ஏழுஸ்வரங்களால் ஆன சஞ்சீவி மலை, ஐந்திணைகளுக்கும் பாடல் கொடுக்கும் அற்புதம் இளையராஜா. இந்த வழி நெடுக காட்டுமல்லி பாடல், ராஜாங்கத்தில், இன்னொரு முல்லை நிலப்பாடல்.. எண்பது வயதான இளையராஜா இப்படி எழுதி, இசையமைத்து பாடுகிறார். காட்டு மல்லி வாசம் போல இந்த நாட்டை இந்தப் பாடலால் மணக்கச் செய்திருக்கிறார் ராஜா…
View More வழிநெடுக காட்டுமல்லி: இசைஞானியின் மாயம்Tag: திரைப்பட இசை
மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்
இசையால் தோய்த்து எடுத்திருக்கிறார் இந்தப் புதினத்தை. தி.ஜா.வின் எழுத்துக்களை, கற்பனையை ஸ்வரமாக்கி வரமாக்கி வைத்திருக்கிறார்.. பாபுவை கண்டுபிடித்த யமுனா அவனுடன் இணையும் பொழுது வரும் வயலின் கூட்டம், மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை கமகத்துடன் கமகமவென்று இசை வாசனை வீசைசெய்வது தெய்வீகம்… இளையராஜாவின் இசை – தி.ஜானகிராமனின் மோகமுள்ளுக்கு கிடைத்த பாக்கியம், “பொன்னியின் செல்வன்” தவறவிட்ட மகுடம்…
View More மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்இளையராஜா @ கூகிள்
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார் என்றார். அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார்….
View More இளையராஜா @ கூகிள்அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்
எண்ணத்தில் ஏறி எப்போது நினைத்தாலும் அவரது எண்ணற்ற பாடலொன்றால் எண்ணம் முழுதும் நிரப்புகின்ற பெரும் இசையாற்றலுக்குச் சொந்தக்காரர்… சரஸ்வதியின் ஒரு சாயலை நமக்குக் காட்டிய பெருமகன் இவர். தன் திறமைக்கு ஏற்ப புகழும் பொருளும் பெயரும் ஈட்டி தமிழக கோடானு கோடி மனங்களில் இடம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர். வாழ்கிறவர்… மதுரையில் சௌராட்டிரக் குடும்பத்தில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் மகனாகப் பிறந்த சௌந்தரராஜன், பிரபல வித்துவான் பூச்சி ஶ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றவர்…. ஒரு நிகழ்ச்சியில் பழம்பெரும் இயக்குனர் ஒருவர் சௌந்தரராஜனைப் பற்றி இப்படிச் சொன்னார் – சௌந்தரம் என்றால் அழகு ராஜன் என்றால் அரசன், இவர் அழகாக பாடுபவர்களில் அரசன்…
View More அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா
காட்சி பூர்வமாகவும், தொழில் நுட்ப நேர்த்தியிலும், நடிப்பிலும், இசையிலும், கதை சொல்லப் பட்ட உத்தியிலும், நடிப்பிலும், வரலாற்றை நேர்த்தியாகவும் உண்மையாகவும் சொன்ன விதத்திலும், கலை நேர்த்தியிலும், உன்னதமான இயக்கத்திலும், ஒருங்கிணைப்பிலும் இன்னும் எண்ணற்ற விதங்களிலும் இந்த பழசி ராஜாவின் வரலாறு ஒரு உன்னதமான சினிமா அனுபவமாக உருவெடுத்துள்ளது. இது போன்ற சினிமாக்கள் ஒரு நூற்றாண்டில் ஒரு முறையே உருவாகும் அபூர்வமான கலைப் படைப்புக்கள்.
View More வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமாநினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்
வயலின் மேதை குன்னக்குடி திரு. வைத்தியநாதன் இசையமைத்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’ என்ற தேனினும் இனிய பக்திரசம் சொட்டும் பாடல்களைக் கேட்டு உருகாத தமிழ் நெஞ்சங்கள் இருந்திருக்க முடியாது. பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன்.
இந்துக் கடவுள்களின் மேன்மையையும், புராண பாத்திரங்களையும், தம் திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டுசென்று பெரும்புகழ் பெற்ற திரு. ஏ.பி. நாகராஜன். தன் படங்களுக்கு குன்னக்குடி அவர்களின் இசைத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். தனது வெற்றிப் படமான ‘வா ராஜா வா’வில் குன்னக்குடி வைத்தியநாதனை வெற்றிகரமான திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார். அதில் வரும் ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா’ போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ஏ.பி.என். அவர்கள் தயாரித்த ‘கண்காட்சி’, ‘திருமலை தென்குமரி’, ‘அகத்தியர்’, ‘மேல்நாட்டு மருமகள்’ போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து மக்களிடையே ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் அறியப்பட்டார் குன்னக்குடி வைத்தியநாதன்…
View More நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்