அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்… ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான மைனாரிடி அரசை நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்த ஒரே காரணம் சோவும், சுப்ரமணியம் சுவாமியும் கொடுத்த அழுத்தம் மட்டுமே…
View More சோ: சில நினைவுகள் – 3Tag: நடுநிலைமை
சோ: சில நினைவுகள் – 2
என் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அதற்கெதிரான போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக அவரது செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது… தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வந்தவர்… மாநிலத்தில் எம் ஜி ஆரின் மறைவு, மத்தியில் ராஜீவின் தோல்வி, வி பி சிங்கின் ஆட்சி என்று இந்தியா மீண்டும் ஒரு பெரும் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழப்பமான சூழலில் அரசியல் தெளிவு துக்ளக் மூலமாகவே அளிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. இந்த சமயங்களில் சோ அவரது உச்சத்தில் செயல் பட்டு வந்தார்…
View More சோ: சில நினைவுகள் – 2சோ: சில நினைவுகள் – 1
கிட்டத்தட்ட 46 வருடங்களாக என்னுடன் தொடர்ந்து நெருக்கமாக வருபவர் சோ. என் சிந்தனைகளை கருத்துக்களை ஆளுமையை இன்று நான் எழுதுவதை அனைத்தையுமே ஆக்ரமித்தவர் சோ… ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய வாஷிங்டனில் நல்லதம்பி போன்ற தொடர்கள் தி மு க வின் முட்டாள்களையும் ஊழல்களையும் கிழிப்பவையாக இருந்தன. வட்டம், மாவட்டம் என்று தோளில் ஆட்டுக்கள்ளன் துண்டுடன் இரண்டு தலைக்குப் பதிலாக மூளையில்லாத தலைகளைக் குறிக்கும் வகையில் இரண்டு வெறும் முட்டைகளுடன் கார்ட்டூன்கள் வரும். ஆரம்ப இதழ் துவங்கி கழுதை துக்ளக்கில் அட்டைப் படம் முதல் உள்ளே உள்ள கார்ட்டூன்கள் வரையிலும் இடம் பெறும்.எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விமர்சிக்க சோ மறுத்து விட்டார். என்று இந்திராவை விமர்சிக்கும் சுதந்திரம் எனக்கு கிடைக்கிறதோ அன்று நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று சொல்லி விட்டார்…
View More சோ: சில நினைவுகள் – 1இரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று கொதிக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம்கள் அமைப்புகள், ஊடகங்கள்… கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான இவர்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. ஆனால் உண்மையிலேயே இவர்கள் இப்படித் தானா என்று கொஞ்சம் தேடிப் பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் முற்றாகக் கலைந்துவிடுகிறது… 2008ல் தினமலர் திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகள் இதழ் அலுவலகத்தில் புகுந்து கடும் வன்முறையில் ஈடுபட்டார்கள். விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எல்லா தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். தியேட்டர்கள் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.தமிழகம் முழுவதும் அராஜகம் நடந்தது….
View More இரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?
தேர்தல் சமயத்தி;ல் புதிய தலைமுறை டி வி கம்பெனியின் ஓனர் பச்ச முத்து பா ஜ க கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். அப்பொழுது தேர்தலுக்கு முன்பாக இந்த டி வி ஒரு அயோக்கியத்தனம் செய்தது… கேவலமான பொறுக்கித்தனமான ரவுடித்தனத்தை வளர்க்கும் ஒரு டி வி இது. இதன் ஓனர் பச்சமுத்துவின் பேரில் ஏராளமான ஊழல் ,மற்றும் ரேப் புகார்கள் உள்ளன. அதற்காக அவரை விசாரிக்க சி பி ஐ அலுலவகத்திற்கு அழைத்த பொழுது இந்த மீடியா ஆட்கள் போய் அவரை வேறு எவரும் படம் எடுக்க முடியாத வண்ணம் மறைத்து ரவுடித்தனம் செய்தார்கள்…இந்த டி வியின் முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நபர்கள் அனைவருமே கடுமையான இந்து வெறுப்பு உடையவர்கள். கம்னியுஸ்டு மற்றும் திக நிலைப்பாடு உடையவர்கள். அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள். இவர்களினால் எப்படி நடுநிலையான நிகழ்ச்சிகளை அளிக்க முடியும்?…இவர்களின் பத்திரிகையில் முன்பு இணையத்தில் உள்ள பெண்களின் படங்களை எடுத்து நிர்வாணமாக்கி காமக் கதைகள் எழுதி அவர்களை மிரட்டிக் கொண்டிருந்த ஒரு பொறுக்கியைத்தான் நிருபராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்….
View More ‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1
1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், டிச. 6 -ல் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை. [….] 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.
View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1