பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்

மந்திரங்களில் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” – இந்த சுலோகத்தை வைத்து வழக்கம் போல இந்துமத வெறுப்பு பிரசாரங்கள் ஓடுகின்றன. ஆரிய பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக சூழ்ச்சி செய்து எழுதிவிட்டார்கள் இத்யாதி. இதைச் சரியான நோக்கில் புரிந்து கொள்வது முக்கியம்…

View More பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்

காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்

காயத்ரி ஜபம் என்றால் காயத்ரி மந்திரத்தை இயந்திரத்தனமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் “சொல்வது” என்றே பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர். அப்படிச் செய்வதும் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியது, உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவது என்றாலும், ஜபம் என்ற உளப் பயிற்சியில் அது ஆரம்பகட்ட நிலை மட்டுமே. அடுத்தடுத்த படிகளுக்குச் செல்லும் விழைவும் முயற்சியும் கொண்டிருப்பதே சிரத்தையான மாணவருக்கு அடையாளம்… எந்த உதட்டசைவும் இன்றி மனதிலேயே மந்திரத்தை மீண்டும் மீண்டும் இசைப்பது மானஸிக ஜபம் எனப்படும். இதுவே உத்தமமானது என்று கருதப்படுகிறது.. பாரம்பரியமாக காயத்ரி ஜபம் செய்யும் முறையில், ஜபத்தைத் தொடங்கும் முன்பு மந்திரத்தின் உருவமாக காயத்ரி தேவியின் சகுண தியானம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது…

View More காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்

மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்

மித்ரன் ஒளியையும் உறவையும் நட்பையும் வளர்க்கும் வேத தெய்வத்தின் பெயர். சூர்ய தேவனுடைய கண்ணாக இந்தத் தெய்வத்தின் சக்தி கருதப்படுகிறது. இந்தியப் பண்பாடு மட்டுமின்றி, பண்டைய பாரசீகப் பண்பாட்டிலும் ஜராதுஷ்ட்ர மதத்திலும் மித்ர என்ற இதே பெயருடன் இக்கடவுளை வழிபட்டனர்… “சத்தியத்தின் ஒளியினாலும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியினாலும் அமரரையும் மனிதரையும் தத்தம் தொழில்களில் புகுத்தி பொன்மயமான தேரில் சுற்றி வருகிறான் ஸவித்ரு தேவன். உலகங்களையெல்லாம் நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறான்”… ‘இமம் மே வருண’ என்ற இந்தப் புகழ்பெற்ற மந்திரம் தினந்தோறும் சாயங்கால சந்தியாவந்தனத்தில் உபஸ்தான (வேண்டுதல்) மந்திரமாக மேற்கு நோக்கி நின்று சூரியனைத் தொழுது கூறப்படுவது…

View More மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்

கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

மன்யுவே எங்களிடம் வருக – வலியர்களிலும் வலியன் நீ – உனது நட்பான தவத்துடன் இணைந்து – எமது பகையை வென்றிடுக – நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ – விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ – செல்வங்களை எமக்கு நல்கிடுக… கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. ‘ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்’ (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி க்வேதம் பத்தாம் மண்டலம் 83வது சூக்தம், ரிஷி தாபஸ மன்யு. மொழியாக்கம் எனது…

View More கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம்… சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார். மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை செய்து, யாகபூஜை முடிந்ததும், சீடன் முதல் நாள் இரவு கனவு கண்டாரா? என்று அறிந்து அதற்கேற்ப ஹோமங்கள் நடக்கும்…

View More ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

தவ முனிவனின் தமிழாகமம்

திருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்… ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா.? இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்… சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே அறியலாம். ஒரு சில ஆகமங்கள் தவிர இன்னும் பல அச்சேறவில்லை. அச்சேறிய ஆகம நூல்களிலும் இருக்கிற பாடபேதம், பிற்சேர்க்கை, விளக்க குறைவு, பொருந்தாத சொற்கள் என்று நீண்ட ஆய்வுகள் நடந்ததாக அறிய முடியவில்லை…

View More தவ முனிவனின் தமிழாகமம்

ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்

ஆலமரத்தைத் தன்னுள் அடக்கிய விதை போல, இந்து ஞான மரபின் வளர்சிதை மாற்றங்களுக்கான கூறுகள் ரிக்வேதத்திலேயே உருவாகத் தொடங்கிவிட்டன… அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன்… அனைத்து இந்தியர்களின் தொல்மூதாதைகளான ரிஷிகள் வளர்த்த அக்னியே வேள்வித் தீயாக, ஆசைத் தீயாக, சக்தித் தீயாக, உயிர்த் தீயாக, அறிவுத் தீயாக, கலைத் தீயாக, யோகத் தீயாக, ஞானச் சுடராக பல்வேறு தோற்றம் கொண்டு வளர்ந்து இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது…

View More ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2

“வேத முதல்வன்” என்று திருமாலைக் கூறியதற்குப் மறைவழியும், தத்துவார்த்தமாகவும், புராணச் செய்தி வழியும், உலகவழக்குப்படியும் பல விதமாக விளக்கம் காண இயலும். இத்தொடரில் வந்துள்ள முதற்பகுதியைப் போலவே, வரப்போகும் மற்ற பகுதிகளைப் போலவே, இவ்வனுபவங்களுக்கான அடிப்படை மரபினைச் சங்கநூலிலும் இடைக்காலக் காப்பியங்களிலும் கண்டுவிட்டு[..]

View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2

போகியை யோகி எனல்

உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.

View More போகியை யோகி எனல்

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது… காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது… ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை.

View More மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்