ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில் போட்டியாளர்களின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தலைவியாகவும் காலம் அவரை புடம்போட்டது….
View More ஜெயிக்கப் பிறந்தவர்!Tag: சந்திரலேகா
சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]
இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் எல்லா வகை வடிவங்களிலும் எதையெல்லாம் தன் சிறப்பாகக் கருதுகிறதோ அவை அத்தனையையும் மறுப்பவர் சந்திரலேகா. இந்திய நடனம் கொண்டுள்ள மத ரீதியான உறவுகள், அதன் முக்கிய சிறப்பான அங்கங்கள் என்று கருதுபவை, எந்த உன்னதத்தை நோக்கி அது பயணப்படுவதாகச் சொல்கிறதோ அது, எல்லாவற்றையுமே உதறியவர் அவர்….. பைபிள் கதைகளை பரத நாட்டியத்தில் சொல்ல முயன்ற பாதிரியார் ஃப்ரான்ஸிஸ் பார்போஸா (Fr.Francis Barboza)-வைப் பற்றிச் சொல்ல வேண்டும்.. இந்த அளவு துணிச்சலோ, முனைப்போ நம் வீட்டு முற்றத்தில் கூட நம்மால் காண முடியவில்லையே…
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]