எந்த மருத்துவ நிபுணரும் மருத்துவ மனையும் எதிர்பார்த்திராத நோய் அதிகரிப்பினால் ஏற்பட்ட பின்னடைவு இது. இதை மத்திய அரசின் மீது பழிபோடக் கிடைத்த அரசியல் வாய்ப்பாகப் பார்க்கும் எதிர்கட்சிகள்தான் பிண அரசியல் செய்கின்றன. சர்வ தேச ஊடகங்கள் இந்தியா வீழ்கிறது என்று காட்டக் கிடைத்த வாய்ப்பு என்று இறங்கி அடிக்கிறார்கள். நம்மிடம் சில குறைகள் உண்டு. சில விடுபடல்கள் உண்டு. ஆனால், நாம் கொடுத்துவரும் அதிகப்படியான விலை என்பது அதற்கு எந்தவகையிலும் இசைவானது அல்ல. இதுவும் நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு போரே… சீனா நமக்கு இழைத்திருக்கும் பெரும் அநீதி இது. பொறுக்காத சர்வ தேச மருந்து மாஃபியாவின் கரங்களும் இதன் பின்னால் உண்டா என்பதும் தெரியவில்லை…
View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3Tag: சீன வைரஸ் தொடர்
சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2
உலகளவில், நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், படுக்கை வசதிகள் இல்லாத, ஆக்ஸிஜன் இல்லாத, மருந்துகள் இல்லாத, இந்தியாவில் இறப்புவிகிதம் உலகின் பிற 100 நாடுகளையும் விட பல மடங்கு குறைவு… இரண்டாவது அலை பற்றிய அபாய அறிக்கைகளைத் தொடர்ந்து, அரசு பயந்து பயந்து எல்லா ஏற்பாட்டையும் செய்தது. ஆனால் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் மீறிக்கொண்டே இருந்தார்கள்… இவை எதுவும் புரியாமல் மக்கள் கூட்டம் உடனே ரெம்டெசிவர் என்னமோ நோயை முழுவதுமாக்க் குணப்படுத்திவிடும் என்று தாமாகவே நினைத்துக்கொண்டு முண்டியடிக்கிறார்கள். பல மருத்துவர்களை ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள்…
View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 1
வெளவால் போன்ற ஒரு உயிரிடமிருந்து நோய்க்கிருமி பரவ்வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 10 உருமாற்றங்கள் அடைந்த பின்னரே மனிதரைத் தாக்கும் வலிமையைப் பெற முடியும். இவையெல்லாம் நடந்திருந்தால் அதற்கான விஞ்ஞான, மருத்துவ சான்றுகள் கிடைத்திருக்கும். ஆனால் அதன் தடயமே இல்லை. ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கும் வெளவால் வைரஸ்தான் இப்படி நேரடியாக மனிதர்களைத் தாக்கும் பலம் பெறமுடியும்… இந்தத் திட்டமானது சீன விஞ்ஞானிகள் சிலரால் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் சொன்ன சில விஞ்ஞானிகள் மர்ம முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இப்போது நடப்பது மூன்றாம் உலகப் போர். உண்மையான எதிரியை விட்டுவிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களும் தமக்குள்ளாகவே கட்சி பிரிந்து அடித்துக்கொண்டு மடியப்போகிறார்கள்….
View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 1