பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…
View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்Tag: காசி யாத்திரை
புதிய காசி விஸ்வநாதர் ஆலயம்: நேரடி அனுபவம்
விஸ்வநாதர் கோவிலில் அதன் விஸ்தீர்ணத்தையும் அதன்
விரிவாக்கத்தையும் மிகத் தெளிவாக காண முடிந்தது. ஏற்கனவே நான் வந்த கோவில் போலவே இது இல்லை. ஏதோ புதிய கோவிலுக்கு வந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ஆலய விரிவாக்கத்தின் போது சுற்றியிருந்த பல கடைகளுக்கு உள்ளாக ஒளிந்து கொண்டிருந்த, வீடுகளுக்குள் மறைந்திருந்த பல புராதன ஆலயங்கள் வெளிப்பட்டிருக்கிறது.. இன்று இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் உருவாகிவிட்ட பின்பும், நந்தி பரிதாபமாக ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது என்னை மீறி கண்ணீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது…
ஒரு காசிப் பயணம்
இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம்…. கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை….இது கோயிலாக, கர்ப்பக் கிரஹமாக இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது…..
View More ஒரு காசிப் பயணம்