அவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப் படுத்துபவை. இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள்! எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள்… ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புகளும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு மடத்தின் சார்பில் உதவி வழங்கியது- என மடத்தின் போக்கை மாற்றியவர் அவர். அவரது மடத்தின் சூழலிலும் வரலாற்றிலும் அவர் எடுத்த முயற்சிகள் நிச்சயம் மிகப் பெரிய முன்னகர்வு….
View More அஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்Tag: சமூக சேவை
அருட்செல்வருக்கு அஞ்சலி
பெரிய தொழிலதிபராக விளங்கியபோதும், சாதாரண மக்கள், கிராமத்து விவசாயிகள், பழைய கால நண்பர்கள் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் எனப் பல வகையானவர்களிடமும் தொடர்பு வைத்திருந்தார். அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்று அங்கேயே அவர்களுடன் உணவருந்துவார். அவரைப் போல மிக அதிக அளவில் மக்களை நேரடியாக அறிந்த ஒரு தொழிலதிபரைப் பார்ப்பது அரிது. தொழில்களில் தனக்கென உறுதியான கொள்கைகளை வைத்திருந்தார். பெரிய சர்க்கரை ஆலை வைத்திருந்த போதும், அது சம்பந்தப்பட்ட எரிசாராயத் தொழிலுக்கு அவர் செல்லவேயில்லை. அதில் பெரிய லாபமிருந்தும், கடைசி வரை தவிர்த்து விட்டார்…கடைசி வரைக்கும் அவர் மற்றவர்களிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினார். அதைப் பல சமயங்களில் நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். பேசிக் கொண்டிருக்கும்போது எங்களின் முக்கியமான ஆய்வுகள் குறித்து ஆர்வமாகக் கேட்பார்….
View More அருட்செல்வருக்கு அஞ்சலிதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்
கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 7-ம் தேதி பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை.அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர்….சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்… நமக்கெல்லாம் மறந்துவிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், யாருக்கு ந. சோமையாஜுலுவை நினைவில் இருக்கும்? ஒரு காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட காலங்களில் தன் பெயரை பிரகாசிகக்ச் செய்தவர். அவரைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை, பாரத மணியில் வந்திருந்தது…
View More தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்நலம் பெறப் பிரார்த்திப்போம்!
பா.ஜ.க. தேசிய செயலரும், ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தமிழகத்தில் நெடுங்காலம் பணியாற்றியவருமான திரு.வி.சண்முகநாதன் அவர்கள் உடல்நலம் குன்றி புதுதில்லியில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அண்மையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது… அன்னார் விரைவில் பரிபூரண ஆரோக்கியத்துடன் உடல்நலம் பெற பிரார்த்திக்க வேண்டுகிறோம். ஆலயங்களில் பிரார்த்தித்து குங்குமப் பிரசாதங்களை அவரது முகவரிக்கு அனுப்பி வைப்போம். அன்னாரது முகவரி….
View More நலம் பெறப் பிரார்த்திப்போம்!அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?
Help Ever Hurt Never… Love All Serve All” என்ற வாசகங்கள் மட்டுமே என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்பால் ஈர்த்தது… பசியோடிருப்பவனுக்கு ஆன்மிகம் எதற்கு? அவனுக்கு உணவைத் தா… கடவுளுக்கு ஏது தீட்டும் சடங்கும்? கடவுளுக்கு ஏது மதமும் சாதியும்?… பாபா உனக்கேது மரணம்?…
View More அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை
இவருக்கு ஓய்வு என்பதில்லை. ஒரு சினிமாவுக்கு, ஒரு டிராமாவுக்கு, ஒரு விளையாட்டுக்கு, ஒரு சுற்றுலாவுக்கு என்று எங்குமே இவரால் போக முடியாது. மதுரையை விட்டு ஒரு நாள் கூட தன் சொந்த வேலைகளுக்காக நேரம் செலவழிக்க இயலாது. 24 மணி நேரமும், 365 நாட்களும் ஓய்வின்றி எந்தவித ஒப்பந்தமும் இல்லாத ஒரு கடமைக்கு, ஆதரவற்ற சமூகத்தின் ஒரு சேவைக்காகத் தன் இளமை, வருமானம், நேரம், மகிழ்ச்சி, குடும்பம் என்று அனைத்தையுமே இந்த இளைஞர் தியாகம் செய்துள்ளார். உலகம் முழுவதும் சுற்றி வரும் திறமையான படிப்புப் பெற்றும் உள்ளூரில் சேவை செய்யும் உன்னதமான ஒரு தியாகத்தை தன் வாழ்க்கைப் பணியாகத் தேர்வு செய்துள்ளார்.
View More மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை