சுதந்திரத்திற்குப்பின் காங்கிரஸ், திராவிட கட்சிகள் கோவிலுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நான் விவாதிக்க தயார் இல்லை. எல்லோருமே ஏதோ ஒன்று முயன்றுள்ளார்கள். ஆனால் பல ஆயிரம் வருடம் காப்பாற்றப்பட்ட இந்த நிலம் – கோவில் – சிலை – கல்வெட்டுகள் எல்லாம் கடந்த 50 வருடத்தில் சூறையாடப்பட்டதன் அளவீட்டை கவனியுங்கள். இது முழுக்க முழுக்க நிர்வாக கோளாறாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் நடந்தது என்பதை பிரித்துப் பார்க்க நமக்கு ஒரு ஆய்வு தேவையில்லை. எனவே, ஜக்கி வாசுதேவ் சொல்கிற ஒரு புள்ளிக்கு நாம் வர வேண்டும். இதில் ஹிந்து பெருமக்களுக்கும், இந்த கலாச்சாரத்திற்கும் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தருகிற வலிமையான செய்தி ஒன்று உள்ளது. “அண்ணா,எங்கள் ஊருடைய பழைய பெயர் என்ன?” என கேட்டார்கள். அப்போதும் ஆநாங்கூர்தான் என்றோம். ஆனால் அவர்கள் நம்பவில்லை..
View More அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?Tag: கோவில் அழிப்பு
இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து
எனக்கு இந்தியா பெரும் மனக்காயம் அளித்தது. இந்தியா ஒரு போற்றிப் புகழப்பட்ட நாயகமான நாடு. அதே நாட்டின் பெரும் வறுமையிலிருந்துதான் என் முன்னோர்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் தப்பித்து வெளியே ஓட வேண்டியிருந்தது. இந்த இரண்டு இந்தியாக்களும் வெவ்வேறாக இருந்தன.. என் சிறுவயதில் சரியான வார்த்தை தெரியாவிட்டாலும் இந்தியாவின் ‘பூரணத்துவம்’ (wholeness) என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஸ்பானியப் படையெடுப்பாளர்கள் முன்னால் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் எப்படி ஒன்றுமே இல்லாமல் போனதோ அதுபோல் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் முன்னால், இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்த எங்கள் காலனியில் பழமையானதும், சிதைந்து போகாததென்றும் நினைத்து நாங்கள் பல்வேறு விதமாக சிறந்த மரியாதை செலுத்தி வந்த எங்கள் தொன்மையான நாகரிகம் சிதைந்து போயிருந்தது; பாதி அழிந்து விட்டிருந்தது. அவர்கள் தொன்மையான கோயில்களுக்குச் சென்றார்கள். ஆனால் அக்கோயில்களைக் கட்டியவர்களுக்கிருந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர்களால் நீண்டு நிலைத்திருக்கும் எதையும் கட்ட முடியாது.. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டம், பிரிட்டிஷ் வருகைக்கு முன்னால் இந்தியா சந்தித்த பேரழிவுகளை மறைத்து விட்டது. பேரழிவுகள் நடந்ததற்கான சாட்சியங்கள் மிக எளிதாக எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஆனால் சுதந்திர இயக்கம் ஒரு மதம் போன்றிருந்தது; தான் பார்க்க விரும்பாத விஷயங்களை அது பார்க்கவில்லை..
View More இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்துஇலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!
2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு முதலியார்குளம் கிராமத்து இந்துமக்கள் அச்சமுற்றார்கள். கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன. இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. இந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது. கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது.
View More இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!