பெரிய தொழிலதிபராக விளங்கியபோதும், சாதாரண மக்கள், கிராமத்து விவசாயிகள், பழைய கால நண்பர்கள் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் எனப் பல வகையானவர்களிடமும் தொடர்பு வைத்திருந்தார். அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்று அங்கேயே அவர்களுடன் உணவருந்துவார். அவரைப் போல மிக அதிக அளவில் மக்களை நேரடியாக அறிந்த ஒரு தொழிலதிபரைப் பார்ப்பது அரிது. தொழில்களில் தனக்கென உறுதியான கொள்கைகளை வைத்திருந்தார். பெரிய சர்க்கரை ஆலை வைத்திருந்த போதும், அது சம்பந்தப்பட்ட எரிசாராயத் தொழிலுக்கு அவர் செல்லவேயில்லை. அதில் பெரிய லாபமிருந்தும், கடைசி வரை தவிர்த்து விட்டார்…கடைசி வரைக்கும் அவர் மற்றவர்களிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினார். அதைப் பல சமயங்களில் நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். பேசிக் கொண்டிருக்கும்போது எங்களின் முக்கியமான ஆய்வுகள் குறித்து ஆர்வமாகக் கேட்பார்….
View More அருட்செல்வருக்கு அஞ்சலி