இளங்கோவடிகள் வந்தார். சிலப்பதிகாரம் என்ற முத்தாரத்தை தமிழன்னைக்கு அணிவித்தார். மாணிக்கவாசகர், சுந்தரர் மற்றும் நாயன்மார்கள் தமிழன்னையை ஆடவல்லான் கையில் கொண்டு சேர்த்தனர். யாருக்கு கிடைக்கும் இந்த புகழ், என்றே மனம் குளிர்ந்தாள் தாய்… ஈரோட்டில் இருந்து ஒரு கயவன் வந்தான். அவளை காட்டுமிராண்டி என்று தூற்றினான். காஞ்சியில் இருந்து மற்றொரு விஷம் இறங்கியது. திருவாரூர் ரயில் வந்தது…
View More நல்லா இருந்த தமிழ்நாடும்..Tag: தமிழன்னை
தமிழன்னையின் அணிகலன்கள்
தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். அத்தகைய தமிழ் நீடுவாழ்க!’ என உளங்கனிந்து பெருமிதத்தில் விம்மி வாழ்த்தும் புலவர் யார்?….
View More தமிழன்னையின் அணிகலன்கள்தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்
வந்தே மாதரம் பாடலைப் போன்றே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அடிப்படையில் வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது.
முன்னதை எதிர்க்கும் சிலர் அதைவிடவும் வெளிப்படையாக இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய பின்னதை மட்டும் ஏற்பார்களாம். பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்… சுந்தரம்பிள்ளை அந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை…