இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை.
View More போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலைTag: திருநாள்
எல்லாப் புகழும் விநாயகனுக்கே!
கோவையில் விநாயகர் சிலைகளை ஏற்கனவே வைத்து வழிபட்ட இடங்களிலும் கூட அனுமதி மறுத்தது காவல்துறை. பல இடங்களில் முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது… முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.. குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் அவர்களின் பிரத்யேக பேட்டி, மற்றும் கண்கவர் விநாயகர் ஊர்வல புகைப்படங்கள்…
View More எல்லாப் புகழும் விநாயகனுக்கே!கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது… எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்… வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.
View More கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு