ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம்… சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார். மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை செய்து, யாகபூஜை முடிந்ததும், சீடன் முதல் நாள் இரவு கனவு கண்டாரா? என்று அறிந்து அதற்கேற்ப ஹோமங்கள் நடக்கும்…

View More ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து

இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களே தவிர அப்படி செய்யப்படும் இடம் சுத்தமாகவும், பளிச்சென்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யவும் வேண்டாமா?… சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம், சுற்றுப்புற முதல் பிரகாரம் இங்கெல்லாம் பார்த்தால், பகலிலேயே கண் தெரியவில்லை. காரணம் சுவர், மண்டபங்களின் மேற்கூரை, தூண்கள் எல்லாம் அங்கு தினசரி நடத்தும் ஹோமப் புகை படிந்து கன்னங்கரேன்று காட்சியளிக்கிறது….

View More ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது… எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்… வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.

View More கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு