இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பிரம்மாண்டமானதாக மாற்றியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலில், தயாரிப்புப் பணிகளில் சாமானிய முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெண்களே பெருமளவு ஈடுபட்டுள்ளனர். 2003ல் பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டன. பட்டத் தொழிலின் தரத்தை உயர்த்துவது, சந்தைப் படுத்துவது மற்றும் விளம்பரம் செய்வது, தொழிலுக்கான நிதியை உருவாக்குவது இவை இக்குழுக்களின் வேலைகள்… அங்கு அன்று கண்ட பல விசயங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தன. ஒரு குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள படிப்பறிவு குறைந்த சாதாரணப் பெண்கள், அமைச்சர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் தங்களின் சிரமங்களை மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறினர்….
View More மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்Tag: பட்டம்
நகரம் நானூறு – 1
“நானும் இரா முருகனும் நகரக் காட்சிகளை நானூறு வெண்பாக்களாகத் தீட்டுவதாகத் திட்டமிட்டோம். நான் எழுதியவற்றை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்வரையில் குழுக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இடையில் நின்று போயிருந்த இந்த முயற்சியை இப்போது தொடர்கின்றேன். ஒரே ஒரு வித்தியாசத்துடன். எந்தக் காட்சி என்னை எழுதத் தூண்டியதோ அந்தக் காட்சியின் புகைப்படத்தையும் இணைக்கிறேன். நான் எடுத்த படங்கள்தாம்.”
View More நகரம் நானூறு – 1