பாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4

ஒரு கட்டத்தில் நம்மை சுற்றிலும் வெறும் நீர் பிரபஞ்சம், வான் உள்ளிட்ட அனைத்தும் நீரால் நிறைந்து இருப்பதான தோற்றம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நீர் என்ற உருவகம் தான் வருணனை முழு முதற்கடவுளாக வழிபடும் மரபு தோன்றியிருக்க காரணமாக இருக்க கூடும் . கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீரால் சூழ்ந்த இடமாக இருக்கிறது.சிலிக்கா ஏரியின் பிரமாண்டம் அபூர்வமானது. நடுவில் ஆச்சரியப்படுத்தும் சில நீர்பறவைகள் இளைப்பாறும் சதுப்புகள், . மீன்பிடிக்கும் படகுகள், பாரம்பரிய பாய்மரங்களில் பயணிக்கும் மீனவர்கள். நடுவில் உள்ள தீவுக்கு சாமான்களை ஏற்றிச்செல்லும் படகுகள் என்று அங்கங்கே தென்படுகிறார்கள். சுற்றுலா பயணிகள் படகுகளில் முழுக்க நிரம்பி வேடிக்கை பார்த்து கொண்டு சுற்றி வருகிறார்கள்

இந்த உலகில் எவ்வளவு சிறிய உயிரினமாகவும் சிறிய அலகாகவும் நாம் இருக்கிறோம். மேலும் எவ்வளவு தனிமை நிரம்பியதாக இருக்கிறது இந்த உலகம். மொத்த மக்கள் தொகையை விடவும் புல்லினங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை உணர்ந்த போது ஒரு சிறிய அச்சம் தோன்றி மறைந்தது. மனிதர்கள் பறவைகளை வேட்டையாடுவதற்கு பதில் பறவைகள் மனிதனை வேட்டையாடத்துவங்கினால் சில வாரங்களில் மனித இனம் மொத்தமாக இல்லாமலாகி விடும் என்றெல்லாம் எண்ணமிட்டுக்கொண்டு வந்தேன். பறவைகளே இவ்வளவு இனி மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள், சிறு உயிரிகள் எல்லாவற்றையும் கணக்கிட்டால் மனிதன் தான் சிறுபான்மையினனாக இருந்து கொண்டு அனைத்து வளங்களையும் சுரண்டி அனுபவித்து கொண்டிருக்கிறான் . என்ற உண்மை புரிகிறது.

View More பாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4