அடிப்படையில் இது சபிக்கப் பட்ட மானுடர்களின் வலியைப் பேசும் திரைப்படம். பசியின் வலி. அடக்கு முறையின் வலி. வேர் பிடுங்கப் பட்டு ஊரைத் துறந்து பிழைப்பு தேடச் செல்வதன் வலி. அடிமைத் தனத்தின் ஊமை வலி.. டாக்டரும் வெள்ளைக்கார மனைவியும் ஏசு பாட்டுக்கு குத்துப்பாட்டு நடனம் ஆடுகிறார்கள். ரொட்டிகளை வீசியெறிகிறார்கள். தொழிலாளர்கள் முண்டியத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்குகிறார்கள்… கொள்ளை நோய்களின் போது கிறிஸ்தவ பாதிரிகள் – டாக்டர்கள் கூட்டணி எப்படி நடந்து கொண்டது என்பது பற்றி அவர்களே எழுதி வைத்த பல பிரிட்டிஷ் காலகட்டத்திய குறிப்புகள் உள்ளன. ஒரு திரைப்பட இயக்குனராக, மதமாற்றம் குறித்த காட்சிகளையும் இந்தப் படத்தில் இணைப்பதற்கு அவருக்கு முழு படைப்புச் சுதந்திரம் உள்ளது…
View More ’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வைTag: பாலா
நான் கடவுள்: பட விமர்சனம்
இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தமிழ்ப் படம்…
தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காக தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை…
View More நான் கடவுள்: பட விமர்சனம்