ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறக்காட்டா நிச்சயமாக ஒரு காரணமும் இருக்க முடியாது. அப்படியே பிறந்திருப்பினும், உங்களோட நம்பிக்கையின் சுய லாபங்களையும், இடர்களையும் சீர் தூக்கிப் பாருங்க. என்னையே எடுத்துக்குங்க…
எது உண்மைக்கு நெருக்கமானது, மனுசனுக்கு நன்மையானது: ஆனந்தப் பிரம்மமா, அகண்ட நரக நெருப்பா? ஆனா, சின்ன வயசுலேயே கிறிஸ்தவத்துக்கு வசக்கப் பட்டவர்கள், வயசாகியும் வாத்துக்களைப் போலக்கூடப் பரிணாம வளர்ச்சி அடையல்ல…
Tag: கிறிஸ்தவம்
சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்
நூலின் தலைப்பில் குறிப்பிட்ட பேசுபொருளை விளக்குவதோடு கூட, பொதுவாக கிறிஸ்தவ மதம் குறித்த இந்துக்களின் விமர்சனங்களையும், கிறிஸ்துவ மத வரலாற்றில் உள்ள சர்ச்சைகள், விவிலியத்தில் உள்ள சில விஷயங்கள் ஆகிய பலவற்றையும் முன்னும் பின்னுமாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். அந்த விதத்தில், கிறிஸ்தவ மதப்பிரசாரங்களை எதிர்கொள்வதற்கும் எதிர்ப்பதற்கும் விழிப்புணர்வு கொண்ட இந்துக்களுக்கு உதவக் கூடிய கையேடு என்ற அளவிலேயே இந்த நூலைக் கருதலாம்…
View More சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்ஆபிரகாமிய மதங்களும் ஆன்மீகமும்
தாமஸ் பெய்ன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர், சிந்தனையாளர். இவர் மதங்களுக்கு எதிரானவர் என்பது பொதுவான கருத்து, ஆனால் இறைமறுப்பாளர் இல்லை. எனில், அவர் எதிர்த்தது எதை? அவர் ஏற்க விரும்பிய இறைவன், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதநூல்களில் விவரிக்கப்படும் இறைவன் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தாமஸ் பெய்ன் ஹிந்து தர்மத்தைப் பற்றி எழுதியதாவோ, அதுபற்றிய அறிவு அவருக்கு ஏற்பட்டதாகவோ தெரியவில்லை. ஒருவேளை, ஹிந்து தர்மத்தின் மெய்யியல் கொள்கைகளை அவர் படித்திருந்தால், நிச்சயமாக அவர் அதனை ஒப்புக்கொண்டு இருப்பார் என்று தோன்றுகிறது…
View More ஆபிரகாமிய மதங்களும் ஆன்மீகமும்புனித சிலுவையின் நாசி கொலைக்களம்
ஈஸ்டர் காலங்களில் இந்த ‘கிறிஸ்துவின் பாடுகள்’ (நாகர்கோவில் வட்டாரங்களில் சிலுவைபாடு) மிகவும் முக்கியமான விஷயமாக ஐரோப்பிய மக்களிடையே இன்றும் விளங்குகிறது. இதைச் சித்தரிக்கும் மெல்கிப்சனின் ‘Passion of Christ’ திரைப்படம் வன்முறைக் காட்சிகளும் யூத வெறுப்பியலை நியாயப்படுத்தும் காட்சிகளும் நிரம்பியது. ஜெர்மனியில் நாசிகளின் உதயத்திற்கு பலகாலம் முன்பே அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்த சிலுவைபாடு நாடகங்கள்தான்…
View More புனித சிலுவையின் நாசி கொலைக்களம்பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை
அக்கவிதையில் பாரதி சொல்லும் “உயிர்த்தெழுதல்” சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்… கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர். ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ மனநிலையில் பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில் அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன. அதுதான் கண்ட பலன்….
View More பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதைகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12
<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்…
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்
இரண்டுமே பொய் என்றால், முதலில் சொன்னது போல இரமணரின் வழிக்கு சேதமில்லை, ஆனால் கிறித்துவம் குப்பையில் சேரும். இரண்டுமே உண்மை என்றால், இந்த அற்புதம் கிறித்துவத்துக்கு மட்டுமே உரித்தது அல்ல, ஆக கிறித்துவின் வழி மட்டுமே வீடு பெற வழி என்னும் கிறித்துவ வாதம் பெரும் பொய் என்று ஆகும்… கிறித்துவத்திற்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, கிரியை, சரியை, யோகம் சார்ந்த கலைகள் என்றோ எதுவும் கிடையாது. எல்லாமே பிறரிடம் சுரண்டிய சரக்கு தான். ஏன் கிறிஸ்துமஸ் கூட திருடிய கொண்டாட்டம் தான். ‘பாவிகளே’ என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. ஆக, முழுதும் இயேசுவின் அதிசய பிறப்பு இறப்பு மீட்பு என்பதை மட்டுமே சார்ந்த மதம். அது அவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பட்ட அதிசயம் இல்லை என்றானால் ‘டப்பா டான்ஸ் ஆடிவிடும்’, ஆகவே தான் இளையராஜாவின் அந்த பதிலுக்கு இத்தனை எதிர்ப்பு…
View More இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்
ஏசுவின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம், ஏசு போதித்ததாகச் சொல்லப் பட்டும் அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் கிறிஸ்தவ மதப் பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தம் உலகத்தின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏசு சிந்தியதாகச் சொல்லப் படும் ரத்தத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு அதிகமானது என்பதை அறியக் கூடும். மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்தவத்தை கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தும் பல நூல்கள் ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளில் வெளிவந்திருக்கின்றன. தமிழில் அதைப் போன்ற விரிவான தொகுப்பு நூல் ஒன்றும் இல்லாதிருந்தது. உமரி காசிவேலு எழுதியுள்ள இந்த நூல் அக்குறையை ஈடு செய்கிறது….
View More கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
View More ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6
ஜீசஸ் அதாவது இயேசு என்ற ஒரு மனிதர் பிறந்தார், வாழ்ந்தார் என்பதை உறுதியாகக்கூறுவதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்றே கொண்டாலும், சாதாரணக் குழந்தைகளுக்கு மாறாக, சிறப்பான எதையும் அவரிடது பிறப்பிலிருந்து காணமுடிகிறதா?… இயேசு தூரத்திலிருந்து அத்திமரத்தைப் பார்ப்பது சொர்க்கத்திலிருந்து வளமையான ஜெருசலம் நகரத்தைக் காண்பதற்கும், அருகில் சென்று கனிகள் உள்ளனவா என்று காண்பது அவர் ஜெருசலத்துக்கு வந்து அங்குள்ள யூதர்களிடம் நீதி, கருணை, நம்பிக்கை ஆகிய நற்குணங்கள் இருக்கிறதா என்று தேடுவதற்கும், அவர் கனிகளைக் காணாமல் இலைகளைக்கண்டது, அவர்களிடம் வெற்றுசடங்குகளையும், நம்பிக்கை இன்மையையும் கண்டதன் உருவகமாகும்…
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6