என்று நினைக்கிறேன்.

  20. // இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?// இது என்ன லூசுத்தனமான கேள்வி? ரஜினியை குறிவைத்து பேர் வாங்க நினைத்த ராமதாசு திருமாவளவன் ரவுடித்தனத்திற்கும் ரஜினியை குறிவைத்து எழுதிய ஹ பிக்கும் வித்தியாசமே இல்லை. அவர் தன் வேலைய பாத்துக்கிட்டு போறாரு. உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல். அரசியல் வாதிகள் இந்து மதத்தை எப்படி ஈஸியா திட்டிடறாங்களோ அது போல ரஜினியை எல்லோரும் திட்டிடறாங்க. அதான் உண்மை. ஏன்னா அவர் தான் எல்லாத்தையும் வாங்கிக்கிறாரு. ரொம்ப நல்லவரு கணக்கா! திருப்பி கொடுக்குற பவன் கல்யான் மாதிரி தனது ரசிகர்களை ரஜினி வழிநடத்தலை. ரஜினியை பாராட்டி எழுதினாலும் திட்டி எழுதினாலும் பேர் காசு சம்பாதிக்கலாம்ன்னு அலையற சீப் ரேட் வாரப்பத்திரிகை ரேஞ்சுக்கு இருக்கு இந்தக் கட்டுரை. இந்து சாமிக்கு எதிரா இந்து மதத்திற்கு எதிரா பகுத்தறிவுங்கற பேர்ல அவமானப்படுத்தாம அதுக்கு ஒரு மரியாதையை உண்டாக்கி இருக்கிற ஒரு மிகப்பெரிய ஐக்கான் ரஜினியை பகுத்தறிவு சீர்திருத்தப் போர்வையில திட்டி அவமதிக்கப்பார்ப்பது சரியல்ல. ஹரன் பிரசன்னாவின் அதிகப்பிரசங்கித்தனம் தான் மேலோங்கி இருக்கிறது. கருனாநிதி வீட்டு அதிகார வர்கத்திற்கும் மாறன் குடும்பத்தின் பிசினஸ் பேராசைக்கும் அவர்களைபற்றி கூறாமல் ரஜினியை பலிகடா ஆக்கி இருப்பது அநியாயம். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல அறிவு ஜீவிகளுக்கு (என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு) இளைச்சவர் ரஜினி தான் என்பது நன்றாகத் தெரிகிறது!

  21. ரஜினி ரசிகர்களை கண்டிக்கும் விதத்தில் அவரது குருவான பாலச்சந்தரே பல ஆண்டுகளுக்கு முன்னர் சில படங்களில் காட்சிகள் வைத்தார்.
    ஆனாலும் இந்தக் கூத்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டே தான் போகிறது. நிஜம் நிகழ்சிகளில் பல இந்து மத வழிபாடுகளை கேலி செய்யும் சன் டிவி இப்போ தன. பட விளம்பரத்துக்கு இந்த உத்திகளை வரவேற்று ஊக்கப் படுத்தி உண்மை ரசிகன்கள் என்றால் இப்படித் கள்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று உலகுக்கு காட்டித் திரிகிறது. எனக்கு இன்னொரு சந்தேகம். இவர்களே கூலிக்கு ஆள் வைத்து இப்படி எல்லாம் செய்கிறார்களோ என்னமோ

  22. ஜெய்! //ரஜினிக்கு அரசியலில் இறங்க வடிவேலு அளவுக்குக்கூட சாமர்த்தியம் இல்லை// அவர் அரசியலில் இறங்கினாலும் இறங்காவிட்டாலும் உங்களைப் போன்றவர்கள் நோகாமல் ஏசி ரூமில் இருந்து கொண்டு விமர்சனம் எழுதி அறிவு ஜீவி என்று காட்டிக்கொள்வீர்கள் நண்பரே. ஆனால் அதற்காக அவரும் அவரது ரசிகர்களும் காலம் முழுவதும் காயப்படப்போவது பற்றி உங்களுக்கு என்ன கவலை. எத்தனை பேர் கொலையாவார்கள். எத்தனை வெட்டு குத்துக்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும். ரஜினி எத்தனை பேர் வாழ்வுக்கு பொருப்பேற்க வேண்டி இருக்கும். அப்படி ரசிகர்களை கொலைகளத்தில் பலிகடாவாக்காமல் ஏதோ பலபிஷேக ரேஞ்சோடு அன்றைய தின பரவசத்தோடு விட்டு விடுவது எவ்வளவோ தேவலை. ரஜினி அரசியலுக்கு வரவில்லை வரவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்களே …தெரியாமல் தான் கேட்கிறேன் 6 கோடி ஜனத்தொகையில் பாதியளவு இளைஞர்களைக் கொண்ட தமிழகத்தில் இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து எதையும் கிழிக்காமல் 60 வயது ஆள் வந்து தான் நாட்டை நட்டமாக நிறுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன காமெடியோ தெரியவில்லை. ரஜினி படத்தை பார்த்தமா விசில் அடிச்சமா கனவோட தூங்கி அடுத்தநாள் வேலைக்குப் போய் பொழப்ப பாத்து, நம்மளும் ஒரு நாள் ரஜினியப்போல உயரனும்னு மனசில நினைச்சு முன்னுக்கு வந்தமான்னு இல்லாம சமுகத்தின் சாதனையாளனை திட்டிக்கிட்டு இருக்கறது கையாலாகத தனத்தை தான்காண்பிக்கிறது நண்பர்களே!

  23. ஜெய்! //ரஜினிக்கு அரசியலில் இறங்க வடிவேலு அளவுக்குக்கூட சாமர்த்தியம் இல்லை// அவர் அரசியலில் இறங்கினாலும் இறங்காவிட்டாலும் உங்களைப் போன்றவர்கள் நோகாமல் ஏசி ரூமில் இருந்து கொண்டு விமர்சனம் எழுதி அறிவு ஜீவி என்று காட்டிக்கொள்வீர்கள் நண்பரே. ஆனால் அதற்காக அவரும் அவரது ரசிகர்களும் காலம் முழுவதும் காயப்படப்போவது பற்றி உங்களுக்கு என்ன கவலை. எத்தனை பேர் கொலையாவார்கள். எத்தனை வெட்டு குத்துக்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும். ரஜினி எத்தனை பேர் வாழ்வுக்கு பொருப்பேற்க வேண்டி இருக்கும். அப்படி ரசிகர்களை கொலைகளத்தில் பலிகடாவாக்காமல் ஏதோ பலபிஷேக ரேஞ்சோடு அன்றைய தின பரவசத்தோடு விட்டு விடுவது எவ்வளவோ தேவலை. ரஜினி அரசியலுக்கு வரவில்லை வரவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்களே …தெரியாமல் தான் கேட்கிறேன் 6 கோடி ஜனத்தொகையில் பாதியளவு இளைஞர்களைக் கொண்ட தமிழகத்தில் இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து எதையும் கிழிக்காமல் 60 வயது ஆள் வந்து தான் நாட்டை நட்டமாக நிறுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன காமெடியோ தெரியவில்லை. ரஜினி படத்தை பார்த்தமா விசில் அடிச்சமா கனவோட தூங்கி அடுத்தநாள் வேலைக்குப் போய் பொழப்ப பாத்து, நம்மளும் ஒரு நாள் ரஜினியப்போல உயரனும்னு மனசில நினைச்சு முன்னுக்கு வந்தமான்னு இல்லாம சமுகத்தின் சாதனையாளனை திட்டிக்கிட்டு இருக்கறது கையாலாகத தனத்தை தான்காண்பிக்கிறது நண்பர்களே!

  24. //இன்னொரு சந்தேகம். இவர்களே கூலிக்கு ஆள் வைத்து இப்படி எல்லாம் செய்கிறார்களோ என்னமோ// சந்தேகமே இல்லை அது தான் நிஜம். கவரேஜுக்காகவே இவர்கள் ரசிகர்களை சந்தித்து சில முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள் என்று கேள்வி! பின்ன டி வில காட்ட வேண்டாமா என்ன? சிவாஜி சந்திரமுகி வந்த சமயம் கூட இது போல முழங்கால் பாத யாத்திரை அலகு குத்துதல் என்று நடக்கவில்லையே! அப்பொழுதும் இதே ரஜினி தானே, அதே ரசிகர்கள் தானே! இது சன் டிவியின் வேலை.. ரஜினியை பலிகடாவாக்கி எழுதுவது கவன ஈர்ப்பு குறுக்கு புத்தியே தவிற வேறில்லை. அவ்வளவு ஏன், அதே ரஜினி தான் தியேட்டர்களில் அளவுக்கு அதிகமான விலையில் டிக்கெட் விற்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் 200 முதல் 300 வரை டிக்கெட் விற்கப்பட்டது. சுயநலம் தாண்டவாமாடும் போது ரஜினி சொல் மட்டும் எடுபடுமா என்ன? எல்லாம் பணம் தான் பாஸ்!

  25. //எல்லா நடிகரின் ரசிகர்களும் எல்லா தரப்பிலும் இருப்பார்கள் நாம் ஏன் சினிமா விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம். நம் மதத்தைப்பற்றிய எதாவது பரப்புரை இருந்தாலொழிய சினிமாவிற்கும் நம் தளத்திற்கும் என்ன தொடர்பு? . அதனை செய்ய வேண்டிய தளம் வேறு என்று நினைக்கிறேன்.// பாபு, சரியாகச் சொன்னீர்கள்

  26. ஒரு ஆன்மீக இணைய தளத்தில் இந்த சினிமா விஷயங்கள் எல்லாம் தேவையா.
    ரஜினி ஒரு தொழில் முறை தேர்ந்த நடிகர்.
    அவர் வாங்கும் பணத்திற்கு அவர் சிறப்பாக நடிப்பார். அவர் ஒரு நடிகர் தானே தவிர தன்னை யாரும் பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை.
    அவர் யாரையும் அலகு குத்தவோ, பால் குடம் எடுக்கவோ சொல்லவில்லை
    எப்படியும் இந்த படம் சன் டி வி க்கு ம் ரஜினிக்கும் நல்ல லாபம் தரும்.
    இன்னும் இரண்டு வருஷம் கழித்து இன்னும் ஒரு படம் நடிப்பார். அதுவும் நல்ல லாபம் தரும்

    தவறு என்பது
    தன்னை உணராமல் தலைவனை தேடி அலைபவர்கள் மீது தானே தவிர ரஜினி மீது அல்ல.

    தன்னை உணரும்போது தனக்குத்தானே தலைவன் ஆகலாம் என்று திருமூலர் சொன்னதை உணர முயல்வோம்.

    உனக்கும் எனக்கும் ஒரே தலைவன் அந்த இறைவன் மட்டுமே

  27. ///வெறிப்பிடித்த ரவுடிகளில் கைகளில் சிக்கியிருக்கும் இந்து மதத்தை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!///

    ஏன் சுற்றி வளைத்து பேசுகிறிர்கள். நேராக பேசியிருக்கலாமே. எல்லாம் வல்ல எஹோவாவே பரமபிதாவே உம்மை நம்பாதவர்களை நரகத்தில் தள்ளும் என்று சொல்லியிருந்திர்கள் என்றால் நேர்மையாக இருந்திருக்கும்.

  28. //அளவுக்கதிமாக ஹைப் செய்யப் பட்டிருக்கும் ரஜினி என்ற போலி பிம்பம் ரொம்ப சாதாரணமானது என்று உணர்த்தியிருக்கிறீர்கள் பிரசன்னா. மிக்க நன்றி! //

    நான் எங்கேயும் அப்படி சொல்லவில்லை. இப்படி புரிந்துகொள்ள உங்களால்தான் முடியும்.

    ரஜினி போலி பிம்பம் என்பது உங்கள் கற்பனை. நான் சொல்ல வருவது ரஜினியின் மீதான ஆதங்கம்.

    இரண்டாம் முறை எந்திரனுக்கு சென்று கொண்டிருக்கிறேன். இது திருமலைக்கு.

  29. Haran Prasanna,
    Kudos, Please take a printout of this article and send it to Rajni ; He is already lying in the feet of SUN Group and has lost all his senses.

    THIS IS THE OUTCOME OF 40YEARS OF DRAVIIAN RULE AND IT WHENEVR I CROSS ANY THEATRE ; A GET A ANXIOUS FEELING TOWARDS THE YOUTH WHO ARE STANDING IN QUEUES TO GET TICKETS ….

    NOW GOD ONLY CAN SAVE TAMILNADU AND THIS MADNESS IS NOT PREVALENT IN ANY OTHER PART OF OUR COUNTRY…

    KEEP IT UP

  30. கோவிலில் பாலாபிஷேகம் எதற்கு என்று பகுத்தறிவு வசனம் பேசிய திராவிட கொள்ளைகும்பலின் வழிதோன்றல்கள் தயாரித்த படத்திற்கு இத்தனை வழிபாடு வேண்டுதல் மொட்டை, அலகு குத்திகொள்ளல். தமிழனின் பகுத்தறிவு பறந்து விரிந்து விட்ட து தமிழர் தலைவர் ஆட்சியில். ஒரு படத்தை விளம்பரபடுத்துவது தவறல்ல ஆனால் ஓவர்டோஸ் என்றுமே ஆபத்துதான். சினிமாக் கொட்டகைகளிலும் டாஸ்மாக் கடைகளிலும் தமிழன் தொலைந்து போயாகிவிட்டது. இப்பொழுது வியாதி முற்றிவிட்டது. இனி சங்கு ஊத வேண்டியதுதான் பாக்கி. ஒருவேளைத் தேர்தலில் காட்சி மாறி ஆட்சி மாறினால் சன் குழுமத்தின் மாபியா தனம் முடிவுக்கு வரலாம். ஆனால் இலவசத்தின் மாயையில் விழுந்து கிடக்கும் தமிழன் விமோசனம் பெறுவது எப்படி என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

  31. @ ஹரன்ப்ரசன்ன, @ ராம்கி, @ ஜடாயு, @ அம்மாவாசை ஆதிரை, @ தமிழ் இந்து தளம்

    திரு ஹரன்ப்ரசன்னா அவர்களுக்கு,

    ஆனால், ஹிந்த்துத்வ வெறி உங்களைக் கண்களை மறைப்பதால், உங்கள் கருத்துக்கு 1% கூட ஒத்துவரவில்லை என்றால்கூட உடனே அதை மதானியுடன் இப்ராஹிமுடனும் ஒப்பு வைப்பது உங்கள் அரசியல்.

    கேள்விகள்:

    1. ஹிந்துத்வ வெறி என்று நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள்?

    2. தமிழ்நாட்டை ஆளும் மாஃபியா கும்பலின்மீது உள்ள கோபத்தைத் திருமலை காட்டுவதற்கும், இந்துத்துவத்திற்கும் என்ன சம்பந்தம்?

    3. பேராசிரியர் ஒருவரது கையை கேரளத்து முஸ்லீம்கள் வெட்டினர். அதைக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர் ஒருவர் கண்டித்தார். அவருக்கு இருந்தது இந்துத்துவ வெறியா?

    4. தமிழ் சினிமா உலகை ஆக்கிரமிப்புச் செய்யும் ஒரு குடும்பத்தின் தவறான ஆக்கிரமிப்பிற்கு ரஜினி போன்ற செல்வாக்குள்ளவர்களும் வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள். இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்:

    a. கருணாநிதியைத் திட்டிக் கட்டுரைகள் எழுதிவிட்டு, திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

    b. சினிமாத் துறையில் கருணாநிதி குடும்ப ஆக்கிரமிப்பைப் பற்றிக் கோபமாகப் பேசிவிட்டு, அவர்கள் எடுக்கும் படத்தை நான்கு முறை பார்ப்பேன் என்று சொல்ல வேண்டும்.

    //திருமலை சொல்கிறார், இந்தப் படத்தைப் புறக்கணிக்கவேண்டும் என. திமுக இன்றுதான் ரவுடித்தனம் செய்கிறதா? இதோடு கூட்டணி வைத்த பாஜகவைப் புறக்கணிக்க திருமலை சொல்வாரா? வேறு வழியின்றி பாஜகவை ஏற்க நினைப்பாரா?//

    செருப்பைக் காலில் போட்டுக் கொள்வதற்கும், தலையில் வைத்துக் கொள்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கிறதா இல்லையா?

    திமுகவோடு கூட்டணி வைத்த பாஜக, கூட்டணியில் இருந்த போதும் சரி. விலகியபோதும் சரி. என்றைக்காவது கருணாநிதியால், திராவிடக் கொள்கைகளால் நாட்டுக்கு நல்லது என்று சொல்லி இருக்கிறதா? என்றைக்காவது கருணாநிதி ஊழல் செய்ததில்லை என்று பாஜக சொல்லி இருக்கிறதா? என்றைக்காவது தனது கொள்கையை முற்றிலும் கைவிட்டுள்ளதா?

    கூட்டணியில் இருந்து விலகி கருணாநிதியின் குறைகளைப் பற்றி வெளிப்படையாக பாஜாகாவல் பேசமுடியும். கருணாநிதியிடம் இருந்து விலகி, அதை எதிர்த்து ரஜினியால் பேச முடியுமா?

    திரு ராம்கி அவர்களுக்கு,

    //எல்லா நடிகனும் கட்அவுட்டுக்கு பால் ஊற்றிக்கொண்டிருக்கிறான் என்பது எல்லா இலங்கைத் தமிழர்களும் புலிகள் ஆதரவாளர் என்று சொல்லிக்கொண்டிருப்பதைப் போல்…. //

    1. கட் அவுட்டுக்குப் பால் ஊற்றாத ரஜினி ரசிகனின் மனோநிலைக்கும், பால் ஊற்றும் ரஜினி ரசிகனின் மனோநிலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

    2. இந்துத்துவம் பேசும் இந்த தளத்தில்தான் ரஜினியின் சுயமரியாதையையும், தெய்வபக்தியையும் பாராட்டிக் கட்டுரை வந்தது. அவர் தனது மகள் திருமணத்தை சுயமரியாதையுடன் நடத்தியதை அந்தக் கட்டுரை பாராட்டி இருந்தது. அது ஏன் உங்களுக்கு இந்துத்துவமாகத் தெரியவில்லை? இந்தக் கட்டுரைக்குக் கமெண்ட் போட்டவர்கள் ரஜினியை விமர்சிப்பது இந்துத்துவமாக ஏன் தெரிகிறது?

    3. ரஜினி என்ற தனிமனிதருக்கு வலிமையையும், ஊக்கத்தையும் அளித்தது இந்த இந்து மதம்தான். அதை ரஜினி தனது பேச்சாலும், நடவடிக்கைகளாலும் எப்போதும் ஒத்துக் கொள்கிறார். பாராட்டுகிறார். ரஜினி பாராட்டும் இந்துத்துவத்தை நீங்கள் இகழலாமா?

    4. இந்துத்துவத்தை ஒட்டுமொத்த குத்தகை எடுத்தவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நினைக்கிறீர்களா?

    5. என்னைப் பெற்ற தாயைவிட, மானுடத்திற்கு அமிர்தமாக இருக்கும் இந்துத்துவத்தைவிட எனக்கு ரஜினிதான் பெரிது என்று நீங்கள் பேசுவதை ரஜினி கேட்டால் அவர் சந்தோஷப்படுவாரா, வேதனைப்படுவாரா?

    என்னை ஒரு இந்துத்துவவாதியாகத்தான் நான் எண்ணுகிறேன். அந்த எண்ணத்தில் இருந்து உங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்.

    திரு ஜடாயு அவர்களே,

    //…அளவுக்கதிமாக ஹைப் செய்யப் பட்டிருக்கும் ரஜினி என்ற போலி பிம்பம் ரொம்ப சாதாரணமானது …

    1. ரஜினி எந்த மேடையில் பேசினாலும் இந்து தத்துவங்களைப் பற்றிப் பேசுகிறார். புராணங்களின் சிறப்பைப் பேசுகிறார். தைரியமாக நெற்றியில் திருநீறு அணிந்து பொதுவில் வருகிறார். எந்தக் கடவுளையும் இழிவாகப் பேசுவதில்லை. இந்த நிலையில் இருந்து அவர் என்றும் மாறியதும் இல்லை.

    இதைப் பார்த்து இந்து மதம் அவ்வளவு மோசமானது இல்லை என்ற புரிதலுக்குத் தமிழர்கள் வந்திருக்கிறார்கள். திராவிட இயக்க எதேச்சதிகாரக் காலத்தில் இருக்கும் தமிழர்கள் இவர்கள்.

    இதே ரஜினி இந்து மதத்தை இழித்தும், பழித்தும் பேசி இருந்தால் இந்த ரசிகர் கூட்டம் எப்படி நடந்துகொண்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    அவருக்கு எது லாபமாக இருந்திருக்கும்? இந்து மதத்தை இழித்தும், பழித்தும் பேசுவதா அல்லது பாராட்டிப் பேசுவதா?

    இந்து மதத்தின் சிறப்புகளை, இந்துப் புராணங்களின் சிறப்புகளை ரஜினி பாராட்டிப் பேசுவதால் அவருக்கு நட்டம்தான். ஆனாலும், அவர் பாராட்டித்தான் பேசுகிறார்.

    எதிர்மறையாகப் பேசுவதால், அளவுகடந்த எதிர்பார்ப்புகளால், தனிமனித சக்தியின் குறைபாடுகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதால் ஏதேனும் நன்மை நடக்கும் என்று நீங்கள் எண்ணுபவர் இல்லை. இங்குதான் கம்யூனிஸ காப்பி-பேஸ்ட் ஜீவிகளும், உங்களைப் போன்ற தர்ம-ஜீவிகளும் வேறுபடுகிறீர்கள்.

    திரு அம்மாவாசை ஆதிரை அவர்களே,

    திராவிட இயக்க ஆதிக்கத்தின் காரணமாக இந்து மதத்தின் மீது குறைகளை மட்டுமே கேள்விப்பட்ட தமிழர்களுக்கு, ரஜினியின் செயல்கள் பண்பாடாகத் தெரிவது இயல்பானதுதானே. இதில் என்ன தவறு இருக்கிறது?

    ரோட்டோர மேடைகளில் கருணாநிதியைத் திட்டுபவர்கள் சொல்வதைக் கேட்பவர்களைவிட, ரஜினி சொல்வதைக் கேட்பவர்கள் அதிகம். அதனால், ரோட்டோர பேச்சாளர்களை, சிறுபத்திரிக்கை எழுத்தாளர்களை, தமிழ்நாட்டில் 1 சதவீத மக்கள்கூட படிக்காத வலையுலக எழுத்தாளர்களை திருக்குவளை தீயசக்தி ஒன்றும் செய்யாது. ஆனால், ரஜினியை?

    ஒரு ஜெயலலிதாவை ரஜினியால் தீயசக்தி என்று விமர்சிக்க முடியும். அப்புறமாக தெய்வம் என்றும் அவரால் பேச முடியும். ஆனால், கருணாநிதியை அவரால் ஒருமுறைகூட விமர்சிக்க முடியாது. அவர் பிள்ளை குட்டிக்காரர். அவரால் முடியாதது அது. அவரால் என்ன முடிந்ததோ அதை அவர் செய்கிறார்.

    மக்களை நோக்கி யார் போகிறார்களோ, அவர்களை நோக்கித்தான் மக்கள் போவார்கள்.

    ரஜினி தமிழர்களை நோக்கிப் போகிறார். அவர்களைக் கவரப் பேசுகிறார். அத்தோடு இந்து மதத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்லுகிறார். அவர் சொல்லுகிறார் என்பதற்காக ஓஷோவையும், பகவத் கீதையையும் அவரது ரசிகர்கள் படிக்க முன்வரக் கூடும். அவரால் முடிந்தது அவ்வளவுதான். அதற்கும் அதிகமாக அவரிடம் நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

    கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு நடந்தபோது, ரஜினியின் முதல் ஸ்டேட்மெண்ட் என்ன? “இசுலாமிய தீவிரவாதிகள்” என்ற வார்த்தையை அந்த ஸ்டேட்மெண்டில் அவர் பயன்படுத்தினார். அந்த வார்த்தையைத் தமிழ்நாட்டில் முதன்முதலில் பயன்படுத்திய பிரபலம் அவர்தான். அந்த ஸ்டேட்மெண்டுக்குப் பின் அவரைத் தேடிப் போனது யார்?

    அவரை முதலில் தேடிப் போய் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு பற்றித் தவறான தகவல்களைத் தந்து, அவரைக் கட்டிப் பிடித்து அழுது, மனதை மாற்றி இந்துக்கள்தான் முதலில் பிரச்சினையைத் தூண்டினர் என்று நம்ப வைத்தார்கள் ஜிகாதிகள். அதற்குப் பின்னரே, அவர் தவறான புரிதலில் அப்படிச் சொன்னார். அதற்குப் பின்னர்தான், உண்மையான தகவல்களை அவர் காதுக்கு இந்துக்கள் கொண்டு சென்றார்கள். ஏன் முன்பே அவர்கள் அதைச் செய்ய வில்லை?

    அப்போது அவர் என்ன செய்ய முடியும்? தான் இரண்டாவதாகச் சொன்ன ஸ்டேட்மெண்ட் தப்பு. முதல் ஸ்டேட்மெண்ட்தான் சரி என்றா சொல்ல முடியும்? இப்படி மாறி மாறிப் பேசினால் என் ரசிகர்கள், என்னை நம்புபவர்கள் என்ன நினைப்பார்கள் என்றுதான் அவர் எண்ணுவார். இதைப் போன்ற விஷயங்களில் இனி எந்த ஸ்டேட்மெண்டும் விடக்கூடாது, அமைதி காப்பதுதான் சரி என்றுதான் நினைப்பார்.

    இந்தக் குழப்பத்திற்கு என்ன காரணம்? ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாம் என்ற ஆதிக்க வெறியைப் பற்றித் தெளிவாகச் சொல்ல எந்த மீடியாவும் இந்துக்களுக்கு இல்லை என்பதுதான் காரணம். மீடியாவின் சக்தியை துச்சமாக இப்போதும் எண்ணுவதுதான் காரணம்.

    பாரத கண்டம் முழுக்க பாதம் பதித்த சங்கரரிடம் இருந்தும், தமிழகமெங்கும் கோயில் கோயிலாகச் சென்ற நாயன்மார்களிடம் இருந்தும், வீடு தோறும் சென்று தட்டி எழுப்பிய ஆண்டாளிடம் இருந்தும் இப்போதைய இந்துத்துவர்கள் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. பிரச்சாரத்தை ஏளனம் செய்வதன் மூலம், ஒதுக்குவதன் மூலம், சங்கரரையும், புத்தரையும், நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் நாம் அவமதிக்கிறோம்.

    இதனால் உண்மை என்னவென்பது ஊருக்கும் தெரிவதில்லை. இந்தியாவில் நடப்பது என்ன என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதில் ரஜினி மட்டும் என்ன விதிவிலக்கு?

    ரஜினி யார் என்று கேட்டால் சாதாரண தமிழன் என்ன சொல்லுவான்? பெரிய ஸ்டார். அப்புறம்? ஆன்மீகவாதி.

    இந்துத்துவம் என்றால் என்ன என்று கேட்டால் ஒரு சாதாரண தமிழன் என்ன சொல்லுவான்? மதவெறி பிடித்தவர்கள் என்றுதான் சொல்லுவான்.

    அவனது அந்தப் புரிதலுக்கு என்ன காரணம்? தவறு யார் மீது? ரஜினி மீதா? எம்ஜியார் மீதா? பாகவதர் மீதா? பியூ சின்னப்பா மீதா?

    விஜய்காந்த்கூட தனக்கென்று ஒரு சேனல் ஆரம்பித்து நடத்துகிறார். பாஜாக எத்தனை சேனல்கள் நடத்துகிறது?

    கிறுத்துவர்களும், முஸ்லீம்களும், கம்யூனிஸ்டுகளும் நடத்த விடமாட்டார்கள் என்று நீங்கள் பதில் சொன்னால், ரஜினி மட்டும் இந்த ஆதிக்க சக்திகளை மீறி நடக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?

    இந்தியாவில் பக்தி இயக்கம் ஆரம்பித்தது தமிழகத்தில்தான். தமிழனின் மனநிலையே பக்தி மனநிலைதான். இந்த பக்தி மனோநிலையை வளர்க்க இந்து இயக்கங்கள் என்ன செய்தன?

    நவீன இளைஞர்களுக்குப் புரியும் வகையில் நேர்மறையாக இந்து மதத்தைப் பற்றி பரப்ப எதுவும் செய்யவில்லை. இந்தச் சூழலில், பக்தி மன நிலையில் உள்ள தமிழர்களின் மன-வெற்றிடத்தை திரைப்படம் என்ற சாதனம் நிரப்பியது.

    இந்துத்துவத்தின் சிறப்பை சாதாரண தமிழருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு ஆவண செய்ய வேண்டும்.

    இதையெல்லாம் அவர்களாகத் தெரிந்துகொண்டு அவர்களாகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

    அப்படியே அவர்களாகத் தெரிந்துகொண்டு, தங்களது புரிதல்களைப் பகிர்ந்துகொள்பவர்களில் ட்ரையத்லான் வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் பேச வேண்டும் என்று சொல்லக் கூடாது.

    கிறுத்துவ செயல்பாடுகளால், பண்பாட்டிற்கான பால்வாடிகள்கூட தமிழகத்தில் இல்லை. நிலமை இப்படி இருக்க, பண்பாட்டுத் துறையில் முனைவர்களை மட்டும்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லுவது எப்படி சாத்தியமாகும்?

    மலை முகம்மதுவை நோக்கி வராவிட்டால், முகம்மதுகள் மலையை நோக்கிப் போக வேண்டும் என்றார் விவேகானந்தர்.

    இந்து முன்னணியின் தலைவரான கிருபானந்த வாரியார் மக்களை நோக்கிப் போனார். அவருக்குப் பின் மக்களும் போனார்கள். கிருபானந்த வாரியாருக்குப் பின் இந்து மதத்தின் சிறப்பைச் சொல்ல யார் இருக்கிறார்கள்? இந்து முன்னணியின் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒன்றாக கிருபானந்த வாரியார் திகழ்கிறார். அவருக்குப் பின்?

    அவருக்குப் பின் இந்துத்துவத்தை இகழ்கிற சுகம்களும், மடிப்பிச்சை கேட்கிறேன் எனக்கு உன் டிவி சேனலில் பேச சான்ஸ் கொடு என்று பேசுகிற துரும்புகளும்தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் மக்களை நோக்கிப் போகிறார்கள். எனவே மக்களும் அவர்களை நோக்கிப் போயாக வேண்டியுள்ளது.

    இவர்களோடு ஒப்பிடுகையில், ரஜினி கோடி மடங்கு சிறந்தவர். ரஜினிக்காக ராம்கி அலகு குத்திக் கொண்டு ஆடுவது தப்பே இல்லை. கட் அவுட்டுக்குப் பாலபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதெல்லாம் நன்றியின் வெளிப்பாடு.

    நீரளவே நீராம்பலின் உயரம். நீரில்லாத இடத்தை பீர்தான் நிரப்பும்.

    தமிழ் இந்து தளத்தினருக்கு,

    “%^&&*” என்று போட்டுள்ள, […] அம்மாவாசை ஆதிரை கமெண்டுகளையும், Sarang என்பவரின் கமெண்டையும் தயை செய்து நீக்கிவிடுங்கள். ரஜினி ராம்கி சுட்டிக் காட்டுவதுபோல இவை நாகரீகமாக இல்லை. கேவலமாக இருக்கிறது.

    [Edited and published]

  32. ஒரே வாந்தியாக இருக்கிறது தளம். கட்டுரையும், கருத்தும்.

    தமிழ் இந்துவுக்கு ரஜியை பற்றிய விமர்சனம் எதற்கு.

  33. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ரஜினி படம் வருகிறது. அப்போது ஒருநாள் அவருடைய ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இதையேன் நாம் பெரிதுபடுத்துகிறோம் எனத்தெரியவில்லை. பாலாபிஷேகம் போன்ற செய்கைகளெல்லாம் ஒரு விளையாட்டு விழாவில் தொடக்கத்தில் நடக்கும் வானவேடிக்கை போன்றது. அது அந்த ரசிகர்களுக்கு ஒரு இன்பத்தை அளிக்கிறது. நாம் தான் மூளை வீங்கிபோய் இத்தகைய இன்பங்களை இழந்துவிட்டோம். அவர்களாவது அனுபவிக்கட்டுமே. அபிஷேகம் இறைவனுக்கு மட்டும் உரியதல்ல. விழா நாயகர்களுக்கு விழாக்களுக்கு முன்னர் நடத்தப்படும் ஒரு சடங்கு. பட்டாபிஷேகத்திற்கு முன்னர் மன்னர்களுக்கும், திருமணத்திற்கு முன்னர் மணமக்களுக்கும் இதை செய்வதை பார்த்திருக்கிறேன். ஆகவே இந்த மாதிரி செயல்களை பார்த்துவிட்டு சிரித்துவிட்டு அலட்சியபடுத்திவிடுதலே சரியாகும்.
    த.துரைவேல்.

  34. //வெறிப்பிடித்த ரவுடிகளில் கைகளில் சிக்கியிருக்கும் இந்து மதத்தை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!//

    ஆண்டவா, ராம்கியா இப்படி பேசுவது..அவருக்கு நல்ல புத்தியை ரஜினி மூலமாக தரவேண்டுகிறேன்

  35. ராம்கி என்ற பெயரில் இன்னொருவரும் எழுதுவதால் என்னை Ramki என்றே அடையாளம் காண வேண்டுகிறேன். நான் இப்போது தான் இங்கு இணைகிறேன்.
    மாறன்கள் பற்றி எழுதுவது முற்றிலும் சரியானது. கேளிக்கை வரி வருவாய் இழப்புப் பற்றி முன்னரே வேறொரு விவாதத்தில் சொல்லியிருந்தேன். இது ஒரு மிகப் பெரிய சதி. யார் சரி செய்வார்களேனத் தெரியவில்லை.
    ரஜனி பற்றி எழுதியதில் தவறேதுமில்லை. அவர் ஜெயலலிதா அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தது தற்சார்புக் காரணங்களுக்காகத் தான். இந்து இயக்கங்கள்தான் அவர் மீது சற்று மேலதிகமான எதிர்பார்ப்புக் கொண்டிருந்தன.
    அவரைப் புறந்தள்ள சரியான தருணம்.

  36. இந்த கட்டுரையே ரஜினி ரசிகர்களை இந்து மதத்தில் வெறுப்பை துண்டும் சூழ்ச்சி செயலே.5% தமிழர்களுக்கு தெரிந்த ராகவேந்திரரை சேரி தமிழன் உள்பட ஒட்டுமொத்த தமிழனுக்கும் அடையளைபடுத்தியது ரஜனி மட்டுமே.திராவிட சாக்கடையில் இருந்து பெருந்தொகையான இளையர்களை ஆன்மிகத்துக்கு கொண்டுவந்த பெருமை ரஜனியே சாரும்.ஏனைய நடிகர்களை காட்டிலும் இந்து மத பற்றுள்ளவர்.
    அவருடைய வளர்ச்சி இந்து மத வளர்ச்சிலும் பங்குண்டு .இதே நேரம் ஜோசப் விஜய் இன் வளர்ச்சி எதிர்காலத்தில் கிருஸ்தவ மத வளர்சியகதான் அமையும் (ராஜசேகர ரெட்டி வளர்ச்சி போல் )
    இது போன்ற கட்டுரையை வெளியிடுவதால் கூத்தாடிகளுக்கு தான் சந்தோசம்.எல்லா இந்துக்களும் படித்தவர்களோ அல்லது நீங்கள் சொல்வது போல் சிந்திப்பவர்களோ இல்லை.

  37. தமிழ் ஹிந்து வில் வரும் தத்துவங்கள், கருத்துகள், புரிதல்கள், விளக்கங்கள் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பக்குவப்பட்டதாக இருக்கும்… இந்த கட்டுரை அதிர்ச்சி தரும் விதி விலக்கு.

    தி மு க குடும்ப ஆதிக்கம் பற்றி யாருக்கும் மாற்று கருத்து இங்கு இல்லை. ஆனால், அதற்கான எதிர்வினையை யாரிடம் எதிர்பார்கிறீர்கள்?

  38. ரஜினி நல்ல மனிதர், ஹிந்து சமயத்தில் நாட்டம் உள்ளவர் என்பது தெரிகிறது
    அப்படிப்பட்டவர் ஏன் இந்த திமுக-மாறன் கும்பலின் அராஜகம்- பெரும் பண – ஹிந்து விரோத ஆதிக்கத்துக்கு துணை போக வேண்டும்?
    இன்று இந்த சக்திகள் தமிழ் நாட்டை கிட்டத்தட்ட பிரெஞ்சு புரட்சி வருவதற்கு முன் பிரான்சு இருந்த நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    மிக சாதாரணமாக இருந்த ஓர் குடும்பம்
    இன்று இந்தியாவின் பெரும் பணக்காரக் குடும்பமாக ஆகிவிட்டது
    அரசியல் தொடர்பில்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு பணம் சேர்ந்திருக்குமா என்பது மக்களின் மனதில் உள்ள கேள்வி
    ‘சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பார்ப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்ற பழமொழி போல் அரசியலில் உள்ளவர்கள் இருக்க வேண்டும்

    ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று சொன்னவர்கள் இன்று தமிழகத்தை பணக்கார்ரர்கள் ஆளும் அமைப்பான
    க்கு இட்டுச் செல்கின்றனர்
    இது நல்லதல்ல.
    ரஜினி போன்றவர்கள் இதற்குத் துணை போகக் கூடாது
    தமிழ் இளைஞர்கள் சினிமா என்று நினைத்து இந்த அக்கிரமங்களுக்கு ஆதரவு தரக் கூடாது

  39. //இதே நேரம் ஜோசப் விஜய் இன் வளர்ச்சி எதிர்காலத்தில் கிருஸ்தவ மத வளர்சியகதான் அமையும் (ராஜசேகர ரெட்டி வளர்ச்சி போல் )// மிகச்சரியான கருத்து

  40. //இந்து முன்னணியின் தலைவரான கிருபானந்த வாரியார் மக்களை நோக்கிப் போனார். அவருக்குப் பின் மக்களும் போனார்கள். கிருபானந்த வாரியாருக்குப் பின் இந்து மதத்தின் சிறப்பைச் சொல்ல யார் இருக்கிறார்கள்? இந்து முன்னணியின் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒன்றாக கிருபானந்த வாரியார் திகழ்கிறார். அவருக்குப் பின்?

    அவருக்குப் பின் இந்துத்துவத்தை இகழ்கிற சுகம்களும், மடிப்பிச்சை கேட்கிறேன் எனக்கு உன் டிவி சேனலில் பேச சான்ஸ் கொடு என்று பேசுகிற துரும்புகளும்தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் மக்களை நோக்கிப் போகிறார்கள். எனவே மக்களும் அவர்களை நோக்கிப் போயாக வேண்டியுள்ளது.

    இவர்களோடு ஒப்பிடுகையில், ரஜினி கோடி மடங்கு சிறந்தவர்// உண்மை

  41. மூர்க்கத்தனமான, தளத்திற்கு தேவையற்ற விமர்சனக் கட்டுரை. தனிமனித்த் தாக்குதல்களே ஹ.பி ஐயாவின் பதில்களாக தொடர்ந்து வருவது வருத்தமானது. இப்படியே சாரு ஸ்டைலில் தமிழ்ஹிந்துவில் இதுபோல இவர் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தால் வெகுவிரைவில் இழுத்து மூடிவிட்டுப்போகவேண்டியதுதான். ஹபியின் இந்த சேவைக்கு அடுத்த கலைஞர் விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

    எந்த கருத்துரையும் எழுதுபவரைச்சார்ந்தே இருக்கிறது. இதில் தான் எழுதுவது நடுநிலைமை பிறத்தியார் சொல்வதெல்லாம் வெறித்தனம் என்று சொல்வது எத்தனை ஆணவமானது.
    காலத்தின் போக்கில் எல்லாமே விளம்பரமும், வியாபாரமுமாகப் போன பின் ரஜினியை என்னவோ புத்தபிட்சுமாதிரி நடக்க எதிர்பார்ப்பது அநாகரீகம்.

    என்னவோ சிலர் மட்டும் கெட்ட ரோபோ வெறியர்களாகவும் இவர் நல்ல ரோபோ பிரியராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், வாசகர்களிடம் எழும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல எப்போதுமே ஹபி மறுத்து தூற்றி பதில் சொன்னால் எப்படி! இவர் கண்டிக்கும் அந்த வியாபார போதைக்கு தெரிந்தோ தெரியாமலோ தீனிபோட்டுவிட்டு இப்படி குமட்டினால் எப்படி!

    நன்றி

    ( Edited and Published)

  42. ரஜினி இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூடப் பெறவில்லை என்று மாறனே தெரிவித்தார்.

    இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக ஒரு படத்தைத் தர வேண்டும், மற்ற நடிகர்களால் முடியவில்லை, ஷங்கரின் கனவு நனவாக வேண்டும் என்பதாலேதான் இதற்க்கு ரஜினி ஒப்புக் கொண்டார்.

    ரஜினி என்றும் காசு கொடுத்து மக்களையும் கூட்டுவதில்லை, கடவுட் வைக்கவும் சொல்வதில்லை.. என் பலத்தைக் காட்டுகிறேன் ரசிகர்களே வாருங்கள் என்று அறைகூவலும் விடுப்பதில்லை..

    தமிழ் நாட்டு ரசிகர்கள் மட்டும் இது போல் செய்வது போல் திரிக்கிறீர்கள்….கேரளா, கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர, அமெரிக்க, லண்டன், என்று பல ஊர்களில் படித்த , நல்ல நிலைமையில் உள்ள ரசிகர்களும் இதை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.. தங்கள் அடிமனத்தில் உள்ள சந்தோஷத்திற்கும், சுதந்திரமாக தன் நிலை விடுத்து கீழிறங்கி கொண்டாடும் ஆசைகளுக்கு இது ஒரு வடிகாலாக அமைகிறது..

    ஒரு வீட்டில் ஒரு விழாவோ, விருந்தோ நடக்கும்போது, அங்கு உள்ளவர்கள் அந்த மண்டபத்தில் செய்யும் காரியங்களுக்கும், அவர்களின் ஆட்டம் பாட்டங்களுக்கும் எப்படி தடை போட முடியாதோ அது போலத்தான் முதல் நாள் திரையரங்கங்களில் நடக்கும் விஷயங்களும்.

    உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் போகாதீர்கள்…அதை விடுத்து ஒருநாள் கூத்தை பெரிது படுத்தாதீர்கள்… அப்படி என்றால் நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களையும் மற்ற கொண்டாட்டங்களையும் கூட கண்டிக்கத் தான் வேண்டும்.

    வெளிநாட்டில் ஒரு ஊரில் தக்காளியை அடித்து கொண்டாடுவார்களாம்,…

    இன்னொரு ஊரில் சேற்றில் விழுந்து கொண்டாடுவார்களாம்..

    ஹோலியில் வண்ணங்களைப் பூசி கொண்டாடுவார்களாம்…

    இவையெல்லாம் எந்த கணக்கில் சேர்த்தி ?

    ஒரு நாள்…நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் வந்த ஒரு நாள்… அது அப்படித்தான் இருக்கும்.. அடுத்த நாள் அவரவர் வேலையைப் பார்க்கப் போவார்கள்..

    அன்புடன்

    ஈ. ரா

  43. //அப்படி என்றால் நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களையும் மற்ற கொண்டாட்டங்களையும் கூட கண்டிக்கத் தான் வேண்டும்.

    வெளிநாட்டில் ஒரு ஊரில் தக்காளியை அடித்து கொண்டாடுவார்களாம்,…

    இன்னொரு ஊரில் சேற்றில் விழுந்து கொண்டாடுவார்களாம்..

    ஹோலியில் வண்ணங்களைப் பூசி கொண்டாடுவார்களாம்…

    இவையெல்லாம் எந்த கணக்கில் சேர்த்தி //

    super.

  44. பழிக்கவும் ரஜினி….
    பிழைக்கவும் ரஜினி….

    இது தான் அன்றும், இன்றும் என்றும் பத்திரிக்கைகள் செய்து வருவது…

    இதை நீங்களும் செய்வது தான் காமெடி….

  45. //ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது?//

    இப்படியெல்லாம் யோசித்து நீங்கள் எழுதவில்லை என்றால், நாட்டில் என்ன விலைவாசி குறைந்தா விட போகிறது….

    எழுத்தை கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள்ளுங்கள்…

    உதயநிதி தயாரித்த “மன்மத அம்பு”ன்னு ஒரு படம் வருதாம்…

  46. தினமலர் ஆசிரியர் அவர்களே,

    ஒரு படத்தை பற்றி வரும் விமர்சனத்தில் நீங்கள் ஏன் மத மற்றும் ஜாதி வெறியை கூட்டி எழுதுகிறிர்கள். இது தின மலருக்கு நல்லதோ?

  47. //எழுத்தை கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள்ளுங்கள்…
    உதயநிதி தயாரித்த “மன்மத அம்பு”ன்னு ஒரு படம் வருதாம்…// அப்போ என்ன எழுதறாங்கன்னு பாப்போம்

  48. I was surprised to see comments particulary from one Mr Thirumal, he has blasted Rajinifans as if they have done some anti Hindu activities.. It is the activity to be condenmed but this is not the forum to say so… …..it is all individual opinion .. many of Rajini fans are having soft corner for hindutva policies let us not spoil that by writing these type of craps….

  49. திரு ஹரன் பிரசன்னா அவர்களின் எந்திரன் விமரிசனம் இங்கே:
    https://www.tamilpaper.net/?p=258

    இரண்டு கட்டுரைகளிலும் பல கருத்து மாறுதல்கள்.

  50. இந்நிலைமைக்குக் காரணமாக யாரை நாம் சுட்டிக் காட்ட முடியும்? சிவாஜி ராவோ எதுவோ, என்ற பெயர்கொண்டவரை, திரையுலகுக்குக் கொண்டு வந்த இந்து சமூக விரோதி கே.பாலச்சந்தர் என்பவரைத்தான். ஒரு விழுக்காடு குறையை, பூதாகரமாக , நூறு விழுக்காடாகக் காட்டுவதற்க்காக, திரைப்பட புகைப்படக் கருவியை பயன்படுத்துவதற்காக, கேவலமான சொந்தச சிந்தனைகளை, சமுதாயமே சிந்திப்பது போல, எழுதிய கே. பாலச்சந்தரைத்தான். அவர் விதைத்த விஷ வித்து தற்போது பெரும் மரமாக ஆகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட மரத்தின் கீழ், அடாவடித்தனம் முதல் ஆன்மிகம் வரை அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும். கே. பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கானவராக இருந்து, சிவாஜி ராவ், கமால் ஹாசன் என்கிற இரண்டு பிள்ளைகளைப் பெற்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர், இன்று, அவரைச் சார்ந்தவர்களிடம், என்ன கூறிக்கொண்டிருப்பார்? இரண்டு பிள்ளைகளைப் பெற்றேன்! இரண்டும் தறு தலைகளாக இருக்கின்றன, எல்லாம் நான் செய்த பாபம் என்று தன “சொந்தத்” தலையில் அடித்துக்கொண்டிருப்பார். ஆனால் சிந்தனை ஒழுங்கற்ற அவர், “மக்கள் தலையில் , சமுதாயத்தின் தலையில்” அடி விழ வைத்தார். .

  51. மேலும், நடிகர் திலகம் சிவாஜிக்குப் பின், சிறிது சிறிதாய், தமிழ்த் திரையுலகம், பாலிவுட் எனக் கூறப்படும் மும்பை மாடலில், ஹவாலா பணம், கறுப்புப் பணம், கொள்ளையடித்த பணம், போதைப் பொருள் வியாபாரப் பணம், சொந்த அச்சுக்கூட போலிப்பணம், பணயப்பணம் போன்றவற்றால், தாவுது இப்ராஹீம் போன்ற சர்வதேச தாதாக்களால், ரஜினி காந்த், கமால் ஹாசன் போன்ற, எதற்கும் தயாரான, நடிகர்கள் , பாலச்சண்டர்களால் அறிமுகப் படுத்தப்பட்டு, பல கோடி ரூபாய்களை, தாதாக்களுக்காகப் பதுக்கி வைத்துக்கொண்டு, படகு போன்ற வீடுகளில், வாழ்ந்து கொண்டு, பல வகையான சொத்துக்களை குவித்துக்கொண்டு, எப்பொழுது அந்த தாதாக்கள் கொடுப்பார்களோ வாங்கிக்கொண்டு, எப்போது கேட்பார்களோ, கொடுத்துக்கொண்டு, ரசிகர் மன்றங்களை ஏற்படுத்திக்கொண்டு, வோடாத படங்களின் டிக்கெட்டுக்களையும், ரசிகர்கள் தலைகளில் கட்டிக்கொண்டு, கஞ்சாச் செடிகளை வளர்த்துப் பராமரித்து, விற்றுப் பணம் குவிப்பதற்காக, இமயமலைக்கு, தியானம் செய்யச் செல்கிறேன் என்று கூறிக்கொண்டு, புகழ் கொண்டார்கள். ஆனால், இவ்வலையில் விழுந்த, ஸ்ரீதேவி, மீனா போன்றவர்கள், தாதாக்களின் மற்ற விளையாட்டுக்களான, உடல் சுக விளையாட்டு மற்றும், திடீர் பணப்பறிப்பு போன்ற கொடு நடவடிக்கைகளுக்கு பயந்து, போனி கபூர், அமிதாப் பச்சன் போன்ற காப்பாளர்களை அண்டி, திரையுலகையே விட்டுப் போய்விட்டனர். ரஜினிகாந்த் போன்றோர் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டனர். இப்படிப்பட்ட, தாதா தயவில், திக்கு முக்காடியத் திரையுலகை, ஒரு தொழில் முனைப்பாக ஆக்கி, காப்பாற்ற, வங்கிக்கடன் பெற, பிஜேபி வகை செய்தது. ஆனால், கருணாநிதியிடம் பிஜேபி மாட்டிக்கொண்டது, சோனியா காந்தியினால் அங்கீகரிக்கப்பட்டு, பிரதமரான, வாஜபெயியினால் ஏற்பட்டது. எனவே, ரஜினி காந்த் போன்றவர்கள் தாதாக்களிடம் மாட்டிக்கொண்டு, பேய்க்கு வாழ்க்கைப்பட்டு, சமுதாயத்தைச் சினாபின்னமாக்குபவர்கள். அவர்களின் இந்து மத பக்தியால், இந்து மதம் இங்கு இல்லை. இன்னும், இன்றும், எவரேனும், இந்து மதம், இவர்களைக்கொண்டோ அவர்களைக்கொண்டோ இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தால், மாற்றிக்கொள்ளுங்கள், இந்துக் கடவுள்களின் பலத்தால் தான் இந்து மதம் தழைத்துக்கொண்டிருக்கிறதே தவிர வேறல்ல. இந்து மதக் கோட்பாடுகளைப் பின்பற்றினால், மொத்த மற்றும் கடைசி அழிவிலும், அழியா ஆனந்தப்பெற்றினை அடையலாம். இல்லை என்றால், என்றாகிலும், மண்ணோடு மண்ணாக மறைந்து, மீண்டும் தோன்றி, எண்ணற்ற பிறவிகளை அடைந்து, உழன்று கொண்டிருக்கலாம்.

  52. //ஆனால், ஹிந்த்துத்வ வெறி உங்களைக் கண்களை மறைப்பதால், உங்கள் கருத்துக்கு 1% கூட ஒத்துவரவில்லை என்றால்கூட உடனே அதை மதானியுடன் இப்ராஹிமுடனும் ஒப்பு வைப்பது உங்கள் அரசியல். //

    இங்கு எதற்கு தொடர்பில்லாமல் ஹிந்துத்துவ வெறி என்பது பேசப்படுகிறது? இவ்வாறு ஒருவரின் கருத்துக்கு சாயம் பூசுவது அடாவடியான செயல். கருத்துக்கு கருத்தால் பதில் சொல்லாமல் இப்படிக் கூறுவது சரியில்லை.

    இக்கட்டுரை தமிழ்ஹிந்துவுக்கு பயனற்ற ஒரு கட்டுரை.

  53. //வெறிப்பிடித்த ரவுடிகளில் கைகளில் சிக்கியிருக்கும் இந்து மதத்தை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!//

    ராம்கி, என்ன இப்படி போகிற போக்கில் புழுதி வாரி தூற்றுகிறீர்கள்? முடிந்தால் இது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். நாங்களும் இந்து மத ரவுடிகளைப் பற்றி தெரிந்து கொள்கிறோம்.

  54. @Ram, Ramki, Raja,
    உங்கள் கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையே. ஆனாலும் ராம்கி கொஞ்சம் தீவிரமாக ஆவேசப்பட்டுவிட்டார். நானும் ரஜினிமேல் மதிப்புக் கொண்டவன்தான். இருந்தாலும் அவர் மேல் நான் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மைதானே.

    @ராம்கி,
    நான் ஒன்றும் ஷேர்களை வைத்திருக்கவும் இல்லை. அப்படி வைத்திருந்தாலும் நான் ஒன்றும் தமிழ் ரசிகர்களை வைத்துச் சம்பாத்தித்து விட்டு அந்தப் பணத்தில் கர்நாடகாவில் தொழில்சாலை அமைக்கவில்லை.

    ரஜினி தேர்தலில் வந்து 96m வருடம் ஜெயிப்பார் என நப்பாசைப்பட்டேன். ஆனால் நடந்ததோ உளறல் மட்டுமே. அந்த பெருமூச்சைத்தான் கருத்தாகப் போட்டேன்.

  55. 96 ல் ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து குரல் கொடுத்து படாடோபம் காட்டிய ரஜினி தற்போதைய தி மு க ஆட்சி பற்றி வாய் திறக்க மறுப்பதேன்? அப்போது போட்டது வேஷமா? இப்போது போடுவதா? ராசாவின் ஊழல், நரேஷ் குப்தாவின் மனக்குமுறல் இவையெல்லாம் தெரியாமல் இமாலயத்திலா ஒளிந்திருக்கிறார்? தமிழக முதல்வர் ராமர் பற்றி பேசியதைத் தூக்கிப்பிடிப்பதுதான் இவரது ஆன்மிகம். கட்டுரை ஆசிரியரின் ஆதங்கம் நேர்மையானது. நான் துணை நிற்கிறேன். ரஜினி ரசிகர்களே உங்களுக்கமா மனசாட்சி இல்லை? என்னால் மேலும் அடுக்கமுடியும்.

  56. சிவசங்கர்

    நான் ரஜினிகாந்தையும், அவர் ரசிகர்களையும் எதுவும் சொல்லவில்லையே. இந்தப் படம் ஒரு அராஜகமான நிறுவனத்தினால் எடுக்கப் பட்டிருப்பதால் இதைக் காசு கொடுத்துப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவர்களது அராஜகங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ துணை போகிறார்கள் என்கிறேன். நான் இதற்கு முன்பாக வந்த ரஜினி படங்கள் பற்றி இப்படி எதையும் சொல்லவில்லையே. ரஜினி படமாகவே இருந்தாலும் கூட குடும்ப கொள்ளைக்கு துணை போகாதீர்கள் என்கிறேன். அதற்கு பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் எல்லோரும் என்னைப் புரியாமல் இந்துத்துவா ரவுடி, வெறியன் என்றெல்லாம் திட்டுகிறார்கள். நிச்சயம் ரஜினியோ அவர் ரசிகர்களோ இந்து எதிரிகள் அல்லர். ரஜினியின் ஆன்மீகப் பணிகள் மகாத்தானவை. அதையெல்லாம் நான் பாராட்டவே செய்கிறேன். இந்த ஒரு சினிமாவை அதை எடுத்தவர்களின் நோக்கம் கருதி காசு கொடுத்துப் பார்க்காதீர்கள் என்கிறேன். நெட்டிலேயே ஓசி டிவிடியிலோ தாராளமாகப் பாருங்கள்

    அன்புடன்
    ச.திருமலை

  57. ஹரன்ப்ரசன்னவின் கட்டுரை சரியானதாகவே படுகிறது.
    ரஜினி மாதிரி செல்வாக்குள்ள சற்று சமுதாய அக்கறை உடைய நடிகரே இப்படி ஒரு பாழாய்ப்போன ஒரு குடும்ப ரௌடிகளின் பிடியில் சிக்கி சிதைந்து போயிருக்கிறார்.

    ஹரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

  58. //சிவசங்கர்
    //நான் ரஜினிகாந்தையும், அவர் ரசிகர்களையும் எதுவும் சொல்லவில்லையே. //

    உண்மை அப்படி என்றால் நன்றி.

    //இந்தப் படம் ஒரு அராஜகமான நிறுவனத்தினால் எடுக்கப் பட்டிருப்பதால் இதைக் காசு கொடுத்துப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவர்களது அராஜகங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ துணை போகிறார்கள் என்கிறேன்.//

    இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றி, அவர்களின் பணத்திற்கு முன் ஒரு மிகப்பெரிய பொருட்டே அல்ல.. ஆனால் தோல்வி, பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் முயற்சிக்கு முட்டுக் கட்டை ஆகி விடும்..

    ரஜினி மற்றும் ஷங்கர் என்னும் இரு பெரிய கலைஞர்களின் உழைப்பு வீணடிக்கப் பட்டு விடும்…

    தொழில் நுட்பத் தமிழன் இன்றைக்கு மற்ற மாநிலங்களினால் திரும்பிப் பார்க்கப் படுகிறான்.. (உடனே ரசிகர்கள் பாலபிஷேகத்தை நினைக்காதீர்கள் )

    // நான் இதற்கு முன்பாக வந்த ரஜினி படங்கள் பற்றி இப்படி எதையும் சொல்லவில்லையே. //

    சிவாஜியைப் பார்க்கவே முடியவில்லை என்று கூறி இருக்கிறீர்கள்.

    //ரஜினி படமாகவே இருந்தாலும் கூட குடும்ப கொள்ளைக்கு துணை போகாதீர்கள் என்கிறேன். //

    இந்த பணம் ஒட்டு மொத்தமாக அவர்களுக்குப் போக வில்லை.. அவர்கள் சம்பாதித்து விட்டார்கள்.. இப்போது நாம் காசு கொடுத்துப் பார்த்தால் தான் பணம் போட்ட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், வாகன டோக்கன் காரர்களும் கூட கொஞ்சம் லாபம் பாக்க முடியும்.. தயவு செய்து இதில் இன்வால்வ் ஆகி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், வியாபாரிகளையும் பாருங்கள்..

    //அதற்கு பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் எல்லோரும் என்னைப் புரியாமல் இந்துத்துவா ரவுடி, வெறியன் என்றெல்லாம் திட்டுகிறார்கள்.//

    அது தவறு..

    // நிச்சயம் ரஜினியோ அவர் ரசிகர்களோ இந்து எதிரிகள் அல்லர். ரஜினியின் ஆன்மீகப் பணிகள் மகாத்தானவை. அதையெல்லாம் நான் பாராட்டவே செய்கிறேன்.//

    மிக்க நன்றி.. ஒரு சிறந்த விமர்சகனின் நோக்கம் சிறு குறைகளை பெரிதுபடுத்தாமல் வளர்ச்சிக்கு தூண்டுவதாகவே இருக்கவேண்டும்.

  59. பீராபிஷேகம் செய்வதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இல்லை.இருக்க வேண்டியதும் இல்லை.சினிமா என்னும் போதைக்கு இன்னொரு போதையால் அபிஷேகம் என்று கொள்ளலாம்.

    ஆனால் பாலபிஷேகம் செய்வதும்,கற்பூரம் ஏற்றுவதும்,ரஜினியை கடவுள் என்று சொல்வதும்…கொஞ்சம் ரொம்ப ஓவர் தான்….

    ஆனால்…எல்லா பெரிய விஷயங்களும் கடவுளின் அம்சம் என்று நமக்கு சொல்லி கொடுக்க பட்டுள்ளதாலும், ரஜினி நமக்கு பிடிக்குதோ இல்லையோ அவர் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே குறிப்பிட தக்க அளவு பெரிய விஷயமாக உள்ளதாலும்,அவரும் ஓரளவுக்கு நல்லவராக இருப்பதாலும் அவரின் ரசிகர்களை மன்னித்து விடலாமா?…

  60. நாட்டில் பிரபலமானவர்களும் பிரபலமான நல்லவர்களும் ஆளும் கட்சி பக்கம் சார்ந்து இருப்பது என்பது இன்று ஒரு எழுதபடாத விதியாக மாறிவிட்டது. இல்லை என்றால் அவர்கள் புறம் தள்ளப்படுவார்கள் என்பதும் ஊர்அறிந்த உண்மை. இதில் ரஜினிகாந்தை குறைகூறுவது தவறான அணுகுமுறையாகும். எப்பொமுதும் நியாயம் நேர்மை என்றுபேசியவர்களின் கதி என்ன என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும். நேர்மையான காந்தியவாதி தமிழ் அருவி மணியனின் நிலைமை உங்களுக்கு தெரியும். காந்தியம் காமராஜருக்கு பின் செத்துவிட்டது. ரஜினி ஒரு காந்தியவாதி என்று நான் நினைக்கவில்லை. ஒரு நல்ல பண்பான மணிதராகவும் கடவுள் பற்று உள்ளவராகவும் இந்துமத பற்று உள்ளவராகவும் தான் இன்றுவரை இருந்துவருகிறார்.
    அவர் படங்களில் நடித்தது போதும். எம்.ஜி.ஆர் போல் இவர்படங்களும் பிரபலமாக அமைந்தது உண்மைதான். இருவறது படங்களுமே மசாலாக்கள்தான். ஆனால் எம்.ஜி.ஆர் படங்களில் தேசபற்று மொழிபற்று பெண்மையின் பெருமை நல்லொழுக்கங்கள் போதிக்கும் பாடல்கள் ஏறாளமாக வந்தன. அதுவே மக்களை தன்பக்கம் ஈர்க்கும் சக்தியாக மாற்றியது. ரஜினி படங்கள் இதில் மாறுபட்டது. எம்.ஜி.ர் போல் மக்கள் செல்வாக்கு பெருவது இன்றைய நிலைமையில் நடக்காத ஒன்று. ரஜினிக்கு இன்று ஒரளவு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அவர் எம்.ஜி.ஆர் பாணியை பின்பற்றி அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
    இந்துமுறைப்படி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார் என்று கட்டுரை எழுதிய இந்தவலைதளத்தில் சேம்சைட்டு கோல்போடுவதைப்போல் இந்த கட்டுரை தேவையானதுதானா?

  61. இந்த பாலாபிஷேகம்,தேனாபிஷேகம் இதெல்லாம் ரஜினி ரசிகர்கள் தான் செய்கிறார்கள் என்று நாம் நினைக்க வேண்டாம்
    பணத்தை விட்டெறிந்தால் எல்லாம் நடக்கிறது .

  62. வணக்கம்

    ///இந்த பாலாபிஷேகம்,தேனாபிஷேகம் இதெல்லாம் ரஜினி ரசிகர்கள் தான் செய்கிறார்கள் என்று நாம் நினைக்க வேண்டாம்
    பணத்தை விட்டெறிந்தால் எல்லாம் நடக்கிறது .///

    இருக்கலாம், ஆரியர்களின் தாக்கத்தால் ஒரு சாதாரண மனிதனை கூட பாலாபிஷேகம் செய்ய வைக்கும் “மூட நம்பிக்கை” இங்கேதான் நடக்கும் என்று சனாதன தர்ம மக்களை “திராவிடம்” நாளை எக்காளமிட இன்றைய அச்சாரமாக ஏன் இருக்கக் கூடாது.

  63. இந்தக் கும்பலின் படத்தில் நடித்ததனால் நாளை அரசியலிலும் அவர்களை ஆதரிக்கும் கட்டாயத்துக்கு ரஜினி தள்ளப் படுவாரோ என்பதும் ஒரு அச்சம். .

  64. ஹல்லோ சார் ,ரஜினிக்கு பாபா கொடுத்தது நஷ்டம் தான் .இருந்தாலும் பரவாயில்லை என்று தான் ரஜினி அந்த படம் பண்ணினார் .காரணம் பாபா மேல் இருந்த பக்தி தான் ,புரிந்து கொள்ளுங்கள் அவரை …ப்ளீஸ்…..

  65. ஈ ரா

    ஈ வெ ரா மாதிரி பேசுகிறீர்களே ஐயா. எனக்கு சிவாஜி போன்ற சினிமாக்களை பார்க்க முடியவில்லை என்று நான் சொன்னால் அது என் ரசனை ஐயா. என் தேர்வுகள் வேறு. நான் இன்னும் விடலைப் பருவத்தில் இல்லை. எனக்கு பிடித்தவை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் உங்களுக்குப் பிடிப்பவை எனக்குப் பிடிக்காமல் போகலாம் அதற்காக நான் ரஜினியைக் குறை சொல்வதாக அர்த்தம் இல்லை. நான் யாரையும் சிவாஜி பார்க்காதீர்கள் என்று சொல்லவில்லையே. மும்பைத் தாக்குதலையும் கூடத்தான் பல நூறு பேர்கள் சேர்ந்து கடின உழைப்பு செய்து நடத்தியிருப்பார்கள் அதற்காக நான் அதைப் பாராட்ட முடியுமா. எத்தனை பேர்கள் சேர்ந்து எப்படி உழைத்து எதை உருவாக்குகிறார்கள் என்பது முக்கியவில்லை அதனால் இறுதியில் பயனடைபவர்களின் நோக்கம் தவறாக இருந்தால் உழைப்பு அனைத்தும் வீணே. ஆகவே எந்திரன் மூலம் இவர்கள் பார்க்கப் போகும் லாபம் நாட்டுக்கு நல்லதல்ல என்பதினால் நான் எதிர்க்கிறேன், இதற்கும் ரஜினிக்கும் சம்பந்தமில்லை. கூடா நட்பு என்று ஒன்றிருக்கிறது. அதை அவர் செய்திருக்கிறார். ஒரு வித நிர்ப்பந்தத்தில் கூட செய்திருக்கலாம் அதை என்னால் ஆதரிக்க முடியாது. புரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுக்கும் காசில் 80 சதவிகிதம் குடும்பத்திற்கே போகிறது. சினிமா விநியோகம் பற்றித் தெரியாமல் பேசாதீர்கள். நானும் சினிமா விநியோகம் செய்திருக்கிறேன்.

    அன்புடன்
    ச.திருமலை

  66. ரஜினி கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வது என்பதை ரஜினி என்ற ஒரு நடிகனுக்கு அல்லது தனி மனிதனுக்கு செய்வதாக தோணவில்லை, அப்படி செய்வதாக ரசிகர்களும் நினைக்கவில்லை என்றே கருதலாம்.

    அது ரஜினி என்ற ஸ்டைலான உருவத்திற்கும் ,அது பெரும்பாலும் திரையில் செய்யும் நல்ல விஷயங்களுக்காகவும் மட்டுமே அந்த பிம்பத்தை கொண்டாடுகிறார்கள் என்று கருதுகிறேன்.

    உண்மையான ரஜினியை நாம் பார்க்கமுடியாமல் ரஜினி என்ற தனி மனிதன் பெரும்பாலும் எஸ்கேப் ஆகிவிடுகிறார்

  67. //அது ரஜினி என்ற ஸ்டைலான உருவத்திற்கும் ,அது பெரும்பாலும் திரையில் செய்யும் நல்ல விஷயங்களுக்காகவும் மட்டுமே அந்த பிம்பத்தை கொண்டாடுகிறார்கள் என்று கருதுகிறேன்.
    //

    there are crazy people who watch rajini movie 30 times(even baba). they buy 10 same music cds of rajini movie to promote sales – is this not for the person – A rajini fan will see no difference bt real/reel life

  68. குமுததில் எந்திரன் படத்திற்கு சூப்பர் rating கொடுத்துள்ளார்கள் .. சூப்பர் rating கொடுதத்து இதுதான் முதல் முறை என்று நினைக்கிறன் . படம் அந்த அளவுக்கு ஒன்றும் சூப்பர் இல்லை . நன்று வேணுமானால் கொடுக்கலாம் . மொழி படத்தைவிட நன்றாகவா இருக்கு ? காசு இருந்தால் கிராபிக்ஸ் வெளிநாட்டில் போய் யாரு வேணும்னாலும் பண்ணலாம் . இந்த கிராபிக்ஸ் லம் நாங்க TERMINATOR படத்திலே பார்த்தச்சு . குமுதம் , இட்லி வடை எல்லாம் பொட்டி வாங்கிட்டு ஆஹா ஓஹோ நு எழுதறங்க

  69. இன்று நமக்குத் தேவை வெறும் நல்லவர்கள் இல்லை
    சடங்குகள் மட்டும் செய்பவர்கள் இல்லை.
    சும்மா கோயில் சுற்றுபவர்கள் மட்டும் இல்லை

    ஹிந்து சமயத்தை நாட்டுடன் சேர்த்துப் பார்ப்பவர்களே தேவை
    இந்த நாடு இல்லை என்றால் ஹிந்து சமயம் இல்லை.அதைச் சார்ந்த கலாசாரம்,பண்பாடு,பழக்க வழக்கங்கள்,கலைகள்,நூல்கள்,தத்துவங்கள்,சிந்தனைகள்,மகான்கள்,சம்பிரதாயங்கள்,ஆசிரமங்கள்,சமய நிறுவனங்கள் எதுவும் இருக்காது என்பதை உணர்ந்தவர்கள்.

    மேலும் இன்று நம்மை ஆளும் பெரும்பாலான அரசியல் வாதிகள் ஹிந்துக்களுக்கு விரோதமான் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்,அவர்களால் ஹிந்துக்களின் எதிர்காலம் இருள் மயமாகி விடும்,மாற்று மதங்கள் மேலோங்கி ஹிந்து சமயம் அழிக்கப் பட்டு ,ஹிந்துக்கள் சொந்த நாட்டில் அடிமை வாழ்வு வாழ நேரிடும் என்ற அறிவு உள்ளவர்கள்
    அதற்காக ஹிந்து விரோதிகளை தட்டிக் கேட்கும் தைர்யம் உள்ளவர்கள் .

    மேலும் கோடிக்கணக்கான ஏழை ஹிந்துக்கள்தான் இந்த சமுதாயத்தின் அடிநாதம்,முதுகெலும்பு,அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதம் மாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,நம்மிடம் உள்ள செல்வத்தால் இயன்ற அளவு அதை தடுக்க முயல வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

    மற்றவர்கள் எவ்வளவு தான் நல்லவர்களானாலும்,பணக்காரர்களானாலும், புகழ் வாய்ந்தவர்களானாலும் அவர்களால் ஹிந்து சமுதாயத்துக்கு காலணா பிரயோஜனம் இல்லை.

    அவர்களை விட ஹிந்து சமுதாயதுக்காக தன் நேரம்,வாழ்க்கை இவற்றை அர்ப்பணிக்கும் ஹிந்து இயக்கங்களில் பணியாற்றும் ஒரு சாதாரண சகோதரன் அதிக மரியாதை கொடுக்கப் பட வேண்டியவன் .

  70. எம்ஜிஆருக்க்ப்பின், இன்னொரு நடிகரிடம் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டு அவதிப்பட முடியாது என நினைக்கும் உறவுக்காறர்களான கருணாநிதியும் மாறன் குடும்பத்தினரும், பிரித்தாளும் சூழ்ச்சியைப்போல், “பிரிந்தாளும்” சூழ்ச்சியைக் கொண்டு, கருணாநிதி அரசியல் வகையிலும் , மாறன் குடும்பத்தினர் கேளிக்கைததொழில் வகையிலும், ரஜினிகாந்தைச் செம்மையாகக் கவனித்துக் கண்காணிக்கும் வகையில்தான், கருணாநிதி-ரஜினிகாந்த்-மாறன்குடும்பத்தினர் தொடர்பு உள்ளது. துள்ளும் வரை துள்ளு, எப்படி எதுவரை துள்ளவேண்டுமோ, அதை, அவ்வப்போது, எப்படிச் செய்யச் சொல்லவேண்டுமோ அப்படிச் செய்து, ரஜினிகாந்த்தைக் கைக்கூலியாகக் கருணாநிதியும் மாறன் குடும்பத்தினரும், ஆட்டிப்படைக்கிறார்கள். ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிற வீம்பு வார்த்தைகளைப் போன்றவைகளை, ரஜினிகாந்த் எப்படி, யாருக்கெதிராகச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்வது, பாவம், ரஜினிகாந்த் இல்லை.
    ரஜினி ஒரு குறவன் கைக் குரங்கு.

  71. hi.hip hip hurray….well said … who to blame.the actor or crorpathi producer cum government aided media man….as once rajini told i am repetiiting ..even God can not save India……

  72. I am surprised to find many readers defending rajini.

    It is crystal clear that he takes his fans for a ride.

    In the film “kuchelan” released a few months back, there is a scene in which rajini is asked whether he will enter politics. For that rajini implies that all things said by him must not be taken seriously.

    When rajini fans took offence, rajini ordered that scene to be deleted from the film & it was done.

    My question is : Why did he do so?

    If he felt that what he said was right, then he shud not have deleted that scene.

    Now that he did so, does it imply that he was lying all the time?

  73. வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருந்த ஒரு குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் எந்திரன் படம் பார்த்ததாகச் சொன்னார்கள். எப்படி இருந்தது என்று கேட்டேன்
    உடனே சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘ என்ன அவ்வளவு காமெடிப் படமா?’ என்று கேட்டேன்.
    ‘இல்லை இல்லை, இவ்வளவு முட்டாள் தனமாகவும், கோமாளித்தனமாகவும் படம் எடுத்திருக்கிறார்களே என்று சிரித்தோம்’ என்றனர்.

  74. இந்த மாதுரி மாதவன பத்தி சொல்றத விட்டுட்டு, நீக lifela சூப்பர் ஸ்டார் ஆகாரத பாருக சாமிகள

  75. Those who denigrate the rajini they do it without giving a serious thought over it. Rajini fans can be seen all over TN irrespective of class, caste & gender. Its all becoz of his on screen performance. Whenever it comes to rajini cynics or critics would have different standard. I support rajini mainly due to his affiliations with hinduism unlike other stars kamal, sathyaraj, manivannan who think themselves above the einstein and start advising in their films.

  76. Rajini is famous becouse he supports hinduism and use openly praying hindu god and all his movies have some color of hinduism in some way or other. that is why all his movies have been backed by all ages mainly hindus are his supporters. only thing he did not do is for the common poor people which he could have done something by building hospitals or schools or ophanage for old people. afterall he gets paid rs 200 crores per movies in the past few years. just spending usd 20- crores for some good cause would have earned a good image from the heart of all people.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *