விமானத்தாக்குதல் வரலாற்றிலேயே, ஒரு நாட்டை மண்டியிடச்செய்த விமானம் மிக்-21ஆகத்தான் இருக்கும் எனலாம். பாரதம் தனது மிக்-21 விமானங்களை அப்பொழுதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பியது. 1971 டிசம்பர் 14ல் காலை 11 மணி அளவில் டாக்காவில் கவர்னர் மாளிகையச் சுற்றி வட்டமிட்ட அவ்விமானங்கள் குண்டுமாரி பொழியவே, கவர்னர் ஐக்கிய நாட்டு விமானத் தாக்குதல் பாதுகாப்பிடத்திற்கு ஓடி ஒளிந்துகொண்டார்.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2Tag: கிழக்கு பாகிஸ்தான்
நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2
கிழக்கு வங்க அகதிகளில் பெரும்பாலானோர் நாமசூத்திரர் எனும் தலித் வகுப்புகளை சார்ந்தவர்கள். அங்குள்ள வனவாசி சமுதாயங்களை சார்ந்தவர்கள். நேருவுக்கு இவர்கள் பெரிதாகப்பட்டிருக்க மாட்டார்கள். நேரு அரசாங்கம் கிழக்கு வங்க அகதிகளை வெறுப்புடன் நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரசாக்கர்கள் கன்னியாஸ்திரீகளை கொன்றால் முகம் சிவக்க சினந்த நேருவுக்கு ரஸாக்கர்கள் தொடர்ந்து இந்துக்களை கொன்றும் சூறையாடியும் வந்தது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை பாருங்கள். இதைத்தான் நேருவின் நாஸி மனநிலை என்றது… இந்த மனநிலை இன்றைக்கும் நீடிக்கிறது. நேருவிய நாளேடான தி இண்டு ஹிந்துத்துவர்களை கொன்ற போலீஸ் பக்ருதீன் கைதானதும் அவனது தாயார் குறித்த உருக்கமான கதையை அடுத்ததாகவும், அவனது காதல் கதையை அடுத்ததாகவும் வெளியிடுகிறது. கொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை….
View More நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2வங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்
அடிமைத்தனத்திற்கும், காட்டுமிராண்டித்தனமான சட்ட திட்டங்கள், மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்டெழுந்த கிழக்கு வங்க மக்களை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானிய ராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பாக் ராணுவத்திற்கு சொல்லப்பட்டது என்ன என்றால் இஷ்டப்படி கற்பழியுங்கள், கொலை செய்யுங்கள். சிறுவர் சிறுமியர் எந்த வித்யாசமும் பார்க்காதீர்கள். இந்துக்களை கற்பழித்து கொன்றால் மேலும் பதக்கங்கள், பரிசுகள், கொள்ளையடிக்கும் சொத்துக்களை நீங்களே அனுபவியுங்கள் என்றெல்லாம் யாஹியா கானும், ஜெனரல் டிக்கா கானும் உத்தரவிட்டார்கள். கொலை செய்வதையும் ,கற்பழிப்பதையும் செய்முறையோடு மதராசாவில் பயிற்று வைத்தார்கள். உள்ளூரில் வெறி பிடித்த அடிப்படைவாதிகளையும், கொலைகாரர்களையும் இணைத்துக்கொண்டார்கள். வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம் பெற்ற ரஜாக்கர்களின் வெறியாட்டம் ஆரம்பித்த கதை இது. உருது பேசும் பாகிஸ்தானிய அடிப்படைவாத முஸல்மான்கள் நாடெங்கிலும் கொள்ளை, கொலை , வன்முறை வெறியாட்டங்களோடு கற்பழிப்புக்களை கூட்டம் கூட்டமாக செய்தனர். அவர்களின் காட்டுமிராண்டித்தனமான பாலியல் இச்சைகளுக்கு லட்சக்கணக்காண இந்து பெண்களும், சிறுமியர்களும் , பெளத்த ,சிறுபான்மை இஸ்லாமிய பெண்களும் ஆளாயினர்.
ரஜாக்கர்கள் என்பவர்கள் வங்க தேச வரலாற்றில் துரோகிகள் என பொறிக்கப்பட்டது இப்படித்தான். பாரதத்திற்கு இஸ்லாமிய வெறியர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல் தாள முடியாமல் அகதிகளாக 30 லட்சத்திற்கு மேல் மக்கள் குவிந்தனர். இத்தனையையும் யாரோ சொல்லவில்லை. இனப்படுகொலைக்கு எதிரான மனித நேய மன்றத்தில் சாட்சியமளித்தவர்களின் சாட்சிகளிலிருந்தும் ,ஆவணங்களில் இருந்தும் சொல்லப்படுகிறது
View More வங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்