தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே. அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வன்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை… வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம் இல்லாத ஒருவரை அரசு எந்திரம் சுட்டுக் கொன்றது நிச்சயம் தவறுதான்…
View More தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்