கோவில் முன்பு தேரோட்டத்துக்காக அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தேர் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 வீடுகள் தீப்பற்றி எரிந்தன… இந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது…
View More விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்Tag: தேர்த் திருவிழா
பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்
நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன… ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன? தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?….
View More பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்