’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை

paradesi-1பாலாவின் ’பரதேசி’ தமிழ்த் திரை வரலாற்றில் வித்தியாசமான ஒரு திரைப்படம்.

இது ஏதோ வழக்கமான அலங்காரத்துக்காகச் சொல்லப் பட்டதல்ல. 1930-40களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நரக வாழ்க்கையைக் காட்டும் படம் இது என்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். தென் தமிழக கிராமங்களில் இருந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் வால்பாறை, மேகமலை போன்ற நீலகிரியின் தேயிலைத் தோட்டங்களில் மீள முடியாத கொத்தடிமைகளாக ஆகி, துயர வாழ்வில் உழல்வதைப் பற்றிப் பேசும் படம் இது. தமிழ்த் திரைப்படங்களில் வழக்கமாக வலம் வரும் மசாலா அடிதடி காதல் கதைகளுக்கு மத்தியில் வரலாற்றின் ஒரு துயர அத்தியாயத்தை குறைந்த அளவு வணிக சமரசங்களுடன் திரையில் பதிவு செய்திருப்பது என்பதே ஒரு சாதனை. இந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குனர் பாலாவையும் இந்தத் திரைப்படத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாலாவின் படங்கள் அனைத்தும் மானுட வாழ்வின் இருண்ட பக்கங்களையே சித்தரிப்பவை என்பது தெரிந்தது தான். பொதுவாக விளிம்பு நிலை மக்கள், மனப் பிறழ்வுகள், அதீத வன்முறை ஆகிய அம்சங்கள் அவற்றில் தவறாமல் இடம் பெறும். இந்தப் படத்திலும் அவற்றில் சில இருந்தாலும் அடிப்படையில் இது ச்பிக்கப் பட்ட மானுடர்களின் வலியைப் பேசும் திரைப்படம். பசியின் வலி. அடக்கு முறையின் வலி. வேர் பிடுங்கப் பட்டு ஊரைத் துறந்து பிழைப்பு தேடச் செல்வதன் வலி. அடிமைத் தனத்தின் ஊமை வலி. மானம் கொள்ளை போவதை உணர்ந்தும் வாழ்ந்திருப்பதன் வலி, ஆத்மா அறுவடை செய்யப் படுவதை மௌனமாக சகிப்பதன் வலி. மீண்டெழ எந்தத் திராணியும் அற்றுப் போய் மீண்டும் மீண்டும் சுரண்டப் படுவதன் வலி – இந்த வலிகள் தான் படம் முழுவதும் வியாபித்திருக்கின்றன.

படத்தின் ஆரம்பத்தில் “Inspired by the novel Red Tea” என்று வருகிறது. 1940 முதல் 1960 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவின் தேயிலைத் தோட்டங்களில் சுகாதார அதிகாரியாகப் பணியாற்றிய பி.ஹெச்.டேனியல் தனது அனுபவங்கள் மற்றும் கேட்டறிந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய ஆங்கில நாவல் ‘ரெட் டீ’. தமிழில் ‘எரியும் பனிக்காடு’ (விடியல் பதிப்பகம்) என்ற பெயரில் இந்த நாவல் சமீபத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. சில விலகல்கள் தவிர்த்து திரைப்படத்தின் பிற்பகுதி முழுவதும் நாவலைத் தழுவியே உள்ளது என்று நாவலைப் படித்தவர்கள் கூறுகிறார்கள். படத்தின் முற்பகுதியில் வரும் கிராமியச் சித்தரிப்புகளும் சில சம்பவங்களும் நாஞ்சில் நாடனின் ‘இடலக்குடி ராசா’ சிறுகதையின் பிரதிபலிப்புகள். மீதமுள்ளவை இயக்குனர் பாலாவின் திரைக்கதையில் உதித்தவை. ‘நான் கடவுள்’ திரைப்படமும் இதே போல ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் மற்றும் வேறு சில கதைச் சரடுகளின் கூட்டுக் கலவையாக இருந்தது என்பது நினைவு வருகிறது. இது பாலாவின் திரைக்கதை ‘பாணி’ போலும்!

நாஞ்சில் நாடன் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அந்தக் காலத்திய கிராமிய வசைகள், எகத்தாளங்கள், வம்புகள் மட்டுமல்ல, தேயிலைத் தோட்டத்துக் கொடும் வாழ்க்கையின் அதிர வைக்கும் கணங்களும் தேர்ந்த எழுத்தாளரான நாஞ்சில் நாடனின் வசனத்தில் அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவாகியுள்ளன.

Bala-film-director

காலனியம் எப்படி அடுக்கடுக்காக அடிமைத் தனத்தை வளர்த்து செயல்படுத்துகிறது என்பதன் தெளிவான சித்திரம் திரைப்படத்தில் கிடைக்கிறது. மேலடுக்கில் துரைமார்கள், எஸ்டேட் அதிபர்கள், அதற்குக் கீழடுக்கில் கங்காணிகள், அவர்களின் உதவியாளர்கள். அதற்கும் கீழே இவர்களால் சக்கையாகப் பிழியப் படும் ஆண், பெண், குழந்தைக் கூலிகள். தனது கூலிகளை மிருகங்களுக்கும் கீழாக நடத்தி ஏய்த்துக் கொண்டு ஒரு குட்டி மகாராஜா போல கங்காணி வலம் வருகிறான். அதே கங்காணி, துரையின் பிரம்படிகளை மறூபேச்சு இல்லாமல் துடிதுடித்து முதுகில் வாங்கிக் கொள்கிறான். இரவில் துரையின் மாளிகை வாசலில் மண்டியிட்டு ஸேவ் மீ மை லார்ட் என்று மன்னிப்பு பிச்சை கேட்கிறான். தனது சொந்த நாட்டுப் பெண்ணை அவள் கணவனின் கண்முன்னால் துரைக்குக் கூட்டிக் கொடுக்கும் அயோக்கியனாக ஆகிறான்.

படம் நெடுகிலும் கவித்துவமான காட்சிகளுக்கும் உணர்வெழுச்சிகளுக்கும் குறைவில்லை. ஊரைவிட்டுப் போகும் கூட்டம் வழியில் தென்படும் குளத்தில் குனிந்து மிருகங்களைப் போலத் தண்ணீர் குடிக்கும் காட்சியாகட்டும், தேயிலைத் தோட்டத்திற்கு வந்து சேர்ந்த முதல் நாள் காலையில் மரண ஓலம் போல அலறும் சங்கொலி கேட்டு கருத்தகண்ணி வீறிட்டு எழும் காட்சியாகட்டும், தப்பிக்க முயன்ற குற்றத்துக்காக கணுக்கால் துண்டாடப் பட்டு குற்றுயிராக வரும் அதர்வாவைப் பார்த்து அதுவரை அவனைக் குடிலுக்கு வெளியே படுக்க வைத்த தன்ஷிகா ஓடிவந்து கதறி மருந்து போடுவதாகட்டும் – இப்படி பல காட்சிகள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாகத் தைத்து விடுகின்றன.

ஹே ராம் படத்திற்குப் பிறகு தமிழில் எடுக்கப் பட்டுள்ள சிறந்த வரலாற்றுக் காலகட்டத் திரைப்படம் (period film) பரதேசி என்று சொல்லலாம். சில செயற்கைத் தனங்கள் இருந்தாலும், 1930களின் தென் தமிழக கிராமமும் மக்களும் அதன் சூழலும் ஓரளவு நம்பகத் தன்மையுடன் படத்தின் முற்பகுதியில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. செழியனின் ஒளிப்பதிவு பல சிறப்பான காட்சிப் படிமங்களை உருவாக்கியிருக்கிறது. அதர்வா முரளி, அவரது பாட்டியாக வரும் மூதாட்டி, வேதிகா, தன்ஷிகா, கங்காணியாக நடித்துள்ள ஜெர்ரி, டாக்டர் பரிசுத்தமாக நடித்தவர் அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளார்கள். பின்னணி இசை படத்தின் போக்குடன் இயைந்ததாகவே உள்ளது. ”யாத்தே காலக் கூத்தே” பாடலும் படத்தின் இறுதிப் பாடலும் (பத்ராசல ராமதாசர் பாடலின் ராகத்தில் அமைந்தது) நெஞ்சைப் பிழிகின்றன. இவை போக, பின்னணியில் வரும் மற்ற சோகப் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம். அவை மனதில் நிற்கவே இல்லை.

கலாபூர்வமாக படத்தில் உள்ள நிறை குறைகளை சுட்டிக் காட்டி, ஏற்கனவே திரைப் பட ரசிகர்களும் விமர்சகர்களும் எழுதிவிட்டார்கள் (பார்க்க: எம். டி.முத்துக் குமாரசுவாமி விமர்சனம்). இடம், காலம் குறித்த சில தர்க்கபூர்வமான தவறுகள், மிகை நாடகீய காட்சிகள் (melodrama), சில இடங்களில் இம்சைப் படுத்தும் பின்னணி இசை போன்ற குறைகள் இருந்த போதிலும் கூட, பரதேசி நெஞ்சைத் தொடும் ஒரு திரைப்படமாக இருக்கிறது.

படத்தின் முடிவும் கடைசியில் முடிவறாத சோகத்தையே சொல்வதாக அமைந்திருக்க வேண்டுமா என்று ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதற்குப் பதிலாக, இறுதி டைட்டிலுக்கு முன் 2-3 நிமிடங்களுக்கு கூலிகள் தங்கள் மீட்புக்காக நடத்திய போராட்டங்களை கறுப்பு வெள்ளை படங்களாக காண்பித்து, எப்படி அந்த இருளிலிருந்தும் அவர்களுக்கு விடிவு ஏற்பட்டது என்று சொல்லியிருக்கலாம் (Schindlers List போன்ற படங்களில் இப்படி செய்திருப்பதைப் பார்க்க முடியும்). அதுவே வரலாற்று உண்மையும் கூட. பாலாவின் திரைப்பட முத்திரைக்கு அது ஒத்துவராது என்பதால் இப்போதுள்ள படியே, மீட்பாக அன்றி வலியே அதன் அடிநாதமாக படம் முடிந்திருக்கிறது.

பரதேசி படத்தின் அரசியல் குறித்தும், இயக்குனர் பாலா மீது சொல்லப் படும் குற்றச் சாட்டுகள் குறித்தும் எனது பார்வையைச் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது.

படத்தின் முற்பகுதியில் உள்ள கிராமச் சித்தரிப்பில் கிராமத்தின் சாதிய அடுக்கு காண்பிக்கப் படுவதே இல்லை. கூலிகளாக செல்பவர்கள் தலித்கள் (கங்காணிகளில் சிலரும் தலித்களே) என்பது வெளிப்படையாக சொல்லப் படுவதில்லை என்ற குற்றச் சாட்டு வைக்கப் படுகிறது.

Dhansika, Adharvaa in Paradesi Movie Stills

திரைப்படம் என்பது ஒரு வெகுஜன ஊடகம். தணிக்கைக்கு உட்பட்டதொரு ஊடகமும் கூட. எனவே நாவல்களில் உள்ளது போன்ற தீவிரமான, யதார்த்தமான உண்மையான சமூக சித்தரிப்புகள் திரைப்படங்களில் சாத்தியமல்ல. அதுவும், தமிழகத்தில் உள்ளது போன்ற சூழலில், வெளிப்படையான சாதி அடையாளங்களை உரையாடல்களில், காட்சிகளில் காண்பிப்பது பிரசினைகளை உண்டாக்கலாம், தணிக்கை செய்யவும் படலாம். அதனால் அது தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்று கருத இடமுள்ளது. ஆயினும் நடிகர்களின் உடல் மொழி, சமிக்ஞைகள் போன்றவற்றை வைத்து படம் பார்ப்பவர்கள் சாதியத்தை ஊகித்து விட முடியும்.

ஊரை விட்டுப் போகும் அளவுக்கான கடும் பஞ்சம் கிராமத்தில் நிலவுவது அழுத்தமாகக் காண்பிக்கப் படவில்லை என்பது தான் இதை விட அர்த்தமுள்ள குற்றச் சாட்டு. அத்தகைய கிராமங்களின் வழக்கமான வறுமையும் அதே சமயம் குதூகலமான வாழ்க்கையும் கொண்ட ஒரு சூழலையே படம் சித்தரிக்கிறது. இதற்கு மாறாக, பஞ்சத்தின் கொடுமையை, அவதியை நேரடியாகக் காண்பித்திருக்கலாம்.

அடுத்த குற்றச் சாட்டு படத்தின் பிற்பகுதியில் வரும் மதமாற்ற டாக்டர் தம்பதிகள் பற்றியது. உண்மையில் இது தான் “முற்போக்கு வாதிகளை” மிகக் கடுமையாகக் கோபப் படுத்தியுள்ளது என்று தோன்றுகீறது. அவர்கள் அனைவரும் வரிசையாக இந்த ஒரே காரணத்தை வைத்து பரதேசி திரைப்படத்தையும், பாலாவையும் திட்டி நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன உள்ளது அந்த சித்தரிப்பில்?

தோட்டத்தில் விஷக்காய்ச்சல் திடீரென்று பரவுகிறது. கொத்து கொத்தாக கூலிகள் செத்து விழுகிறார்கள். அங்கேயே உள்ள மருத்துவப் பயிற்சியற்ற லோக்கல் ”டாக்டர்” குரிசு செய்வதறியாது தவிக்கிறார். பார்வையிட வருகின்ற டாக்டர் பரிசுத்தம் முதலில் சில சுகாதார நடவடிக்கைகளை எடுக்கிறார். பிறகு கூலிகளைக் கொத்துக் கொத்தாக கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுவதற்காக ஏசு அளித்த நல்வாய்ப்பாகவே கொள்ளை நோயினைப் பயன்படுத்திக் கொள்கிறார். அவரும் அவருடைய வெள்ளைக்கார மனைவியும் கிறீஸ்மஸ் அன்று “தன்னைத் தானே” என்று ஒரு ஏசு பாட்டுக்கு குத்துப்பாட்டு நடனம் ஆடுகிறார்கள். ரொட்டிகளை வீசியெறிகிறார்கள். தொழிலாளர்கள் முண்டியத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்குகிறார்கள். வெள்ளைக் கார மனைவி பீதியடைந்து கிடக்கும் கூலிகளின் நெற்றியில் சிலுவை வரைந்து அவர்களை ‘கடைத்தேற்றுகிறார்’… ஊழியம் முடித்துக் களைத்துப் போன தம்பதியர் அன்றிரவு வெள்ளையர்களின் படாடோப உல்லாச விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.

கிறிஸ்தவராக இருந்தாலும் டாக்டர் பரிசுத்தம் வெள்ளையர்களால் அருவருப்புடனேயே பார்க்கவும் நடத்தவும் படுகிறார். அங்கு அடிமைத் தனத்தின் இன்னொரு சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.

”டாக்டர் பரிசுத்தம்” என்ற பாத்திரத்தின் மூலமாக இந்த நாவலை எழுதிய டேனியலையே பாலா அவமதித்திருக்கிறார் என்று பாலா மீது குற்றம் சாட்டுகிறார்கள் சில விமர்சகர்கள். நாவலின் படி அதில் வரும் டாக்டர் ஆபிரகாம் என்ற பாத்திரம் கூலிகளுக்கு மருத்துவ சேவை செய்வதாகவே சித்தரிக்கப் பட்டுள்ளார்; அந்தப் பாத்திரம் நாவலாசிரியரின் சாயலைக் கொண்டே படைக்கப் பட்டது. எனவே இந்தப் படத்தில் வரும் டாக்டர் பாத்திரம் நாவலாசிரியர் டேனியலை அவமதிக்கிறது. இது பச்சைத் துரோகம் என்று தொடர்பு படுத்துகிறார்கள் குற்றம் சாட்டுபவர்கள். இது நாவலை மிக மோசமாகச் சிதைப்பதாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

paradesi-3

முதலில், நாவலை அப்படியே படமாக்க வேண்டும் என்பது இயக்குனர் பாலாவின் நோக்கம் அல்ல. இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு கூட்டுக் கலவை என்பதை முன்பே பார்த்தோம். ஆனால் “inspired by” என்று போட்டதற்காகவாவது நாவலை முழுவதுமாக சிதைக்காமல் இருந்திருக்கலாம் என்ற வாதத்தில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் நியாயம் தான்.

பாலா திட்டமிட்டுச் செய்தது இது என்று நான் நினைக்கவில்லை. நாவலை எழுதிய டேனியல் நல்லவர், மனித நேயர், தொழிலாளர்களின் நிலை கண்டு இரங்கி அவர்கள் உரிமைகளைப் பெற சங்கம் அமைத்தவர். ஆனால், படத்தில் காண்பிக்கப் பட்டது போன்ற “டாக்டர்”களும் அதிகம் பேர் இருந்தனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இரண்டாவது வகை ஆசாமிகளை மட்டுமே இந்தப் படத்தில் சித்தரிக்க வேண்டி வந்தது துரதிர்ஷ்டம்.. ஆனால் இதை சமன் செய்ய, நல்ல டாக்டர், கெட்ட டாக்டர் என்று இரண்டு பாத்திரங்களை உருவாக்கியிருந்தால் படம் சிடுக்காகி இருந்திருக்கும்.

தேயிலை எஸ்டேட்களில் வேலை செய்த தலித்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப் பட்டார்கள் என்ற அப்பட்டமான வரலாறு நம் கண் முன்னே உள்ளது. பசியிலும் நோயிலும் சோர்விலும் துவண்டு கிடந்த கொத்தடிமைகளின் ஆத்மாவை எப்படி அறுவடை செய்தது கிறிஸ்தவம்? மதமாற்ற டாக்டர்களும் மிஷனரிகளும் உள்ளே புகுந்திராமல் அது எப்படி நடந்திருக்கும்? இந்த நாவலில் அது இல்லாமலிருக்கலாம்.. ஆனால் கொள்ளை நோய்களின் போது மற்ற எல்லா இடங்களிலும் கிறிஸ்தவ பாதிரிகள் – டாக்டர்கள் கூட்டணி எப்படி நடந்து கொண்டது என்பது பற்றி அவர்களே எழுதி வைத்த பல பிரிட்டிஷ் காலகட்டத்திய குறிப்புகள் உள்ளன.

உதாரணமாக, 1923ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட India and its Missions என்ற நூலில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு Spiritual Advantages of Famine and Cholera (“பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்”). இக்கட்டுரையில், பாண்டிச்சேரியின் ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆர்ச் பிஷப் எழுதுகிறார் –

“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது. நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை வற்புறுத்தி அழைத்து வர வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”

கிராமங்களிலும், நகரங்களிலுமே இத்தகைய நிலை இருந்தது என்றால், தேயிலைத் தோட்டங்களில் என்ன நடந்திருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.

அந்த மதமாற்ற நிகழ்வுகளையும் கட்டாயம் இந்தப் படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பாலா யோசித்திருக்கிறார் . ‘ரெட் டீ’ நாவலில் இல்லா விட்டாலும் அவர் வேறு ஏதாவது நூல்களில் இது குறித்துப் படித்திருக்கலாம். அல்லது போன தலைமுறை ஆட்களிடம் கேட்டிருக்கலாம். ஒரு திரைப்பட இயக்குனராக, மதமாற்றம் குறித்த காட்சிகளையும் இந்தப் படத்தில் இணைப்பதற்கு அவருக்கு முழு படைப்புச் சுதந்திரம் உள்ளது.

மதமாற்றம் குறித்த நிகழ்வுகளும் வர்ணனைகளும் ரெட் டீ நாவலில் ஏன் இல்லை என்று அடுத்த கேள்வி வருகிறது. அதைப் பற்றி நாம் ஒன்றும் விமர்சிக்க முடியாது. ஏனென்றால், அது நாவலை எழுதிய பி.ஹெச்.டேனியலின் படைப்பு சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்துவது போலாகும்.. அவரே ஒரு கிறிஸ்தவர் என்பதால் மதமாற்றமே தலித்களின் விடுதலைக்கான தீர்வு என்று முழுமையாக நம்பியிருந்திருக்கலாம், எனவே அது குறித்து மௌனம் சாதித்திருக்கலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது. காலனிய அரசாட்சியின் ஒட்டுமொத்தமான பரந்த சித்திரத்தை வைத்துப் பார்த்தால், ஒரு டாக்டராக, டேனியலே கூட மதமாற்ற சங்கிலியின் ஒரு கண்ணீயாக விளங்கியிருக்கிறார் என்று நமக்குப் புரியும்.

paradesi-4எனவே, பாலாவின் ஒரு தலைப் பட்சத்தை “துரோகத்தை” பேசும்போது, டேனியலின் ஒருதலைப் பட்சத்தையும் நாம் பேசித் தான் ஆக வேண்டும். படைப்புச் சுதந்திரம் என்று வரும்போது இருவரது படைப்புச் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும். ஆனால் விமர்சிக்கும் அறிவு ஜீவிகள் இதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இன்னொரு சாரார், மதமாற்றத்தைக் காண்பித்து கிறிஸ்தவத்தைக் கேவலப் படுத்துவதற்காகவே இந்தப் படத்தை பாலா எடுத்திருக்கிறார் என்று ஒரே போடாகப் போடுகிறார்கள்! இது மிகைக் கூற்று. பரதேசி படத்தில் அது ஒரு இழை, அவ்வளவே. அதுவும் மையமான இழை அல்ல. ஆனால் அந்த மதமாற்றத்தின் பின் இருந்த குரூரத்தை கோமாளித் தனமான பாத்திரங்கள் மூலம் சித்தரித்ததில் பாலாவின் கலைத்திறனும் கைவண்ணமும் தெரிகிறது. தமிழ் நாட்டில் சுவிசேஷக் கூச்சல் போடும் பல பாதிரிகளின் பிம்பத்தை இந்த கேரக்டரில் தமிழர்கள் இனி அடையாளப் படுத்தும் படி அது அமைந்து விட்டது. ஒருவேளை இது தான் குற்றம் சாட்டுபவர்களைக் கடுப்பேற்றுகிறதோ என்னவோ?

காலனியத்தின் குரூரம் என்பதும் அதன் விளைவுகளும் சாதாரணமானதல்ல. ஆக்கிரமிக்கப் பட்ட நாட்டின் வளங்களை நேரடியாக சுரண்டுவதுடன் மட்டும் அது நின்று விடுவதில்லை. ஆக்கிரமிக்கப் பட்ட மக்களினத்தின் கூட்டு மனதில் மிக மோசமான பிளவுகளையும், பரஸ்பர அவநம்பிக்கைகளையும், பகைமைகளையும், ரணங்களையும் ஆறாத வடுக்களாக விட்டுச் செல்கிறது அது. காலனியத்தின் பிடியிலிருந்து விடுபட்ட எல்லா தேசங்களிலும் சமூகங்களிலும் இந்த வடுக்களை ஆற்றுவதும், காலனிய அடிமை மனநிலைகளைத் துறப்பதும் நீண்ட காலச் செயல்பாடுகளாக நடந்து கொண்டே இருக்கும்.

ஒரு வணிக ரீதியான திரைப்படம் என்ற வகையிலேயே அது குறித்த வரலாற்று உணர்வை அளிப்பது தான் ’பரதேசி’யின் வெற்றி. அதுவே முக்கியமானதொரு படமாக இப்படத்தை ஆக்குகிறது.

79 Replies to “’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை”

 1. அற்புதமான விமர்சனம்.

 2. நான் பல மதம் மாறிய கிருத்துவர்கள், அவர்களுக்குள் சொல்லக் கேட்டிருக்கிறேன் : “இவர்களோ பிச்சைக் காரர்கள், இவர்களுக்கெதற்கு ஒரு சொந்த மதம்? ஒரு பரதேசியான இவர்களை மதம் மாற்றுவதில் என்ன தவறு?” என்று. ஒரு கிருத்துவரின் மின்னஞ்சலைப் படிக்க நேர்ந்ததில், உண்மையில் அவர்கள் மதம் மாறும்போது அன்பாக நடித்து மதம் மாற்றினாலும், உண்மையில் மேலே குறிப்பிட்ட, மதம் மாற்றப் படுபவர்கள் இழிவானவர்கள் என்ற மனப்பாங்கே அவர்களுக்கு மதம் மாற்றுவதற்கான மனோதரியமாக, தயக்கமின்மையாக அமைகிறது, என்பது புரிந்தது.

  அதை மிகச்சரியாக சொன்ன பாலாவிற்கும், அருமையான விமர்சனம் எழுதிய ஜடாயுவிற்கும் நன்றிகள்.

 3. பாலாயுக்கு முதலில் நன்றி! அதை மிகச்சரியாக சொன்ன பாலாவிற்கும், அருமையான விமர்சனம் எழுதிய ஜடாயுவிற்கும் நன்றிகள்.

 4. அருமையான விமரிசனம். தெளிவான விளக்கங்கள். நன்றி ஜடாயு

 5. படைப்புச் சுதந்திரத்தைப் பற்றிய உங்கள் வாதம் என்னை பொறுத்த மட்டில் மிகச் சரி. ‘inspired by’ அல்லது ‘based on’ என்று அறிவித்த பின் இயக்குனருக்கு நாவலின் படி முழுமையாக படத்தை அமைக்கவேண்டிய நிர்பந்தம் இல்லை. சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்து ஆஸ்கர் வென்ற ‘ஆர்கோ’ (Argo) விலும் இயக்குனர் இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி இருப்பார்.

  படத்தின் தொடக்கத்தில் அந்த வாசகத்தை வெளியிட்டிருக்காவிட்டால் பாலாவை வேறு விதமாகச் சாடியிருப்பார்கள்! தமிழ் சினிமாவில் ‘inspiration’ ஐ வெளிப்படையாக அறிவிக்கும் படைப்பாளிகள் மிகக் குறைவு. அதற்காகவே பாலாவைப் பாராட்டலாம்.

 6. அருமையான விமர்சனம் திரு ஜடாயு அவர்களே .
  சிறிது மனோதிடம் தேவைப்படுமோ இது போன்ற படங்களைப் பார்ப்பதற்கு -இருப்பினும் பார்க்க வேண்டும்.
  டீ குடித்துக்கொண்டே ஒரு முறை தொலைக்காட்சியில் ஊட்டி மலை காட்சியொன்றைப் பார்த்த போது தேயிலை பயிரிடும் முன் அங்கே இயற்கை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.
  அந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கை இத்தனை அவலம் நிறைந்ததாக இருப்பது நான் அவ்வளவாக அறியாத ஒன்று. நாம் பழகிக் கொண்டு விட்ட டீயில் இத்தனை வேதனை சரித்திரம் இருக்கிறது.
  இன்னொருவர் பூமியை ஆக்ரமிப்புக்காரர்கள் ஆளும் போது மண், மக்கள் எல்லாருமே தாள முடியாத பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
  பதிவு செய்த பாலாவிற்கு பாராட்டுக்கள்.
  ஆங்கிலேயர் பெண்கள் விஷயத்தில் மற்ற ஆக்ரமிப்புக்காரர்கள் போல அவ்வளவு மோசமல்ல என்று ஒருவர் சொன்னார்.
  நம்மை யாரும் கேட்க முடியாது என்ற ஆணவம் , அசுரத்தனமான ஆக்கிரமிப்பு குணம் இதில் அவர்களும் குறைந்தவர்கள் அல்ல என்றேன் நான். [அப்பட்டமாக தெரியா விட்டாலும் ]
  அதை மெய்ப்பிக்கிறது இதில் வரும் காட்சி-உண்மையில் நடந்திருப்பது தானே என்று எண்ணும் போது இதயம் வலிக்கிறது.
  அமெரிக்கப் பழங்குடி மக்களை பற்றிய ஒரு கட்டுரையில் அப்பெண்கள் -[உண்மையில் சிறுமிகள்] -மிக நட்பானவர்கள் என்று பூடகமாக ஒரு காலனியர் குறிப்பிடுகிறார்.
  நஞ்சை உள்ளே வைத்த வார்த்தைகள்.
  இது போன்ற படங்கள் ஒரு வித போதையில் ஆழ்ந்திருக்கும் தமிழர்கள் பார்க்க வேண்டிய ஒன்று.

 7. இது தொடர்பான ஒரு பேஸ்புக் விவாதத்தில் நான் எழுதியது.

  —-
  // ரொட்டிக்கு மதம் மாறியவர்களின் வாரிசுகள் என்ன ஆட்டம் போடுது பார் போன்ற பேச்சுக்கள் ,படங்கள் பேசுபவரின் கீழ்மைதனத்தை தான் காட்டுகின்றன // அத்தகைய வசைகளை யார் செய்திருந்தாலும் அதை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். கண்டிக்கிறேன். காலனிய காலத்தில் சுரண்டலால் மதம் மாற்றப் பட்ட ஏழை மக்களை அதற்காக வசைபாடுவதே குரூரம். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். மாறாக, கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியவர்கள் அ) கிறிஸ்தவ மத நிறுவன – காலனிய கூட்டணி ஆ) ஏழை மக்களின் உழைப்பை மட்டுமே சுரண்டி அவர்கள் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத இந்து உயர்சாதி வர்க்கங்கள். ஆனால், இதில் இரண்டாவதை மட்டுமே செலக்டிவ்வாக விமர்சிப்பதற்கு பெயர் நடுநிலைமை அல்ல. முதலாவதை விமர்சித்தாலே “கிறிஸ்தவ மதத்தை அவமதிப்பது” என்றும் ‘கிறிஸ்தவர்கள் புண்படுவார்கள்” என்றும் சொல்கிறீர்கள். இதன் மூலம் நம்மிடையே வாழும் கிறிஸ்தவ சகோதரர்களை காலனிய அடிமைத் தனத்தின் வாரிசுகள் என்று நீங்கள் தான் அவமதிக்கிறீர்கள். நானோ, பாலாவோ அல்ல.
  ———-

 8. நன்றி சாய் அவர்களே.

  // சிறிது மனோதிடம் தேவைப்படுமோ இது போன்ற படங்களைப் பார்ப்பதற்கு //

  ஆம்..மிகவும் இளகிய மனதுடையவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்ப்பது நலம்.

 9. மத எதிர்ப்பு வேறு,மத மாற்ற எதிர்ப்பு வேறு

  இரண்டாவது அப்பட்டமான சாதி வெறி

  நீ எப்படி பிறப்பால் உனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்யாமல் ,வேறு கடவுளை ஏற்று கொண்டு பாதிரியாராக,மருத்துவராக,செவிலியராக,ஆசிரியராக ஆக முடியும் என்ற வன்மம்
  மதம்,தொழில்,வசிக்கும் இடம் எதுவும் பிறப்பால் முடிவு செய்யபடுவது மாறும் போது முன்னேறிய நிலைக்கு சமூகம் முன்னேறும்..கிருத்துவத்தை தழுவிய பழங்குடியினர்,நாடர்கள்,வன்னியர்கள்,மீனவர்கள்,ஆதி திராவிடர்கள் அதற்க்கு சில ஆண்டுகளுக்கு அல்லது நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹிந்து மதத்தை தழுவிய அதே சாதியை சேர்ந்தவர்களை விட நல்ல நிலையில் உள்ளனரா அல்லது கீழே உள்ளனரா
  மத மாற்றம் எனபது தான் நியாயமாக ஆதரிக்க வேண்டிய ஒன்று .பிறப்பால் வந்த தொழிலையோ,இழிவையோ,உயர்வையோ ,கடவுளையோ பிடித்து தொங்கி கொண்டிருப்பது தான் இழிவான நிலை
  இஸ்லாமியர்கள் எவ்வளவு பேர் பஞ்சத்தால்,ரொட்டி துண்டுக்கு ஆசைப்பட்டு மதம் மாறினர் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
  மத மாற்றங்கள் இல்லாத ,அல்லது வெகு குறைவாக உள்ள நிலை தான் இஸ்லாமியர்களின் பெண் அடிமைத்தனம்,மத வெறி,அடிப்படைவாதத்திற்கு மிக முக்கிய காரணம்
  ஹிந்து மதத்தில் மத மாற்றம் மிக குறைவாக இருந்திருந்தால் நாமும் தாலிபான் கீழ் ,அல்லது அதே மனநிலை கொண்டவர்களின் கீழ் தான் வாழ்ந்து கொண்டிருப்போம்
  இன்றும் இந்தியா முழுக்க உள்ள அரசு நிறுவனங்கள்,பொதுத்துறை பொது தொழிற்சங்கங்களில்,தாழ்த்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்கங்களில் கிருத்துவத்தை தழுவிய மக்களின் பங்கு பிரதானம்.
  கடவுளின் தண்டனை என்று எதிர்த்து கேட்க்காமல் அனைத்தையும் சகித்து கொண்ட மக்களுக்கு வந்த வரப்ரசாதம் மத மாற்றம்.எதிர்த்து கேள்வி கேட்க்க முடியும் என்பதற்கு அடிப்படையே மத மாற்றம் தான்.
  தைரியமாக மதம் மாறிய முன்னோர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்றும் அன்று தொட்ட தொழிலாளர் இருந்த நிலையில் தான் பெரும்பான்மையானோர் இருந்திருப்போம்

 10. கிறித்தவப்பாதிரியார் திரு பூவண்ணன்
  “மத எதிர்ப்பு வேறு,மத மாற்ற எதிர்ப்பு வேறு

  இரண்டாவது அப்பட்டமான சாதி வெறி

  நீ எப்படி பிறப்பால் உனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்யாமல் ,வேறு கடவுளை ஏற்று கொண்டு பாதிரியாராக,மருத்துவராக,செவிலியராக,ஆசிரியராக ஆக முடியும் என்ற வன்மம் மதம்,தொழில்,வசிக்கும் இடம் எதுவும் பிறப்பால் முடிவு செய்யபடுவது மாறும் போது முன்னேறிய நிலைக்கு சமூகம் முன்னேறும்..கிருத்துவத்தை தழுவிய பழங்குடியினர்,நாடர்கள்,வன்னியர்கள்,மீனவர்கள்,ஆதி திராவிடர்கள் அதற்க்கு சில ஆண்டுகளுக்கு அல்லது நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹிந்து மதத்தை தழுவிய அதே சாதியை சேர்ந்தவர்களை விட நல்ல நிலையில் உள்ளனரா அல்லது கீழே உள்ளனரா
  மத மாற்றம் எனபது தான் நியாயமாக ஆதரிக்க வேண்டிய ஒன்று”.

  1.கிறித்தவத்தினைத்தழுவாமலே முன்னேறிய த்தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களே இல்லையா?
  2.பூவண்ணரே அப்படியானால் இன்னும் மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது ஏன்?
  2. கிறித்தவர்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் சரியாக மதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஏன்? கிறிஸ்தவத்தில் சாதிகள் உள்ளன என்பது உண்மைதானே?.
  3. கிறிஸ்தவத்தில் சமூக ஏற்றத்தாழ்வு இல்லையா? ப்ரெஞ்சுப்புரட்சி நடந்தபோது புரட்சியாளர்களையா சமயம் ஆதரித்தது.
  4. இன அடிப்படையில் கறுப்பின மக்கள் ஒதுக்கப்பட்டபோது கிறிஸ்தவம் என்ன செய்து கொண்டிருந்தது.
  மதமாற்றம் வியாபாரம். மதமாற்றத்தால் நிகழ்வதெல்லாம் அடிமைத்தனம். சர்ச் சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும் என்ற சுதந்திரமற்ற நிலை. மதமாற்றிகள் எல்லாம் ஒரு சில நாட்களில் கோடீகோடி குவித்திருப்பதால் அது வியாபாரம். சர்சுக்கு போகாமலோ அல்லது வரிகொடுக்காவிட்டலோ அவமரியாதை என்பதால் அடிமைத்தனம்.

 11. //மதம்,தொழில்,வசிக்கும் இடம் எதுவும் பிறப்பால் முடிவு செய்யபடுவது மாறும் போது முன்னேறிய நிலைக்கு சமூகம் முன்னேறும்.//

  அயயயையோ… நீங்க எங்கயோ போயிட்டிங்க சார்!!! இன்னிக்கு வரைக்கும் வளர்ந்து வரும் நாடுங்கற பேர்ல வளராமயே இருக்கோமே, புல்லரிக்குது உங்க விளக்கத்த படிச்சு! எல்லாத்துக்கும் வெளிநாடுக்காரனையே சார்ந்து நிக்கிற ஒரு ஆட்டு மந்தைக் கூட்டமா இருக்கிற ஒரு நாட்டுல இருந்துக்கிட்டு வளர்ச்சின்னு நம்மளை நாமளே ஏமாத்திகிட்டு இருக்கோம்!

  வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், அறிவியல், பொருளாதாரம் இப்படி அனைத்துத் துறைகளிலும் இந்தியா ஒரு முற்றிலும் சுதந்திரம் உள்ள சுய சார்புள்ள நாடாக மாறவே இல்லை. இந்தியா ஒரு வளரும் பொருளாதாரம் வாய்ந்த நாடு என்று யாராவது சொன்னால் கேட்டுக்கொள்கிறோம்! ஆனால் நாம் தான் மிகவும் ஏழ்மை மிகுந்த மக்களை உடைய நாடு! காரணம். இன்று வரை நல்ல கல்வி ஏழைகளுக்குப் போய் சேர்வதில்லை. கல்விக்காக மதம் மாறியதாக எந்த ஒரு மனிதனும் இது நாள் வரை சொல்லிக்கொண்டதில்லை. கல்விக்கட்டணம் இலவசம் என்ற காரணத்திற்காக மதம் மாறியிருக்கிறார்கள்.

  அரசு பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் மிகவும் குறைவு. நான் அரசுப் பள்ளியிலும், அரசு கல்லூரியிலும் தான் படித்தேன். என் 6ம் வகுப்பு முதல் மூன்றாமாண்டு இளங்கலை பட்டம் வரை மொத்த செலவே ஏறத்தாழ 4000 ரூபாய்க்குள் அடங்கி விடும். எனக்கு முந்தைய தலைமுறையில் இந்தக் கட்டணம் கூட வசூலிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! எனவே கல்விக்காக மத மாற்றமென்பது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று! காசுக்காகத் தான்!

  அடுத்தது, வேலைவாய்ப்பு! வேலைக்காக மதம் மாறியிருக்கிறார்களா? என்றால் இல்லை! இன்றும் நம் ஜான் சேகரும், அந்தோனி ராஜாவும் தங்கள் திறமைக்கும், உழைப்புக்கும் என்ன கிடைக்கிறதோ அந்த வேலை தான் செய்கிறார்களே தவிர கிறிஸ்தவத்தில் இணைந்ததால் டாக்டரோ, பைலடாகவோ, மாறிவிடவில்லை. எனவே வேலைவாய்ப்புக்கும் மத மாற்றத்திற்கும் தொடர்பில்லை.

  மருத்துவம்! ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மொத்த நோய்களின் பட்டியலே 1500ஐத் தாண்டாது என்கிறார்கள். அலோபதியின் தந்தை என்றழைக்கப்படுபவர் திரு. ஹிப்போக்ரட்டஸ் (Hippocrates). உச்சரித்தால் hypocrite என்று வருகிறது. பெயரிலேயே ஹிப்போக்ரசி இருக்கிறது பாருங்கள். ஸ்கேன், யூரின் டெஸ்ட், ப்ளட் டெஸ்ட், என்றும் எடுத்து வைத்து அது இது என்று பக்கம் பக்கமாக காகிதங்களையும், மானிட்டர்களையும் பார்த்தாலும் இந்த ஆங்கில மருத்துவர்களுக்கு வியாதியின் தன்மையும், தீவிரமும், அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் சரியான வித்தையும் தெரிவது இல்லை. ஆனால் நம்ம சித்த வைத்தியர்களில் பல பேர் வெறும் கையை நாடி பிடித்துப் பார்த்து விட்டு “உங்க கர்பப்பையை எடுத்தாச்சாமா?” என்று சரியாகக் கண்டுபிடித்துக் கேட்குமளவு கெட்டிக்காரர்கள். அந்த சித்த வைத்திய முறையை வாழ வைக்க யாராவது மதம் மாறியிருக்கிறார்களா? இல்லை. ஆங்கில மருத்துவம் படித்தால் தானே சம்பாதிக்க முடியும். அட்மிட் ஆனவன் குடும்பம் எப்படி போனால் என்ன? கிட்னி டயாலிசிஸ் பண்ணிக் கொள்ள சரியாக வாரம் இருமுறை 5000 ரூபாய் கட்டுகிறானா? அதானே நமக்கு முக்கியம். இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது!

  சரி இந்த மனித சமுதாயத்தின் கொஞ்ச நஞ்சம் இருக்கும் மனித நேயத்தை இந்த வெளிநாட்டுக் கல்வி வாழ வைக்கிறதா? சத்தியமாக இல்லை. நன்றாக படித்து ஐ.டி கம்பனியில் அல்லது, டாக்டராகவோ, வக்கீலாகவோ இல்லை குறைந்த பட்சம் டீச்சராகவாவது ஆகி ஊரப்பாக்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை 15 பேர்களில் ஒரு ஓனராக விலைக்கு வாங்கி விட வேண்டும். பக்கத்து வீட்டுக்காரன் தலையில் இடியே விழுந்தாலும் பரவாயில்லை. நமக்குத் தொந்தரவு இல்லாமல், நாம் எந்த வம்பிலும் மாட்டிக்கொள்ளாமல் எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்ற தனிமனித Isolation mentality ஐ இந்தக் கல்வி முறை வளர்த்து விட்டிருக்கிறது. அதன் தொடக்கம் தான், அங்கே இலங்கைத் தமிழருக்கு துயரம் நடந்தால் அதை துடைத்துப் போட்டு விட்டு இலங்கையுடன் விமானப் போக்குவரத்து வியாபாரத்தைத் தொடரும் கலாநிதி, கருணாநிதி கம்பெனியினரின் அழகாகக் கற்றுகொள்ளப்பட்ட ஆங்கில நரி புத்தி. ரத்தன் டாட்டா பாகிஸ்தானோடு வியாபாரத் தொடர்பு வைக்க மாட்டேன் என்றார். என் நாட்டினரை கொல்லும் ஆட்களுடன் எனக்கு வணிகம் தேவையில்லை என்றார். ஆனால் புதுப் பணக்காரர்களின் நாடகம் அழகாக நடந்தேறுகிறது. இது தொடர்ந்தால் மனிதம் செத்து விடும். இந்த தீய சக்திகளின் உதவியுடன் இந்து மதம் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டது. கிராமங்களில் முன்னெல்லாம் இருக்கும் கரிசனமான உபசரிப்பு கூட இப்போதெல்லாம் அருகி விட்டது இந்த ஆங்கிலக் கல்விக்கலப்பால்.

  மதமாற்றத்திற்கு உருப்படியான ஒரு காரணம் சொல்லலாம். அது தீண்டாமை. நீங்கள் சொன்னது போல “பிறப்பால் வந்த தொழிலையோ,இழிவையோ,உயர்வையோ ,கடவுளையோ பிடித்து தொங்கி கொண்டிருப்பது தான் இழிவான நிலை”

  ஆனால், மதம் மாறியவர்களுக்கு மதம் மாறிய உயர்சாதி கிறிஸ்தவர்களே பெண் கொடுக்காத நிலை இன்றும் நிலவுகிறது. இறைவன் தந்தது வேதம். மனிதன் வளர்த்தது பேதம். இதற்கு மதத்தைக் குறை சொல்லக் கூடாது. இறைவனை அடைவதற்கும், சரியான புரிதலுடன் உலகத்தில் வாழ்வதற்கும் நம் பெரியோர் விட்டு சென்ற விஷயங்களை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள தவறான விஷயங்களை நீக்கி விட்டாலே போதும். நம் குறைகளைக்களைய வேண்டிய அதே நேரத்தில், ஆணி வேரையே விட்டு விடக்கூடாது! மொத்தத்தில் மத மாற்றம் நாம் வெள்ளைக்காரர்களுக்கு ஜென்ம ஜென்மத்திற்கும் அடிமையாக இருக்கவே உதவும்.

  நீங்கள் கேட்டது, “இஸ்லாமியர்கள் எவ்வளவு பேர் பஞ்சத்தால்,ரொட்டி துண்டுக்கு ஆசைப்பட்டு மதம் மாறினர் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.”

  இஸ்லாமியர்கள் நம்மைப் போல் இல்லை. எங்கெல்லாம் கிறித்தவம் சென்றதோ, அங்கெல்லாம் பின்னேயே சென்று தங்கள் மதம் வளர்த்தார்கள். விஸ்வரூபம் படத்தில் ஒரு கறுப்பின மனிதர் இஸ்லாமியராக வருவாரே! அது எப்படி? ஆப்ரிக்க நாடுகளெல்லாம் இஸ்லாம் பரப்பபட்டது! அதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னரே மதமாற்றதிற்குட்பட்டது!.பாரக் ஹுசைன் ஒபாமாவானது இப்படித்தான்!

  “கடவுளின் தண்டனை என்று எதிர்த்து கேட்க்காமல் அனைத்தையும் சகித்து கொண்ட மக்களுக்கு வந்த வரப்ரசாதம் மத மாற்றம்.எதிர்த்து கேள்வி கேட்க்க முடியும் என்பதற்கு அடிப்படையே மத மாற்றம் தான். தைரியமாக மதம் மாறிய முன்னோர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்றும் அன்று தொட்ட தொழிலாளர் இருந்த நிலையில் தான் பெரும்பான்மையானோர் இருந்திருப்போம்”

  இது பாலா படம் பார்த்தாலும், என் கண்ணு முன்னே யாரு நாசமா போனாலும் நான் நம்ப மாட்டேன்! கடைசி வரை நான் சொல்றத தான் சொல்லிகிட்டே இருப்பேன், என்ற வெற்றுப் பிடிவாதம். ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவர் போப் ஆக முடியுமா? ஒரு இந்திய, தமிழக மதம் மாறிய கிறிஸ்தவர் போப் ஆக முடியுமா? ஆக, எல்லா இடங்களிலும் ஒரு வரையறை வைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நம் நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக, நமக்கு எலும்புத்துண்டு போடுவதற்காக அந்த வரையறை சிறிதே இக்காலம் தளர்த்தப்பட்டுள்ளது. நம் கல்விமுறை மாற்றப்பட்டுள்ளது. நம் முதுகெலும்பான அறிவியலும், விவசாயமும் அழிந்து கொண்டே வருகிறது. இதுவா வளர்ச்சி? உங்களை மாதிரி ஆட்களுக்குப் புரிய வேண்டும் என்று தான் அவனே ‘அவதார்’ மாதிரி படமும் எடுத்து அதற்கு ‘அவதார்’ என்று இந்தியப் பெயரும் வைத்துப் பொட்டில் அடித்தாற்போல் கதை சொல்கிறான். அப்போதும் உங்களுக்குப் புரியவில்லை. அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். “இந்த பண்டோரா கிரகத்து மக்களிடம் அனைத்தும் இருக்கின்றன. அவர்களின் செல்வமே இந்த இயற்கை வளமும், அமைப்பும் தான். அவர்கள் இடத்தை எதற்காக நமக்கு விட்டுக் கொடுக்கப்போகிறார்கள்? நாம் தரப் போகும் ரொட்டிகளுக்கும், உணவுக்கும், நீல நிற ஜீன்சுக்குமா?” என்று. ஆனால் நாம் அடகு வைத்து விட்டோம். மதம் மாறி நம் பெருமையை, நம் பண்பாட்டை, நம் பாரம்பரியத்தை அடகு வைத்து விட்டோம். அதன் விளைவு தான் உங்கள் மதமாற்ற ஆதரவு குரல். நீங்கள் என்ன ‘அவதார்’ எடுத்த James Cameroon ஐ விட பெரிய ஆளா? அவரே ஒத்துக் கொண்டு விட்டார். மனம் மாறுங்கள். தீண்டாமையை ஒழிப்போம். இந்திய மக்களை அல்ல.

 12. கிருத்துவத்தை திட்டுவதை யாரும் குறை கூறவில்லை.அதில் உள்ள மூட நம்பிக்கைகள்,கிருத்துவர்கள் செய்த கொடுமைகளை யாரும் மறைக்க சொல்லவில்லை.கிருத்துவத்தில் இருக்கும் சாதி வித்தியாசங்களை பார்த்து காரி உமிழ்வதை நான் எதிர்க்கவில்லை

  கிருத்துவத்தையும்,அதன் நம்பிக்கைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும்,விமர்சியுங்கள்,படம் எடுங்கள் ,புத்தகம் எழுதுங்கள்.ஆனால் தைரியமான மக்களால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவான எந்த தொழில் செய்ய வேண்டும்,எங்கு வசிக்க வேண்டும்,என்ன படிக்க வேண்டும் ,பிறக்கும் குழந்தைக்கு போலயோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டுமா இல்லை மாட்டு மூத்திரம் கொடுக்க வேண்டுமா என்பதை சீர்தூக்கி பார்த்து தன முன்னோர்கள்,தலைவர்கள் மாட்டு மூத்திரம் தான் கொடுத்தார்கள்,கொடுக்கிறார்கள் என்பதால் அதை தான் கொடுக்க வேண்டும் என்றவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தனக்கு சரி என்று பட்டதை கொடுத்தவர்களை,எந்த கடவுளை கும்பிட வேண்டும் என்று உதவாத கடவுள்களை தூக்கி போட்டு விட்டு சென்றவர்களை அப்படி செய்ய தைரியம் இல்லாமல் பிறப்பால் வந்த சாதி,மதம்,சாமி,சடங்குகளை பிடித்து தொங்கி கொண்டிருப்பவர்கள் வன்மத்தால் நக்கல் செய்வது சரியா

  உலக வரலாற்றில் மத மாற்றத்திற்கு ஆதரவானவர்,அதற்காக போராடியவர்,அதை பலரும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தலைவர்கள் யார் யார் என்று பார்த்தால் உலகத்தில் உள்ள பல மதமாற்ற ஆதரவாளர்களை விட பல மடங்கு உயரத்தில் நிற்பவர் அம்பேத்கர் தான்.அவரை மதமாற்ற எதிர்ப்புக்கு பயன்படுத்தி கொள்ள நினைப்பது சரியா
  மதம் மாறியே தீருவேன் என்று உறுதி கொண்டு வாழ்ந்தவர்.அதனால் பல கோடி மக்களின் வாழ்வில் தைரியத்தை,முடிவு எடுக்கும் உரிமையை கொண்டு வந்தவர் அவர்.அவருக்கு பிடித்த மதத்திற்கு அவர் மாறினார்,இழிவாக கருதிய பிறப்பால் திணிக்கப்பட்ட மதத்தை உதறி விட்டு
  அதை தானே மதம் மாறும் ஒவ்வொருவரும் செய்கின்றனர்

 13. கல்யாண அஹதிகளுக்கு பிறகு , மதமாற்றம் பற்றி வந்த சினிமா இதுதான்

 14. பூவண்ணன்,

  இந்துமதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாற்றம் என்பது மூன்று வகை ஆகும். முதலாவது அன்னியர் படையெடுப்பின் போது, துப்பாக்கி மற்றும் கத்தியால் மிரட்டப்பட்டு பயந்து, உயிரின்மீது உள்ள ஆசை அல்லது தேவையால் மதம் மாற்றப்பட்டவர்கள்.( அவர்களாக மாறியவர்கள் அல்ல.)

  இரண்டாவது , இந்து சமுதாயத்தில் காலப்போக்கில் படிந்த சில கறைகளை போக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் ( நாராயண குருவைப்போல புதிய சீர்திருத்தங்கள் செய்யாமல்), அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடாமல் , பிற ஆபிரகாமிய மதங்களில் உள்ள பிரிவுகள் , அங்கு உள்ள சண்டை சச்சரவுகள் தெரியாமல் ஏமாந்துபோய் , மதமாற்ற விஷ ஏஜெண்டுகள் கொடுத்த இலவச பைபிளை வாங்கிக்கொண்டு , சாக்கடைகளில் விழுந்தவர்கள்.

  மூன்றாவது, வெள்ளையன் ஆண்டபோது அவனுக்கு அடிமை செய்து , கைகால் பிடித்து கமிஷன் பெற்று , பாதிரி காலில் போய்விழுந்தால், வெள்ளையன் கூடுதல் சம்பளமும், கூடுதல் கமிஷனும் கொடுப்பான் என்று எண்ணி, பைபிளை காசு கொடுத்து வாங்கியவர்கள்.

  இதில் மூன்றாவது வகை கூட்டம் ஐந்து சதவீதம் தான். முதல்வகை கூட்டம் ஐம்பது சதவீதம். இரண்டாவது வகை கூட்டம் நாற்பத்தைந்து சதவீதம்.

  இந்தியாவில் கிறித்தவர்கள் மதமாற்ற செயல்களுக்கான தண்டனை போலத் தான், இன்று ஐரோப்பாவில் மற்றும் மேலைநாடுகளில் கிறித்தவம் சிறிது சிறிதாக காலியாகி வருகிறது. தன்வினை தன்னை சுடும் என்ற கோட்பாடு அமுலுக்கு வேகமாக வந்துகொண்டிருக்கிறது. உலகெங்கும் இந்து மற்றும் புத்தமும், இன்னபிற கீழைமதங்களும் கம்யூனிஸ்டு நாடுகளில் உட்பட வேகமாக பரவுகின்றன. இங்கர்சால் போன்ற மாமேதைகள் மீண்டும் தோன்றுவார்கள். மீண்டும் ஆபிரகாமிய மதங்கள் கல்லறைக்கு தான் போக இருக்கின்றன.

  ஏனெனில், எதிர்கால உலகில் மதங்களின் போலிமுகமூடிகள் சுத்தமாக கிழிந்துவிடும். உங்களைப்போன்ற டப்பா ஆசாமிகள் தலை தூக்க முடியாது. எங்கெல்லாம் சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ உணர்வு இல்லையோ, எங்கெல்லாம் பெண்ணடிமை தலைதூக்கி இருக்கிறதோ , அங்கெல்லாம் , அன்னை பராசக்தி ஏராளமான மாறுதல்களை செய்யவிருக்கிறாள். மதமாற்ற வியாபாரம் உலகில் எங்குமே இனி போணியாகாது.

  கடவுள் என்பவன் தூணிலும், துரும்பிலும், இருப்பவன் .ஒரு குறிப்பிட்டுள்ள அறைக்குள் மட்டும் இருப்பவன் அல்ல என்பதை உணர்வாயாக. உண்மையான கிறித்தவர்கள் , இந்து மற்றும் புத்தத்தினை நோக்கி அடியெடுத்து வைத்துவருகிரார்கள்.

  ஏமாந்துபோய், ஆபிரகாமிய மதங்களில் போய் சேர்ந்தவர்கள் , மீண்டும் தாய்மதம் போய் சேருவது எப்படி என்று குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் , தாய்மதம் திரும்புவார்கள்.

  (edited and published)

 15. திரு பூவண்ணன்
  மதம் மாறுவதற்கு தனிமனிதனுக்கு இருக்கிற உரிமை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கொலை வாளைக்கொண்டு அச்சுறுத்தியும், வறுமையில், நோயில் துன்புறுகிறவர்களை சேவை என்ற பெயரில் மதம் மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதே எம் கருத்து. இத்தகைய முறையில் மதம் மாற்றி உலகின் பண்பாடுகளை எல்லாம் அழித்தொழித்த அயோக்கியத்தனத்தினைக் கண்டிக்கிறோம். அதனால் தான் மதமாற்றம் என்ற குறிக்கோளுக்காக செய்யப்படுகிற மிசநரி சேவைகளைஎல்லாம் வியாபாரம் என்கிறோம். எந்த ஒரு மனிதனும் தன்னுடைய ஆன்ம மீட்சிக்காக தானே விரும்பி மதம் மாறுவதை யாரும் தடுத்துவிட யாரும் முயல்வில்லை.
  அண்ணல் அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காக உள்ளிருந்தே போராடினார். அதில் பயனில்லை என்பதால் அவர் பவுத்தத்தினை தழுவினார். ஏன் அவர் அபிராகாமிய மதங்களைத்தழுவவில்லை. என்பதே ஏன் அபிராகாமிய மதங்களைத்தழுவுவது தேசத்திற்கு கேடுவிளைவிக்கும் என்ற புரிதல் தான். அதை உம்மைப்போன்ற அபிராஹாமியர்கள் உணர்தல் நன்று.

 16. தாய் மதம் என்பதில் உள்ள வன்மம் உங்களுக்கு புரியாதது வியப்பு தான்.உலகத்தில் உள்ள அனைத்து சீவராசிகளும் இந்துக்கள் தான்,பிறக்கும் போது நாராயணா என்று தான் கத்தி கொண்டே பிறக்கின்றன என்று நம்பினால் தான் இந்த பேச்சு வரும்
  மதம்,கடவுள் என்பதே ஏமாற்று தான்.ஒரு குருட்டு நம்பிக்கை.உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் ஏதாவது அதிசயம் நடக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு தான்

  https://www.ambedkar.org/ambcd/02.Annihilation%20of%20Caste.htm

  Whether the Hindu religion was or was not a missionary religion has been a controversial issue. Some hold the view that it was never a missionary religion. Others hold that it was. That the Hindu religion was once a missionary religion must be admitted. It could not have spread over the face of India, if it was not a missionary religion. That today it is not a missionary religion is also a fact which must be accepted.

  The question therefore is not whether or not the Hindu religion was a missionary religion. The real question is why did the Hindu religion cease to be a missionary religion ? My answer is this. Hindu religion ceased to be a missionary religion when the Caste System grew up among the Hindus. Caste is inconsistent with conversion. Inculcation of beliefs and dogmas is not the only problem that is involved in conversion. To find a place for the convert in the social life of the community is another and a much more important problem that arises in connection with conversion. That problem is where to place the convert, in what caste ? It is a problem which must baffle every Hindu wishing to make aliens converts to his religion. Unlike the club the membership of a caste is not open to all and sundry. The law of caste confines its membership to person born in the caste. Castes are autonomous and there is no authority anywhere to compel a caste to admit a new-comer to its social life. Hindu Society being a collection of castes and each caste being a close corporation there is no place for a convert. Thus it is the caste which has prevented the Hindus from expanding and from absorbing other religious communities.

  சுயம்பாக முளைத்த தாய் மதம் என்பதை விட மூடநம்பிக்கை இருக்க முடியாது
  தாய் மதம் என்பதில் உள்ள வன்மம் உங்களுக்கு புரியாதது வியப்பு தான்.உலகத்தில் உள்ள அனைத்து சீவராசிகளும் இந்துக்கள் தான்,பிறக்கும் போது நாராயணா என்று தான் கத்தி கொண்டே பிறக்கின்றன என்று நம்பினால் தான் இந்த பேச்சு வரும்
  மதம்,கடவுள் என்பதே ஏமாற்று தான்.ஒரு குருட்டு நம்பிக்கை.உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் ஏதாவது அதிசயம் நடக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு தான்.

  ஹிந்து மதத்துக்கு பலரை இழுக்க ஹிந்து மத பிரச்சாரகர்கள் களத்தில் இறங்குகிறார்கள் எனபது வரவேற்க வேண்டிய ஒன்று.
  ஆர்டேல் வேண்டுமா,ஐடியா வேண்டுமா,பி எஸ் என் எல் வேண்டுமா ,சித்த மருத்துவம் வேண்டுமா,அல்லோபதி வேண்டுமா,உனானி முறையின் கீழ் சிகிச்சை எடுக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் உரிமை தனி மனிதனுக்கு தான். தந்தை பி எஸ் என் எல் வைத்திருந்ததால்/சித்த மருத்துவத்தை பயன்படுத்தியதால் அவனும் அதை தான் பயன்படுத்த வேண்டும் எனபது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அதை விட முட்டாள்தனம் அதே கடவுளை,வழிப்பாட்டு முறைகளை பிடித்து தொங்கி கொண்டிருப்பது

 17. மதமாற்றங்கள் சரியா, தவறா என்ற விவாதத்தினுள் நான் இங்கு உட்புக
  விரும்பவில்லை. மனித உளவியலின்படி இதை புரிந்து கொள்ள முயற்சிப்பவன்
  நான். சில கருத்துகளைக் கொண்டும் உள்ளேன்.

  (1) Placebo Effect என்ற ஒன்றைப் பற்றி கூறிவிட்டு இதற்கு வருகிறேன். நவீன
  மருத்துவத்தில் எந்த ஒரு புதிய மருந்தையும், விலங்குகளுக்குப் பின்
  மனிதர்களில் ஒரு சிலருக்கு பரிட்சை செய்து பார்ப்பார்கள். 100 பேருக்கு ஒரு புதிய
  மருந்தை கொடுக்கையில், 10 பேருக்கு Placebo, அதாவது போலி
  (அரிசி மாவு என்று வைத்துக் கொள்ளலாம்) மாத்திரையைக் கொடுப்பார்கள்.
  உண்மையான மருந்து கொடுக்கப்பட்ட 90 பேரில் 80 பேருக்கு நோயிலிருந்து
  நிவாரணமும், போலியான மருந்து கொடுக்கப்பட்டவர்களில் 8 பேருக்கு நிலையில்
  மாற்றமில்லாமையும் இருந்தால் மருந்து சந்தைக்கு வந்து விடும்.

  இதில், உண்மையான மருந்தில் குணமாகாத 10 பேருக்கு வீரியம் அதிகமுள்ள
  அல்லது வேறு மருந்தை கொடுத்தால் குணமாகும் என்று வைத்துக்கொண்டு
  விடலாம். ஆனால் போலியான மருந்தை உட்கொண்ட 2 பேர் குணமடைந்ததாக
  கூறுவார்கள். அதில்தான் அறிவியலால் இதுவரை தீர்க்கமுடியாத,
  முழுமையாக புரிந்து கொள்ள முடியாத “மனித உளவியல்” அடங்கியுள்ளது. அரிசி
  மாவை தின்று விட்டு நோய் குணமடைந்து விட்டது என்று கூறுபவர்களை நம்பி,
  சமூகத்தில் அனைவர்க்கும் அரிசி மாவை அளித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

  இந்த “மனித உளவியல்தான்” இந்த மதமாற்றத்திற்கு காரணம் என்பது என் கருத்து.

  (2) பழங்காலத்திய மனிதன், இயற்கை பேரிடர், தொற்று நோய்கள், விலங்குகள்
  என்று பல்வேறு இடர்களை தினப்படி வாழ்வில் சந்தித்துக் கொண்டே
  இருந்தான். இயற்கையின் நியதிகளைக் குறித்து நவீன அறிவியல் அளித்துள்ள
  விளக்கங்கள் அவன்வசம் இல்லாததால், ஏதோ ஒரு “பெரும் சக்தி”
  தன்னை ஆளுகின்றது என்று திடமாக நம்பினான். அந்த இடர்களை அப்பெரும்
  சக்தியின் துணை இருந்தால் மீண்டு வாழ முடியும் என்றும் நம்பத்
  தொடங்கினான். சில நேரங்களில் அதிர்ஷ்டவசமாக நடக்கும் நிகழ்வுகளை
  அற்புதம் என்று அழைக்கத் தொடங்கினான். பழங்காலத்திய மத, கலாச்சார
  கூறுகளில் இந்த அற்புதம் என்ற கூறுதான் ஆணிவேராக இருக்கும்.

  (3)ஏழாம் அறிவு திரைப்படத்தில் “போதி வர்மன்” சீனாவிற்கு சென்றவுடன் பிரசித்தி
  அடைந்தது இதைக் கொண்டுதான். மரண படுக்கையில் உள்ள ஒரு குழந்தையின்
  நோயை தீர்த்தவுடன் அவர் “பெரும் சக்தி”யின் வெளிப்பாடாக ஏற்றுக்
  கொள்ளப்படுகிறார்.

  (4)இயேசு கிறிஸ்து, தனது 32ம் வயதில், ஜெருசேலம் நகரினுள் வந்தவுடன்
  செய்யும் முதல் காரியமே “Excorcism”தான். சாதா ஜுரத்திலிருந்து தீர்க்க
  முடியாத அனைத்து நோய்களையும் “சாத்தானின் வேலை” என்று கூறி தீர்க்க
  முயற்சித்தார். நான் முதலில் எழுதிய “மனித உளவியலின்” படி, ஒரு 5 பேருக்கு
  நோய் சரியாகியிருக்கும். அவர்களின் சத்தம் அச்சமூகத்தில் அலையென பரவி,
  அனைவரும் இயேசுவின் சீடர்களாக மாறியிருப்பார்கள். 100 நோயாளிகளை
  சோதனை செய்திருந்தால், Success Percentage வெறும் 5ஓ 10ஓ என்று
  வெளிப்பட்டிருக்கும். ஆனால் பழங்கால சமூகத்தில் இதற்கு சாத்தியம்
  இருந்திருக்காது.
  இது ஏதோ கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமான விஷயமல்ல. உலகின் அனைத்து
  பகுதிகளிலும் இதுதான் நடந்திருக்கும். ஒருவர் வந்தால் மழை பெய்யும்,
  அவர் தீண்டினால் நோய் குணமாகும் என்று சில co-incidences அற்புதம் என்றபடி
  விளங்கப்பெறும்.

  (5)நான் இதை சரி, தவறு என்று விளக்கப்புகவில்லை. வேறு Alternatives இல்லாத
  பழங்காலத்திய சமூகத்தில் இது அற்புதமான “உளவியல் சாதனமாக”
  இருந்திருக்கும்.

  (5)சரி, நான் மதமாற்றத்தைப் பற்றி கூற வருகிறேன். நவீன சமூகத்தில், இது
  போன்ற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மதங்களுக்கு
  ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. இதை நான் விளக்க வேண்டிய
  அவசியமில்லை.

  (6)ஆனால், சமூகத்தில் சிலருக்கு இந்த “அற்புதம்” என்ற “மனித உளவியல்”
  இன்றும், என்றென்றும் தேவைப்படுகிறது.

  உதாரணமாக, இத்திரைப்படத்தில் வரும் தலித்துகள் மிக மோசமான சுரண்டலுக்கு
  உட்படுத்தப்படுகிறார்கள். தங்களுக்கு “ஒரு விடிவு” வராதா என்ற
  ஏக்கத்துடனேயே இருப்பார்கள். ஏற்கெனவே அவர்கள் அனுசரிக்கும் மதத்தின்
  மேல்ஜாதிக்காரர்களே சுரண்டுகையில், வேறு ஒரு பரிசுத்த கூட்டம்
  “அற்புதம்” என்ற கொள்கையை முன்வைத்து, “இயேசு உனக்காக மரித்தார்”,
  “உனக்காக உயிர்த்தெழுந்தார்”, “உன் பாவங்களை தீர்க்கும் சக்தி மிக்கவர்”
  என்று “மனித உளவியலின்” சில தேவைகளை கொடுக்கும் போதே, இக
  வாழ்க்கைக்கு தேவையான சில அதிகாரம், பண வசதி போன்றவையும்
  அளிக்கப்படும்போது எந்த ஒரு சாதாரண மனிதனும் மதம் மாறுவான் என்பதே என்
  கருத்து.

  (7)அதைப் போன்றே மீனவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்திற்கு
  மாறுவதையும் இப்படியே விளங்கிக்கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும்
  “மரணத்தை” சந்திக்கும் மக்களில் இவர்கள் முக்கியமானவர்கள். இயற்கை
  சீற்றத்தின் அனைத்து பரிமாணங்களையும் தினப்படி சந்திக்க வேண்டி
  இருப்பதாலும், ஒவ்வொரு மீனவனும் ஒரு முறையேனும் மரணத்தின் எல்லை
  வரை போய்விட்டு திரும்பிய அனுபவத்தை கொண்டிருப்பதாலும்,
  “அற்புதம்” என்ற கூற்றை அடிப்படையாகவே கொண்ட கிறிஸ்தவத்தை ஏற்றுக்
  கொள்வது என்னைப் பொறுத்தவரை இயற்கையான ஒரு நிகழ்வுதான்.

  (8)தலித்துகளையாவது மதமாற்றத்திலிருந்து தடுக்க மேல்ஜாதி ஹிந்துக்கள்
  திருந்தவேண்டும் என்று கூறலாம். அடுத்த சில தலைமுறைகளில் அது
  நடக்கவும் செய்யலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, மரணத்தோடே
  போராடும் மக்கள் தொகுதியினரான மீனவர் போன்றவர்களை
  கிறிஸ்தவ மதமாற்றத்திலிருந்து தடுக்க முடியாது. அப்படி தடுக்க
  வேண்டுமென்றால், கிறிஸ்தவத்துக்கு இணையான “அற்புத” ஹிந்து
  விளக்கங்களை நாம் பரப்ப வேண்டி வரும்.

  (9)இப்படியே, மிக மோசமான நோய்வாய்ப்பட்டவர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு
  மாறுவது நடந்து கொண்டேதான் இருக்கும்.

  (10) மதமாற்றம் என்னும் பெயரில் சமூகத்தை கெடுக்கும் பாதிரியார்களை நான்
  ஆதரிக்கவில்லை. ஆதரிப்பதாக இருந்தால் நான் இந்த தளத்தினுள்
  வந்திருக்க மாட்டேன். நான் “மனித உளவியலின்” படி இந்நிகழ்வை புரிந்து கொள்ள
  முயற்சித்தேன். அவ்வளவே!

 18. மதமாற்றங்கள் சரியா, தவறா என்ற விவாதத்தினுள் நான் இங்கு உட்புக
  விரும்பவில்லை. மனித உளவியலின்படி இதை புரிந்து கொள்ள முயற்சிப்பவன்
  நான். சில கருத்துகளைக் கொண்டும் உள்ளேன்.

  (1) Placebo Effect என்ற ஒன்றைப் பற்றி கூறிவிட்டு இதற்கு வருகிறேன். நவீன
  மருத்துவத்தில் எந்த ஒரு புதிய மருந்தையும், விலங்குகளுக்குப் பின்
  மனிதர்களில் ஒரு சிலருக்கு பரிட்சை செய்து பார்ப்பார்கள். 100 பேருக்கு ஒரு புதிய
  மருந்தை கொடுக்கையில், 10 பேருக்கு Placebo, அதாவது போலி (அரிசி மாவு என்று
  வைத்துக் கொள்ளலாம்) மாத்திரையைக் கொடுப்பார்கள். உண்மையான மருந்து
  கொடுக்கப்பட்ட 90 பேரில் 80 பேருக்கு நோயிலிருந்து நிவாரணமும், போலியான
  மருந்து கொடுக்கப்பட்டவர்களில் 8 பேருக்கு நிலையில் மாற்றமில்லாமையும்
  இருந்தால் மருந்து சந்தைக்கு வந்து விடும்.

  இதில், உண்மையான மருந்தில் குணமாகாத 10 பேருக்கு வீரியம் அதிகமுள்ள
  அல்லது வேறு மருந்தை கொடுத்தால் குணமாகும் என்று வைத்துக்கொண்டு
  விடலாம். ஆனால் போலியான மருந்தை உட்கொண்ட 2 பேர் குணமடைந்ததாக
  கூறுவார்கள். அதில்தான் அறிவியலால் இதுவரை தீர்க்கமுடியாத, முழுமையாக
  புரிந்து கொள்ள முடியாத “மனித உளவியல்” அடங்கியுள்ளது. அரிசி மாவை தின்று
  விட்டு நோய் குணமடைந்து விட்டது என்று கூறுபவர்களை நம்பி, சமூகத்தில்
  அனைவர்க்கும் அரிசி மாவை அளித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

  இந்த “மனித உளவியல்தான்” இந்த மதமாற்றத்திற்கு காரணம் என்பது என் கருத்து.

  (2) பழங்காலத்திய மனிதன், இயற்கை பேரிடர், தொற்று நோய்கள், விலங்குகள்
  என்று பல்வேறு இடர்களை தினப்படி வாழ்வில் சந்தித்துக் கொண்டே
  இருந்தான். இயற்கையின் நியதிகளைக் குறித்து நவீன அறிவியல் அளித்துள்ள
  விளக்கங்கள் அவன்வசம் இல்லாததால், ஏதோ ஒரு “பெரும் சக்தி” தன்னை
  ஆளுகின்றது என்று திடமாக நம்பினான். அந்த இடர்களை அப்பெரும் சக்தியின்
  துணை இருந்தால் மீண்டு வாழ முடியும் என்றும் நம்பத் தொடங்கினான். சில
  நேரங்களில் அதிர்ஷ்டவசமாக நடக்கும் நிகழ்வுகளை அற்புதம் என்று அழைக்கத்
  தொடங்கினான். பழங்காலத்திய மத, கலாச்சார கூறுகளில் இந்த அற்புதம் என்ற
  கூறுதான் ஆணிவேராக இருக்கும்.

  (3)ஏழாம் அறிவு திரைப்படத்தில் “போதி வர்மன்” சீனாவிற்கு சென்றவுடன் பிரசித்தி
  அடைந்தது இதைக் கொண்டுதான். மரண படுக்கையில் உள்ள ஒரு குழந்தையின்
  நோயை தீர்த்தவுடன் அவர் “பெரும் சக்தி”யின் வெளிப்பாடாக ஏற்றுக்
  கொள்ளப்படுகிறார்.

  (4)இயேசு கிறிஸ்து, தனது 32ம் வயதில், ஜெருசேலம் நகரினுள் வந்தவுடன்
  செய்யும் முதல் காரியமே “Excorcism”தான். சாதா ஜுரத்திலிருந்து தீர்க்க
  முடியாத அனைத்து நோய்களையும் “சாத்தானின் வேலை” என்று கூறி தீர்க்க
  முயற்சித்தார். நான் முதலில் எழுதிய “மனித உளவியலின்” படி, ஒரு 5 பேருக்கு
  நோய் சரியாகியிருக்கும். அவர்களின் சத்தம் அச்சமூகத்தில் அலையென பரவி,
  அனைவரும் இயேசுவின் சீடர்களாக மாறியிருப்பார்கள். 100 நோயாளிகளை
  சோதனை செய்திருந்தால், Success Percentage வெறும் 5ஓ 10ஓ என்று
  வெளிப்பட்டிருக்கும். ஆனால் பழங்கால சமூகத்தில் இதற்கு சாத்தியம்
  இருந்திருக்காது.

  இது ஏதோ கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமான விஷயமல்ல. உலகின் அனைத்து
  பகுதிகளிலும் இதுதான் நடந்திருக்கும். ஒருவர் வந்தால் மழை பெய்யும், அவர்
  தீண்டினால் நோய் குணமாகும் என்று சில co-incidences அற்புதம் என்றபடி
  விளங்கப்பெறும்.

  (5)நான் இதை சரி, தவறு என்று விளக்கப்புகவில்லை. வேறு Alternatives இல்லாத
  பழங்காலத்திய சமூகத்தில் இது அற்புதமான “உளவியல் சாதனமாக”
  இருந்திருக்கும்.

  (5)சரி, நான் மதமாற்றத்தைப் பற்றி கூற வருகிறேன். நவீன சமூகத்தில், இது
  போன்ற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மதங்களுக்கு
  ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. இதை நான் விளக்க வேண்டிய
  அவசியமில்லை.

  (6)ஆனால், சமூகத்தில் சிலருக்கு இந்த “அற்புதம்” என்ற “மனித உளவியல்”
  இன்றும், என்றென்றும் தேவைப்படுகிறது.

  உதாரணமாக, இத்திரைப்படத்தில் வரும் தலித்துகள் மிக மோசமான சுரண்டலுக்கு
  உட்படுத்தப்படுகிறார்கள். தங்களுக்கு “ஒரு விடிவு” வராதா என்ற ஏக்கத்துடனேயே
  இருப்பார்கள். ஏற்கெனவே அவர்கள் அனுசரிக்கும் மதத்தின் மேல்ஜாதிக்காரர்களே
  சுரண்டுகையில், வேறு ஒரு பரிசுத்த கூட்டம் “அற்புதம்” என்ற கொள்கையை
  முன்வைத்து, “இயேசு உனக்காக மரித்தார்”, “உனக்காக உயிர்த்தெழுந்தார்”, “உன்
  பாவங்களை தீர்க்கும் சக்தி மிக்கவர்” என்று “மனித உளவியலின்” சில
  தேவைகளை கொடுக்கும் போதே, இக வாழ்க்கைக்கு தேவையான சில அதிகாரம்,
  பண வசதி போன்றவையும் அளிக்கப்படும்போது எந்த ஒரு சாதாரண மனிதனும்
  மதம் மாறுவான் என்பதே என் கருத்து.

  (7)அதைப் போன்றே மீனவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்திற்கு
  மாறுவதையும் இப்படியே விளங்கிக்கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும்
  “மரணத்தை” சந்திக்கும் மக்களில் இவர்கள் முக்கியமானவர்கள். இயற்கை
  சீற்றத்தின் அனைத்து பரிமாணங்களையும் தினப்படி சந்திக்க வேண்டி
  இருப்பதாலும், ஒவ்வொரு மீனவனும் ஒரு முறையேனும் மரணத்தின் எல்லை
  வரை போய்விட்டு திரும்பிய அனுபவத்தை கொண்டிருப்பதாலும், “அற்புதம்” என்ற
  கூற்றை அடிப்படையாகவே கொண்ட கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்வது
  என்னைப் பொறுத்தவரை இயற்கையான ஒரு நிகழ்வுதான்.

  (8)தலித்துகளையாவது மதமாற்றத்திலிருந்து தடுக்க மேல்ஜாதி ஹிந்துக்கள்
  திருந்தவேண்டும் என்று கூறலாம். அடுத்த சில தலைமுறைகளில் அது
  நடக்கவும் செய்யலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, மரணத்தோடே
  போராடும் மக்கள் தொகுதியினரான மீனவர் போன்றவர்களை கிறிஸ்தவ
  மதமாற்றத்திலிருந்து தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டுமென்றால்,
  கிறிஸ்தவத்துக்கு இணையான “அற்புத” ஹிந்து விளக்கங்களை நாம் பரப்ப
  வேண்டி வரும்.

  (9)இப்படியே, மிக மோசமான நோய்வாய்ப்பட்டவர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு
  மாறுவது நடந்து கொண்டேதான் இருக்கும்.

  (10) மதமாற்றம் என்னும் பெயரில் சமூகத்தை கெடுக்கும் பாதிரியார்களை நான்
  ஆதரிக்கவில்லை. ஆதரிப்பதாக இருந்தால் நான் இந்த தளத்தினுள் வந்திருக்க
  மாட்டேன். நான் “மனித உளவியலின்” படி இந்நிகழ்வை புரிந்து கொள்ள
  முயற்சித்தேன். அவ்வளவே!

 19. Survival of the fittest is the law which governs the animal nature prevalent in western culture.

  CONVERSION – IS PERVERSION
  CONVERSION – IS GROSS VIOLENCE
  CONVERSION – IS ERROSION OF CULTURE
  CONVERSION – IS AGGRESSION
  CONVERSION – IS INTRUSION IN ONES PRIVACY
  CONVERSION – IS DIVISION
  CONVERSION – IS INVASION
  CONVERSION – IS DESTRUCTION OF RELIGIOUS HARMONY
  CONVERSION – IS DOMINATION OF LAND AND PEOPLE
  CONVERSION – IS TERRORISM
  CONVERSION – IS PROSTITUTION

  BAN CONVERSION AND SAVE THE NATION

  All the Hindu converts imbibe a few or several of the above said quality and act accordingly. All are number one enemy to united Indian nation

  கிருஸ்துவம் மதமாற்றம் – ஒன்று அராஜகம் செய்து நாட்டின் சிரத்தன்மையை குலைப்பவர்களை உருவாக்கும். இரண்டு அதீதி முளை சலவையால் அரை பைத்தியங்களையும் மன நோயாளிகளையும் உருவாக்கும். (பாலா படம் இரண்டாவது ரகத்தை சாடுகிறதா ?)

 20. பூவண்ணன் போன்றவர்களுக்கு மதமாற்றத்தின் தீமைகள் என்ன என்று புரியாதா. தெரிந்துதானே ஜாதி, ஏழ்மை, தீண்டாமை என்று அரசியல் பேசுகிறார். ஏதாவது சொன்னால் அம்பேத்கர் புராணம் பத்தி பத்தியாக பாடுவார். ஆனால் பலமுறை அப்பேத்கர் இஸ்லாதிற்கோ கிருஸ்துவத்திற்கோ மதம் மாறுவது தேச ஒற்றுமை, கலாசார, பண்பாட்டை சிதைத்து விடும் என்று உருதிபட சொன்னதை சொல்ல மாட்டார். ஒரு புறத்தில் படிப்பறிவில்லாத ஏழை எளியவர்களை பணத்தாசை காட்டி துன்பங்களிலிருந்து விடுதலை அளிப்பதாக சொல்லி மதம் மாற்றி மூளைசலவை செய்து நாட்டில் அராஜகங்களை தூண்ட பணம் கொடுக்கிறார்கள் பயிர்ச்சி அளிக்கிறார்கள். எப்படியெல்லாம் ஜாதி சண்டைகளை வளரத்துவிடுவது, மத மோதல்களை ஏற்ப்படுத்துவது, பிறந்து தாய் நாட்டிற்கெதிராக கோஷம் போடுவது என்று. இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு ஓட்டு பொறுக்கி அரசியல் நடத்தும் கம்யூனிஸட்டுகள், போலி செக்யூலரிசம் பேசும் மாநில, தேசிய கட்சிகள் மேலும் இதை தூபம் போட்டு வளர்க்கின்றனர். இலங்கையில் நடந்த இனபடுகொலைகளுக்கு கிருஸ்துவம் பலவழிகளில் துணைபோனது என்பது தெரியாதா. சோனியாவின் புடைவையை பற்றி சுகம் கண்டவர்கள் இன்று பொங்கி எழுகிறார்கள். எப்படி காவு கொடுத்து பால் ஊற்றி முன்று திவசங்கள் நடந்து முடிந்ததும் !!!

  இன்று இலங்கையில் மிச்சம் உள்ள தமிழனும் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காக என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் பணம் கொடுத்து கிருஸ்துவம் தூண்டிவிடுகிறது. அதன் ஆரம்பம்தான் இந்த மாணவர் போராட்டமும், புத்த பிக்குகள் தாக்குதல்களும். இவற்றை கஞ்சிக்கும், கேக்கிற்கும் அலைந்து சென்ற தின்னும் ஓட்டு பொறுக்கும் அரசியல் தலைவர்கள் மௌனமாக வேடிக்கை பார்கிறார்கள்.

  கிருஸ்துவ மதமாற்றத்தை தமிழகத்தில் தடை செய்யவேண்டும். அவர்களிடமிருந்து எவ்வௌவுக்கு எவ்வளவு தள்ளி தமிழகம் இருக்குமோ அவ்வளவுக்கும் அவ்வளவு அது தமிழர்களுக்கு நல்லது.

  உண்மையான கடவுள் பக்தி ஆண்மீகம் என்பது இன்று உலகில் 5 சதவிகித மக்களிடம்கூட கிடையாது. இன்றைய கடவுள் காசு ஒன்றுதான். அது ஏசு அல்லா சாமிகளிடம் கொட்டிக்கிடக்கிறது.

 21. திரு.பாலஜி சொல்வது போல் தினம் தினம் செத்து பிழைத்து பிழைப்பை நடத்தும் மீனவர்கள் மதமாற்றத்தால் ஆறுதல் அடைகிறார்கள் என்பது சுத்த பொய். அவர்களது முன்னோர்கள் செய்துவந்த கடல் சார்ந்த குலகடவுள் சம்பிரதாயங்களையும் கரை சார்ந்த குல கடவுள் சம்பிரதாயங்களையும் விட்டொழித்து ஏசு புராணம் பாடினால் இயற்கை அன்னை தன் வேலையை எப்படி ஒழுங்காக செய்வாள்.

 22. பூ வண்ணன்

  //
  தாய் மதம் என்பதில் உள்ள வன்மம் உங்களுக்கு புரியாதது வியப்பு தான்
  //
  சொந்த வூட்ல சசிகலா புகுந்தா உங்களுக்கு இதோட அர்த்தம் புரியும். அப்போ மட்டும் என் வூடு என் ஊடுன்னு அலறுவீங்கோ.

  எல்லாத்துக்கும் birds eye view கொடுக்கறது ரொம்ப சுலபம். beauty is in the details. இது பாலாஜி அவர்களுக்கும்

 23. //தொழிற்சங்கங்களில்,தாழ்த்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்கங்களில் கிருத்துவத்தை தழுவிய மக்களின் பங்கு பிரதானம்.//

  பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது…….யாரெல்லாம் மதசார்பின்மை , பகுத்தறிவு , மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன்னு ஓவரா சவுண்ட் விடறாங்களோ …. அவங்க முகமூடியெல்லாம் கடைசியில் இப்படித்தான் கிழியும்…

  ரெவரண்ட் பாதர் பூவண்ணன் அவர்களே….அடுத்த விசேஷித்த ஆராதனை முழுஇரவு ஜெபம் ரெடியா இருக்கு…..குருடர்களை பார்க்கவைக்கவும் , செவிடர்களை கேட்க வைக்கவும் கிளம்பலையா?

 24. திரு.பாலாஜி அவர்களே!

  அற்புதம் செய்வதைப் பற்றி நீங்கள் கூறியதால் குறிப்பிடுகிறேன். டேனியல் டுக்லஸ் ஹ்யும் என்பவரைப் பற்றி மதன் அவரது மனிதனும் மர்மங்களும் என்ற நூலில் குறிப்பிட்டிருந்ததை ராம் என்பவர் அவரது ப்ளாகிலே வெளியிட்டிருந்தார். உங்களுக்காக அந்த இணைப்பு இதோ!

  https://hayyram.blogspot.in/2012/11/blog-post_24.html

  இதில் அனுமார் கடலை கடக்கும் முன்பு தன உருவத்தைப் பெரிதாக ஆக்கிக்கொண்ட விஷயத்தை ஹ்யுமின் உயர வளர்ச்சியோடு தொடர்பு படுத்துகிறார். இணைப்பில் 6வது பத்தியில் உள்ளது இந்த தகவல்.

 25. தோழர்களே ,கருத்துக்கு பதில் சொல்லாமல் சொல்பவனின் மதத்தை பற்றிய ஆராய்ச்சி எதற்கு .இதே பெயரில் முகநூலில் இருக்கிறேன்.ஜடாயு சாரும் ஏன் நண்பர் தான்.என் முழு விவரத்தையும் அறிந்து கொள்ளலாம் . இப்போது தான் குடும்பத்துடன் அன்னாவரம்,பிதாபுரம்,சாமல் கோட் கோவிலகளுக்கு சென்று விட்டு திரும்பி வந்து டைப் செய்கிறேன்
  மதமாற்றம் எனும் வரப்ரசாதம்,உரிமை தான் பல நல்ல மாற்றங்களுக்கு வழி வகுத்தது என்பதற்கு எதிராக வலுவான எடுத்துக்காட்டுகளை அள்ளி விடுங்களேன்
  படத்தில் மதமாற்றம் செய்யும் மருத்துவர் வெள்ளைகாரர் அல்ல.அவர் பெயர் ,நிறம் ,அவரை கோமாளியாக சித்தரிக்கும் வன்மத்தில் உள்ள சாதி வெறி புலப்படாமல் இருப்பது வியப்பு தான்.
  தன்னை சாமி சாமி என்று அழைத்து பார்த்தால் எதிரில் வர பயப்பட்ட ,பறையர்கள் ,நாடார்கள் மதம் மாறி தம்மை சமமாக கருத்தி கொண்டதை ,அவர்களின் சமூகத்தை முன்னேற்றியதை (சான்றோன் ஐயா நாடார் சங்கத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் கிருத்துவர்களை பட்டியல் இடட்டுமா )வெறுப்பாக என்னும் வன்மம் தான் அந்த மருத்துவர் பாத்திரம்
  கிருத்துவ மதத்தை கிண்டல் செய்வது தேவையான ஒன்று.அதை உலகம் முழுக்க பலர் செய்து இருக்கிறார்கள்,செய்து வருகிறார்கள்.இப்போது கூட தெரசாவின் ஏழை பங்காளன் முக திரைகளை கிழித்து உள்ளார்கள் .பரதேசி படத்தில் மருத்துவர் பாத்திரம் இயக்குனரின் அப்பட்டமான சாதி வெறி

  ஆனால் கிருத்துவர்களை தாக்குகிறார் என்று அதை பார்த்து மகிழ்வது சரியா

 26. அன்பு தாய் மத பற்றாளர்களுக்கு ………………

  மதம் மாறுவது அவர் அவர்களின் சொந்த விருப்பத்தின் பாற்பட்டது … இந்தியனாக பிறந்தவன் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது…. மதம் மாறுபவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவதற்கும் யாருக்கும் இங்கு உரிமை கிடையாது அருகதையும் கிடையாது… பணத்தாசை காட்டி வறுமையை பயன்படுத்தி இப்போதெல்லாம் யாரும் யாரையும் மதம் மாற்றுவது கிடையாது ஆனாலும் இந்துவில் இருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி கொண்டு தான் இருக்கிறார்கள்.. இன்னும் சொல்லவேண்டுமானால் முதலியார் அணைத்து சாதிகளில் இருந்தும் வருகிறார்கள்….

 27. இது தொடர்பாக பூவண்ணன் – ஜடாயு பேஸ்புக் விவாதத்தை இங்கே பார்க்கலாம் –

  https://www.facebook.com/kavinnnn/posts/10200874511768357

  கிறிஸ்தவ மதமாற்றத்தை தான் ஆதரிப்பதற்கான காரணங்களாக சில வாதங்களை பூவண்ணன் முன்வைக்கிறார்.. அந்த வாதங்கள் படு அபத்தமானவை என்பதை நாம் எதிர்வாதங்களால் சுட்டிக் காட்டலாம்.. ஆனால், அதற்காக அவரை கிறிஸ்தவர்/பாதிரி என்றெல்லாம் முத்திரை குத்துவதைத் தவிர்க்க வேண்டுகிறேன் – குறிப்பாக அவர் அதை மறுத்து தான் இந்து தான் என்று கூறும்போது..

 28. // .அவர் பெயர் ,நிறம் ,அவரை கோமாளியாக சித்தரிக்கும் வன்மத்தில் உள்ள சாதி வெறி புலப்படாமல் இருப்பது வியப்பு தான்.//

  இந்தப் படத்தையும் பாலாவையும் எதிர்ப்பவர்கள் இப்படி ஒரு குற்றச்சாட்டை “கண்டுபிடித்து” பரப்பி வருகிறார்க்ள்.. மூக்குக் கண்ணாடி, கிராப், பிரிட்டிஷ் காலத்திய அந்த வகை பேண்ட் சர்ட்டுடன் வரும் அந்த டாக்டர் பாத்திரம் அம்பேத்கர் போல இருக்கிறதாம்! அடக் கொடுமையே.. ஹே ராம் படத்தில் கமல் பாத்திரம் இதே கெட்டப்பில் தானே இருந்தது? மற்றும் எத்தனையோ படங்களில் பிரிட்டிஷ் காலத்திய இந்தியர்கள் இப்படித் தான் சித்தரிக்கப் பட்டுள்ளார்கள்.

  பஞ்சம் பிழைக்க தலித்கள் மட்டுமல்ல, பல இடை நிலைச் சாதிகளை சேர்ந்தவர்களும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யப் போனார்கள் என்பது வர்லாஅறூ. இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான ஓட்டுப் பொறுக்கி என்கிற ராசாவின் தலித் அடையாளம் தெளிவாகவே காட்டப் பட்டுள்ளது.. உழைப்பு சுரண்டப் பட்டு கூலி மறூக்கப் படுவது, பந்தியில் அவமதிக்கப் படுவது எல்லாம் சித்தரிக்கப் படுகிறது.. பாலாவின் எல்லா படங்களிலுமே விளிம்பு நிலை மனிதர்களின் சோகமும், வலிகளும், சிறூ சிறூ சந்தோசங்களும் இணைத்து பேசப் பட்டுள்ளன. அதெல்லாமே ”தலித்” வாழ்க்கை சித்தரிப்பு அல்லாமல் வேறு என்ன?

  கிறிஸ்தவ மதமாற்றத்தின் அசிங்கத்தை துணிச்சலாக காண்பித்த ஒரே காரணத்திற்காகத் தான் இப்போது பாலா மீது சாதிவெறி முத்திரை குத்தப் படுகிறது.

 29. // அதைப் போன்றே மீனவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்திற்கு
  மாறுவதையும் இப்படியே விளங்கிக்கொள்ள முடியும். //

  ஆர்.பாலாஜி அவர்க்ளே< நீங்கள் ஏதோ ஒரு எளிமையான பார்முலா/ தியரியைப் போட்டு விட்டு எல்லாவற்றையும் அதன் மூலம் விளக்க முயற்சிக்கிறீர்கள். ஒரு சமூகம் கூட்டாக மதம் மாறுவது என்பது இப்படி சில்லறைத் தனமான காரணங்களால் நிகழுமா என்ன? தமிழக மீனவர்களின் மதமாற்ற வர்லாறு குறித்த அடிப்படை தகவல்களையாவது நீங்கள் படித்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்.. தென் தமிழக கடற்கரைகளில் மாண்பும் மதிப்பும் மிக்க குடிகளாக இருந்த பரதவர்களை கிறிஸ்தவ சர்ச்சும், மத ஆக்கிரமிப்பு வாதிகளும் காலனிய அரசு, இணைந்து எப்படி அடிமைப் படுத்தி சுரண்டி ஓட்டாண்டி ஆக்கியானார்கள் என்ற வரலாற்றை தமிழின் சிறந்த இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஜோ டி குரூஸ் எழுதியிருக்கீறார் - ஆழி சூழ் உலகு, கொற்கை என்ற இரண்டு மாபெரும் நாவல்களில். அதில் ஒன்றையாவது படித்துப் பாருங்கள். ஜோ டி குரூஸ் அவர்களும் பரதவர் சமூகத்தை சேர்ந்தவர் தான். அந்த சமூகத்திலேயே வரலாற்று உணர்வும் சிந்தனைத் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு தங்கள் மதமாற்ற வரலாறு பற்றிய புரிதல் உள்ளது.

 30. திரு ஜடாயு
  தங்கள் பேஸ்புக் விவாதம் பார்த்தேன். தங்கள் பாயிண்டுகள் அங்கும், இங்கும் சரியே. ஒருவர் மதத்தைப் பற்றி பேச வேண்டியதில்லை என்பது உட்பட.

  பொதுவில் இமாதிரி விவாதங்களில் சொல்ல பாயிண்ட் இல்லை எனும் போது வாதம் ஒத்து வராது என்று சொல்லி விலகி விடுவது ஒரு வகை.

  ஒருவர் மேல் சாதீய முத்திரை குத்துவது நிஜங்களில் இருந்து திசை திருப்பவே -திரு பாலாவின் மேல் போல -இன்றைய சூழலில் இது ஒரு நல்ல அஸ்திரம்.

  ஆனால் அதற்கு பதில் அஸ்திரங்கள் உண்டு,தைரிய மந்திரத்துடன் எய்ய வேண்டியவை அவை. செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  திரு பாலா மத மாற்றம் பற்றி சொல்ல வருவது என்ன என்பதே இன்றைய சூழலில் முக்கியம். வேறு யாருக்கும் தமிழ் பட உலகில் அந்த கோணத்தை பார்க்கும் தைரியம் கூட இது வரை இருந்தது இல்லையே.

  சாய்

 31. திரு பூவண்ணன் அவர்களை அவர்தம் கருத்து சார்ந்து பாதிரியார் என்று குறிப்பிட்டது முதலில் அடியேன்தான். அவர் இந்து என்று தம்மைக்கருதும் பட்சத்தில் அதற்காக வருந்துகிறேன்.
  1. திரு பூவண்ணன் சமயம் (அ) மதம் தேவையற்ற சமூக நிறுவனம் என்று கருதுவதாக த்தெரிகிறது. மதம் மட்டுமன்று, அரசு, குடும்பம் போன்ற எல்லா நிறுவனங்களும் தவறானவை என்ற கருத்து சமூக அரசியல் அறிஞர்களிடையே உண்டு. மதம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக நிறுவனமும் இறுகிப்போய் தமது அடிப்படைப்பணிகளை செய்யாத போது அது அவ்வாறு கண்டிக்கப்பட்டது. ஆனால் சமயம் இல்லாத சமூகமே இந்த உலகில் இல்லை. இனிமேலும் இருக்கப்போவதில்லை. சர்ச் போன்றிய இறுகிய தனிமனித ஆன்மீக சுதந்திரத்திற்கு கடும் கட்டுப்பாட்டு விதிக்கும் நிறுவனங்கள் செப்பனிடப்படவேண்டும்.
  2. மதமாற்றம் முன்னேற்றத்திற்கான வாய்பென்றோ அல்லது சமூக மாற்றத்திற்கான கருவி என்றோ பூவண்ணன் போன்றோர் கருதுகின்றனர்.
  ஆனால் அது அன்னிய ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்குமான ஒரு கருவி என்பதே உண்மை. மதமாற்றம் ஆன்மீக சுதந்திரத்திற்கு வழிவகுக்கவேண்டும் அது அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் வழிமுறை. அதிகபட்சம் மதமாற்றம் ஒரு எதிர்ப்பு காட்டும் நடவடிக்கை. ஹிந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையைக் கண்டிக்க மட்டுமே அது பயன் படுகிறது.
  சிவஸ்ரீ

 32. ஜோ டி குரூஸ் அவர்களின் ஆழி சூழ் உலகு, கொற்கை ஆகிய மாபெரும் நாவல்களை வாசிக்க விரும்புகிறேன். எங்கு கிடைக்கும் என்பதை திரு ஜடாயு இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.
  சிவஸ்ரீ

 33. //ஆர்டேல் வேண்டுமா,ஐடியா வேண்டுமா,பி எஸ் என் எல் வேண்டுமா ,சித்த மருத்துவம் வேண்டுமா,அல்லோபதி வேண்டுமா,உனானி முறையின் கீழ் சிகிச்சை எடுக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் உரிமை தனி மனிதனுக்கு தான். தந்தை பி எஸ் என் எல் வைத்திருந்ததால்/சித்த மருத்துவத்தை பயன்படுத்தியதால் அவனும் அதை தான் பயன்படுத்த வேண்டும் எனபது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அதை விட முட்டாள்தனம் அதே கடவுளை,வழிப்பாட்டு முறைகளை பிடித்து தொங்கி கொண்டிருப்பது//

  அதெல்லாம் சரி தான். தந்தை விவசாயம் பார்த்தாரென்றால் அதை விட்டு விட்டு மகன் கடை வைக்கலாம். தப்பில்லை. தந்தை சாதி வெறி கொண்டவரென்றால் மகன் சாதிகளை ஒதுக்கி வாழலாம். தப்பில்லை. தந்தை இறைவனை வழிபடுவதை பார்த்து தான் குழந்தை வழிபட கற்றுக் கொள்கிறது. தந்தை சொல்லிக் கொடுத்ததை செய்து விட்டு பின்பு சரியான அறிவு முதிர்ச்சி வரும்போது மகன் கேள்வி கேட்டு இது சரி, இது தவறென்று பிரித்து பகுத்து அறிந்து கொள்கிறான். ஆனால், சொல்லிக்கொடுத்த தந்தைகளே பல பேர் இன்று முதியோர் விடுதிகளுக்கு சென்ற கொடுமை ஆங்கிலக் கல்வியின் அதிகரிப்பினால் தான். அதை நம் மீது திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள். கிறித்தவர்கள். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் அவர்கள், தத்தமது இல்வாழ்வில் கூடுவிட்டு கூடு பாயும் மந்திர வித்தையைப் பயின்றவர்கள். நாகரீகமடையாத ஒழுக்ககேடான வாழ்க்கையை இயல்பாக எடுத்துக்கொண்டு வாழப் பழகியவர்கள். அவர்களே நம் பண்பாட்டை, பெருமையை, உயர்ந்த கலாச்சாரத்தைப் போற்றும்போது, நம்மில் ஒருவரான பூவண்ணன் என்னமோ அவர் தான் கிறித்தவத்துக்கும், மதமாற்றத்துக்கும், பிதாமகர் போல் பேசுவது வியப்பிலும் வியப்பு.

 34. தென்னாப்ப்ரிகாவிர்க்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட தமிழர்களிலும் பல சாதிகள் உண்டு.கிருத்துவத்திற்கு மாறிய தமிழர்களால் அங்கு சாதி முக்கால்வாசி ஒழிந்து விட்டது.ஆனால் ஹிந்துக்கள் பெரும்பானமையாக இருக்கும் மலேசியா வம்சாவழியினரிடையே சாமிவேலு தேவை,உதயகுமார் கவுண்டர் ,சாதி சங்கங்கள் என்று வலு குறைந்தாலும் சாதி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது

  https://www.gandhitoday.in/2011/11/blog-post_28.html

  சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் மட்டுமல்லாமல், “1913 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள், மவுண்ட் எட்ச்காமே எனும் இடத்தில் ‘சத்தியாகிரகம் முடியும் வரை தோட்ட வேலைக்கு வரமாட்டோம்’ என்று கூறிய ஆறு தமிழர்கள் – பச்சையப்பன், ராகவன், செல்வன், குருவாடு, சுப்புராய கவுண்டர் மற்றும் பெயர்தெரியாத மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேற்குறிப்பிட்டவர்களில் செல்வத்தின் மனைவி தமிழ் நாட்டிற்கு திரும்பினார், செல்வத்தின் மகன் அந்தோணிமுத்து காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்தில் சேர்ந்தார்” என்று எனுகா எசு. ரெட்டி என்பவர் குறிப்பிடுகிறார்

  தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய எந்த எந்த சாதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் சென்றார்கள் என்பதை பார்த்தால் அவர்களின் சென்ற நூற்றாண்டின் நிலை,விவசாய கூலிகளாக பெரும்பான்மையானோர் வாழ்ந்த நிலை தெளிவாக விளங்கும்
  தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஒரே சாதியாக சுருக்கி பார்க்கும் மொழிமாற்ற எறியும் பனிக்காடு கதையே ஒரு தவறு தான்
  மூல கதை அஸ்ஸாமில் நடப்பது.வடக்கில் சூத்திரர்களும் மிகவும் கீழ்சாதிகள் தான். இங்கும் நாடார்கள் சாலை போடும் பணியில் இருந்தால் எங்களுக்கு சாலையே வேண்டாம் என்று அக்கிரகாரங்கள் போராடிய நிகழ்வுகளும்,இன்றைய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வரும் ஈழவ சாதியினர் தெருவில் நடக்கும் உரிமைக்காக போராடியதும் உண்டு
  லட்சகணக்கில் மக்கள் ஆடு,மாடுகள் போல வேறு நாடுகளுக்கு கடுமையான பணி செய்ய போன போது கண்டு கொள்ளாமல் யாரோ என்று இருந்தவர்கள். ஒட்டாது தனித்து இருந்த நிலசுவாந்தார்களும்,சில ஜமீன்களும் அனைவருக்கும் ஒரு வோட்டு என்பதால் திடீரென்று நாம் ஒரே சாதி என்று பலரை,பல பிரிவுகளை சாதி பாசத்தோடு சேர்த்து கொண்ட சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளலாம்

 35. ஜடாயு சார்
  அன்றைய கால தலித் மக்களில் இன்றைய ஆண்ட சாதிகளும் அடக்கம்
  தோட்ட தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட மக்களில் நாடார்கள்,பள்ளிகள்(இன்றைய வன்னியர்கள்),கள்ளர்கள் எல்லாம் உண்டு.தென்னாப்ப்ரிகா அழைத்து செல்லப்பட்ட லட்சகணக்கான தங்கள் சாதி மக்கள் துயரபடுகிரார்கள் என்று வன்னியர் சங்கம் உண்ணாவிரதம் இருந்ததற்கு ஆதரவு தெரிவித்து பாரதியார் தன பத்திர்க்கையில் தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்டவர்களின் துயரத்தை எழுதி இருக்கிறார்.அவருடைய பத்திர்க்கை கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டுள்ள புத்தகத்தில் இதை வாசிக்கலாம்
  மலேசியாவில் இன்றும் தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட ஆதி திராவிடர்,வன்னியர்,கள்ளர் போன்றவரிடையே உள்ள சாதி வேற்றுமைகளும் அதனால் உள்ள ஒற்றுமை இன்மை பற்றியும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் உண்டு
  அன்றைய தலித்தில் இவர்கள் எல்லாம் அடக்கம்.
  ^ a b Culture and economy:Tamils in the plantation sector 1998-99 (

  the Tamil cinema hall and bus-services are owned by
  members of Adi-Dravida caste. Secondly, as I had discussed in my earlier study, even on the
  estates the purity-impurity opposition between the higher (non-Brahman) and lower (Adi-Dravida)
  castes had become considerably reduced. Members of all castes irrespective of their ritual status
  had contributed from their wages money to build the central Mahamariamman temple on Pal
  Melayu. On collective festive occasions like Adi Tiruvila, estate workers sat for a feast in the
  temple premises irrespective of their caste status (Jain 1970, Chapter 9). This development
  reached its culmination during the current phase of the Tamilians’ emancipation from estates in the
  Pal Melayu region. Not only is Muniandy the Chairman of the Thandayundapani Temple
  Committee in Batang Berjuntai a Parayan, but both in his perceptions and reactions to caste
  questions, he displays at once an intimate knowledge of the workings-out of caste distinctions in
  Tamil Nadu and an utter disdain for the claim of being an original high caste by the non-Brahman
  Vanniars whom we had discussed as the `dominant caste’ on Pal Melayu (ibid, 347-349). The
  following is an excerpt from my field-notes dated 20.1.1999.333
  CASTE WAR
  There is a caste war going on among Indians in Malaysia. Let me delineate the general
  process and recent history. The estates had only non-Brahmins & Adi-Dravidas and no
  Brahmins. The companies employing Indian partly through design and partly as a fall-out of
  recruiting procedures let the status quo of Indian villages be here, viz., the non-Brahmin
  and Adi-Dravida division was firmly entrenched and it helped the management to run the
  41
  estate. The Vanniar as “dominant caste” and Adi-Dravidas as the “subordinate castes” as I
  wrote in my 1970 book described the situation correctly. That caste was increasingly an
  aspect of culture rather than of social stratification per se was broadly true of the isolated
  and insulated circumstances of estate living.
  With the post 1969 changes and the increasingly powerful stream of Indians marching out
  of the estates the “djinni was freed from the bottle”

 36. பாலாஜி,
  மீனவர்கள் பற்றிய இந்த பிம்பத்தை எவ்வாறு உருவாக்கிக் கொண்டீர்கள்? வட தமிழக மீனவர்களிடையே கிறித்தவம் பரவாததிற்கு வங்கக் கடலின் வடபகுதியில் அலையடிக்கவில்லை என்பதாலா?

 37. ஜடாயு சார்
  ஹிந்து என்பதற்கு யாரும் தனிப்பட்ட உரிமை கொள்ள முடியாது என்பதற்கு தான் என்னை பற்றி கூறினேன்.என்னை எந்த மதத்தில்,சாதியில் சேர்த்தாலும் ஒரு வருத்தமும் கிடையாது
  ஹிந்துக்களில் சிலருக்கு கடவுளாக இருப்பதை திட்டுவதால்,மத மாற்றத்தை ஆதரிப்பதால்,பிடித்த எந்த மாமிசத்தையும் உண்பதால் ஒருவரை ஹிந்துவிலிருந்து விலக்க முடியுமா.
  நான் அயோத்தியில் மசூதியை இடித்து விட்டு ராமர் கோவிலை கட்டுவதை ஆதரிக்கிறேன் என்று கூறுபவர்,இல்லை ராமர் கடவுளே கிடையாது,அங்கு மசூதியே இருக்கட்டும் என்று சொல்லும் ஹிந்துவை விட ஹிந்து மதத்திற்கு அதிக உரிமை எடுத்து கொள்வது எந்த அடிப்படையில்.அப்படி சொல்பவர்களை எதிர்க்க வாதங்கள் இல்லாததால் தான் நீ கிருத்துவன் என்ற பதட்டங்கள்

  நீங்கள் அம்பேத்கர் போல என்று சொல்வது ஒரு பார்வை..

  தன்னை சாமி சாமி என்று அழைத்து பார்த்தால் எதிரில் வர பயப்பட்ட ,பறையர்கள் ,நாடார்கள் மதம் மாறி தம்மை சமமாக கருத்தி கொண்டதை ,அவர்களின் சமூகத்தை முன்னேற்றியதை வெறுப்பாக என்னும் வன்மம் தான் அந்த மருத்துவர் பாத்திரம்
  https://en.wikipedia.org/wiki/A._Y._S._Parisutha_Nadar

  Philanthropic services

  Parisutha Nadar was among the main donors[6] of lands of about 150 acres (0.61 km2) now occupied by the Thanjavur Medical College, the New Bus Stand and the Raja Serfoji Government College.
  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்காக 150 ஏக்கர் தானமாக தந்து ,மருத்துவ கல்லூரி வர காரணமாக இருந்தவரின் பெயர்
  He was also elected as an Member of the Legislative Assembly (MLA)[3] in the year 1946. During this tenure, he was a member of the constituent assembly that helped formulate the Constitution of India.
  அரசியல் அமைப்பு சட்டம் உருவாக காரணமான அரசியல் அமைப்பு சட்ட சபையில் உறுப்பினராக இருந்தவர்.
  பாலாவின்/நாஞ்சில் நாடனின் குடுமி சும்மா ஆடவில்லை.
  கிருத்துவத்திற்கு அதிகம் மதம் மாறிய சாதியை சார்ந்த பெருந்தலைவர் ஒருவரின் பெயர் தெரியாமல் வைக்கப்பட்ட ஒன்று அல்ல.
  ஒட்டு பொறுக்கியோ,டாக்டர் பரிசுத்தமோ மிக நுட்பமாக யோசித்து வைக்கப்பட்ட பெயர்கள்

 38. உயர்பதவியில் வரும் இந்திய கருப்பர்கள் வெள்ளை மனைவியை உயர்சாதிகளில் இருந்து பிடித்து இருப்பார்கள் எனபது இன்றும் அரசு,பொதுத்துறை,அரசியலில்,கலைத்துறையில் இருப்பவர்களை பார்த்து சாதிவெறியர்கள் காட்டும் வன்மமான நக்கல்
  அம்பேத்காருக்கும் உயர் சாதி துணைவி என்பதால் நீங்கள் சொல்லும் பார்வையும் புறந்தள்ள முடியாத ஒன்று.அங்கு கிண்டல் மதமாற்றம்,கிருத்துவம் அல்ல ,உயர்பதவிகளில் இருக்கும் சூத்திரர்களை,தாழ்த்தப்பட்டவர்களை பற்றிய கிண்டல் அது.கருப்பர்களை திருமணம் செய்து கொண்ட வெள்ளைய இனத்தை சார்ந்த பெண்கள் எனபது அன்றைய காலகட்டத்தில் மிக மிக அபூர்வமான நிகழ்வு .
  அங்கே தெரிவது தான் பிறந்த அதே சாதியில் துணையை தேடி கொண்ட பாலா,நாஞ்சில்நாடனின் வன்மம்,வெறுப்பு.சாதி,மத ,இன மறுப்பு திருமணங்களுக்கு எதிரான ஆத்திரம்.

 39. ///இன்றும் இந்தியா முழுக்க உள்ள அரசு நிறுவனங்கள்,பொதுத்துறை பொது தொழிற்சங்கங்களில்,தாழ்த்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்கங்களில் கிருத்துவத்தை தழுவிய மக்களின் பங்கு பிரதானம்.///

  அது சரி, பூவண்ணன்,

  மதலில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் நமது பாரதச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்? முஸ்லிம்களாவது, இந்துக்களுடன் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடி இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிவருடிகளாகச் சேவகம் மட்டுமே செய்தனர்.

  இப்போது எடுத்ததெற்கெல்லாம், தெருவில் இறங்கிப் போராடவும் தயங்காத பாதிரிமார்களும், பெண்பாதிரிகளும், அப்போது எங்கே இருந்தார்கள்? ஒருவர் கூட ஆங்கிலேயருக்கு எதிராக இருந்ததில்லையே? மாறாக அவர்களுக்கு ஆதரவாகவே கைக்கூலிகளாகச் செயல்பட்டனர்.

 40. பிரசன்னசுந்தர் சார்
  கிருத்துவத்தை கிழி கிழி என்று கிழிக்கும் படங்கள்,புத்தகங்கள் உலகெங்கும் உண்டு.
  மதத்தின் காரணமாக பெற்றோரை யாரும் தவிக்க விடுவதில்லை.அது பொருளாதார காரணம்.தீவிர மதப்பற்றுள்ளவர்களும் அமெரிக்க விசாவிற்காக தவம் கிடப்பது மதப்பற்று குறைந்ததால் அல்ல
  இந்துக்கள் கிருத்துவத்திற்கு மாறுவதை மட்டும் அல்ல கிருத்துவர்கள் இந்து மதத்திற்கு மாறுவதையும் தான் முழுமையாக ஆதரிக்கிறேன்.ஜோ க்ருசே ஒரு மாபெரும் புரட்சியாளர் தான்
  திரு பாலாஜி அவர்கள் உண்மையில் இந்து மதத்தை சிகரத்தின் மீது வைக்கிறார் என்று புரியாமல் அவரை விமர்ச்சிப்பது ஞாயமா.எல்லாம் தெரிந்தவர்களின் மதம்,மிக உயரிய தத்துவ மதம் இந்து மதம் எனபது அவர் வாதம்
  சென்ற வாரம் திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் என்னுடம் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மனைவியோடு பயணம் செய்தார். கடவுள் நம்பிக்கை பற்றிய பேச்சு வந்த போது அவர் குஜராத்தில் உள்ள த்வாரகா பற்றி கூறியது
  அங்கு சென்று விட்டு திரும்பும் போது சிறுவர்கள் மணலை சால்க் பீஸ் போல வைத்து விற்று கொண்டிருந்தார்களாம்.கிருஷ்ணன் சென்று விட்டதால் ஆயிரம் ஆயிரம் கோபியர் குளத்தில் விழுந்து உயிரை விட்ட இடமாம் அது .கிருஷ்ணன் வந்து கண்கலங்கியதால் புனித மண் ஆனதாம்.பல வியாதிகளை குணப்படுத்தும் என்றார்களாம்.நம்பிக்கை இல்லை என்றாலும் அவர்களுக்காக அதை வாங்கி வீட்டில் வைத்து இருந்தாராம்.அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருக்கும் போது கூக்கர் வெடித்து அவர் உடலின் மீது தெரித்ததால் துடித்த அவர் மனைவி உடனே செய்த பல காரியங்களில் அந்த மண்ணை எடுத்து முகத்தில் தேய்த்து கொண்டதும் ஒன்று.
  இன்றும் அவருக்கு மற்ற இடங்களில் தீப்புண் வடுக்கள் உள்ளன.ஆனால் முகத்தில் மண் தேய்த்த இடத்தில் காயதிர்க்கான சுவடுகளே இல்லை என்றார்.அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு
  ஹிந்து மதத்தின் பெரிய பலமே ஆயிரக்கணக்கான கோவில்களும்,கடவுள்களும்,அவற்றின் கதைகளும்,ஆற்றல்களும் தான் .ஹிந்து மதத்தை அதிசயங்கள் அற்ற மதம் என்று எண்ணும் பார்வை எந்த விதத்திலும் சரியானது அல்ல

 41. அன்புள்ள சிவஸ்ரீ அவர்களே,

  ஜோ டி குரூஸின் இரு புத்தகங்களையும் இங்கே வாங்கலாம்.

  ஆழி சூழ் உலகு – https://www.nhm.in/shop/100-00-0000-012-5.html

  கொற்கை – https://www.nhm.in/shop/100-00-0000-050-0.html

  உங்கள் முக்கிய ஆர்வம் வரலாறு என்றால் ”கொற்கை”யை முதலில் படிக்கலாம்.

 42. பூவண்ணன் அவர்களே…….

  //(சான்றோன் ஐயா நாடார் சங்கத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் கிருத்துவர்களை பட்டியல் இடட்டுமா //

  உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்…….எனக்கு ஓரளவு தெரியும்……சாதி சங்கத்தின் ஆயுள் சிறப்பு உறுப்பினராக இருந்த என் தந்தையிடம் சந்தா வசூலிக்க வந்தவர்களை விரட்டியடித்தவன் நான்….மேற்படி சங்கங்களினால் யார் பயன் பெறுகிறார்கள் என்பதையும் அறிவேன்…..ஒருவன் ஹிந்துவாக இருக்கும் வரை மட்டுமே அவன் நாடார்…….கிறித்தவராக மதம் மாறிய எவரையும் நான் நாடாராக ஏற்பதில்லை……

  நாடர்கள் என்றாலே மதம் மாறிகள் என்பது பொதுப்புத்தி……ஆனால் கொங்கு மண்டலத்தில் வசிக்கும் நாடார்களில் மதமாற்றம் என்பதே கிடையாது தெரியுமா? மறைந்த பெரியவர் திரு.மலர்மன்ன அவர்களின் தூண்டுதலால் நான் இதுகுறித்த ஆய்வில் உள்ளேன் ….முழு தகவல்கள் சேகரித்தபின் வெளியிடுவேன்……

 43. அன்புக்குறிய ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு நன்றி. உடுமலை.காமிலும் இந்த புத்தகங்கள் கிடைக்கின்றன. உடனே இவற்றை வாங்கி விடுகிறேன். அடியேனை ப்பொறுத்தவரையில் தற்கால சமூகப்பொருளாதார வளர்ச்சியைப்பற்றி ஆய்ந்துவருகிறேன். பழங்குடி முன்னேற்றத்தில் எனது கவனம் இருந்தாலும் மிகவும் பிற்படுத்தமக்களின் சமூக முன்னேற்றத்தினைப்பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் உள்ளதால் இந்த நூல்கள் அடியேனுக்குப்பயன்படும் என்று கருதுகிறேன். நன்றி.

 44. ஸ்ரீ அஞ்சன் குமார் ஒரு அருமையான வாதத்தினை வைத்துள்ளார். அது ஸ்ரீ பூவண்ணன் அவர்களுக்கு சரியானக்கேள்வி. இன்றைய போராட்டங்களில் பாதிரியார்களும் கன்யாஸ்த்ரிகளும் பங்க்கேற்கின்றனர். சுதந்திரத்திற்கு மதம் மாறியவர்கள் கிறித்தவப்பாதிரியர்கள் ஏன் போராடவில்லை என்பதே அது. அன்று மட்டுமல்ல இன்றும் கூட மதமாற்றம் ஒரு மனிதனின் வேர்களை அறவே அறுத்துவிடும் என்பது உண்மை. தன்னுடைய சமூகம், பாரம்பரியம் முன்னோர்களை மகா மட்டமாக கருதும் மனோபாவம் மதமாற்றத்தின் விளைவு. அன்னிய அடிவருடிகளாக மக்களை மாற்றுவது மதமாற்றிகளின் குறிக்கோள் மட்டுமன்று மதமாற்றத்தின் விளைவும் தான். நன்று மிக நன்று ஸ்ரீ அஞ்சன் குமார் அவர்களுக்கு.

 45. ஸ்ரீ அஞ்சன் குமார் ஒரு அருமையான வாதத்தினை வைத்துள்ளார். அது ஸ்ரீ பூவண்ணன் அவர்களுக்கு சரியானக்கேள்வி. இன்றைய போராட்டங்களில் பாதிரியார்களும் கன்யாஸ்த்ரிகளும் பங்க்கேற்கின்றனர். சுதந்திரத்திற்கு மதம் மாறியவர்கள் கிறித்தவப்பாதிரியர்கள் ஏன் போராடவில்லை என்பதே அது. அன்று மட்டுமல்ல இன்றும் கூட மதமாற்றம் ஒரு மனிதனின் வேர்களை அறவே அறுத்துவிடும் என்பது உண்மை. தன்னுடைய சமூகம், பாரம்பரியம் முன்னோர்களை மகா மட்டமாக கருதும் மனோபாவம் மதமாற்றத்தின் விளைவு. அன்னிய அடிவருடிகளாக மக்களை மாற்றுவது மதமாற்றிகளின் குறிக்கோள் மட்டுமன்று மதமாற்றத்தின் விளைவும் தான். நன்று மிக நன்று ஸ்ரீ அஞ்சன் குமார்.

 46. மதமாற்றம் சமூகப்பொருளாதார வளர்ச்சியை மக்களுக்கு அளிக்கிறது என்று வாதிடும் ஸ்ரீ பூவண்ணன் அவர்களே. உங்கள் சிந்தனைக்கு
  1. கிறிஸ்தவர்களில் வறியவர்களே ஏழைகளே இல்லையா?
  2. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில் வறுமையே இல்லையா?

 47. அஞ்சன் குமார் சார்
  நானும் என் முன்னோர்களில் தேடி தேடி துறவி துருவி துருவி பார்க்கிறேன் யாராவது சுதந்திர போராட்ட வீரர்கள் சிக்குவார்களா என்று எங்கே
  இங்கிருந்து பர்மாவிற்கு அழைத்து செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து அகதிகளாக ஓடி வந்தவர்கள் உண்டு.இரண்டாம் உலக போரில் வெள்ளையனுக்காக ராணுவத்தின் ரெசெர்வெ படையில் இருந்தவர் சொந்த தாத்தா.அவரின் தம்பி விடுதலைக்கு முன்பே ரயில்வேயில் சேர்ந்தவர்.
  இன்னொரு பக்கம் ஹைதராபாத் சிங்கரேணி கோல்லேரீஸ் என்று கல் குவாரிக்கு வேலைக்கு சென்ற கூட்டம்
  எவ்வளவு பெரிதாக வலை விரித்தாலும் விடுதலைக்காக போராடியவர்கள் யாரும் சிக்கவில்லை.
  இந்திய விடுதலை போராட்டம் முழுக்க முழுக்க உயர்சாதியினர் போராட்டம்.தெரியாமல் அப்போது திருடி விட்டு சிறையில் இருந்த மற்ற சாதியினர் தவறுதலாக சில இடங்களில் தியாகி பென்ஷன் பெறலாம்.மற்றபடி விடுதலை போராட்டதிற்கும் பெரும்பான்மை மக்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது

 48. பூவண்ணன் சுவாமி விவேகானந்தர் தேச விடுதலை பற்றி பேசிய பேச்சு அடங்கிய புத்தகம் படித்ததில்லையோ? சிரத்தானந்தர் இந்து துறவி இல்லையோ? சமர்த்த ராம தாசர் யார்? சாணக்கியன் யார்? வினோபா பாவே யார்? அரவிந்தர் யார்? வரலாறு படிப்பதில்லையோ? //இந்திய விடுதலை போராட்டம் முழுக்க முழுக்க உயர்சாதியினர் போராட்டம்.தெரியாமல் அப்போது திருடி விட்டு சிறையில் இருந்த மற்ற சாதியினர் தவறுதலாக சில இடங்களில் தியாகி பென்ஷன் பெறலாம்.மற்றபடி விடுதலை போராட்டதிற்கும் பெரும்பான்மை மக்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது// எவ்வளவு அப்பட்டமான பொய். உங்களுக்கு கருணாநிதியே மேல். கருணாநிதியும் இந்து தான். ஆனால் இந்து துரோகி, நீங்களோ அதற்கு மேல் மத மாற்றத்துக்கு ஆதரவு தெரிவிப்பதால் தேச துரோகி.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ பெண் ஒருவருக்கு அவர் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றும் அதை வாங்க போக பணம் இல்லாமல் இருந்த செய்தி பத்திரிகையில் வந்ததை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். மதமாற்றம் எங்கே பொருளாதார நிறைவை தந்தது?

  நீர் கோவிலுக்கு போவதால் இந்து என்று பிறர் சொல்லலாம், நீர் தி.க. காரராக இருக்கலாம், சத்யராஜ், கருணாநிதி போன்றோரின் மனைவிமார் கோவிலுக்கு போவதை அவர்கள் ஆதரிப்பது போன்று வேறு எதோ நபருக்காக நீரும் கோவில் போய் வரலாம், அல்லது கிரிச்துவராகவே இருக்கலாம், ஏனெனில் குமரி மாவட்டத்தில் மரிய கோபாலன் மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு போவது வழக்கம், கிறிஸ்துவர்கள் திருச்செந்தூர் போன்ற இந்து கோவில்களுக்கு போவதால் எனக்கு தெரிந்தே ஒரு சர்ச்சில் இந்து மத கோவில்களுக்கு போனால் சபையிலிருந்து நீக்கப்படுவர் என்று பாதிரியாரால் அறிவிக்கப்பட்டது. அதே குமரி மாவட்டத்தில் சில இடங்களில் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகளே இந்து கோவில்களில் காணிக்கை போடுவது, பூ வாங்கி வைப்பது என இன்றும் செய்து கொண்டு இருக்கிறார்கள், இருந்தும் அவர்களும் மத மாற்றத்தில் தோடர்ந்து ஈடுபடத்தான் செய்கிறார்கள். நீரும் இந்த வகைகளில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

  நீர் எவர் எது சொன்னாலும் எதிர் கருத்து எழுத வேண்டும் என்ற பாணியில் கருத்து தெரிவிக்கிறீர். புத்திசாலியாக ஆவது எப்படி என்று ஒருவர் ஞானி ஒருவரிடம் கேட்டார், இரு வழிகளில் தன்னை புத்திசாலிகளாக ஆக்கிகொள்ளலாம், ஓன்று நிறைய படித்து தெரிந்து அறிவை பெருக்கி அப்படி ஆகி கொள்வது, மற்றொன்று எவர் எதை பேசினாலும் தவறோ சரியோ அதற்கு மறுத்து அதற்கு எதிராக கருத்தை தெரிவிப்பது, சுற்றி இருக்கும் முட்டாள்கள் ஆராய்ந்தா பார்க்க போகிறார்கள், இணையத்தில் சகிர் நாயக் கூட அந்த வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார், என்ன குரல் மட்டும் உயர்ந்து இருக்க வேண்டும். இந்த இரு வகைகளில் நீர் எந்த வகை என்று நீரே முடிவு செய்து கொள்ளும், இரண்டாவது வகை காரர்கள் நிம்மதி இழந்து, நட்பு, நல்லோர் வட்டம் இழந்து, இறுதியில் மன நோய் வரவும் வாய்ப்பு உண்டு. உம்மை முதலில் நல்ல சுய பரிசோதனை செய்யும்.

 49. கிருஸ்துவத்தின் குறிக்கோள் ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால்தான் அவர்களது மதமாற்று வியாபாரம் நடந்துகொண்டிருக்கும். கிருஸ்துவ காலணிஆட்ச்சியால் கிழேதரப்பட்டுள்ள நாடுகளின் ஏழ்மை நிலை
  (தேசம் – கிருஸ்துவர்களின் எண்ணிக்கை – வருமைகோட்டிற்க்குகிழே உள்ளவர்களின் விகிதாசாரம்)
  போலிவியா – 100 % (Christian ) – 64 % (below poverty line)
  ஆண்டுராஸ் – 100 % – 53 %
  பனாமா – 100 % – 37 %
  வெனிசுலா – 98 % – 47 %
  எய்டி – 96 % – 80 %
  இகுவேடார் – 95 % – 45 %
  மெக்ஸிகோ – 95 % – 40 %
  அர்சன்டைனா – 94 % – 44 %
  ராவான்டா – 93 % – 60 %
  இஸ்ட் டைமேமார் – 93 % – 42 %
  பிலிபைன்ஸ் – 92 % – 40 %
  கௌடமாலா – 90 % – 75 %
  நாமிபியா – 90 % – 50 %
  கோலம்பியா – 90 % – 55 %
  இஐ சால்வேடார் – 83 % – 36 %
  பெரு – 83 % – 54 %
  சவுத் ஆப்பிரிக்கா – 80 % – 50 %
  சாம்பியா 75 % – 86 %
  சிம்பாவே – 75 % – 70 %
  போட்ஸ்வானா – 72 % – 47 %
  புருன்டி – 67 % – 68 %

 50. ஆனால் அமெரிக்காவின் ஏழ்மை நிலை 12 (இதில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிலை 26 % இப்பிகள் 25 % ) ஆனால் இந்தியாவின் கிருஸ்துவர்களின் விகிதம் 10 % ஏழைமைகோட்டிற்க்கு கிழே உள்ளவர்களின் நிலை 25 % எனவே கிருஸ்துவர்களன் எண்ணிக்கை அதிகரித்தால் ஏழ்மைநிலை உயரும்.

 51. திரு பூவண்ணன் அவர்களே!

  //மதத்தின் காரணமாக பெற்றோரை யாரும் தவிக்க விடுவதில்லை.அது பொருளாதார காரணம்.//
  இது உண்மை இல்லை. அனாதை ஆசிரமங்களேல்லாம் சென்ற 1950களில் இருந்து தான் தொடங்கப்பட்டதாக நான் அறிவேன். மெக்காலேயின் கல்விமுறை பெரிதும் வளர்ந்தது இந்திய சுதந்திரமடைவதற்கு முன்பிருந்து தான். ஆனால் விடுதலைக்குப் பின்னரும் நம் முன்னோர்கள் பின்பற்றிய கல்வியறிவை விரிவு படுத்தாமல் விட்டது பெரியகுறை. மேற்கத்தியர்கள் பெரிதும் உள்ள மேலை நாடுகளில் ஒரு மகனுக்கு 3 அப்பாக்கள் 4 அம்மாக்கள் சகஜம். இதற்கு சான்று தேவையில்லை என்று நினைக்கிறேன். அந்தளவிற்கு நம் நாட்டில் நிலைமை மோசமாகவில்லை என்றாலும் பெற்றோரை அனாதை இல்லத்தில் விடும் கலாச்சாரம் வளர்ந்திருப்பது ஆங்கிலக் கல்வியினால் தான். அந்த ஆங்கிலக்கல்வியை திணித்தவர்கள் வெள்ளையர்கள். அதாவது கிறித்தவர்கள். இன்றைக்கு பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடியலையும் வாழ்க்கை முறையை நம் மீது திணித்தது இந்தக் கிறித்தவர்கள் கொடுத்த தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் கல்விமுறை தான். விடுதலைப் போராட்ட காலத்திற்கு முன்பும் நம் நாட்டில் வறுமை இருந்தது. அப்போது எவனாவது அப்பா அம்மாவை விடுதியில விட்டதா தகவல் உண்டா? எனவே வறுமையினால், பொருளாதாரத்தினால் அனாதை விடுதி என்பது அடிபட்டுப் போகிறது.

  நான் வேலை செய்யும் கம்பெனியில் பிரெஞ்சு தான் பிரதானம். ஆனால் பிரெஞ்ச்காரன் ஆங்கிலத்தில் பேசமாட்டான். Google Converter இல் Payslip என்று பிரெஞ்சில் டைப் செய்து ஆங்கிலத்தில் Paysleep என்று வந்தாலும் அது தவறு என்பது தெரியாமல் அப்படியே மெயில் ஷீட்டில் பேஸ்ட் பண்ணி அனுப்புவான். கிட்டத்தட்ட 2 லட்சம் இந்திய ரூபாயும் மேற்கொண்டு பிரெஞ்சு கரென்சியில் 2 லட்சமும் வாங்கக்கூடிய பதவியில் உள்ள Expat level ஆளே இப்படித்தான் செய்கிறான். பிடிவாதமாக தன் மொழியைத்தான் பேசுவேன், அது தெரியாதவன் கற்றுக்கொண்டு வந்து என்னிடம் பேசட்டுமே! என்னும் எண்ணம் அவர்களிடம் மிகுந்து காணப்படுகிறது. நான் பிரெஞ்சு பேசுகிறவன், நீ இந்திய மொழிகளுள் ஏதோ ஒன்று பேசுகிறவன். நாம் ஏன் ஆங்கிலம் பேச வேண்டும் என்று சரியான எண்ணமுடையவர்கள் என் கம்பெனியில் அதிகம். அதனால் அவர்கள் இந்தியாவில் வேலை கொடுக்கும் நிலையில் உள்ளனர். ஆனால் மாங்கு மாங்கென்று ஆங்கிலத்திலேயே அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்கும் நம் ஆட்கள் அவர்களிடம் வேலை செய்கின்றனர். ஆங்கிலம் படித்தால் தான் இன்டர்வியுவில் தேர்ச்சி பெறலாம். அப்போது தான் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். வீடு, கார் அனைத்து கனவுகளும் நிறைவேறும். அப்ப நம்ம தாய்மொழி? தாயையே விடுதியில விடச்சொல்ற சமுதாய அமைப்பு முறை கொண்ட பன்னாட்டு கம்பெனி முதலாளிகள் நம்ம தாய் மொழியில பேசினா ஏத்துப்பாங்களா? தமிழால ஏதாவது ஒரு உபயோகம் உண்டா? வாயார எவனையாவது திட்டி மனசை ஆத்திக்க உதவும். அவ்வளவுதான். அப்ப யாருக்காகவோ உழைச்சு கொட்டி அவன் கிட்ட வேலை செஞ்சு அவன் மொழியைப் பேசி அவன்கிட்ட சம்பளம் வாங்கற வெறும் அடிமை புத்தியை வளர்க்கும் கல்விமுறையை தோற்றுவித்தது மெக்காலே தான். அதை மேன்மேலும் பல்கிபெருக்க நம் நாட்டினுள்ளேயே நிலைத்து நம்மை அடிமையாகவே வைத்திருக்க அவன் செய்த விஷயம் தான் மதமாற்றம். எந்த கிறித்தவ பள்ளியாவது முழுக்க முழுக்க தமிழிலோ, ஹிந்தியிலோ நடத்தப் படுகிறதா? ஆங்கிலப்பள்ளிகள் தான் ஏராளம். வேத பாட சாலைகளை மூடி ஒரு ஓரமாக வைத்தாயிற்று. அடுத்து ஒழிக்க வேண்டியது மாநில மொழிக் கல்வியை தான்.

  அயல் நாடுகளில் இந்திய முதலாளிகள் தொழில் செய்வது இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அவர்கள் அயல் நாடுகளில் ஆங்கிலம் தான் பேசுகிறார்களே தவிர தத்தமது இந்தியத் தாய் மொழிகளைப் பேசுவது இல்லை. மேலும் ஒரு அம்பானியையும், ஒரு மிட்டலையும், ஒரு டாடாவையும் வைத்துக் கொண்டு நாம் வளர்ந்த தேசம் என்று சொல்லிக்கொள்வது வெட்ககேடு. அப்ப மத்தவன்லாம்? அடிமை தான்.

  //தீவிர மதப்பற்றுள்ளவர்களும் அமெரிக்க விசாவிற்காக தவம் கிடப்பது மதப்பற்று குறைந்ததால் அல்ல// அமரிக்க விசா வாங்குவது தவறென்றோ, வேறு நாடுகளுக்கு பயணம் செய்வது குறைஎன்றோ நான் எப்போதும் சொல்லவில்லை. கல்வியைப்பற்றியும், அதனால் சமுதாய ஒழுங்கில் ஏற்படும் சீர்கேடும், அடிமை புத்தியும் தான் நான் சொல்ல வந்த விஷயம். வெளிநாடுகளுக்கு செல்பவனெல்லாம் அடிமைத் தொழில் விஷயமாக செல்லாமல் சுற்றுலா செல்பவனாக மாறும் நிலைக்கு உயர வேண்டுமென்றால் நம் கல்விமுறையில் மாற்றம் வந்தே ஆக வேண்டுமென்பது தான் என் கருத்து. இது தங்கள் தவறான புரிதலை தெளிவாகக் காட்டுகிறது.

  //திரு பாலாஜி அவர்கள் உண்மையில் இந்து மதத்தை சிகரத்தின் மீது வைக்கிறார் என்று புரியாமல் அவரை விமர்ச்சிப்பது ஞாயமா.// நான் எங்கே சார் அவரை விமர்சித்தேன்? அற்புதங்களைப் பற்றி அவர் எழுதியதில் எனக்கு உடன்பாடு தானென்றாலும், சித்தர்கள் செய்யக்கூடிய அட்டமாசித்திகள் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. அதனால் தான் அது பற்றிய ஒரு சிறிய பத்தியை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். இதுவும் உங்கள் தவறான புரிதலையே காண்பிக்கிறது.

  //ஹிந்து மதத்தை அதிசயங்கள் அற்ற மதம் என்று எண்ணும் பார்வை எந்த விதத்திலும் சரியானது அல்ல// யார் இப்போது அற்புதங்கள் அற்ற மதம் என்று சொன்னது? நானும் அப்படி அதிசயங்கள், அற்புதங்கள் அற்ற மதம் என்று எங்கும் சொல்லவில்லை. ராமாயணத்தில் அட்டசித்தியும் கைவரப்பெற்ற காக்கும் தெய்வமாம் அனுமன் பல அற்புதங்களை செய்கிறார். மகாபாரதத்தில் பகவான் கண்ணன் பல அற்புதங்களை செய்கிறார். தூணைப் பிளந்து நரசிம்மர் வெளிப்பட்டார். நெற்றிக்கண்ணைத் திறந்து ஈஸ்வரன் திரிபுரமெரித்தார். இப்படி புராணங்களிலும், இதிகாசங்களிலும் நாம் படித்த விஷயங்களெல்லாம் உண்மை தானா? இவ்வாறெல்லாம் நடக்க முடியுமா என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆவல் அதிகம் உண்டு. அதன் வெளிப்பாடு தான் ஹயும் செய்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டது.

  முதலில் நாம் சொல்லும் விஷயத்தை சரியாக உள்வாங்கிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு வாதம் செய்யலாம். இல்லையெனில் அது விதண்டாவாதமாக தான் அமையும்.

 52. பூவண்ணன் அவர்களே!

  //இந்திய விடுதலை போராட்டம் முழுக்க முழுக்க உயர்சாதியினர் போராட்டம்.தெரியாமல் அப்போது திருடி விட்டு சிறையில் இருந்த மற்ற சாதியினர் தவறுதலாக சில இடங்களில் தியாகி பென்ஷன் பெறலாம்.மற்றபடி விடுதலை போராட்டதிற்கும் பெரும்பான்மை மக்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது//

  இது போன்ற விஷப்ப்ரசாரங்கள் நாட்டை வெளிநாட்டானிடம் அடகு வைக்க தான் உதவும். தீண்டாமையை ஒழிக்கவோ, சமூக நலனை வளர்க்கவோ சத்தியமாக உதவாது. மதம் மாறியவர்களை குறை சொல்கிறோம் என்று கூறுகிறீர்களே, நன்றாக கவனியுங்கள்! மதம் மாறியவர்களையா குறை சொல்கிறோம்? மதமாற்றம் தான் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்று சொல்பவர்களைத்தான் குறை சொல்கிறோம்! விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை நல்லோரையும் அசிங்கப்படுத்தும் ஒரு மட்டமான விஷக்கருத்தை விதைக்க முயல்கிறீர்கள். ஜாலியன்வாலாபாகில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் யாரும் குடியான ஏழை விவசாயியோ, தச்சரோ, குயவரோ இல்லை என்று உங்களுக்கு ஆதாரப் பூர்வமாகத் தெரியுமா? அனைவருமே இப்படிப்பட்ட ஏழைப் பாட்டாளிகள் தான். உங்கள் பெயர் நாலு பேருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் சொல்லாதீர்கள்.

 53. பூவண்ணரின் கருத்துக்கள் நல்ல நகைச்சுவை. வெள்ளையனுக்கு கால்கழுவி வாழ்ந்த திக மற்றும் அதன் முன்னோடி குழுக்களால் மூளை சலவை செய்யப்பட்டவர் என்பது அவரது எழுத்துக்களை படிக்கும்போது தெளிவாகிறது. அவரது உளறல்களுக்கு எல்லையே கிடையாது. இந்திய சுதந்திர போராட்டத்தில், பெரும் நிலச்சுவான்தாரர்களாக இருந்த நிலக்கிழார்கள் , மிட்டா மிராசுகள் அனைவரும் ஜஸ்டிஸ் கட்சி தூண்களாக விளங்கினார்கள் ராவ் பகதூர் மற்றும் சர் போன்ற வெள்ளையன் கை பிரசாதங்களையும் வாங்கி சாப்பிட்டு , அந்த பட்டங்களை தங்கள் லெட்டர் பேடில் , அடித்து புளகாங்கிதம் அடைந்தனர். நிலமற்ற ஏழைகளும், மத்திய தர வர்க்கத்தினருமே சுதந்திர போராட்டத்தில் 99 சதவீத பங்காற்றினார். அந்த சுதந்திர போராட்டத்தினை பணக்காரர்கள் நடத்திய போராட்டம் என்று பொய் சொல்லும் பூவண்ணரே , ஐயோ பாவம்.

 54. திரு பூவண்ணன் அவர்களுக்கு சரியான பதில் அளிக்கப்பட்டுவருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீ வேதம் கோபால் கிறிஸ்தவ தேசங்களின் வறுமைக்கோட்டு ப்புள்ளிவிவரங்களை த்தந்து கிறிஸ்தவம் வறுமைக்கு விமோச்சனம் முன்னேற்றத்திற்கு வழி என்பதனை தவிடு பொடியாக்கியிருக்கிறார். பாராட்டுக்கள். மதமாற்றம் என்னும் தூண்டிலில் மனிதன் என்னும் மீனைப்பிடிக்க கோர்க்கப்பட்டுள்ள குண்டுப்புழுவே சேவை என்பது அப்பட்டமான உண்மை. இந்த ப்பாவிகள் படிக்கவிரும்பும் ஏழைகளுக்கு படிப்புத்தருகிறேன் என்றும் படித்தவர்களுக்கு வேலைக் கொடுக்கிறேன் என்றும் மதத்தினை மாற்றுவதை நேர்கொண்ட ப்பார்வையாளர்கள் அறிவர்.

 55. திரு பூவண்ணன் பாரத தேசவிடுதலைப்போராட்டத்திற்கும் பெரும்பான்மை மக்களுக்கம் சம்பந்தம் இல்லை என்று சொல்வதன் மூலம் ஆங்கில ஏகாதிபத்தியன் அடிவருடியான திராவிட இயக்கத்தவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதைவிடக்கேவலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த தேசத்தியாகிகள் பொய்யர் என்பது. தமிழிலும் அங்கங்கு வாழ்ந்த பல்வேறு தியாகியர் பற்றிய நூல்கள் வந்துள்ளன. படிக்கவேண்டும்.
  விவசாயிகள், பெண்டிர், மாணவர், அரசுப்பணியாளர் யாவரும் பங்கேற்ற மக்களியக்கமாக அண்ணல் காந்தி அடிகளால் தேசவிடுதலை இயக்கம் மாற்றப்பட்டது உண்மை.
  மாறாக உங்கள் போலித்திராவிட இயக்கமே பிராமணர் அல்லாத உயர் சாதியினரியக்கம்.அங்கு முதன்மை வகித்தது உயர்சாதியின் நலமன்று.

 56. திரு.Vedamgopal இந்தியாவில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை விகிதம் 10%
  என்கிறார். இது தவறான தகவல். இந்தியாவில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை
  வெறும் 2.3 சதவிகிதம் மட்டுமே!
  https://censusindia.gov.in/Census_And_You/religion.aspx

 57. பிரசன்ன சுந்தர் சார்

  இந்தியாவில் முன்பு கான்செர் நோயாளிகள் குறைவு.இப்போது அதிகரித்து வருகிறார்கள் என்று கூற்று உண்டு. அதற்க்கு உண்மையான காரணம் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் மிக குறைந்த வயதிலேயே இறந்தது தான்.சராசரி ஆயுள் முப்பதிற்கு கீழே இருந்த நிலையில் பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டிய நிலை என்பதே முக்கால்வாசி பேருக்கு கிடையாது.அப்படி வயதாகும் வரை வாழ்ந்த சிலரும் பல குழந்தைகள் இருந்ததால் பெற்றோரும் மகன்/மகள் வெளியூர்/வெளிநாடுகளில் வசித்தாலும் மற்ற குழந்தைகளோடு வசிக்க வாய்ப்பு இருந்தது.இன்றும் அதிக குழந்தைகள் பெரும் குழுக்களிடம் முதியோர் இல்லங்கள் அபூர்வம் தான்

 58. பிரசன்ன சுந்தர் சார்

  இந்தியாவில் முன்பு கான்செர் நோயாளிகள் குறைவு.இப்போது அதிகரித்து வருகிறார்கள் என்று கூற்று உண்டு.
  Indians didnt live longer to get cancer .
  அதற்க்கு உண்மையான காரணம் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் மிக குறைந்த வயதிலேயே இறந்தது தான்.சராசரி ஆயுள் முப்பதிற்கு கீழே இருந்த நிலையில் பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டிய நிலை என்பதே முக்கால்வாசி பேருக்கு கிடையாது.அப்படி வயதாகும் வரை வாழ்ந்த சிலரும் பல குழந்தைகள் இருந்ததால் பெற்றோரும் மகன்/மகள் வெளியூர்/வெளிநாடுகளில் வசித்தாலும் மற்ற குழந்தைகளோடு வசிக்க வாய்ப்பு இருந்தது.இன்றும் அதிக குழந்தைகள் பெரும் குழுக்களிடம் முதியோர் இல்லங்கள் அபூர்வம் தான்

 59. இந்தியா,பாகிஸ்தான்,பர்மா,இலங்கை,ஆப்கானிஸ்தான் எல்லாம் ஒரே நாடாக இருநதது.தனி தமிழ்நாடு வேண்டும் என்று போராடுவது போல குறிப்பிட்ட பகுதிக்கு விடுதலை வேண்டும் என்று போராடி அதை துண்டு போட்டு அதனால் பல நூற்றாண்டுகள் மக்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து மதம்,மொழி அடிப்படையில் மக்கள் துரத்தப்பட்டு,பல லட்சம் பேர் கொடூரமாக கொல்லப்பட்டு ,வரமுடியாத இடங்களில் மாட்டி கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியுரிமை மறுக்கப்பட்டு இருப்பதற்கு காரணமான விடுதலை போராட்டத்தில் எந்த அடிப்படையில் பெரும்பான்மை மக்களை சேர்க்கிறீர்கள்
  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக காரணமாக இருந்த constituent assembly இல் இருந்த ஒரு சில தாழ்த்தப்பட்ட /பிற்படுத்தப்பட்ட/பழங்குடி இன மக்களின் பட்டியலை தர்ட்டுமா.அவர்கள் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்
  விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பத்து SC/ST/OBC தலைவர்களின் பெயர்களை கூறுங்களேன் பார்ப்போம்.
  ஹிந்டுத்வர்களின் INTELLECTUAL/ வழிகாட்டி அருண் சௌரி அம்பேத்கர் அவர்களை QUIT INDIA ஐம்பதாம் ஆண்டு கொண்டாட்டங்களில் விடுதலை போராட்ட வீரராக விளம்பரபடுத்த பட்டதை தாங்கி கொள்ள முடியாமல் ஆதாரங்களோடு அம்பேத்கர் ஆங்கில அரசின் மிக தீவிர ஆதரவாளர்,விடுதலை போராட்டத்தை எப்படி கொச்சைபடுத்தினார்,பெரும்பான்மை மக்களை பின்னோக்கி தள்ளும் போராட்டம் என்று அதனை விமர்சித்தார் என்று ஆதாரங்களோடு(அம்பேத்கர் கைப்பட எழுதியவை/பேசியவை)எழுதிய புத்தகம் worshipping false gods
  ஜாலியன் வாலபாகோ ,பிரிவினை படுகொலைகளோ /maoist /துணை ராணுவத்தினரால் பாதிக்கபடுவர்களோ அன்றும் இன்றும் பெயர் தெரியாத அழைத்து செல்லப்பட்ட மக்கள் தான்.வெள்ளையன் ராணுவத்தில் சேர போட்டி போட்டது எந்த சாதிகள் என்று தெரியுமா
  காந்தியின் பேச்சை கேட்டு வெள்ளையன் அரசாங்கத்தில் வேலை செய்த எவ்வளவு ஒதுக்கீட்டு சாதிகளை சார்ந்தவர்கள் வேலையை விட்டார்கள் என்று பார்க்கலாமா (காந்தியின் இந்த நிலையை நமக்கு சாதகமாக்கி கொண்டு அனைவரும் கிடைத்த அனைத்து வேலைகளிலும் சேர வேண்டும் என்று சொன்ன தலைவர் யார் தெரியுமா)

 60. திரு பூவண்ணன் அவர்களே!

  //இந்தியாவில் முன்பு கான்செர் நோயாளிகள் குறைவு.இப்போது அதிகரித்து வருகிறார்கள் என்று கூற்று உண்டு.
  Indians didnt live longer to get cancer .
  அதற்க்கு உண்மையான காரணம் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் மிக குறைந்த வயதிலேயே இறந்தது தான்.// தங்களோடு விவாதிப்பதை எண்ணி இதுவரை வருந்தியதில்லை. ஆனால் நீங்கள் கூறும் குழந்தைத்தனமான காரணங்களால், உங்களை மதித்து பதில் சொல்லுவதற்கு மற்றவர்களெல்லாம் என்னைத் திட்டக் கூடி வருமோ என்று அஞ்சுகிறேன். பெற்றோர்களை அனாதை ஆசிரமத்தில் விடும் கலாச்சாரம் பெருகி, படித்தவர்களெல்லாம் பணத்தாசை பிடித்தவர்களாகி இருக்ககூடிய காலகட்டம் இது, என்பதைச் சொன்னால், உலக மகா புருடா விடுகிறீர்கள்.

  //இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் மிக குறைந்த வயதிலேயே இறந்தது தான்// உங்களிடம் புள்ளிவிபரம் ஆதார பூர்வமாக இருக்கிறதா? கூட்டுக்குடும்பங்களாக வசித்தவர்கள் தனித்தனியாக வாழும் இக்காலச் சூழலை நீங்கள் ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியே! ஒரு பிள்ளை இல்லையென்றாலும் இன்னொருவர் பெற்றோரை கவனித்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது அந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை முற்றாக அழிந்து வருவதற்கும் காரணம், நமது மேல்நாட்டு அடிமை புத்திக் கல்வி முறை தான். ஏன் ஐயா அந்தக்கல்வி முறை பற்றிய ஒரு குற்றச்சாட்டிற்கும் நீங்கள் பதிலளிக்கவே இல்லை? ஏனென்றால் உங்களுக்கே பதில் தெரியாது. அல்லது பழங்கால இந்திய ஆன்மிக மற்றும் அறிவியல் துறைகளில் சத்தியமாக உங்கள் முன்னோர்களின் பங்கு இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நீங்கள் திடமாக நம்ப ஆரம்பித்து விட்டீர்கள். 6,7 தலைமுறைகளுக்கு முன்னால் நம் தாத்தா, பாட்டி யார்? அவர்கள் என்ன பங்களிப்பை இந்த சமுதாயத்திற்கு அளித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஆனால் நான் என் முன்னோர்களில் ஒருவரான திருமூலரையும், வராஹமிஹிரரையும் மதித்துப் போற்றுகிறேன். ஆர்யபட்டரை நினைத்துப் பெருமை கொள்கிறேன். நீங்கள் வேறு மாதிரி யோசிக்கிறீர்கள். என் தாத்தா உன் தாத்தாவிற்கு அடிமையாக இருந்தது தவறு, வா, நாம் இருவருமே மேல் நாட்டானுக்கு அடிமையாக இருப்போம் என்று அனைவரையும் கூவியழைக்க வெற்று காரணங்களைக் கூறுகிறீர்கள்.

  யாருக்குத் தெரியும்? நீங்களே கூட திருவள்ளுவர் வழியில் வந்தவராக இருக்கலாம். அதிகபட்சம் ஒருவர் தன குலப்பெருமை பேச 10 தலைமுறைகளை வரிசையாகக் கூறலாம். ஆனால் அதற்க்கும் முன்பு யார் எவர் என்ன செய்தார்கள்? என்று எவருக்கும் உறுதியாகத் தெரியாது. உங்கள் மனதில் இருக்கும் வன்மத்தை விடுங்கள் நண்பரே! நாமனைவரும் இந்தியர் தாம். ஆனால் போலி செக்யுலரிசம் பேசாமல் நான் ஹிந்து என்று என்று கூறிக்கொள்ளுங்கள். நம் நாட்டில் நம் இனத்தை நாமே நிறைய இழித்து விட்டோம். வேறு எந்த மதமும் தன்னைத்தானே இவ்வளவு சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

 61. //விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பத்து SC/ST/OBC தலைவர்களின் பெயர்களை கூறுங்களேன் பார்ப்போம்//

  சுதந்திர போராட்ட வீரர்களை ஜாதி சாயம் பூசி ஜாதி தலைவனாக காட்ட முயற்சிக்கும் இந்த பூவண்ணன் தேச பிரிவினைவாத கூட்டத்தை சேர்ந்தவர்தான் என்பதற்கு இனியும் ஆதாரம் வேண்டுமோ?

 62. “என் தாத்தா உன் தாத்தாவிற்கு அடிமையாக இருந்தது தவறு, வா, நாம் இருவருமே மேல் நாட்டானுக்கு அடிமையாக இருப்போம் என்று அனைவரையும் கூவியழைக்க வெற்று காரணங்களைக் கூறுகிறீர்கள்.”-

  பிரசன்னசுந்தர் அவர்களே ! சரியான இனிமையான கருத்து. நன்றிகள் பல.

 63. வெள்ளைக்காரன் கல்வி முறை / மதம் / currency போன்ற அடிப்படை தேவைகளை மாற்றி நம்மை அடிமை ஆக்கி விட்டான். பிரசன்னா சுந்தர் சொல்வதை போன்று உனக்கு பிரெஞ்சு மொழி எனக்கு தமிழ் மொழி , நாம் எதற்கு இங்கிலீஷ் உதவி வேண்டும் . இதே லாஜிக் currency வர்த்தகத்திலும் பார்க்கலாம் . ஒரு இந்தியன் சீனா காரனுடன் வர்த்தகம் செய்ய நாம் எதற்கு USD உபயோக்கிக்க வேண்டும் . இதுவும் ஒரு திட்டமிட பட்ட ஆக்கிரமிப்பு . பண்டைய காலத்தில் நாம் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்ய வில்லையா . பண்ட மாற்று முறை வெற்றிகரகமா கை ஆள வில்லையா அடிமைத்தனத்தை விட்டொழிப்போம் புதுமை ( பழைய ) வர்த்தக முறையை மறு அறிமுகம் செய்வோம்

 64. தேயிலைத் தோட்டத்திற்கு – சொர்க்க வாழ்வு என அழைத்துச் சென்று கொடுமைப் படுத்தப்பட்ட கதையைத், ” பி.ஹெச்.டேனியல் எழுதிய ‘ ரெட் டீ’1969 – ”எரியும் பனிக்காடு” நாவலைத் தழுவி படம் உருப்பெற்றது. இதற்கு முன்பு 1937 முல்க் ராஜ் ஆனந்தின் Two Leaves and a bud”” என்ற அசாம் தேயிலைத் தோட்ட கொத்தடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையினை விவரிக்கும் நாவல் உள்ளது.

  //முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் வெளிவந்தபோது 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ‘ஸ்பக்டேட்டர்’ இதழில் ஆனந்தின் நாவல் சித்தரிக்கின்றபடிக்கு ஒன்றும் அசாம் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை இல்லை என்று கோல்ட்வின் என்ற தேயிலைத் தோட்ட முதலாளி எழுதினார். அவருக்கு செப்டம்பர் 3, 1937 இதழில் பதிலெழுதிய ஆனந்த் தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் வைட்லி ராயல் கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அரசு அறிக்கையே ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை பாலியல், பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்துவதாகக் குறிப்பிடுவதை எடுத்துக்கூறினார். தானே நேரில் சென்று இலங்கை, அசாம் தேயிலைத் தோட்ட நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததாகவும் பதிலளித்தார்.//
  இன்றும் கேரளாவில் உள்ள மூணாறு, வண்டிப்பெரியார், கல்பெட்டா, மேப்பாடி போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தமிழ் தொழிலாளர்களைக் காண்டுள்ளேன். வரிசையான சுகாதாரம் குறைவானபடி தான் தொழிளாளர் குடியிருப்புகள், மேலுள்ள பகுதி மட்டுமின்றி வால்பாறை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, கர்நாடக சிக்மகுழுர், ஹாசன் பகுதிகளில் இன்றும் உள்ளது. அடிப்படைக் கல்வி மற்றும் மருத்துவம், இலவச மின்சாரம் தரப்படுகிறது. மற்றபடி மிகவும் கஷ்டமான வாழ்வு தான்.

  இப்போது ஏன் படத்தின் டாக்டர் கதாபாத்திரம் டேனியலைக் குறிக்கிறது எனப் பல எழுத்தாளர்கள் குதிக்கின்றனர். டாக்டர். பால் ஹாரிஸ் டேனியல் தான் டாக்டர் பரிசுத்தம் பாத்திரம் என பரப்பும் போது, படத்தில் அந்நாவலை மீறி வரலாற்று ரீதியில் நடந்த மதமாற்றத்தையும் சேர்த்துள்ளதைத் தாங்காமல் இந்த எழுத்தாளர்கள் டாக்டர்.டேனியலலை இழிவு படுத்துகின்றனர். பாலா செய்யவில்லை.

  இதுவரை எந்த கிற்சிதுவ சர்ச் வரலாற்றாசிரியரும் இது தவறு எனச் சொல்லவில்லை. கிறிஸ்துவ வலைதளம் பாடலைப் புகழ்வது இங்கே.
  https://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2570&Itemid=287
  திருநெல்வெலி சர்ச் வரலாறு, தேயிலைத் தோட்ட மதமாற்ற்ப் பிரிவினருடன் எனச் சொல்லும் சர்ச் வலைதளம்.
  https://www.csitirunelveli.org/Pastorate/manjolai.html

 65. //விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பத்து SC/ST/OBC தலைவர்களின் பெயர்களை கூறுங்களேன் பார்ப்போம்//

  அடடே! அப்போது லாலா லஜபதி ராய் பிரம்படியை நெஞ்சிலே தாங்கிய போது குறுக்கே விழுந்து மண்டையில் அடி வாங்கியவர்களெல்லாம் அவர் சொந்தக்காரர்கள் மட்டும் தானா?

  விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பத்து SC/ST/OBC தலைவர்களின் பெயர்களைக் கேட்கிறீர்களே! இந்தக் கேவலமான கேள்விக்கு பதில் சொல்லுவதையே கேவலமாக நினைக்கிறேன். நீங்கள் கூறுவது போல் விடுதலை போராட்டத்தில் SC க்கு தனியாக தலைவர், பார்பனருக்குத் தனியாகத் தலைவர் என்றெல்லாம் யாரும் அப்போது யோசித்துகூட இருந்திருக்க மாட்டார்கள். சும்மா பேசவேண்டுமே என்பதற்காக பேசாதீர்கள். திரு MG அகர்வால் என்பவர் தொகுத்த “Freedom Fighters of India” என்ற நூலை படித்துப் பாருங்கள். விடுதலை போராட்டத்தில் தலித்களின் பங்கு என்ன என்றும், ஏன் ஆதிவாசிகளின் பங்களிப்பு என்ன என்றும் தெரியவரும். அவர்களெல்லாம் மிகவும் பாடுபட்டு பெற்றுத் தந்த விடுதலையை அதன் பெருமையை அவர்களிடம் இருந்து பறித்து விடுதலைப் போராட்டத்தை வெறும் 4 நிலக்கிழார்கள் நடத்திய சாதிரீதியான போராட்டமாக சுருக்கிவிட பார்க்கிறீர்கள்.

  விடுதலைப் போராட்டத்தைப் பெருமைப் படுத்தா விட்டாலும் இப்படி மற்றவர் மனங்களில் நஞ்சை விதைத்து அதை சிறுமைப்படுத்தி, எரியூட்டி, அதில் குளிர்காய நினைக்காதீர்கள். இன்று அவனவனும் வெளிநாட்டுக்கு சென்று விடத் துடிப்பது சம்பாதிப்பதற்காகத் தான் என்றாலும், உங்களைப் போன்ற ஆட்களிடம் இருந்தும் சற்றே ஒதுங்கி இருக்கத்தான். SC/ST/OBC க்களின் பங்கு விடுதலை போராட்டத்தில் இருந்தது. இல்லா விட்டால் ஒரு பேரெழுச்சி நிச்சயம் உருவாகி இருக்க முடியாது. அவர்களின் பங்கு இல்லவே இல்லை என்று அறுதியிட்டு சொல்லக்கூடிய ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா?

 66. /விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பத்து SC/ST/OBC தலைவர்களின் பெயர்களை கூறுங்களேன் பார்ப்போம்//

  இன்றைய கணக்கின் படி சில உயர்த்தப் பட்ட சாதிகள் தவிற (பார்ப்பனர், நகரத்தார், நாட்டுக் கோட்டை செட்டியார் இத்யாதி…) மற்றவர் எல்லாம் நீங்கள் குறிப்பிடும் மக்கள் கூட்டத்தில் (SC/ST/OBC) அடங்கும். அப்படி பார்த்தால் காந்தி தொடங்கி அம்பேத்கர் ஜகஜீவன் ராம் என்று விரிந்து இங்கே காமராஜர் கக்கன் பரிசுத்தநாடார் முத்துராமலிங்க தேவர் ம.பொ.சி வ.உ.சி என்று விரியும் பெரும் பட்டியல் உள்ளது. ஏன.? ஈ.வே.ரா கூட தன்னை விடுதலை போரில் ஈடுபட்டுத்தான் தலைவர் நிலைக்கு உயர்ந்தார். நந்திஅடிகள் என்பவர் ”விடுதலை போரில் ஈ.வே.ரா என்று புத்தகமே போட்டுள்ளார். பின் நாட்களில் அம்பேத்கர் ஈ.வே.ரா போன்ற தலைவர்கள் பாதை மாறி விடுதலை பின்னுக்கு தள்ளப்பட்டது வேறுகாரணங்களுக்காக. ஏன் ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் எழுந்த சுதந்திர போராட்டத்தில் பங்கு வகித்த புலித்தேவன் கட்டபொம்மன் வீரன் சுந்தரலிங்கம் கோபால் நாயகர் தீரன் சின்னமலை வேலு நாச்சியார் மருது ககோதரர்கள் என்று ஒரு பெரிய பட்டியல் உள்ளது. இங்கே குறிப்பிட்டவர்களின் வாரிசுகள் எந்தெந்த பிரிவில் இன்று உள்ளார்கள் என்பது உங்களுக்கு புரியும்.

 67. டியர் பூவண்ணன் !!!
  ஹிந்து மதத்தில் ஜாதிமுறை இருக்கிறது என்ற ஒரே குற்றச்சாட்டையே திரும்ப திரும்ப சொல்வதேன்?ஜாதிமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் “பிற்படுத்த பட்டவர்கள் ” அல்லவே? தலித்துகள் தானே பாதிக்கப்பட்டார்கள்.
  சுதந்திர போராட்டத்துக்கும்,பெரும்பான்மை மக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்கள்.அது உண்மையானால் அவர்களின் “வெள்ளையர் ஆதரவு”நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள்தானே “ஆதிக்க சக்தி “யாக இருந்திருக்க வேண்டும்.வெள்ளையரை எதிர்த்த “உயர் ஜாதி”யினர் எப்படி ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியும்?
  பரிசுத்தம் கதாபாத்திரம் அம்பேத்கரை குறிப்பது என்பது உண்மையானால் ,கங்காணி கதாபாத்திரம்,ஒட்டு பொருக்கி கதாபாத்திரம் யார் யாரை குறிக்கிறது என்பதையும் சொல்வதுதானே நியாயம்.இயக்குனர் பாலா கொஞ்சமே கொஞ்சம் லேசாக கிறிஸ்த்துவ மதமாற்றத்தை கிண்டல் செய்ததை பொறுக்காமல் ,ஏதேதோ உளறி கொட்டுகிறீர்கள்.அவர் பிராமணரையோ,பனியாவையோ கிண்டல் செய்திருந்தால் உவகையுடன் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருப்பீர் !!! உமக்கு தேவை ஹிந்து துவேசம்.எங்கேயாவது ஹிந்து மதத்தை வசைப்பாட வாய்ப்புள்ள இடம் கிடைக்காதா என அலையும் திராவிடத்துவ சைக்கோ ஆசாமிகளில் நீரும் ஒருவர் என்பது நீர் பயன்படுத்தும் வார்த்தைகளில் தெரிகிறது.உமது ஹிந்து துவேச சுவிசேசங்களுக்கு ஏற்ற தளம் இதுவல்லவே?

 68. பாலா தன் திரைப்படங்களில் தொடர்ந்து இந்துத்துவ வெறியோடு கதாப்பாத்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளார் என்று ஏராளமான சான்றுகள் உண்டு.
  https://nandalala.info/?p=493

  பாலாவை , டேனியலுடன் ஒப்பிடுவது எந்தவிதத்தில் சரி என்று புரியவில்லை. டேனியல் அந்த மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்காக உழைத்தார். பின்பு பதிவு செய்தார். பாலா போன்று படப்பிடிப்பு தளத்தில் கங்கானிப் போன்று சக மனிதர்களிடம் செயல்படவில்லை. பரதேசி திரைப்படத்தில் கங்கானி பாத்திரப் படைப்புக் கூட பாலாவின் சுயரூபம் தானோ என்ற எண்ணம் வராமலில்லை. சக ஊழியர்களின் வெயில் வெட்ட வெளியில் இருக்கும் போது இவருக்கு குடைப்பிடிக்க ஒருவர்.. நான் கடவுள் திரைப்படத்தில் நடித்த மாற்று திறனாளிகளுக்கு இன்னும் பேசிய சம்பளத்தை கொடுக்க வில்லை.. மனிநேயமற்ற படைப்பு சுதந்திரம் குப்பை கழிவுகளை விட தரம் தாழ்ந்தது..

  மதம் மாற்றம் என்று ஆய்வு செய்யும் அறிவாளிகள் முதலில் மாமேதை அம்பேத்கார் ஏன் மதம் மாறினார் என்று அறிந்துக் கொள்வது நன்று..

 69. நான் படம் பார்த்துவிட்டு நன்றி சொல்கிறேன் பாலா அவர்களுக்கு

  நன்றி

 70. //மதம் மாற்றம் என்று ஆய்வு செய்யும் அறிவாளிகள் முதலில் மாமேதை அம்பேத்கார் ஏன் மதம் மாறினார் என்று அறிந்துக் கொள்வது நன்று..//

  பீமாராவ் ஆக இருந்த அவர் அம்பேத்கரானது எப்படி என்று மதம்மாற்றக் காரணம் கூறும் அறிவாளிகள் அறிந்து கொள்ளட்டும்!

  நல்லவர்கள் எல்லா மார்கத்திலும், மதங்களிலும் உள்ளார்கள். தவறு நடப்பதை ஒருவர் சுட்டிக் காட்டினால் மத வெறியர் என்று பட்டம் கட்டுவதா?

  //நான் கடவுள் திரைப்படத்தில் நடித்த மாற்று திறனாளிகளுக்கு இன்னும் பேசிய சம்பளத்தை கொடுக்க வில்லை..// தயாரிப்பாளர் கே.எஸ். ஸ்ரீனிவாசனையல்லவா குறை சொல்ல வேண்டும்? அப்படத்தில் நடித்த மாற்று திறனாளிகளின் மேனேஜர் போல் பேசுவது வியப்பு. அவர்கள் அனைவருமே இன்று வரை பாலா அவர்களை பெரிதும் மதித்தே வருகிறார்கள். பாலாவின் யூனிட்டில் வேலை செய்து வரும் என் நண்பரே சாட்சி. இஷ்டத்திற்கு பீலா விடாதீர்கள்.

  //சக ஊழியர்களின் வெயில் வெட்ட வெளியில் இருக்கும் போது இவருக்கு குடைப்பிடிக்க ஒருவர்..// ஹ… கம்யுனிசம்?? ஒருவர் குடை பிடிக்கக்கூடிய அளவுக்கு பாலா கஷ்டப்பட்டுத் தான் உயர்ந்திருக்கிறார். திறமையினால் மட்டும். ஏன் இத்தனை காண்டு அவர் பேரில்? அவர் உண்மையை படமாக எடுத்து விட்ட ஒரே காரணத்தால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *