கப்பல் நங்கூரம் இடப்பட்ட இடத்திற்குத் தாமதமாக வந்த ஆபுத்திரன் கப்பல் கிளம்பிப் போய்விட்டதை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனான். மனம் நொந்து அலையத் தொடங்கினான். ‘யாருமற்ற தீவினில் இந்த அட்சய பாத்திரத்தினால் என்ன பயன்? வெறுமே என் பசியைப் போக்கவா?’ என்று சிந்தித்தவாறே அங்கிருந்த நீர் நிறைந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான்
View More பாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15