திராவிட தேச மன்னர்கள் வேத தர்மத்தை பின்பற்றினார்களா? ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 8…
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 5Tag: பாண்டியர்கள்
தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3
குலசேகர பாண்டியனுக்கு எதிரான வெற்றிகள் அனைத்திற்கும் சிங்கள தளபதிகளே காரணமாக இருந்தார்கள். இருப்பினும் பாண்டிய அரியணை ஏற்றப்பட்ட வீரபாண்டியன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், பாண்டிய பிராந்தியங்களின் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாதவனாக இருந்தான். குலசேகர பாண்டியன் தனது உறவினர்களான இரண்டு கொங்கர்களின் உதவியைப் பெற்றதாக மஹாவம்சமே கூறுகிறது….
View More தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2
வெற்றி பெற்ற சிங்களப்படை பின்னர் மதுரையை நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றுகிறது. கொலையுண்ட வீரபாண்டியனின் மகனை பாண்டிய நாட்டுக்கு பொறுப்பாளனாக்குகிறது சிங்களப்படை. அதனைத் தொடர்ந்து, குலசேகர பாண்டியனுக்கு உதவிகள் செய்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் சிங்களப்படைகளுக்கு அடிபணிகிறார்கள்.. லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். இப்படியாக இலைங்கைப் போர் வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறுகிறது இலங்கை மஹாவம்ச வரலாறு. எனினும், இந்த வரலாறு முழுமையான ஒன்றல்ல. இலங்கையரின் நோக்கில் எழுதப்பட்ட ஒருதலைப்பட்சமான இந்த வரலாறு ஒரு பெரும் காதையைப் போல எழுதப்பட்ட ஒன்று. அதனைக் குறித்து தொடர்ந்து காண்போம்….
View More தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1
பொதுயுகம் 1170-71 காலகட்டத்தில் இருவேறு பாண்டியர்கள் மதுரையின் அரியணைக்காக மோதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருந்தார்கள். குலசேகர பாண்டியன் வலிமையுடன் இருந்தததால் எந்தேநேரத்திலும் தான் ஆட்சியை இழக்க நேரிடலாம் என்று அஞ்சிய பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யுமாறு இலங்கையின் அரசனான பராக்கிரமபாகுவுக்கு வேண்டுகோள் விடுத்தான்.. இலங்கையிலிருந்து லங்கபுர தண்டநாத தலைமையில் ராமேஸ்வரத்தில் வந்திறங்கும் சிங்களப்படைகள் அங்கு பாண்டியப்படைகளுடன் போரிட்டு வெற்றிகொண்டு ராமேஸ்வரத்தைக் கைப்பற்றுகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாம்பனுக்கு மிக அருகில், ராமேஸ்வரக் கடலுக்கு நான்கு காத தொலைவிலிருக்கும் குண்டக்கல்லைக் கைப்பற்றுகிறார்கள்.. நெட்டூரில் தனது தலைமையகத்தை அமைத்துக் கொண்ட தளபதி லங்கபுரவிற்கு கொலையுண்ட பராக்கிரம பாண்டியனின் உயிர்தப்பிய மகன் ஒருவன் கேரளத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அவனது பெயரும் வீரபாண்டியன். லங்கபுர உடனடியாக தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி வீரபாண்டியனுக்குத் தகவல் அனுப்பி வைக்கிறார்…
View More தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்
யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார்… மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது.
குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை…
அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அதைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்… தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்…
View More அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்திபாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1
கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோ மீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத் துவங்குகிறேன்…. தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்… பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என காரவேலர் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கிறார்….
View More பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1