இன்றைய சீன அதிபர் ஜின்பிங் பெரும் வரலாற்றுணர்வு மிக்க மனிதர். சீனா இழந்த கலாச்சாரச் செல்வங்களை மீட்டுக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமுடையவர் ஜின்பிங். அவரை, இன்னொரு வரலாற்று ஆர்வலரான பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் ஆச்சரியமில்லை… மோடி-ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பினால் இந்திய-சீனா இடையே உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் இரண்டு பழம்பெரும் நாகரிகங்கள் தங்களின் கடந்தகால வரலாற்றை உணர்ந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது. இந்திய-சீனப் பொருளாதார யுத்தம் முக்கியமான பிரசினை. சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும் இந்தியா இப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் இன்றைக்கு உலக நாடுகளுடன் சுமுக உறவு வைத்திருக்கும் வலிமையான இந்தியாவை சீனர்கள் அடக்கி வைப்பது சாத்தியமில்லை…
View More மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை